Author: Farook

Bukhari-4948

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 7 நல்லறங்களைப் பொய்யாக்கிவிடுகிறாரோ எனும் (92:9ஆவது) இறைவசனம்.

4948. அலீ(ரலி) அறிவித்தார்

நாங்கள் (ஒருநாள்) மதீனாவிலுள்ள பொது மையவாடியான) ‘பகீஉல்’ ஃகர்கதில்’ ஒரு ஜனாஸாவில் கலந்து கொண்டிருந்தோம். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம். நபியவர்களுடன் ஓர் ஊன்றுகோல் இருந்தது. அவர்கள் (தம் தலையைக்) கவிழ்த்தவாறு ஊன்றுகோலை(த் தரையில்) குத்தியபடி (ஆழ்ந்த சிந்தனையில்) இருக்கலானார்கள். பிறகு, ‘உங்களில் எவரும், பிறந்துவிட்ட எந்த உயிரும் தம் இருப்பிடம் சொர்க்கத்திலா அல்லது நரகத்திலா, அது துர்பாக்கியசாலியா, அல்லது நற்பாக்கியசாலியா என்று எழுதப்பட்டிராமல் இல்லை’ என்று கூறினார்கள். ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே! எங்கள் (தலை) எழுத்தின் மீது நாங்கள் பாரத்தைப் போட்டுவிட்டு, நல்லறங்கள் செய்யாமல் இருந்துவிடமாட்டோமா? எங்களில் யார் (விதியின்படி) நற்பாக்கியம் பெற்றவரோ அவர் நற்பாக்கியசாலியாக மாறுவார். எங்களில் யார் (விதிப்படி) துர்பாக்கியசாலியோ அவர் துர்பாக்கியசாலிகளின் செயலுக்கு மாறுவார்’

كُنَّا فِي جَنَازَةٍ فِي بَقِيعِ الغَرْقَدِ فَأَتَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَعَدَ وَقَعَدْنَا حَوْلَهُ، وَمَعَهُ مِخْصَرَةٌ فَنَكَّسَ فَجَعَلَ يَنْكُتُ بِمِخْصَرَتِهِ، ثُمَّ قَالَ: «مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ وَمَا مِنْ نَفْسٍ مَنْفُوسَةٍ إِلَّا كُتِبَ مَكَانُهَا مِنَ الجَنَّةِ وَالنَّارِ، وَإِلَّا قَدْ كُتِبَتْ شَقِيَّةً أَوْ سَعِيدَةً» قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، أَفَلاَ نَتَّكِلُ عَلَى كِتَابِنَا، وَنَدَعُ العَمَلَ؟ فَمَنْ كَانَ مِنَّا مِنْ أَهْلِ السَّعَادَةِ، فَسَيَصِيرُ إِلَى عَمَلِ أَهْلِ السَّعَادَةِ، وَمَنْ كَانَ مِنَّا مِنْ أَهْلِ الشَّقَاءِ، فَسَيَصِيرُ إِلَى عَمَلِ أَهْلِ الشَّقَاوَةِ، قَالَ: «أَمَّا أَهْلُ السَّعَادَةِ فَيُيَسَّرُونَ لِعَمَلِ أَهْلِ السَّعَادَةِ، وَأَمَّا أَهْلُ الشَّقَاوَةِ فَيُيَسَّرُونَ لِعَمَلِ أَهْلِ الشَّقَاءِ»، ثُمَّ قَرَأَ: {فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالحُسْنَى} [الليل: 6] الآيَةَ


Bukhari-4947

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 6 எவர் கஞ்சத்தனம் செய்து, (தம் இறைவனைப்) பொருட்படுத்தாமல் நடந்து கொண்டு நல்லறங்களைப் பொய்யாக்கிவிடுகின் றாரோ அவருக்குக் கஷ்டத்திற்குரிய (நரகத்தின்) வழியைத் தான் நாம் எளிதாக்குவோம் எனும் (92:8-10) வசனங்கள்.

