Author: Farook

Bukhari-4743

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 3 இவர்கள் தங்களுடைய இறைவனின் (மார்க்க) விஷயத்தில் தர்க்கித்துக் கொண்ட இரு பிரிவினர் ஆவர்எனும் (22:19ஆவது) வசனத் தொடர்.

4743. கைஸ் இப்னு உபாதா(ரஹ்) அறிவித்தார்.

அபூ தர்(ரலி) ‘இவர்கள் தங்களின் இறைவனின் (மார்க்க) விஷயத்தில் தர்கித்துக் கொண்ட இரண்டு பிரிவினர் ஆவர்’ எனும் இந்த (திருக்குர்ஆன் 22:19 வது) வசனத், பத்ருப் போரன்று (படைக்கு முன்னால் வந்து) தனித்து நின்று போராடிய (இஸ்லாமிய வீரர்களான) ஹம்ஸா மற்றும் அவர்களின் இரண்டு நண்பர்கள் (அலீ, உபைதா) விஷயத்திலும், (இறைமறுப்பாளர்களான) உத்பா மற்றும் அவரின் இரண்டு நண்பர்கள் (ஷைபா, வலீத்) விஷயத்திலுமே அருளப்பெற்றது’ எனச் சத்தியமிட்டுக் கூறி வந்தார்கள்.

இந்த ஹதீஸ் இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

Book : 65


أَنَّهُ كَانَ يُقْسِمُ قَسَمًا ” إِنَّ هَذِهِ الآيَةَ: {هَذَانِ خَصْمَانِ اخْتَصَمُوا فِي رَبِّهِمْ} [الحج: 19] نَزَلَتْ فِي حَمْزَةَ وَصَاحِبَيْهِ وَعُتْبَةَ وَصَاحِبَيْهِ، يَوْمَ بَرَزُوا فِي يَوْمِ بَدْرٍ ” رَوَاهُ سُفْيَانُ، عَنْ أَبِي هَاشِمٍ، وَقَالَ عُثْمَانُ: عَنْ جَرِيرٍ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي هَاشِمٍ، عَنْ أَبِي مِجْلَزٍ قَوْلَهُ


Bukhari-4742

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2 மேலும், மனிதர்களில் சிலர் இருக்கிறார்கள்; அவர்கள் விளிம்பில் நின்று கொண்டு அல்லாஹ்வை வழிபடுகிறார்கள். தங்களுக்கு ஏதேனும் ஆதாயம் கிடைக்குமாயின் அதைக் கொண்டு மன நிறைவுகொள்கின் றார்கள். துன்பம் ஏற்படுமாயின் தலைகீழாக மாறிவிடுகின்றார்கள். அவர்கள் இம்மையையும் இழந்து விட்டார்கள்; மறுமையையும் இழந்து விட்டார்கள். இது தான் பகிரங்க மான நஷ்டமாகும் (எனும் 22:11, 12 ஆகிய இறைவசனங்கள்). (முதல் வசனத்தின் மூலத்திலுள்ள) ஹர்ஃப் (விளிம்பு) என்பதற்குச் சந்தேகம் என்பது நோக்கப் பொருளாகும். (அடுத்த அத்தியாயத்தில் 23:33ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அத்ரஃப்னாஹும் என்பதற்கு ஆடம்பரமான வாழ்க்கையை அவர்களுக்கு நாம் வழங்கியிருந்தோம் என்று பொருள்.

4742. ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்.

