Author: Farook

Bukhari-4865

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4865. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (மினாவில்) இருந்து கொண்டிருந்தபோது சந்திரன் பிளவுபட்டு இரண்டு துண்டுகளாக மாறிற்று. அப்போது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம், ‘நீங்கள் சாட்சியாக இருங்கள். நீங்கள் சாட்சியாக இருங்கள்’ என்று (இரண்டு முறை) கூறினார்கள்.

Book :65


انْشَقَّ القَمَرُ وَنَحْنُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَارَ فِرْقَتَيْنِ فَقَالَ لَنَا: «اشْهَدُوا اشْهَدُوا»


Bukhari-4864

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 1 சந்திரன் பிளந்து விட்டது. ஆனால் (இந்த மக்களின் நிலைமை என்னவெனில்), எந்தச் சான்றினைப் பார்த்தாலும் புறக்கணிக் கிறார்கள் (எனும் 54:1,2 ஆகிய வசனங்களின் தொடர்).

4864. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. (பிளவுண்ட சந்திரனின்) ஒரு துண்டு மலைக்கு மேலேயும் மற்றொரு துண்டு மலைக்குக் கீழேயும் சென்றது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நீங்கள் சாட்சியாக இருங்கள். என்று கூறினார்கள்.

Book : 65


انْشَقَّ القَمَرُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِرْقَتَيْنِ، فِرْقَةً فَوْقَ الجَبَلِ، وَفِرْقَةً دُونَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اشْهَدُوا»


Bukhari-4863

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4863. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஓதலுக்குரிய) ‘சஜ்தா’ அருளப்பெற்ற முதல் அத்தியாயம் ‘அந்நஜ்ம்’ ஆகும். அதை ஓதியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரவணக்கம் (சஜ்தா) செய்தார்கள். அவர்களுக்குப் பின்னால் இருந்த அனைவரும் (அவர்களுடன் சேர்ந்து) ‘சஜ்தா’ செய்தார்கள். ஒரேயொரு மனிதனைத் தவிர!

அம்மனிதன் ஒரு பிடி மண்ணை எடுத்து (தன் நெற்றிக்குக் கொண்டு சென்று) அதன் மீது சஜ்தாச் செய்ததை கண்டேன். பின்னர் அவன் (பத்ருப் பேரின் போது) இறைமறுப்பாளனாகக் கொல்லப்பட்டதை கண்டேன். அவன்தான் உமய்யா இப்னு கலஃப் ஆவான்.

அத்தியாயம்: 65


أَوَّلُ سُورَةٍ أُنْزِلَتْ فِيهَا سَجْدَةٌ وَالنَّجْمِ، قَالَ: فَسَجَدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَسَجَدَ مَنْ خَلْفَهُ إِلَّا رَجُلًا رَأَيْتُهُ أَخَذَ كَفًّا مِنْ تُرَابٍ فَسَجَدَ عَلَيْهِ “، فَرَأَيْتُهُ بَعْدَ ذَلِكَ قُتِلَ كَافِرًا، وَهُوَ أُمَيَّةُ بْنُ خَلَفٍ


Bukhari-4862

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 7

ஆகவே, அல்லாஹ்விற்கு நீங்கள் சிரவணக்கம் (சஜ்தா) செய்திடுங்கள்; அவனையே வழிபடுங்கள் (எனும் 53:62 ஆவது இறைவசனம்).

4862. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: 

நபி (ஸல்) அவர்கள் (53 வது அத்தியாயமான) ‘அந்நஜ்ம்’ அத்தியாயத்தை ஓதி (ஓதலுக்கான) சிரவணக்கம் (சஜ்தா) செய்தார்கள். அவர்களுடன் இருந்த முஸ்லிம்களும், இணைவைப்பாளர்களும், ஏனைய மக்களும், ஜின்களும் சஜ்தாச் செய்தனர்.


இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்னு உலைய்யா (ரஹ்) தம் அறிவிப்பில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை (அவர்கள் அறிவித்ததாக)க் குறிப்பிடவில்லை.

அத்தியாயம்: 65


«سَجَدَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالنَّجْمِ وَسَجَدَ مَعَهُ المُسْلِمُونَ وَالمُشْرِكُونَ وَالجِنُّ وَالإِنْسُ» تَابَعَهُ إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ، عَنْ أَيُّوبَ، وَلَمْ يَذْكُرِ ابْنُ عُلَيَّةَ ابْنَ عَبَّاسٍ


Bukhari-4861

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 6 மேலும், மூன்றாவதான மனாத் (எனும் விக்ரகத்தைப்) பற்றியும் (நீங்கள் சிந்தித்ததுண்டா? எனும்53:20ஆவது இறைவசனம்.)

4861. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்

நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் (‘ஹஜ்ஜில் ஸஃபா மர்வாவுக்கிடையே சுற்றி வராவிட்டாலும் குற்றமில்லைதானே? அப்படித்தானே 02:158 வது இறைவசனம் தெரிவிக்கிறது. தங்கள் கருத்து என்ன?’ என்று) கேட்டேன். அதற்கு அவர்கள், ‘முஷல்லல் எனும் குன்றில் இருந்து ‘மனாத்’ எனும் சிலைக்காக ‘இஹ்ராம்’ கட்டியவர்கள் (ஹஜ்ஜில்) ஸஃபாவுக்கும் மர்வாவுக்குமிடையில், சுற்றி வராமலிருந்தார்கள். அப்போதுதான் ‘நிச்சயமாக ‘ஸஃபா’, ‘மர்வா’ (எனும் இரண்டு குன்றுகள்) அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாகும்…’ எனும் (திருக்குர்ஆன் 02:158 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் சுற்றி வந்தனர்’ என்று கூறினார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்), ‘மனாத் என்பது, (மக்காவிலிருந்து மதீனா செல்லும் சாலையில்) ‘குதைத்’ எனும்

إِنَّمَا كَانَ مَنْ أَهَلَّ بِمَنَاةَ الطَّاغِيَةِ الَّتِي بِالْمُشَلَّلِ، لاَ يَطُوفُونَ بَيْنَ الصَّفَا وَالمَرْوَةِ، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى: {إِنَّ الصَّفَا وَالمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ} [البقرة: 158] فَطَافَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالمُسْلِمُونَ ” قَالَ سُفْيَانُ: «مَنَاةُ بِالْمُشَلَّلِ مِنْ قُدَيْدٍ» وَقَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ عُرْوَةُ: قَالَتْ عَائِشَةُ: «نَزَلَتْ فِي الأَنْصَارِ، كَانُوا هُمْ وَغَسَّانُ قَبْلَ أَنْ يُسْلِمُوا يُهِلُّونَ لِمَنَاةَ مِثْلَهُ» وَقَالَ مَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، كَانَ رِجَالٌ مِنَ الأَنْصَارِ مِمَّنْ كَانَ يُهِلُّ لِمَنَاةَ – وَمَنَاةُ صَنَمٌ بَيْنَ مَكَّةَ وَالمَدِينَةِ – قَالُوا: «يَا نَبِيَّ اللَّهِ كُنَّا لاَ نَطُوفُ بَيْنَ الصَّفَا وَالمَرْوَةِ تَعْظِيمًا لِمَنَاةَ نَحْوَهُ»


Bukhari-4860

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4860. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:

யார் சத்தியம் செய்யும்போது ‘லாத்தின் மீது சத்தியமாக! உஸ்ஸாவின் மீது சத்தியமாக! என்று கூறிவிட்டாரோ, அவர் (அதற்குப் பரிகாரமாக) ‘லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொல்லட்டும்! தம் நண்பரிடம், ‘வா சூது விளையாடுவோம்’ என்று கூறியவர் (எதையேனும்) தர்மம் செய்யட்டும்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book :65


