Author: Farook

Bukhari-4733

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4 மறைவானவற்றை அவன் அறிந்து கொண்டானா? அல்லது கருணையாள னிடத்தில் அவன் உறுதிமொழி ஏதேனும் வாங்கியுள்ளானா? எனும் (19:78ஆவது) இறைவசனம்.

4733. கப்பாப் இப்னு அரத்(ரலி) அறிவித்தார்

நான் மக்காவில் (அறியாமைக் காலத்தில்) கொல்லனாக (தொழில் செய்துகொண்டு) இருந்தேன். அப்போது ‘ஆஸ் இப்னு வாயில் அஸ்ஸஹ்மீ’ என்பவருக்கு வாள் ஒன்றைச் செய்து கொடுத்தேன். பின்னர், அதற்கான கூலியைத் தரும்படி கேட்டு அவரிடம் நான் சென்றேன். அவர், நீ முஹம்மதை நிராகரிக்காத வரை உனக்குத் தரமாட்டேன்’ என்று கூறினார். நான், ‘உன்னை அல்லாஹ் மரணிக்கச் செய்து, பிறகு உயிர்கொடுக்கும் வரை நான் முஹம்மதை நிராகரிக்க மாட்டேன்’ என்று சொன்னேன். அதற்கவர் ‘என்னை அல்லாஹ் மரணிக்கச் செய்து பிறகு என்னை எழுப்பினால், அப்போதும் எனக்கு செல்வமும் சந்ததியும் இருக்கும்’ என்று கூறினார். உடனே அல்லாஹ்: ‘நம் வசனங்களை நிராகரித்ததுடன் (மறுமையிலும்) தனக்குச் செல்வமும் சந்ததியும் வழங்கப்படும் என்று சொன்னவனை நீங்கள் பார்த்தீர்களா? மறைவானவற்றை அவன் அறிந்துகொண்டானா? அல்லது கருணையாளனிடம் உறுதிமொழி ஏதேனும் வாங்கியிருக்கிறானா?’

كُنْتُ قَيْنًا بِمَكَّةَ، فَعَمِلْتُ لِلْعَاصِ بْنِ وَائِلٍ السَّهْمِيِّ سَيْفًا فَجِئْتُ أَتَقَاضَاهُ، فَقَالَ: لاَ أُعْطِيكَ حَتَّى تَكْفُرَ بِمُحَمَّدٍ قُلْتُ: «لاَ أَكْفُرُ بِمُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى يُمِيتَكَ اللَّهُ، ثُمَّ يُحْيِيَكَ»، قَالَ: إِذَا أَمَاتَنِي اللَّهُ ثُمَّ بَعَثَنِي وَلِي مَالٌ وَوَلَدٌ، فَأَنْزَلَ اللَّهُ: {أَفَرَأَيْتَ الَّذِي كَفَرَ بِآيَاتِنَا وَقَالَ: لَأُوتَيَنَّ مَالًا وَوَلَدًا، أَطَّلَعَ الغَيْبَ أَمُ اتَّخَذَ عِنْدَ الرَّحْمَنِ عَهْدًا} ” قَالَ: ” مَوْثِقًا لَمْ يَقُلِ الأَشْجَعِيُّ، عَنْ سُفْيَانَ: سَيْفًا وَلاَ مَوْثِقًا


Bukhari-4732

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 3 (நபியே!) நம் வசனங்களை நிராகரித்ததுடன் (மறுமையிலும்) தனக்குச் செல்வமும், சந்ததியும் வழங்கப்படும் என்று கூறினானே அவனை நீங்கள் பார்த்தீர்களா? எனும் (19:77ஆவது) இறைவசனம்.