‘விளிம்பில் நின்றுகொண்டு அல்லாஹ்வை வழிபடுகிற சிலரும் மக்களிடையே உள்ளனர்’ எனும் (திருக்குர்ஆன் 22:11 வது) இறைவசனம் தொடர்பாக இப்னு அப்பாஸ்(ரலி) கூறுகையில், ‘சிலர் மதீனாவுக்கு வருவர். (இஸ்லாத்தையும் ஏற்றுக்கொள்வர்.) அவர்கள் தம் மனைவியர் ஆண் பிள்ளைகள் பெற்றெடுத்தால், அவர்களின் குதிரைகள்

{وَمِنَ النَّاسِ مَنْ يَعْبُدُ اللَّهَ عَلَى حَرْفٍ} [الحج: 11] قَالَ: ” كَانَ الرَّجُلُ يَقْدَمُ المَدِينَةَ، فَإِنْ وَلَدَتِ امْرَأَتُهُ غُلاَمًا، وَنُتِجَتْ خَيْلُهُ، قَالَ: هَذَا دِينٌ صَالِحٌ، وَإِنْ لَمْ تَلِدِ امْرَأَتُهُ وَلَمْ تُنْتَجْ خَيْلُهُ، قَالَ: هَذَا دِينُ سُوءٍ


Bukhari-4741

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 1 மேலும், (மறுமை நாளில்) மக்களை போதையுற்றோராய்க் காண்பீர். (உண்மையில்) அவர்கள் போதையில் இருக்க மாட்டார்கள். ஆயினும், (அந்த அளவு) அல்லாஹ்வின் வேதனை கடுமையாய் இருக்கும் (எனும் 22:2ஆவது வசனத் தொடர்).

4741. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

வல்லவனும் மாண்புடையோனுமாகிய அல்லாஹ் மறுமை நாளில் (ஆதி மனிதரை நோக்கி,) ‘ஆதமே!’ என்பான். அதற்கு அவர்கள், ‘என் இறைவா! இதோ வந்து விட்டேன். கட்டளையிடு! காத்திருக்கிறேன்’ என்று கூறுவார்கள். அப்போது ‘நீங்கள் உங்கள் வழித்தோன்றல்களிருந்து நரகத்திற்கு அனுப்பப்படவிருப்பவர்களை (மற்றவர்களிலிருந்து) தனியாகப் பிரித்திடுமாறு அல்லாஹ் உங்களுக்கு ஆணையிடுகிறான்’ என்று ஒருவர் அறைகூவல் விடுப்பார். ஆதம்(அலை) அவர்கள், ‘எத்தனை நரகவாசிகளை?’ என்று கேட்பார்கள். அதற்கு அவர், ‘ஒவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது பேரை (வெளியே கொண்டு வாருங்கள்)’ என்று பதிலளிப்பார். இப்படி அவர் கூறும் வேளையில் (அங்கு நிலவும் பயரங்க சூழ்நிலையின் காரணத்தால்) கர்ப்பம் கொண்ட பெண் ஒவ்வொருத்தியும் கர்ப்பத்தை (பீதியின்

يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ يَوْمَ القِيَامَةِ: يَا آدَمُ، يَقُولُ: لَبَّيْكَ رَبَّنَا وَسَعْدَيْكَ، فَيُنَادَى بِصَوْتٍ: إِنَّ اللَّهَ يَأْمُرُكَ أَنْ تُخْرِجَ مِنْ ذُرِّيَّتِكَ بَعْثًا إِلَى النَّارِ، قَالَ: يَا رَبِّ وَمَا بَعْثُ النَّارِ؟ قَالَ: مِنْ كُلِّ أَلْفٍ – أُرَاهُ قَالَ – تِسْعَ مِائَةٍ  وَتِسْعَةً وَتِسْعِينَ، فَحِينَئِذٍ تَضَعُ الحَامِلُ حَمْلَهَا، وَيَشِيبُ الوَلِيدُ، وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى، وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ ” فَشَقَّ ذَلِكَ عَلَى النَّاسِ حَتَّى تَغَيَّرَتْ وُجُوهُهُمْ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مِنْ يَأْجُوجَ وَمَأْجُوجَ تِسْعَ مِائَةٍ وَتِسْعَةً وَتِسْعِينَ، وَمِنْكُمْ وَاحِدٌ، ثُمَّ أَنْتُمْ فِي النَّاسِ كَالشَّعْرَةِ السَّوْدَاءِ فِي جَنْبِ الثَّوْرِ الأَبْيَضِ – أَوْ كَالشَّعْرَةِ البَيْضَاءِ فِي جَنْبِ الثَّوْرِ الأَسْوَدِ – وَإِنِّي لَأَرْجُو أَنْ تَكُونُوا رُبُعَ أَهْلِ الجَنَّةِ» فَكَبَّرْنَا، ثُمَّ قَالَ: «ثُلُثَ أَهْلِ الجَنَّةِ» فَكَبَّرْنَا، ثُمَّ قَالَ: «شَطْرَ أَهْلِ الجَنَّةِ» فَكَبَّرْنَا قَالَ أَبُو أُسَامَةَ عَنِ الأَعْمَشِ، {تَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى} [الحج: 2]، وَقَالَ: «مِنْ كُلِّ أَلْفٍ تِسْعَ مِائَةٍ وَتِسْعَةً وَتِسْعِينَ» وَقَالَ جَرِيرٌ، وَعِيسَى بْنُ يُونُسَ، وَأَبُو مُعَاوِيَةَ: (سَكْرَى وَمَا هُمْ بِسَكْرَى)


