Author: Farook

Bukhari-4653

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 7 எனினும் உங்களிடம் பலவீனம் இருக்கின் றது என்பதை அறிந்து கொண்டு தற்போது (அதனை) உங்களுக்கு அல்லாஹ் தளர்த்தி விட்டான் எனும் (8:66ஆவது) இறைவசனம்.
4653. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
‘உங்களில் (நிலைகுலையாத) பொறுமையாளர்கள் இருபது பேர் இருந்தால் (எதிரிகளில்) இரண்டு நூறு பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள்’ எனும் (திருக்குர்ஆன் 08:65 வது) வசனம் அருளப்பெற்று, (முஸ்லிம்) ஒருவர் (இறைமறுப்பாளர்கள்) பத்துப் பேரைக் கண்டு வெருண்டோடாமல் (எதிர்த்து நின்று சமாளித்துப் பொறுமையாக) இருக்கவேண்டும் என்று விதிக்கப்பட்டபோது அது முஸ்லிம்களுக்குச் சிரமமாயிருந்தது. எனவே, (சட்டத்தைத்) தளர்த்தும் வசனம் வந்தது. அதில் அல்லாஹ், ‘எனினும், உங்களிடம் பலவீனம் இருக்கிறது என்பதை அல்லாஹ் அறிந்துகொண்டு தற்போது (அதனை) உங்களுக்குத் தளர்த்திவிட்டான். எனவே, உங்களில் (நிலை குலையாத) பொறுமைசாலிகள் நூறு பேர் (எதிரிகளில்) இருநூறு பேரை வெற்றிகொள்வார்கள்’ எனும் வசனம் (திருக்குர்ஆன் 08:66) அருளப்பெற்றது. (எதிரிகளைச் சமாளிக்கும்) விம்தத்தை அல்லாஹ் குறைத்துவிட்ட போதே அதே அளவுக்கு சகிப்புத்தன்மையையும் அவன் குறைத்துவிட்டான்.
Book : 65


لَمَّا نَزَلَتْ: {إِنْ يَكُنْ مِنْكُمْ عِشْرُونَ صَابِرُونَ يَغْلِبُوا مِائَتَيْنِ} شَقَّ ذَلِكَ عَلَى المُسْلِمِينَ، حِينَ فُرِضَ عَلَيْهِمْ أَنْ لاَ يَفِرَّ وَاحِدٌ مِنْ عَشَرَةٍ، فَجَاءَ التَّخْفِيفُ “، فَقَالَ: (الآنَ خَفَّفَ اللَّهُ عَنْكُمْ وَعَلِمَ أَنَّ فِيكُمْ ضُعْفًا، فَإِنْ يَكُنْ مِنْكُمْ مِائَةٌ صَابِرَةٌ يَغْلِبُوا مِائَتَيْنِ) قَالَ: «فَلَمَّا خَفَّفَ اللَّهُ عَنْهُمْ مِنَ العِدَّةِ نَقَصَ مِنَ الصَّبْرِ بِقَدْرِ مَا خُفِّفَ عَنْهُمْ»


Bukhari-4652

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 6 நபியே! இறை நம்பிக்கையாளர்களுக்குப் போர் புரிவதில் ஆர்வமூட்டுவீராக! உங்களில் (நிலைகுலையாத) பொறுமையாளர்கள் இருபது பேர் இருந்தால் (எதிரிகளில்) இரு நூறு பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள். மேலும் (இத்தகையோர்) உங்களில் நூறு பேர் இருந்தால் இறைமறுப்பாளர்களில் ஓராயிரம் பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள்; ஏனெனில், இவர்கள் புரிந்து கொள்ளாத மக்களாக இருக்கின்றார்கள் (எனும் 8:65 ஆவது இறைவசனம்).