4947. அலீ(ரலி) அறிவித்தார்

(ஒருமுறை) நாங்கள் (‘ஜனாஸா’) ஒன்றிற்காக) நபி(ஸல்) அவர்களுடன் (‘பகீஉல் ஃகர்கத்’ எனும் மதீனாவின் பொது மையவாடியில்) அமர்ந்திருந்தோம். அப்போது நபியவர்கள், ‘சொர்க்கத்திலுள்ள தம் இருப்பிடத்தையோ, நரகத்திலுள்ள தம் இருப்பிடத்தையோ எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை’ என்று கூறினார்கள். உடனே நாங்கள், ‘இறைத்தூதர் அவர்களே! (இதன் மீதே) நம்பிக்கை கொண்டு (நல்லறங்கள் ஏதும் செய்யாமல்) நாங்கள் இருந்துவிடமாட்டோமா?’ என்று கேட்டோம். (அதற்கு,) நபி(ஸல்) அவர்கள், ‘இல்லை! நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) எல்லாருக்கும் (அவரவர் செல்லும்வழி) எளிதாக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்கள். பிறகு, ‘(இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்யாக்குகிறவருக்கு சுலபமான வழியில் செல்ல நாம் வகைசெய்வோம்’ எனும் (திருக்குர்ஆன்

كُنَّا جُلُوسًا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا وَقَدْ كُتِبَ مَقْعَدُهُ مِنَ الجَنَّةِ، وَمَقْعَدُهُ مِنَ النَّارِ» فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ أَفَلاَ نَتَّكِلُ؟ قَالَ: «لاَ، اعْمَلُوا فَكُلٌّ مُيَسَّرٌ» ثُمَّ قَرَأَ: {فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى} [الليل: 5] إِلَى قَوْلِهِ {فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَى} [الليل: 10]


Bukhari-4946

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4 மேலும், நல்லறங்களை மெய்ப்பிக்கிறாரோ அவருக்கு, சுலபமான வழியில் செல்ல நாம் வகைசெய்வோம்எனும் (92:6,7) இறை வசனங்கள். . . . ..அபூ அப்திர் ரஹ்மான் அஸ்ஸுலமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அலீ (ரலி) அவர்கள், நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம் என்று தொடங்கி, மேற்கண்ட (4945ஆவது) ஹதீஸைக் கூறினார்கள். பாடம் : 5 அவருக்கு, இலகுவான வழியில் செல்வதற்கு நாம் வகைசெய்வோம் (எனும் 92:7ஆவது இறைவசனம்).

4946. அலீ(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவிற்காக (வருகை தந்து) இருந்தார்கள். அப்போது நபியவர்கள் குச்சியொன்றை எடுத்துத தரையில் குத்தியபடி (ஆழ்ந்த சிந்தனையில்) இருந்தார்கள். பின்னர், ‘தம் இருப்பிடம் நரகத்திலா, அல்லது சொர்க்கத்திலா என்று எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை’ என்று கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் (இதன்மீதே) நம்பிக்கை கொண்டு (நல்லறங்கள் ஏதும் செய்யாமல்) இருந்துவிடமாட்டோமா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) எல்லாருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்கள்.

أَنَّهُ كَانَ فِي جَنَازَةٍ، فَأَخَذَ عُودًا يَنْكُتُ فِي الأَرْضِ، فَقَالَ: «مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا وَقَدْ كُتِبَ مَقْعَدُهُ مِنَ النَّارِ، أَوْ مِنَ الجَنَّةِ» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، أَفَلاَ نَتَّكِلُ؟ قَالَ: ” اعْمَلُوا فَكُلٌّ مُيَسَّرٌ {فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالحُسْنَى} [الليل: 6] ” الآيَةَ، قَالَ شُعْبَةُ: وَحَدَّثَنِي بِهِ مَنْصُورٌ فَلَمْ أُنْكِرْهُ مِنْ حَدِيثِ سُلَيْمَانَ


Bukhari-4945

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 3 எவர் (இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்ப்பிக்கி றாரோ அவருக்கு, சுலபமான வழியில் செல்ல நாம் வகைசெய்வோம் எனும் (92:5-7) இறை வசனங்கள்.