Bukhari-4740

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2 முத-ல் (அவர்களை) நாம் படைத்தது போன்றே (அந்நாளில்) அவர்களை மீண்டும் படைப்போம். இது நமது வாக்குறுதியாகும் (எனும் 21:104ஆவது வசனத் தொடர்).

4740. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் (மக்களிடையே) உரையாற்றினார்கள். அப்போது, ‘(மனிதர்களே!) நீங்கள் அல்லாஹ்விடம் (செருப்பணியாத) வெறுங்காலுடையவர்களாக, உடையணியாதவர்களாக, ‘விருத்த சேதனம்’ செய்யப்படாதவர்களாக மறுமையில் எழுப்பப்படுவீர்கள்’ என்று கூறிவிட்டு, ‘முதலில் நாம் (அவர்களைப்) படைத்தது போன்றே (மறுமை நாளில்) நாம் அவர்களை மீண்டும் படைப்போம். இது நம்முடைய வாக்குறுதியாகும். நாம் இதனைச் செய்தே தீருவோம்’ எனும் (திருக்குர்ஆன் 21:104 வது) இறைவசனத்தை ஓதினார்கள். பிறகு, மறுமை நாளில் உடை அணிவிக்கப்படும் முதல் மனிதர் (இறைத்தூதர்) இப்ராஹீம் அவர்கள் தாம். அறிந்து கொள்ளுங்கள்: என்னுடைய சமுதாயத்தாரில் சிலர் கொண்டுவரப்பட்டு அவர்கள் இடப்பக்கம் (நரகத்தை நோக்கிக்) கொண்டு செல்லப்படுவர். அப்போது நான், ‘என் இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்’ என்று சொல்வேன். அதற்கு, ‘இவர்கள் உங்களு(டைய இறப்பு)க்குப் பின் என்னவெல்லாம்

خَطَبَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: ” إِنَّكُمْ مَحْشُورُونَ إِلَى اللَّهِ حُفَاةً عُرَاةً غُرْلًا، {كَمَا بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُعِيدُهُ، وَعْدًا عَلَيْنَا إِنَّا كُنَّا فَاعِلِينَ} [الأنبياء: 104]، ثُمَّ إِنَّ أَوَّلَ مَنْ يُكْسَى يَوْمَ القِيَامَةِ إِبْرَاهِيمُ، أَلاَ إِنَّهُ يُجَاءُ بِرِجَالٍ مِنْ أُمَّتِي، فَيُؤْخَذُ بِهِمْ ذَاتَ الشِّمَالِ، فَأَقُولُ: يَا رَبِّ أَصْحَابِي، فَيُقَالُ: لاَ تَدْرِي مَا أَحْدَثُوا بَعْدَكَ، فَأَقُولُ كَمَا قَالَ العَبْدُ الصَّالِحُ: {وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا، مَا دُمْتُ فِيهِمْ} [المائدة: 117] إِلَى قَوْلِهِ {شَهِيدٌ} [المائدة: 117] فَيُقَالُ: إِنَّ هَؤُلاَءِ لَمْ يَزَالُوا مُرْتَدِّينَ عَلَى أَعْقَابِهِمْ مُنْذُ فَارَقْتَهُمْ