4652. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

‘உங்களில் (நிலைகுலையாத) பொறுமையாளர்கள் இருபது பேர் இருந்தால் (எதிரிகளில்) இரண்டு நூறு பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள்’ எனும் (திருக்குர்ஆன் 08:65 வது) இறைவசனம் அருளப்பட்டபோது, ஒருவர் பத்து பேரைக் கண்டு வெருண்டோடாமல் (எதிர்த்து நின்று சமாளித்துப் பொறுமையாக) இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு விதியாக்கப்பட்டது. இதையே ‘இருநூறு பேரைக் கண்டு இருபது பேர் வெருண்டோடக் கூடாது’ என சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) பலமுறை தெரிவித்தார்கள். அதன் பிறகு ‘எனினும் உங்களிடம் பலவீனம் இருக்கிறது என்பதை அல்லாஹ் நன்கறிந்து கொண்டு, தற்போது (அதனை) உங்களுக்குத்

لَمَّا نَزَلَتْ: {إِنْ يَكُنْ مِنْكُمْ عِشْرُونَ صَابِرُونَ يَغْلِبُوا مِائَتَيْنِ}، وَإِنْ يَكُنْ مِنْكُمْ مِائَةٌ فَكُتِبَ عَلَيْهِمْ أَنْ لاَ يَفِرَّ وَاحِدٌ مِنْ عَشَرَةٍ ” – فَقَالَ سُفْيَانُ غَيْرَ مَرَّةٍ: أَنْ لاَ يَفِرَّ عِشْرُونَ مِنْ مِائَتَيْنِ – ” ثُمَّ نَزَلَتْ: {الآنَ خَفَّفَ اللَّهُ عَنْكُمْ} [الأنفال: 66] الآيَةَ، فَكَتَبَ أَنْ لاَ يَفِرَّ مِائَةٌ مِنْ مِائَتَيْنِ ” وَزَادَ سُفْيَانُ مَرَّةً: نَزَلَتْ: {حَرِّضِ المُؤْمِنِينَ عَلَى القِتَالِ، إِنْ يَكُنْ مِنْكُمْ عِشْرُونَ صَابِرُونَ} [الأنفال: 65]، قَالَ سُفْيَانُ: وَقَالَ ابْنُ شُبْرُمَةَ: «وَأُرَى الأَمْرَ بِالْمَعْرُوفِ وَالنَّهْيَ عَنِ المُنْكَرِ مِثْلَ هَذَا»


Bukhari-4651

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4651. ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்.

எங்களிடம் இப்னு உமர்(ரலி) புறப்பட்டு வந்தார்கள். (அப்போது) ஒருவர் (அன்னாரிடம்), ‘நீங்கள் (இந்த முஸ்லிம்களுக்கிடையிலான) குழப்பத்தின் (காரணமாக விளைந்துள்ள) போரைக் குறித்து என்ன கருதுகிறீர்கள்?’ என்று கேட்டதற்கு, இப்னு உமர்(ரலி), ‘குழப்பம்’ (ஃபித்னா) என்றால் என்ன என்று உமக்குத் தெரியுமா? முஹம்மத்(ஸல்) அவர்கள் இணைவைப்பவர்களுடன் போரிட்டு வந்தார்கள். இணைவைப்பவர்களிடம் முஸ்லிம் ஒருவர் சென்றால் குழப்பத்தில் (சோதனையில்) சிக்கிக்கொள்வார்’ என்று பதிலளித்துவிட்டு, ‘அவர்களின் போர் ஆட்சியதிகாரத்திற்காக நடக்கும் உங்களின் போரைப் போன்று இருந்ததில்லை’ என்றும் கூறினார்கள்.

