Author: Farook

Bukhari-4938

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 1 (அது) அகிலத்தாரின் அதிபதி முன் மக்களெல்லாம் நிற்கும் நாள் (எனும் 83:6 ஆவது இறைவசனம்).

4938. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள், ‘(அது) அம்லத்தாரின் அதிபதி முன் மக்களெல்லாம் நிற்கும் நாள்’ எனும் (திருக்குர்ஆன் 83:6 வது) இறை வசனத்தை ஓதிவிட்டு, ‘அன்று தம் இரண்டு காதுகளின் பாதி வரை தேங்கி நிற்கும் தம் வேர்வையில் அவர்களில் ஒருவர் மூழ்கிப் போய்விடுவார்’ என்று கூறினார்கள். 2

Book : 65


{يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ العَالَمِينَ} [المطففين: 6] «حَتَّى يَغِيبَ أَحَدُهُمْ فِي رَشْحِهِ إِلَى أَنْصَافِ أُذُنَيْهِ»


Bukhari-4937

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4937. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனை மனனமிட்டு(ச் சிரமமின்றி) ஓதிவருபவர் கண்ணியம் நிறைந்த தூதர்க(ளான வானவர்க)ளைப் போன்றவராவார். குர்ஆனை (மனனம் செய்திராவிட்டாலும் அதனைச்) சிரமத்துடன் தொடர்ந்து ஓதி வருகிறவருக்கு இரண்டு மடங்கு நன்மைகள் உண்டு.

என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

Book :65


«مَثَلُ الَّذِي يَقْرَأُ القُرْآنَ، وَهُوَ حَافِظٌ لَهُ مَعَ السَّفَرَةِ الكِرَامِ البَرَرَةِ، وَمَثَلُ الَّذِي يَقْرَأُ، وَهُوَ يَتَعَاهَدُهُ، وَهُوَ عَلَيْهِ شَدِيدٌ فَلَهُ أَجْرَانِ»


Bukhari-4936

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 1

4936. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்

தம் நடுவிரலையும், பெருவிரலை அடுத்துள்ள (ஆட்காட்டி) விரலையும் இணைத்தவாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘நானும் மறுமை நாளும் இதோ இந்த இரண்டு விரல்கள் போல் (நெருக்கமாகவே) அனுப்பப்பட்டுள்ளோம்’ என்று கூறக்கேட்டேன்.

(திருக்குர்ஆன் 79:34 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அத்தாம்மா’ (அமளி) எனும் சொல்லுக்கு ‘அனைத்துப் பொருள்களையும் துவம்சம் செய்யக்கூடியது’ என்று பொருள்.

Book : 65


رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: بِإِصْبَعَيْهِ هَكَذَا، بِالوُسْطَى وَالَّتِي تَلِي الإِبْهَامَ «بُعِثْتُ وَالسَّاعَةُ كَهَاتَيْنِ»


Bukhari-4935

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 78.

‘அந்நபஉ’ அத்தியாயம்.

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(அல்குர்ஆன்: 78:27) ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லா யர்ஜூன ஹிஸாபா’ (அவர்கள் விசாரணையை நம்பக்கூடியவர்களாக இருக்கவில்லை) என்பதன் கருத்தாவது: அதைப் பற்றிய அச்சம் அவர்களுக்கு இருக்கவில்லை.

(அல்குர்ஆன்: 78:37) ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லா யம்லிகூன மின்ஹு கிதாபா’ (அவனிடம் பேச அவர்களுக்கு அதிகாரம் கிடையாது) என்பதன் கருத்தாவது: இறைவன் அனுமதித்தாலன்றி அவனிடம் அவர்கள் பேச முடியாது.

(அல்குர்ஆன்: 78:38) ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஸவாப்’ எனும் சொல்லுக்கு ‘சத்தியத்தைப் பேசி அதன் வழி நடத்தல்’ என்பது பொருள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (அல்குர்ஆன்: 78:13) ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள)