4732. கப்பாப் இப்னு அரத்(ரலி) அறிவித்தார்

‘ஆஸ் இப்னு வாயில் அஸ்ஸஹ்மீ’ என்பவர்எனக்குத் தர வேண்டியிருந்த ஒரு கடனைக் கேட்டு அவரிடம் நான் சென்றேன். ‘நீ முஹம்மதை நிராகரிக்காமல் (ஏற்றுக் கொண்டு) இருக்கும்வரை, நான் உனக்குத் தரமாட்டேன்’ என்று அவர் கூறினார். நான், ‘நீ இறந்து உயிருடன் எழுப்பப்படும் வரை நான் முஹம்மதை நிராகரிக்க மாட்டேன்’ என்று கூறினேன். அவர் ‘நான் இறந்து மீண்டும் எழுப்பப்படுவேனா?’ என்று கேட்டார். நான் ‘ஆம்’ என்று பதிலளித்தேன். அதற்கவர், ‘அப்படியாயின், எனக்கு அங்கேயும் செல்வமும் சந்ததியும் கிடைக்கும். அப்போது உனக்குத் தரவேண்டிய கடனை நான் செலுத்திவிடுகிறேன்’ என்று கூறினார். அப்போதுதான் ‘(நபியே!) நம் வசனங்களை நிராகரித்ததுடன் (மறுமையிலும்) தனக்குச் செல்வமும், சந்ததியும் வழங்கப்படும் என்று கூறினானே அவனை நீங்கள் பார்த்தீர்களா?’ எனும் (திருக்குர்ஆன்

جِئْتُ العَاصَ بْنَ وَائِلٍ السَّهْمِيَّ أَتَقَاضَاهُ حَقًّا لِي عِنْدَهُ، فَقَالَ: لاَ أُعْطِيكَ حَتَّى تَكْفُرَ بِمُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: «لاَ حَتَّى تَمُوتَ ثُمَّ تُبْعَثَ»، قَالَ: وَإِنِّي لَمَيِّتٌ ثُمَّ مَبْعُوثٌ؟ قُلْتُ: نَعَمْ، قَالَ: إِنَّ لِي هُنَاكَ مَالًا وَوَلَدًا فَأَقْضِيكَهُ، فَنَزَلَتْ هَذِهِ الآيَةُ: {أَفَرَأَيْتَ الَّذِي كَفَرَ بِآيَاتِنَا وَقَالَ: لَأُوتَيَنَّ مَالًا وَوَلَدًا} [مريم: 77] رَوَاهُ الثَّوْرِيُّ، وَشُعْبَةُ، وَحَفْصٌ، وَأَبُو مُعَاوِيَةَ، وَوَكِيعٌ، عَنِ الأَعْمَشِ


Bukhari-4731

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 2 (வானவர்கள் கூறுகின்றனர்: நபியே!) உங்கள் இறைவனின் உத்தவுப்படியே தவிர நாங்கள் இறங்குவதில்லை. எங்களுக்கு முன்னிருப்பவையும், பின்னிருப்பவையும், இரண்டுக்குமிடையே இருப்பவையும் அவனுக்கே உரியவையாகும்.! (இதில் எதையும்) உங்கள் இறைவன் மறப்பவன் அல்லன்எனும் (19:64ஆவது) இறைவசனம்.

4731. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களிடம்: ‘நீங்கள் இப்போது என்னைச் சந்திப்பதைவிட அதிகமாகச் சந்திக்கத் தடையாக இருப்பதென்ன?’ என்று கேட்டார்கள். 2 அப்போதுதான் ‘(நபியே!) உங்களுடைய இறைவனின் உத்தரவுப்படியே தவிர நாங்கள் இறங்குவதில்லை. எங்களுக்கு முன்னிருப்பவையும், பின்னிருப்பவையும், இரண்டுக்குமிடையே இருப்பவையும் அவனுக்கே உரியவையாகும். (இதில் எதையும்) உங்களுடைய இறைவன் மறப்பவன் அல்லன்’ எனும் (திருக்குர்ஆன் 19:64 வது) இறைவசனம் அருளப்பெற்றது.