Book :65


خَرَجَ عَلَيْنَا – أَوْ إِلَيْنَا – ابْنُ عُمَرَ، فَقَالَ رَجُلٌ: كَيْفَ تَرَى فِي قِتَالِ الفِتْنَةِ؟ فَقَالَ: وَهَلْ تَدْرِي مَا الفِتْنَةُ؟ «كَانَ مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَاتِلُ المُشْرِكِينَ، وَكَانَ الدُّخُولُ عَلَيْهِمْ فِتْنَةً وَلَيْسَ كَقِتَالِكُمْ عَلَى المُلْكِ»


Bukhari-4650

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 5 (பூமியிலிருந்து) குழப்பம் நீங்கி, கீழ்ப்படிதல் முற்றிலுமாக அல்லாஹ்வுக்கென்றே ஆகி விடும்வரை அவர்களுடன் நீங்கள் போர் புரியுங்கள் (எனும் 8:39ஆவது வசனத் தொடர்).

4650. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

(காரிஜிய்யா கூட்டத்தைச் சேர்ந்த) ஒருவர் என்னிடம் வந்து, ‘அபூ அப்திர் ரஹ்மானே! அல்லாஹ் தன் வேதத்தில் (பின் வருமாறு) கூறியிருப்பதை நீங்கள் கேட்கவில்லையா? என்று கேட்டார். ‘இறை நம்பிக்கையாளர்களில் இருபிரிவினர் தங்களுக்குள் சண்டையிட்டால் அவ்விரு வருக்குமிடையே சமாதானப்படுத்தி விடுங்கள். பின்னர் அவர்களில் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரின் மீது (வரம்பு மீறி) அக்கிரமம் புரிந்தால் அக்கிரமம் புரிந்தவர்கள் அல்லாஹ்வின் கட்டளையின் பக்கம் வரும்வரை அவர்களை நீங்கள் எதிர்த்துப் போரிடுங்கள். அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளைகளின் பக்கம்) திரும்பிவிட்டால், நியாயமான முறையில் அவ்விருவருக்கிடையே நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் நீதி வான்களை நேசிக்கிறான்’ (திருக்குர்ஆன் 49:09). ‘இந்நிலையில், அல்லாஹ் தன் வேதத்தில் கூறியுள்ளபடி நீங்கள் போரிட முன்வராமல் இருப்பது

أَنَّ رَجُلًا، جَاءَهُ فَقَالَ: يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ أَلاَ تَسْمَعُ مَا ذَكَرَ اللَّهُ فِي كِتَابِهِ: {وَإِنْ طَائِفَتَانِ مِنَ المُؤْمِنِينَ اقْتَتَلُوا} [الحجرات: 9] إِلَى آخِرِ الآيَةِ، فَمَا يَمْنَعُكَ أَنْ لاَ تُقَاتِلَ كَمَا ذَكَرَ اللَّهُ فِي كِتَابِهِ؟ فَقَالَ: ” يَا ابْنَ أَخِي أَغْتَرُّ بِهَذِهِ الآيَةِ وَلاَ أُقَاتِلُ، أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أَغْتَرَّ بِهَذِهِ الآيَةِ، الَّتِي يَقُولُ اللَّهُ تَعَالَى: {وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا} [النساء: 93] إِلَى آخِرِهَا “، قَالَ: فَإِنَّ اللَّهَ يَقُولُ: {وَقَاتِلُوهُمْ حَتَّى لاَ تَكُونَ فِتْنَةٌ} [الأنفال: 39]، قَالَ ابْنُ عُمَرَ: «قَدْ فَعَلْنَا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ كَانَ الإِسْلاَمُ قَلِيلًا، فَكَانَ الرَّجُلُ يُفْتَنُ فِي دِينِهِ إِمَّا يَقْتُلُونَهُ وَإِمَّا يُوثِقُونَهُ، حَتَّى كَثُرَ الإِسْلاَمُ فَلَمْ تَكُنْ فِتْنَةٌ»، فَلَمَّا رَأَى أَنَّهُ لاَ يُوَافِقُهُ فِيمَا يُرِيدُ، قَالَ: «فَمَا قَوْلُكَ فِي عَلِيٍّ، وَعُثْمَانَ؟» قَالَ ابْنُ عُمَرَ: ” مَا قَوْلِي فِي عَلِيٍّ، وَعُثْمَانَ؟ أَمَّا عُثْمَانُ: فَكَانَ اللَّهُ قَدْ عَفَا عَنْهُ فَكَرِهْتُمْ أَنْ يَعْفُوَ عَنْهُ، وَأَمَّا عَلِيٌّ: فَابْنُ عَمِّ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَخَتَنُهُ – وَأَشَارَ بِيَدِهِ – وَهَذِهِ ابْنَتُهُ – أَوْ بِنْتُهُ – حَيْثُ تَرَوْنَ