4945. அலீ(ரலி) அறிவித்தார்

நாங்கள் (ஒருநாள்) ஒரு ஜனாஸாவிற்காக நபி(ஸல்) அவர்களுடன் ‘பகீஉல் ஃகர்கதி (எனும் மதீனாவின் பொது மையவாடியி)ல்’ இருந்து கொண்டிருந்தோம். அப்போது நபியவர்கள், ‘சொர்க்கத்திலுள்ள தம் இருப்பிடத்தையோ நரகத்திலுள்ள தம் இருப்பிடத்தையோ எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை’ என்று கூறினார்கள். உடனே மக்கள், ‘அல்லாஹவின் தூதரே! நாங்கள் (இதன் மீதே) நம்பிக்கை கொண்டு (நல்லறங்கள் ஏதும் செய்யாமல்) இருந்து விடமாட்டோமா?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) எல்லாருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்கள். பிறகு, ‘(இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சிவாழ்ந்து, நல்லறங்களை மெய்ப்பிக்கிறவருக்கு, சுலபமான வழியில் செல்ல நாம் வகைசெய்வோம். உலோபித்தனம் செய்து, (அல்லாஹ்வையும்) பொருட்படுத்தாது, (இம்மார்க்கதிலுள்ள)

كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَقِيعِ الغَرْقَدِ فِي جَنَازَةٍ، فَقَالَ: «مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا وَقَدْ كُتِبَ مَقْعَدُهُ مِنَ الجَنَّةِ، وَمَقْعَدُهُ مِنَ النَّارِ»، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ أَفَلاَ نَتَّكِلُ؟ فَقَالَ: «اعْمَلُوا فَكُلٌّ مُيَسَّرٌ» ثُمَّ قَرَأَ: {فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالحُسْنَى} [الليل: 6] إِلَى قَوْلِهِ {لِلْعُسْرَى} [الليل: 10]

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الوَاحِدِ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كُنَّا قُعُودًا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَ الحَدِيثَ نَحْوَهُ


Bukhari-4944

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2 ஆணையும், பெண்ணையும் படைத்தவன் மீது சத்தியமாக! (எனும் 92:3ஆவது இறை வசனம்).

4944. இப்ராஹீம் அந்நகஈ(ரஹ்) அறிவித்தார்

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் தோழர்கள் (ஷாம் நாட்டிலிருந்து அபுத்தர்தா(ரலி) அவர்களிடம் (அவர்களைக் காண) வந்தனர். (அதற்குள் அவர்கள் வந்துள்ள செய்தியறிந்து,) அபுத்தர்தா(ரலி) தோழர்களைத் தேடிவந்து சந்தித்தார்கள்.

பிறகு, ‘அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் ஓதல் முறைப்படி உங்களில் ஓதத் தெரிந்தவர் யார்?’ என்று அபுத்தர்தா(ரலி) கேட்டார்கள். அதற்கு நாங்கள், ‘நாங்கள் அனைவரும் தாம்’ என்று பதிலளித்தோம். அபுத்தர்தா(ரலி), ‘(இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் ஓதல் முறையை) நன்கு மனனமிட்டிருப்பவர் உங்களில் யார்?’ என்று கேட்டார்கள். தோழர்கள், அல்கமா(ரஹ்) அவர்களை நோக்கி சைகை செய்தார்கள். ‘வல்லைலி இஃதா யஃக்ஷா’ எனும் வசனத்தில் இப்னு மஸ்வூத்(ரலி) எவ்வாறு ஓதக் கேட்டீர்கள்? என்று கேட்டார்கள். அல்கமா(ரஹ்), ‘வஃத்தகரி வல் உன்ஸா’ என்றே ஓதினார்கள்’ என்று பதிலளித்தார்கள். அபுத்தர்தா(ரலி), ‘நான்