Bukhari-4739

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 1

4739. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்

பனூ இஸ்ராயீல், அல்கஹ்ஃப், மர்யம், தாஹா மற்றும் அல்அன்பியா ஆகிய அத்தியாயங்கள் அதிசயமான முதல் தர அத்தியாயங்களில் அடங்கும். மேலும், இவை நான் மனனம் செய்த பழைய அத்தியாயங்களில் உள்ளவையாகும். 2

கத்தாதா(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 21:58 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஜுஃதாதன்’ எனும் சொல்லுக்குத் ‘துண்டு துண்டாக்கினார்’ என்று பொருள்.

(திருக்குர்ஆன் 21:33 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபலக்’ எனும் சொல்லி(ன் விளக்கவுரையி)ல் ஹஸன் அல்பஸரீ(ரஹ்) ‘நூற்பு இயந்திரத்தின் தகளி போல் (சுழன்றபடி கோள்கள் அனைத்தும் அதன்னுடையன் நீள்வட்டப்பாதையில் நீந்திச் செல்கின்றன)’ என்று கூறினார்கள். ‘யஸ்பஹ_ன்’ எனும் சொல்லுக்குச் ‘சுற்றுகின்றன’ என்று பொருள்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

(திருக்குர்ஆன்

بَنِي إِسْرَائِيلَ، وَالكَهْفُ، وَمَرْيَمُ، وَطه، وَالأَنْبِيَاءُ: هُنَّ مِنَ العِتَاقِ الأُوَلِ، وَهُنَّ مِنْ تِلاَدِي، وَقَالَ قَتَادَةُ: {جُذَاذًا} [الأنبياء: 58]: «قَطَّعَهُنَّ» وَقَالَ الحَسَنُ: {فِي فَلَكٍ} [يس: 40]: «مِثْلِ فَلْكَةِ المِغْزَلِ»، {يَسْبَحُونَ} [يس: 40]: «يَدُورُونَ» قَالَ ابْنُ عَبَّاسٍ: {نَفَشَتْ} [الأنبياء: 78]: «رَعَتْ لَيْلًا»، {يُصْحَبُونَ} [الأنبياء: 43]: «يُمْنَعُونَ»، {أُمَّتُكُمْ أُمَّةً وَاحِدَةً} [الأنبياء: 92]: ” قَالَ: دِينُكُمْ دِينٌ وَاحِدٌ ” وَقَالَ عِكْرِمَةُ: {حَصَبُ} [الأنبياء: 98]: «حَطَبُ [ص:97] بِالحَبَشِيَّةِ» وَقَالَ غَيْرُهُ: {أَحَسُّوا} [الأنبياء: 12]: «تَوَقَّعُوا مِنْ أَحْسَسْتُ»، {خَامِدِينَ} [الأنبياء: 15]: «هَامِدِينَ»، {وَالحَصِيدُ}: «مُسْتَأْصَلٌ، يَقَعُ عَلَى الوَاحِدِ وَالِاثْنَيْنِ وَالجَمِيعِ»، {لاَ يَسْتَحْسِرُونَ} [الأنبياء: 19]: ” لاَ يُعْيُونَ، وَمِنْهُ {حَسِيرٌ} [الملك: 4]: وَحَسَرْتُ بَعِيرِي “، {عَمِيقٌ} [الحج: 27]: «بَعِيدٌ»، {نُكِسُوا} [الأنبياء: 65]: «رُدُّوا»، {صَنْعَةَ لَبُوسٍ} [الأنبياء: 80]: «الدُّرُوعُ»، {تَقَطَّعُوا أَمْرَهُمْ} [الأنبياء: 93]: «اخْتَلَفُوا، الحَسِيسُ وَالحِسُّ، وَالجَرْسُ وَالهَمْسُ وَاحِدٌ، وَهُوَ مِنَ الصَّوْتِ الخَفِيِّ»، {آذَنَّاكَ} [فصلت: 47]: «أَعْلَمْنَاكَ»، {آذَنْتُكُمْ} [الأنبياء: 109]: «إِذَا أَعْلَمْتَهُ، فَأَنْتَ وَهُوَ عَلَى سَوَاءٍ لَمْ تَغْدِرْ» وَقَالَ مُجَاهِدٌ: {لَعَلَّكُمْ تُسْأَلُونَ} [الأنبياء: 13]: «تُفْهَمُونَ»، {ارْتَضَى} [الأنبياء: 28]: «رَضِيَ»، {التَّمَاثِيلُ} [الأنبياء: 52]: «الأَصْنَامُ»، {السِّجِلُّ} [الأنبياء: 104]: «الصَّحِيفَةُ»