Book : 65


قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِجِبْرِيلَ: «مَا يَمْنَعُكَ أَنْ تَزُورَنَا أَكْثَرَ مِمَّا تَزُورُنَا»، فَنَزَلَتْ: {وَمَا نَتَنَزَّلُ إِلَّا بِأَمْرِ رَبِّكَ لَهُ مَا بَيْنَ أَيْدِينَا وَمَا خَلْفَنَا} [مريم: 64]


Bukhari-4730

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 1 (நபியே!) துக்கத்திற்குரிய அந்த (மறுமை) நாளைக் குறித்து இவர்களை எச்சரியுங்கள் (எனும் 19:39ஆவது வசனத் தொடர்.)

4730. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்

(மறுமை நாளில்) கருமை கலந்த வெண்ணிற ஆடு ஒன்றின் தோற்றத்தில் மரணம் கொண்டுவரப்படும். அப்போது அறிவிப்புச் செய்யும் (வானவர்களில்) ஒருவர், ‘சொர்க்கவாசிகளே!’ ‘இதை (இந்த ஆட்டை) நீங்கள் அறிவீர்களா?’ என்று கேட்டார். அவர்கள், ‘ஆம்! இதுதான் மரணம்’ என்று பதிலளிப்பார்கள். அவர்கள் அனைவரும் அதை (முன்பே) பார்த்திருக்கிறார்கள்.

பிறகு அவர் நரகவாசிகளை நோக்கி: ‘நரகவாசிகளே!’ என்று அழைப்பார். அவர்கள் தலையை நீட்டிப் பார்ப்பார்கள். அவர் ‘இதை நீங்கள் அறிவீர்களா?’ என்று கேட்பார். அவர்கள், ‘ஆம் (அறிவோம்;) இதான் மரணம்’ என்று பதில் சொல்வார்கள். அவர்கள் அனைவரும் அதை (முன்பே) பார்த்துள்ளனர். உடனே அது (ஆட்டின் உருவத்திலுள்ள மரணம்) அறுக்கப்பட்டுவிடும். பிறகு அவர், ‘சொர்க்கவாசிகளே நிரந்தரம்; இனி மரணமே இல்லை. நரகவாசிகளே! நிரந்தரம்; இனி மரணம் என்பதே இல்லை’ என்று கூறுவார்.

يُؤْتَى بِالْمَوْتِ كَهَيْئَةِ كَبْشٍ أَمْلَحَ، فَيُنَادِي مُنَادٍ: يَا أَهْلَ الجَنَّةِ، فَيَشْرَئِبُّونَ وَيَنْظُرُونَ، فَيَقُولُ: هَلْ تَعْرِفُونَ هَذَا؟ فَيَقُولُونَ: نَعَمْ، هَذَا المَوْتُ، وَكُلُّهُمْ قَدْ رَآهُ، ثُمَّ يُنَادِي: يَا أَهْلَ النَّارِ، فَيَشْرَئِبُّونَ وَيَنْظُرُونَ، فَيَقُولُ: وهَلْ تَعْرِفُونَ هَذَا؟ فَيَقُولُونَ: نَعَمْ، هَذَا المَوْتُ، وَكُلُّهُمْ قَدْ [ص:94] رَآهُ، فَيُذْبَحُ ثُمَّ يَقُولُ: يَا أَهْلَ الجَنَّةِ خُلُودٌ فَلاَ مَوْتَ، وَيَا أَهْلَ النَّارِ خُلُودٌ فَلاَ مَوْتَ، ثُمَّ قَرَأَ: {وَأَنْذِرْهُمْ يَوْمَ الحَسْرَةِ إِذْ قُضِيَ الأَمْرُ وَهُمْ فِي غَفْلَةٍ} [مريم: 39]، وَهَؤُلاَءِ فِي غَفْلَةٍ أَهْلُ الدُّنْيَا {وَهُمْ لاَ يُؤْمِنُونَ} [مريم: 39]


Bukhari-4729

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 6 அவர்கள்தாம் தம் இறைவனின் வசனங் களையும் (மறுமையில்) அவனது சந்திப்பையும் ஏற்க மறுத்தவர்கள் ஆவர். ஆகவே, அவர்களின் செயல்கள் வீணாகிவிட்டன. மேலும், மறுமை நாளில் அவர்களுக்கு எத்தகைய மதிப்பையும் அளிக்க மாட்டேம் எனும் (18:105ஆவது) இறைவசனம்.