«مَا بَيْنَ النَّفْخَتَيْنِ أَرْبَعُونَ» قَالَ: أَرْبَعُونَ يَوْمًا؟ قَالَ: أَبَيْتُ، قَالَ: أَرْبَعُونَ شَهْرًا؟ قَالَ: أَبَيْتُ، قَالَ: أَرْبَعُونَ سَنَةً؟ قَالَ: أَبَيْتُ، قَالَ: «ثُمَّ يُنْزِلُ اللَّهُ مِنَ السَّمَاءِ مَاءً فَيَنْبُتُونَ كَمَا يَنْبُتُ البَقْلُ، لَيْسَ مِنَ الإِنْسَانِ شَيْءٌ إِلَّا يَبْلَى، إِلَّا عَظْمًا وَاحِدًا وَهُوَ عَجْبُ الذَّنَبِ، وَمِنْهُ يُرَكَّبُ الخَلْقُ يَوْمَ القِيَامَةِ»


Bukhari-4934

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4 இது, அவர்கள் (ஏதும்) பேச முடியாத நாளாகும் (எனும் 77:35ஆவது இறைவசனம்).

4934. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்

நாங்கள் (ஒருமுறை) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் (மினாவிலுள்ள) ஒரு குகையில் இருந்துகொண்டிருந்தோம். அப்போது அவர்களுக்கு, ‘வல் முர்சலாத்தி’ (ஒன்றன் பின் ஒன்றாக அனுப்பப்படுகின்றவை மீது சத்தியமாக!) எனும் (77 வது) அருளப்பட்டது. அதை நபி(ஸல்) அவர்கள் ஓதிக்கொண்டிருந்தார்கள். நான் அதை அவர்களின் வாயிலிருந்து புத்தம் புதிதாகச் செவியேற்றுக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு பாம்பு (புற்றிலிருந்து) எங்களை நோக்கித் துள்ளி வந்தது. அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அதைக் கொல்லுங்கள்’ என்றார்கள். அதை நோக்கி போட்டியிட்டுக் கொண்டு நாங்கள் விரைந்தோம். அது (தன்னுடைய புற்றுக்குள் ஓடிப்) போய் (நுழைந்து)விட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் அதன் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டதைப் போன்றே அதுவும் உங்கள் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டுவிட்டது’ என்று கூறினார்கள்.

அறிவிப்பாளரான உமர் இப்னு ஹஃப்ஸ்(ரஹ்) கூறினார்.

بَيْنَمَا نَحْنُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَارٍ، إِذْ نَزَلَتْ عَلَيْهِ: وَالمُرْسَلاَتِ فَإِنَّهُ لَيَتْلُوهَا وَإِنِّي لَأَتَلَقَّاهَا مِنْ فِيهِ، وَإِنَّ فَاهُ لَرَطْبٌ بِهَا، إِذْ وَثَبَتْ عَلَيْنَا حَيَّةٌ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْتُلُوهَا» فَابْتَدَرْنَاهَا فَذَهَبَتْ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وُقِيَتْ شَرَّكُمْ كَمَا وُقِيتُمْ شَرَّهَا» قَالَ عُمَرُ: حَفِظْتُهُ مِنْ أَبِي فِي غَارٍ بِمِنًى


Bukhari-4933

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 3 அது (குமுறி எழும் போது) மஞ்சள் நிற ஒட்டகங்களைப்போல் இருக்கும் எனும் (77:33ஆவது) இறைவசனம்.

4933. அப்துர் ரஹ்மான் இப்னு ஆபிஸ்(ரஹ்) அறிவித்தார்

‘அந்த நெருப்பு, மாளிகைகளைப் போன்ற பெரும் பெரும் தீக்கங்குகளைக் கக்கும்’ எனும் (திருக்குர்ஆன் 77:32 வது) இறைவசனத்திற்கு விளக்கம் கூறுகையில், இப்னு அப்பாஸ்(ரலி) (பின்வருமாறு) கூறக்கேட்டேன்.

நாங்கள் மூன்று முழம், அல்லது அதைவிட அதிகமான அளவிலுள்ள மரக்கட்டைகளை நாடிச் செல்வோம். அவற்றைக் குளிர்காலத்திற்காக நாங்கள் எடுத்து வைப்போம். அவற்றுக்கு ‘அல்கஸர்’ எனப் பெயரிட்டு அழைத்து வந்தோம்.

(திருக்குர்ஆன் 77:33 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஜுமாலத்துன் ஸுஃபர்’ எனும் சொல், மரக்கலங்களைக் கட்டும் கயிறுகளைக் குறிக்கும். அக்கயிறுகள் மனிதர்களின் இடுப்புகளைப் போல் (பருமனாக) மாறும் அளவிற்கு திரிக்கப்படும்.