Bukhari-4738

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்: 3

ஆதமே! இவன் (-இப்லீஸ்-) உமக்கும் உம்முடைய மனைவிக்கும் பகைவனாவான். ஆதலால், இவன் உங்களிருவரையும் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றிவிட (இடமளிக்க)வேண்டாம்; (அப்படி வெளியேற்றிவிட்டால்) நீங்கள் இன்னலுக்குள்ளாகி விடுவீர்கள் என்று நாம் கூறினோம் எனும் (20:117ஆவது) இறைவசனம்.

4738. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

மூஸா(அலை) அவர்கள் ஆதம்(அலை) அவர்களிடம் வாதிட்டார்கள். அப்போது உங்கள் பாவத்தின் காரணமாக மக்களைச் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றி அவர்களைத் துர்பாக்கியசாலிகளாய் ஆக்கியவர்கள் நீங்கள் தாமே!’ என்று மூஸா(அலை) அவர்கள் ஆதம்(அலை) அவர்களிடம் கேட்டார்கள். (பதிலுக்கு) ஆதம்(அலை) அவர்கள் ‘மூஸா! தன் தூதுச் செய்திகளை (மக்களிடம்) எடுத்துரைப்பதற்காகவும் தன்னுடன் உரையாடுவதற்காகவும் அல்லாஹ் தேர்ந்தெடுத்த மனிதர் நீங்கள் தாமே? என்னைப் படைப்பதற்கு முன்பே என் மீது அல்லாஹ் ‘எழுதிவிட்ட’ அல்லது ‘விதித்துவிட்ட ‘ஒரு விஷயத்திற்காகவா என்னை நீங்கள் குறை கூறுகிறிர்கள்’ என்று திருப்பிக் கேட்டார்கள். இதைக் கூறிவிட்டு

حَاجَّ مُوسَى آدَمَ، فَقَالَ لَهُ: أَنْتَ الَّذِي أَخْرَجْتَ النَّاسَ مِنَ الجَنَّةِ بِذَنْبِكَ وَأَشْقَيْتَهُمْ، قَالَ: قَالَ آدَمُ: يَا مُوسَى، أَنْتَ الَّذِي اصْطَفَاكَ اللَّهُ بِرِسَالَتِهِ وَبِكَلاَمِهِ، أَتَلُومُنِي عَلَى أَمْرٍ كَتَبَهُ اللَّهُ عَلَيَّ قَبْلَ أَنْ يَخْلُقَنِي – أَوْ قَدَّرَهُ عَلَيَّ قَبْلَ أَنْ يَخْلُقَنِي – ” قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَحَجَّ آدَمُ مُوسَى»