Bukhari-4649

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4 (நபியே!) நீர் அவர்களுக்கிடையே இருக்கும் போது அல்லாஹ் அவர்கள் மீது வேதனையை இறக்குபவன் அல்லன். மேலும், மக்கள் பாவ மன்னிப்பை வேண்டிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களை அல்லாஹ் வேதனை செய்யப் போவதில்லை எனும் (8:33ஆவது) இறைவசனம்.

4649. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

(குறையு இணைவைப்பாளர்களின் தலைவன்) அபூ ஜஹ்ல், ‘இறைவா! இது (-குர்ஆன்-) உன்னிடமிருந்து வந்த சத்தியமே என்றிருப்பின், எங்களின் மீது வானத்திலிருந்து கல்மாரியைப் பொழி! அல்லது துன்புறுத்தும் (ஒரு) வேதனையை எங்களுக்குக் கொண்டுவா!’ என்று சொன்னான். அப்போது ‘(நபியே!) நீர் அவர்களுக்கிடையே இருக்கும்போது அல்லாஹ் அவர்கள்மீது வேதனையை இறக்குபவன் அல்லன். மேலும், மக்கள் பாவமன்னிப்பை வேண்டிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களை அல்லாஹ் வேதனை செய்யப்போவதில்லை. அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமுக்கு (முறையான) நிர்வாகிகளாக இல்லாத நிலையில் (மக்களை) அங்கு செல்லவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அல்லாஹ் அவர்களை வேதனைக்குள்ளாக்காமல் இருப்பதற்கு அவர்களிடம் என்ன காரணம் உள்ளது? இறையச்சமுடையவர்கள்

قَالَ أَبُو جَهْلٍ: اللَّهُمَّ إِنْ كَانَ هَذَا هُوَ الحَقَّ مِنْ عِنْدِكَ فَأَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِنَ السَّمَاءِ، أَوِ ائْتِنَا بِعَذَابٍ أَلِيمٍ، ” فَنَزَلَتْ: {وَمَا كَانَ اللَّهُ لِيُعَذِّبَهُمْ وَأَنْتَ فِيهِمْ، وَمَا كَانَ اللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ، وَمَا لَهُمْ أَنْ لاَ يُعَذِّبَهُمُ اللَّهُ وَهُمْ يَصُدُّونَ عَنِ المَسْجِدِ الحَرَامِ} ” الآيَةَ


Bukhari-4648

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 3

மேலும், அவர்கள் இவ்வாறு கூறியதையும் (நபியே!) நினைத்துப் பாருங்கள்: இறைவா! இது உன்னிடமிருந்து அருளப்பெற்ற சத்தியம்தான் என்றிருப்பின், எங்கள் மீது வானத்திலிருந்து கல்மாரி பொழிந்து விடு; அல்லது துன்புறுத்தும் வேதனையை எங்களுக்குக் கொண்டுவா! எனும் (8:32 ஆவது) இறைவசனம்.

சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: குர்ஆனில் அல்லாஹ் மத்தர் எனக் குறிப்பிட்டிருப்பது (பெரும்பாலும்) வேதனை யையே குறிக்கும். (மழையைக் குறிக்காது.) மழையைக் குறிக்க அரபுகள் அல்ஃகைஸ் எனும் சொல்லையே பயன்படுத்துவர். அவர்கள் நம்பிக்கையிழந்த பின்னரும் அவனே மழையைப் பொழிவிக்கின்றான் எனும் (42:28ஆவது) வசனத்தில் இவ்வாறே (மழை என்பதைக் குறிக்க அல்ஃகைஸ் எனும் சொல்லே) ஆளப்பட்டுள்ளது.