Book : 65


«كُنَّا نَعْمِدُ إِلَى الخَشَبَةِ ثَلاَثَةَ أَذْرُعٍ، أَوْ فَوْقَ ذَلِكَ فَنَرْفَعُهُ لِلشِّتَاءِ، فَنُسَمِّيهِ القَصَرَ، (كَأَنَّهُ جِمَالاَتٌ صُفْرٌ) حِبَالُ السُّفُنِ تُجْمَعُ حَتَّى تَكُونَ كَأَوْسَاطِ الرِّجَالِ»


Bukhari-4932

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2 அந்த நெருப்பு , மாளிகைகளைப் போன்ற பெரும் பெரும் தீக்கங்குகளைக் கக்கும் எனும் (77:32ஆவது) இறைவசனம்.

4932. அப்துர் ரஹ்மான் இப்னு ஆபிஸ்(ரஹ்) அறிவித்தார்

(மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள ‘கஸ்ர்’ எனும் சொல்லுக்கு விளக்கம் கூறுகையில்,) இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

நாங்கள் குளிர்காலத்தில் குளிர் காய்வதற்காக மூன்று முழம், அல்லது அதைவிடக் குறைந்த அளவில் மரக்கட்டைகளை வெட்டி எடுத்துவருவோம். அவற்றுக்கு நாங்கள் ‘கஸர்’ எனப் பெயரிட்டழைத்துவந்தோம். 4

Book : 65


«كُنَّا نَرْفَعُ الخَشَبَ بِقَصَرٍ ثَلاَثَةَ أَذْرُعِ أَوْ أَقَلَّ، فَنَرْفَعُهُ لِلشِّتَاءِ فَنُسَمِّيهِ القَصَرَ»


Bukhari-4931

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4931. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

(ஒருநாள் மினாவிலுள்ள) ஒரு குகையில் நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்துகொண்டிருந்தபோது அவர்களுக்கு, ‘வல் முர்சலாத்தி (ஒன்றின் பின் ஒன்றாக அனுப்பப்படுகின்றவை மீது சத்தியமாக!)’ எனும் (77 வது) அருளப்பட்டது. அதை நாங்கள் நபி(ஸல்) அவர்களின் வாயிலிருந்து புத்தம் புதியதாக (ஓதக்) கேட்டுக் கொண்டிருந்தோம். அந்நேரம் பாம்பு ஒன்று (தன்னுடைய புற்றிலிருந்து) வெளிப்பட்டது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘அதை விடாதீர்கள்; கொன்று விடுங்கள்’ என்று கூறினார்கள். உடனே (அதைக் கொல்ல) போட்டியிட்டுக் கொண்டு நாங்கள் விரைந்தோம். அது எங்களை முந்திக் கொண்டு (தன்னுடைய புற்றுக்குள் புகுந்து)விட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் அதன் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டதைப் போன்றே அதுவும் உங்கள் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டுவிட்டது’ என்று கூறினார்கள்.

இதே ஹதீஸ் இன்னும் பல அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

Book :65


بَيْنَا نَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَارٍ، إِذْ نَزَلَتْ عَلَيْهِ: وَالمُرْسَلاَتِ فَتَلَقَّيْنَاهَا مِنْ فِيهِ، وَإِنَّ فَاهُ لَرَطْبٌ بِهَا، إِذْ خَرَجَتْ حَيَّةٌ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَيْكُمُ اقْتُلُوهَا» قَالَ: فَابْتَدَرْنَاهَا فَسَبَقَتْنَا، قَالَ: فَقَالَ: «وُقِيَتْ شَرَّكُمْ كَمَا وُقِيتُمْ شَرَّهَا»


Bukhari-4930

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 1

4930. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

நாங்கள் (ஒருமுறை) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் (மினாவிலுள்ள ஒரு குகையில் தங்கி) இருந்தோம். அப்போது அவர்களுக்கு, ‘வல் முர்சலாத்தி (ஒன்றன் பின் ஒன்றாக அனுப்பப்படுகின்றவை மீது சத்தியமாக!)’ எனும் (77 வது) அருளப்பட்டது. அதை நாங்கள் நபி(ஸல்) அவர்களின் வாயிலிருந்து (அவர்களே ஓதக்) கேட்டுக் கொண்டிருந்தோம். அப்போது பாம்பு ஒன்று (தன்னுடைய புற்றிலிருந்து) வெளிப்பட்டது. (அதைக் கொல்ல) போட்டியிட்டுக் கொண்டு நாங்கள் விரைந்தோம். அது எங்களை முந்திக் கொண்டு தன்னுடைய புற்றுக்குள் நுழைந்துவிட்டது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘நீங்கள் அதன் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டதைப் போன்றே அதுவும் உங்கள் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டுவிட்டது’ என்று கூறினார்கள்.3