Bukhari-4737

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2 நாம் மூசாவிற்கு வஹீ (செய்தி) அனுப்பினோம்: நீர்இரவோடு இரவாக என் அடியார்களை அழைத்துக் கொண்டு சென்று, கட-ல் அவர்களுக்காக உலர்ந்த பாதையை அமைப்பீராக! உம்மை யாரேனும் பின் தொடர்வார்களோ எனச் சற்றும் நீர் அஞ்சத் தேவையில்லை; (கடலைக் கடந்து செல்லும் போது) உமக்கு பயமும் ஏற்பட வேண்டிய தில்லை. ஃபிர் அவ்ன் தன் படைகளுடன் அவர்களைப் பின்தொடர்ந்தான். பிறகு அவர்களைக் கடல் எவ்வாறு மூழ்கடிக்க வேண்டுமோ அவ்வாறு மூழ்கடித்தது. ஃபிர் அவ்ன் தன்னுடைய சமுதாயத்தை வழிகெடுத்தே இருந்தான்; அவர்களுக்குச் சரியான வழியைக் காட்டியிருக்கவில்லை (எனும் 20:77-79 வசனங்கள்).

4737. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது யூதர்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளில் நோன்பு நோற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் அது பற்றி விசாரித்தார்கள். அதற்கு அவர்கள் ‘இதுதான் மூஸா(அலை) அவர்கள் ஃபிர்அவ்னை வெற்றி கொண்ட நாள்’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘இவர்களை விட மூஸா(அலை) அவர்களுக்கு நாமே அதிக உரிமையுடையவர்கள். எனவே, நீங்கள் இந்நாளில் நோன்பு வையுங்கள்’

لَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المَدِينَةَ وَاليَهُودُ تَصُومُ يَوْمَ عَاشُورَاءَ، فَسَأَلَهُمْ، فَقَالُوا: هَذَا اليَوْمُ الَّذِي ظَهَرَ فِيهِ مُوسَى عَلَى فِرْعَوْنَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَحْنُ أَوْلَى بِمُوسَى مِنْهُمْ فَصُومُوهُ»


Bukhari-4736

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்: 1

(மூசாவே!) எனக்காக உங்களை நான் தெரிந்தெடுத்திருக்கிறேன் எனும் (20:41 ஆவது) இறைவசனம்.

4736. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

ஆதம்(அலை) அவர்களும் மூஸா(அலை) அவர்களும் சந்தித்துக்கொண்டபோது மூஸா(அலை) அவர்கள் ஆதம்(அலை) அவர்களிடம், ‘நீங்கள் தாம் மக்களைத் துர்பாக்கியவான்களாக்கி, அவர்களைச் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியவரா?’ என்று கேட்டார்கள். ஆதம்(அலை) அவர்கள் மூஸா(அலை) அவர்களிடம், ‘அல்லாஹ் தன் தூதர் பதவிக்காகவும் தனக்காகவும் தேர்ந்தெடுத்து தவ்ராத்தையும் அருளினானே அவரா நீங்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு மூஸா(அலை) அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள். அதற்கு ஆதம்(அலை) அவர்கள், ‘என்னைப் படைப்பதற்கு முன்பாகவே (நீங்கள் குறிப்பிட்டபடி செய்வேன் என) என் மீது விதிக்கப்பட்டிருந்ததாக, தவ்ராத்தில் நீங்கள் கண்டீர்களா?’ என்று கேட்டார்கள். மூஸா(அலை) அவர்கள் ‘ஆம்’ (கண்டேன்) என்றார்கள். இப்படி(ப் பேசி) மூஸா(அலை) அவர்களை ஆதம்(அலை) அவர்கள் (வாதத்தில்) வென்றார்கள்.

التَقَى آدَمُ وَمُوسَى، فَقَالَ مُوسَى لِآدَمَ: آنْتَ الَّذِي أَشْقَيْتَ النَّاسَ وَأَخْرَجْتَهُمْ مِنَ الجَنَّةِ؟ قَالَ آدَمُ: أَنْتَ مُوسَى الَّذِي اصْطَفَاكَ اللَّهُ بِرِسَالَتِهِ، وَاصْطَفَاكَ لِنَفْسِهِ وَأَنْزَلَ عَلَيْكَ التَّوْرَاةَ؟ قَالَ: نَعَمْ، قَالَ: فَوَجَدْتَهَا كُتِبَ عَلَيَّ قَبْلَ أَنْ يَخْلُقَنِي، قَالَ: نَعَمْ، فَحَجَّ آدَمُ مُوسَى