4729. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

மறுமை நாளில் உடல் பருத்த கொழுத்த மனிதன் ஒருவன் வருவான். அல்லாஹ்விடம் கொசுவின் இறக்கையளவு எடை கூட அவன் (மதிப்பு) பெறமாட்டான். ‘மறுமை நாளில் அவர்களுக்கு எத்தகைய மதிப்பையும் அளிக்கமாட்டோம்’ எனும் (திருக்குர்ஆன் 18:105 வது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

Book : 65


إِنَّهُ لَيَأْتِي الرَّجُلُ العَظِيمُ السَّمِينُ يَوْمَ القِيَامَةِ، لاَ يَزِنُ عِنْدَ اللَّهِ جَنَاحَ بَعُوضَةٍ، وَقَالَ: اقْرَءُوا، {فَلاَ نُقِيمُ لَهُمْ يَوْمَ القِيَامَةِ وَزْنًا} [الكهف: 105] ” وَعَنْ يَحْيَى بْنِ بُكَيْرٍ، عَنِ المُغِيرَةِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي الزِّنَادِ مِثْلَهُ


Bukhari-4728

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 5 தம் செயல்களில் பெரும் இழப்பிற்கு ஆளான வர்கள் யார் என்பதை நாம் உங்களுக்கு அறிவிக்கட்டுமா என்று (நபியே!) கேளுங்கள் எனும் (18:103ஆவது) இறைவசனம்.

4728. முஸ்அப் இப்னு ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரஹ்) அறிவித்தார்

நான் என் தந்தை (ஸஅத் இப்னு அபீ வக்காஸ்) அவர்களிடம் ‘இந்த (திருக்குர்ஆன் 18:103 வது) வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள், ‘ஹரூரிய்யாக்களா? என்று கேட்டேன்.அதற்கு அவர்கள், ‘(ஹரூரிய்யாக்கள்) இல்லை; யூதர்களும் கிறிஸ்தவர்களும் தாம் அவர்கள். யூதர்கள், முஹம்மத்(ஸல்) அவர்களை ஏற்க மறுத்தார்கள். கிறிஸ்தவர்களோ சொர்க்கத்தை நிராகரித்துள்ளார்கள்; அங்கு உணவோ, பானமோ கிடையாது என்று கூறினார்கள்.’ஹரூரிய்யாக்களே’, அல்லாஹ்விடம் வாக்குறுதி அளித்தபின் அல்லாஹ்வுடன் தாங்கள் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முறிப்பவர்கள் ஆவார்கள்’ என்று கூறினார்கள்.

(என் தந்தை) ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) ஹரூரிய்யாக்களை ‘பாவிகள்’ என்று குறிப்பிட்டு வந்தார்கள். (‘இறைமறுப்பாளர்கள்’ என்று கூறுவதில்லை.)

سَأَلْتُ أَبِي: {قُلْ هَلْ نُنَبِّئُكُمْ بِالأَخْسَرِينَ أَعْمَالًا} [الكهف: 103]: هُمُ الحَرُورِيَّةُ؟ قَالَ: ” لَا هُمُ اليَهُودُ وَالنَّصَارَى، أَمَّا اليَهُودُ فَكَذَّبُوا مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَمَّا النَّصَارَى فَكَفَرُوا بِالْجَنَّةِ وَقَالُوا: لاَ طَعَامَ فِيهَا وَلاَ شَرَابَ، وَالحَرُورِيَّةُ الَّذِينَ يَنْقُضُونَ عَهْدَ اللَّهِ مِنْ بَعْدِ مِيثَاقِهِ “، وَكَانَ سَعْدٌ يُسَمِّيهِمُ الفَاسِقِينَ