4648. அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.

(குறைஷி இணைவைப்பாளர்களின் தலைவன்) அபூ ஜஹ்ல் ‘இறைவா! இது (-குர்ஆன்-) உன்னிடமிருந்து வந்த சத்தியம் தான் என்றிருப்பின் எங்களின் மீது வானத்திலிருந்து கல்மாரியைப் பொழி! அல்லது

قَالَ أَبُو جَهْلٍ: اللَّهُمَّ إِنْ كَانَ هَذَا هُوَ الحَقَّ مِنْ عِنْدِكَ فَأَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِنَ السَّمَاءِ أَوِ ائْتِنَا بِعَذَابٍ أَلِيمٍ، ” فَنَزَلَتْ: {وَمَا كَانَ اللَّهُ لِيُعَذِّبَهُمْ وَأَنْتَ فِيهِمْ، وَمَا كَانَ اللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ. وَمَا لَهُمْ أَلَّا يُعَذِّبَهُمُ اللَّهُ وَهُمْ يَصُدُّونَ عَنِ المَسْجِدِ الحَرَامِ} [الأنفال: 34] ” الآيَةَ


Bukhari-4647

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2 இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு வாழ்வளிக்கக் கூடியதன் பக்கம் இறைத்தூதர் உங்களை அழைக்கும் போது அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் விரைந்து பதில் அளியுங்கள். அல்லாஹ், மனிதனையும் அவனது உள்ளத்தையும் சூழ்ந்து நிற்கின்றான் என்பதையும், திண்ண மாக அவனிடமே நீங்கள் ஒன்று திரட்டப்படு வீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள் (எனும் 8:24ஆவது இறைவசனம்). (இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) இஸ்தஜீபூ எனும் சொல்லுக்கு பதிலளியுங்கள் என்று பொருள். -மா யுஹ்யீக்கும் (உங்களுக்கு வாழ்வளிக்கின்ற) என்பதற்கு உங்களைச் சீராக்குகின்ற என்று பொருள்.

4647. அபூ ஸயீத் இப்னு முஅல்லா(ரலி) அறிவித்தார்.

நான் (‘மஸ்ஜிதுந் நபவீ’ பள்ளிவாசலில்) தொழுது கொண்டிருந்தேன். அப்போது என்னைக் கடந்து சென்ற இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். நான் தொழு(து முடிக்கு)ம்வரை அவர்களிடம் செல்லவில்லை. பிறகு நான்அவர்களிடம் சென்றேன். அவர்கள் என்னிடம், ‘நீங்கள் ஏன் என்னிடம் உடனே வரவில்லை? அல்லாஹ், ‘இறைநம்பிக்கையாளர்களே! இறைத்தூதர் உங்களை அழைக்கும்போது அல்லாஹ்வுக்கும்,

كُنْتُ أُصَلِّي فَمَرَّ بِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَدَعَانِي، فَلَمْ آتِهِ حَتَّى صَلَّيْتُ ثُمَّ أَتَيْتُهُ، فَقَالَ: ” مَا مَنَعَكَ أَنْ تَأْتِيَ؟ أَلَمْ يَقُلِ اللَّهُ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَجِيبُوا لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمْ} [الأنفال: 24] ” ثُمَّ قَالَ: «لَأُعَلِّمَنَّكَ أَعْظَمَ سُورَةٍ فِي القُرْآنِ قَبْلَ أَنْ أَخْرُجَ»، فَذَهَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيَخْرُجَ فَذَكَرْتُ لَهُ، وَقَالَ مُعَاذٌ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ خُبَيْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، سَمِعَ [ص:62] حَفْصًا، سَمِعَ أَبَا سَعِيدٍ رَجُلًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهَذَا، وَقَالَ: ” هِيَ: الحَمْدُ لِلَّهِ رَبِّ العَالَمِينَ السَّبْعُ المَثَانِي


Bukhari-4646

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 1 திண்ணமாக சிந்தித்துணராத செவிடர்களும் ஊமையர்களும்தாம் அல்லாஹ்விடத்தில் மிகவும் இழிவான விலங்குகளாவர் (எனும் 8:22ஆவது இறைவசனம்).