مَنْ حَلَفَ فَقَالَ فِي حَلِفِهِ: وَاللَّاتِ وَالعُزَّى، فَلْيَقُلْ: لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَمَنْ قَالَ لِصَاحِبِهِ: تَعَالَ أُقَامِرْكَ، فَلْيَتَصَدَّقْ


Bukhari-4859

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 5 (நீங்கள் வழிபட்டுவரும் சிலைகளாகிய) லாத் மற்றும் உஸ்ஸா ஆகியன பற்றி (எப்போதாவது) நீங்கள் சிந்தித்ததுண்டா? (எனும் 53:19ஆவது இறைவசனம்).

4859. அபுல் ஜவ்ஸா அவ்ஸ் இப்னு அப்தில்லாஹ் அர்ரப்ஈ(ரஹ்) கூறினார்

‘லாத், உஸ்ஸா…’ எனும் (திருக்குர்ஆன் 53:19 வது) வசனத்திலுள்ள ‘லாத்’ என்பது, ஹாஜிகளுக்காக மாவு பிசைந்து தந்து கொண்டிருந்த ஒரு மனிதராவார் என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

Book : 65


فِي قَوْلِهِ: {اللَّاتَ وَالعُزَّى} [النجم: 19] «كَانَ اللَّاتُ رَجُلًا يَلُتُّ سَوِيقَ الحَاجِّ»


Bukhari-4858

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4

உறுதியாக அவர் தம் இறைவனின் சான்றுகளில் மிகப் பெரியதைக் கண்டார் (எனும் 53:18ஆவது இறைவசனம்).

4858. அல்கமா இப்னு கைஸ் அந்நகஈ (ரஹ்) கூறினார்

‘உறுதியாக அவர் தம் இறைவனின் சான்றுகளில் மிகப் பெரியதைக் கண்டார்’ எனும் (திருக்குர்ஆன் 53:18 வது) வசனத்தின் கருத்தாவது: அடிவானத்தை அடைத்திருந்த பச்சை விரிப்பு ஒன்றை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள்’ என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) கூறினார்.

Book : 65


{لَقَدْ رَأَى مِنْ آيَاتِ رَبِّهِ الكُبْرَى} [النجم: 18] قَالَ: «رَأَى رَفْرَفًا أَخْضَرَ قَدْ سَدَّ الأُفُقَ»


Bukhari-4856

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2

(வளைந்த) வில்லின் இருமுனைகளுக்கிடையிலான நெருக்கத்தைப் போல், அல்லது அதைவிடச் சமீபமாக (வானவர் ஜிப்ரீலுக்கும் நபிக்கும் இடையிலான நெருக்கம்) இருந்தது (எனும் 53:9 ஆவது இறைவசனம்) வில்லில் நாண் இருக்கும் இடத்தை இது குறிக்கும்.

4856. ஸிர்ரு இப்னு ஹுபைஷ்(ரஹ்) அறிவித்தார்

‘(வளைந்த) வில்லின் இரண்டு முனைகளுக்கிடையிலான நெருக்கத்தைப் போல், அல்லது அதைவிடச் சமீபமாக (வானவர் ஜிப்ரீலுக்கும் நபிக்கும் இடையிலான நெருக்கம்) இருந்தது. பிறகு, அல்லாஹ் அவருக்கு (ஜிப்ரீலுக்கு) அறிவித்ததையெல்லாம் அவர் அவனுடைய அடியாருக்கு அறிவித்தார்’ எனும் (திருக்குர்ஆன் 53:9, 10) வசனங்களைக் குறித்து

இப்னு மஸ்வூத் (ரலி) எங்களுக்குப் பின்வருமாறு தெரிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு அறுநூறு இறக்கைகள் இருக்க (அவரின் நிஜத் தோற்றத்தில்) அவரைப் பார்த்தார்கள்.