Book : 65


كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأُنْزِلَتْ عَلَيْهِ: وَالمُرْسَلاَتِ وَإِنَّا لَنَتَلَقَّاهَا مِنْ فِيهِ، فَخَرَجَتْ حَيَّةٌ، فَابْتَدَرْنَاهَا، فَسَبَقَتْنَا فَدَخَلَتْ جُحْرَهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وُقِيَتْ شَرَّكُمْ كَمَا وُقِيتُمْ شَرَّهَا» حَدَّثَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ آدَمَ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ مَنْصُورٍ بِهَذَا. وَعَنْ إِسْرَائِيلَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ مِثْلَهُ، وَتَابَعَهُ أَسْوَدُ بْنُ عَامِرٍ، عَنْ إِسْرَائِيلَ، وَقَالَ حَفْصٌ، وَأَبُو مُعَاوِيَةَ، وَسُلَيْمَانُ بْنُ قَرْمٍ عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، قَالَ يَحْيَى بْنُ حَمَّادٍ: أَخْبَرَنَا أَبُو عَوَانَةَ، عَنْ مُغِيرَةَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، وَقَالَ ابْنُ إِسْحَاقَ: عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الأَسْوَدِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ


Bukhari-4929

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 3

“நபியே! நாம் இதனை ஓதிவிட்டோமாயின் நீங்கள் ஓதுவதைத் தொடருங்கள்” எனும் (அல்குர்ஆன் 75:18) ஆவது இறைவசனம்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “நாம் இதனை விவரிக்கும் போது அதன்படி செயல்படுங்கள்” என்று இவ்வசனத்திற்குப் பொருள் எனக் கூறியுள்ளார்கள்.

4929. ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: 

“(நபியே!) இந்த வஹீயை (வேத அறிவிப்பை) அவசரம் அவசரமாக மனனம் செய்வதற்காக உங்கள் நாவை அசைக்காதீர்கள்” எனும் (அல்குர்ஆன் 75:16) ஆவது வசனம் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) (பின்வருமாறு) கூறினார்கள்:

(வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தம்மிடம் ‘வஹீ’யைக் கொண்டுவரும்போது நபி (ஸல்) அவர்கள் தம் நாவையும், இரண்டு உதடுகளையும் (எங்கே மறந்து விடப்போகிறதோ என்ற அச்சத்தினால், மனனமிடுவதற்காக ஓதியபடி) அசைத்துக் கொண்டிருப்பார்கள். இது அவர்களுக்குச் சிரமமாக இருந்தது. அது அவர்களின் முகத்திலேயே தெரிந்தது.

எனவே, அல்லாஹ்,

فِي قَوْلِهِ: {لاَ تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ} [القيامة: 16]، قَالَ: ” كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا نَزَلَ جِبْرِيلُ بِالوَحْيِ، وَكَانَ مِمَّا يُحَرِّكُ بِهِ لِسَانَهُ وَشَفَتَيْهِ فَيَشْتَدُّ عَلَيْهِ، وَكَانَ يُعْرَفُ مِنْهُ، فَأَنْزَلَ اللَّهُ الآيَةَ الَّتِي فِي: لا أُقْسِمُ بِيَوْمِ القِيَامَةِ: {لاَ تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ، إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ} [القيامة: 17] قَالَ: عَلَيْنَا أَنْ نَجْمَعَهُ فِي صَدْرِكَ، {وَقُرْآنَهُ فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ} [القيامة: 17]: فَإِذَا أَنْزَلْنَاهُ فَاسْتَمِعْ، {ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ} [القيامة: 19]: عَلَيْنَا أَنْ نُبَيِّنَهُ بِلِسَانِكَ، قَالَ: فَكَانَ إِذَا أَتَاهُ جِبْرِيلُ أَطْرَقَ، فَإِذَا ذَهَبَ قَرَأَهُ كَمَا وَعَدَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ.

{أَوْلَى لَكَ فَأَوْلَى} [القيامة: 34] تَوَعُّدٌ


Next Page » « Previous Page