4646. முஜாஹித் இப்னு ஜப்ர்(ரஹ்) அறிவித்தார்.

நிச்சயமாக சிந்தித்துணராத செவிடர்களும் ஊமையர்களும்தாம் அல்லாஹ்விடம் மிகவும் இழிவான விலங்குகளாவர் எனும் (திருக்குர்ஆன் 08:22 வது) வசனம் குறித்து இப்னு அப்பாஸ்(ரலி) கூறுகையில் ‘பனூ அப்தித்தார் குலத்தைச் சேர்ந்த சிலர் தாம் அவர்கள்’ என்று கூறினார்கள்.

Book : 65


{إِنَّ شَرَّ الدَّوَابِّ عِنْدَ اللَّهِ الصُّمُّ البُكْمُ الَّذِينَ لاَ يَعْقِلُونَ} [الأنفال: 22] قَالَ: «هُمْ نَفَرٌ مِنْ بَنِي عَبْدِ الدَّارِ»


Bukhari-4645

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4645. ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்.

நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் ‘அல்அன்ஃபால்’ அத்தியாயம் (எது தொடர்பாக அருளப்பெற்றது என்பது) குறித்து வினவினேன். (அதற்கு) அவர்கள், ‘அது பத்ருப்போர் தொடர்பாக அருளப்பெற்றது’ என்று கூறினார்கள்.

Book :65


قُلْتُ لِابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: سُورَةُ الأَنْفَالِ، قَالَ: «نَزَلَتْ فِي بَدْرٍ» {الشَّوْكَةُ} [الأنفال: 7]: «الحَدُّ»، (مُرْدَفِينَ): ” فَوْجًا بَعْدَ فَوْجٍ، رَدِفَنِي وَأَرْدَفَنِي: جَاءَ بَعْدِي “. ذُوقُوا: «بَاشِرُوا وَجَرِّبُوا، وَلَيْسَ هَذَا مِنْ ذَوْقِ الفَمِ»، {فَيَرْكُمَهُ} [الأنفال: 37]: ” يَجْمَعَهُ شَرِّدْ: فَرِّقْ “، {وَإِنْ جَنَحُوا} [الأنفال: 61]: «طَلَبُوا، السِّلْمُ وَالسَّلْمُ وَالسَّلاَمُ وَاحِدٌ»، {يُثْخِنَ} [الأنفال: 67]: «يَغْلِبَ» وَقَالَ مُجَاهِدٌ: {مُكَاءً} [الأنفال: 35]: «إِدْخَالُ أَصَابِعِهِمْ فِي أَفْوَاهِهِمْ». {وَتَصْدِيَةً} [الأنفال: 35]: «الصَّفِيرُ»، {لِيُثْبِتُوكَ} [الأنفال: 30]: «لِيَحْبِسُوكَ»


Bukhari-4644

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4644. அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) கூறினார்.

மக்களின் நற்குணங்களில் ஒன்றான மன்னிக்கும் போக்கை மேற்கொள்ளும்படி தன் தூதர்(ஸல்) அவர்களுக்கு (இவ்வசனத்தில் 7:199) அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.

Book :65


«أَمَرَ اللَّهُ نَبِيَّهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَأْخُذَ العَفْوَ مِنْ أَخْلاَقِ النَّاسِ، أَوْ كَمَا قَالَ»


Next Page » « Previous Page