Book : 65


سَمِعْتُ زِرًّا، عَنْ عَبْدِ اللَّهِ، {فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَى فَأَوْحَى إِلَى عَبْدِهِ مَا أَوْحَى} [النجم: 10]، قَالَ: حَدَّثَنَا ابْنُ مَسْعُودٍ، «أَنَّهُ رَأَى جِبْرِيلَ لَهُ سِتُّ مِائَةِ جَنَاحٍ»


Bukhari-4855

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 53.

‘அந்நஜ்ம்’ எனும் 53 ஆவது அத்தியாயம்.

(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…)

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(அல்குர்ஆன்: 53:6) ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃதூ மிர்ரா’ எனும் சொல்லுக்கு ‘வலிமை வாய்ந்தவர்’ என்பது பொருள்.

(அல்குர்ஆன்: 53:9) ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘காப கவ்சைன்’ (வில்லின் இரு முனைகளுக்குச் சமமான அளவு) என்பது, வில்லில் நாண் இருக்கும் இடத்தைக் குறிக்கிறது.

(அல்குர்ஆன்:53:22) ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ளீஸா’ எனும் சொல்லுக்கு ‘வளைந்தது’ என்பது பொருள்.

(அல்குர்ஆன்: 53:34) ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வ அக்தா’ எனும் சொல்லுக்கு ‘மேலும் தான் கொடுப்பதை நிறுத்திக்கொண்டான்’ என்று பொருள்.

(அல்குர்ஆன்: 53:49) ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ரப்புஷ் ஷிஅரா’ என்பதிலுள்ள ‘ஷிஅரா’ எனும் சொல், ‘மிர்ஸமுல் ஜவ்ஸாஉ’ எனும் நட்சத்திரத்தைக் குறிக்கும்.

(அல்குர்ஆன்: 53:37) ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்லஃதீ வஃப்பா’ (நிறைவேற்றிய அவர்) என்பது, ‘தம்மீது விதியாக்கப்பட்டிருந்த இறையாணைகளை நிறைவேற்றிய இப்ராஹீம் (அலை) அவர்களைக் குறிக்கும்.

(அல்குர்ஆன்: 53:57) ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஸிஃபத்தில் ஆஸிஃபா’ (வரவேண்டிய நேரம் நெருங்கி வந்துவிட்டது) எனும் வாக்கியத்திற்கு

قُلْتُ لِعَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: يَا أُمَّتَاهْ هَلْ رَأَى مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَبَّهُ؟ فَقَالَتْ: لَقَدْ قَفَّ شَعَرِي مِمَّا قُلْتَ، أَيْنَ أَنْتَ مِنْ ثَلاَثٍ، مَنْ حَدَّثَكَهُنَّ فَقَدْ كَذَبَ: مَنْ حَدَّثَكَ أَنَّ مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَبَّهُ فَقَدْ كَذَبَ، ثُمَّ قَرَأَتْ: {لاَ تُدْرِكُهُ الأَبْصَارُ وَهُوَ يُدْرِكُ الأَبْصَارَ وَهُوَ اللَّطِيفُ الخَبِيرُ} [الأنعام: 103]، {وَمَا كَانَ لِبَشَرٍ أَنْ يُكَلِّمَهُ اللَّهُ إِلَّا وَحْيًا أَوْ مِنْ وَرَاءِ حِجَابٍ} [الشورى: 51]. وَمَنْ حَدَّثَكَ أَنَّهُ يَعْلَمُ مَا فِي غَدٍ فَقَدْ كَذَبَ، ثُمَّ قَرَأَتْ: {وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا} [لقمان: 34]. وَمَنْ حَدَّثَكَ أَنَّهُ كَتَمَ فَقَدْ كَذَبَ، ثُمَّ قَرَأَتْ: {يَا أَيُّهَا الرَّسُولُ بَلِّغْ مَا أُنْزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ} [المائدة: 67] الآيَةَ وَلَكِنَّهُ «رَأَى جِبْرِيلَ عَلَيْهِ السَّلاَمُ فِي صُورَتِهِ مَرَّتَيْنِ»


Next Page » « Previous Page