قَدِمَ أَصْحَابُ عَبْدِ اللَّهِ عَلَى أَبِي الدَّرْدَاءِ فَطَلَبَهُمْ فَوَجَدَهُمْ، فَقَالَ: أَيُّكُمْ يَقْرَأُ عَلَى قِرَاءَةِ عَبْدِ اللَّهِ؟ قَالَ: كُلُّنَا، قَالَ: فَأَيُّكُمْ أَحْفَظُ؟ فَأَشَارُوا إِلَى عَلْقَمَةَ، قَالَ: كَيْفَ سَمِعْتَهُ يَقْرَأُ: {وَاللَّيْلِ إِذَا يَغْشَى} [الليل: 1]؟ قَالَ عَلْقَمَةُ: وَالذَّكَرِ وَالأُنْثَى، قَالَ: «أَشْهَدُ أَنِّي سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ هَكَذَا»، وَهَؤُلاَءِ يُرِيدُونِي عَلَى أَنْ أَقْرَأَ: {وَمَا خَلَقَ الذَّكَرَ وَالأُنْثَى} [الليل: 3] وَاللَّهِ لاَ أُتَابِعُهُمْ


Bukhari-4943

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 1 ஒளிரும் பக-ன் மீது சத்தியமாக! (எனும் 92:2ஆவது இறைவசனம்).

4943. அல்கமா இப்னு கைஸ்(ரஹ்) அறிவித்தார்

நான் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் (மாணவ) சகாக்கள் சிலருடன் (அன்றைய) ஷாம் நாட்டிற்குச் சென்றேன். அப்போது, நாங்கள் (அங்கு) வந்திருப்பது பற்றிக் கேள்விப்பட்டு, (எங்களைச் சந்திப்பதற்காக,) அபுத்தர்தா(ரலி) வந்தார்கள். அப்போது ‘(குர்ஆனை) ஓதத் தெரிந்தவர்கள் உங்களிடையே உண்டா?’ என்று கேட்டார்கள். நாங்கள், ‘ஆம்’ என்று சொன்னோம். ‘சரி, உங்களில் (குர்ஆனை) நன்கு ஓதத் தெரிந்தவர் யார்?’ என்று கேட்டார்கள். அப்போது தோழர்கள், என்னை நோக்கி சைகை செய்தார்கள். அபுத்தர்தா(ரலி), ‘ஓதுங்கள்!’ என்று (என்னிடம்) கூறினார்கள்.

உடனே நான், ‘வல்லைலி இஃதா யஃக்ஷா, வந்நஹாரி இஃதா தஜல்லா, வஃத்தகரி வல் உன்ஸா’ என்று (92 வது அத்தியாயத்திலிருந்து) ஓதினேன். அபுத்தர்தா(ரலி), ‘இதை உங்கள் தோழர் (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் வாயிலிருந்து நீங்கள் செவியேற்றீர்களா?’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம்’ என்று கூறினேன்.

دَخَلْتُ فِي نَفَرٍ مِنْ أَصْحَابِ عَبْدِ اللَّهِ الشَّأْمَ فَسَمِعَ بِنَا أَبُو الدَّرْدَاءِ، فَأَتَانَا فَقَالَ: أَفِيكُمْ مَنْ يَقْرَأُ؟ فَقُلْنَا: نَعَمْ، قَالَ: فَأَيُّكُمْ أَقْرَأُ؟ فَأَشَارُوا إِلَيَّ، فَقَالَ: اقْرَأْ، فَقَرَأْتُ: {وَاللَّيْلِ إِذَا يَغْشَى، وَالنَّهَارِ إِذَا تَجَلَّى} [الليل: 2]، وَالذَّكَرِ وَالأُنْثَى، قَالَ: أَنْتَ سَمِعْتَهَا مِنْ فِي صَاحِبِكَ؟ قُلْتُ: نَعَمْ، قَالَ: «وَأَنَا سَمِعْتُهَا مِنْ فِي النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»، وَهَؤُلاَءِ يَأْبَوْنَ عَلَيْنَا