Author: Farook

Bukhari-4643

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4643. அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அறிவித்தார்.

‘(நபியே!) மன்னிக்கும் போக்கை மேற்கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக!’ எனும் (திருக்குர்ஆன் 07:199 வது) வசனத்தை, மக்களின் நற்குணங்களில் ஒன்றாகவே அல்லாஹ் அருளினான்.

Book :65


{خُذِ العَفْوَ} [الأعراف: 199]
[ص:61] وَأْمُرْ بِالعُرْفِ قَالَ: «مَا أَنْزَلَ اللَّهُ إِلَّا فِي أَخْلاَقِ النَّاسِ»


Bukhari-4642

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 5 (நபியே!) மன்னிக்கும் போக்கை மேற் கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக! இன்னும் அறிவீனர்களை விட்டு விலகியிருப்பீராக! (எனும் 7:199ஆவது இறை வசனம்.) (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) உர்ஃப்’ எனும் சொல் நன்மை’யைக் குறிக்கும்.

4642. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

‘உயைனா இப்னு ஹிஸ்ன் இப்னி ஹுதைஃபா'(ரலி) (மதீனாவுக்கு) வந்து, தம் சகோதரருடைய புதல்வர் ஹுர்ரு இப்னு கைஸ்(ரலி) அவர்களிடம் தங்கினார். உமர்(ரலி) தம் அருகில் அமர்த்திக்கொள்பவர்களில் ஒருவராக (அந்த அளவுக்கு அவர்களுக்கு நெருக்கமானவராக) ஹுர்ரு இப்னு கைஸ் இருந்தார். முதியவர்களோ இளைஞர்களோ யாராயினும், குர்ஆனை நன்கறிந்தவர்களே உமர்(ரலி) அவர்களின் அவையினராகவும் ஆலோசகர்களாகவும் இருந்தனர். எனவே, உயைனா, தம் சகோதரருடைய புதல்வரிடம், ‘என் சகோதரர் மகனே! உனக்கு இந்தத் தலைவரிடம் செல்வாக்கு உள்ளது. எனவே, அவரைச் சந்திக்க எனக்கு அனுமதி பெற்றுத் தா’ என்று கூறினார். அதற்கு அவர், ‘உமர்(ரலி) அவர்களிடம் செல்ல நான் உமக்காக அனுமதி கேட்கிறேன்’ என்று கூறினார். அவ்வாறே உமரைச் சந்திக்க உயைனாவுக்காக ஹுர்ரு அவர்கள்

«قَدِمَ عُيَيْنَةُ بْنُ حِصْنِ بْنِ حُذَيْفَةَ فَنَزَلَ عَلَى ابْنِ أَخِيهِ الحُرِّ بْنِ قَيْسٍ، وَكَانَ مِنَ النَّفَرِ الَّذِينَ يُدْنِيهِمْ عُمَرُ، وَكَانَ القُرَّاءُ أَصْحَابَ مَجَالِسِ عُمَرَ وَمُشَاوَرَتِهِ، كُهُولًا كَانُوا أَوْ شُبَّانًا»، فَقَالَ عُيَيْنَةُ لِابْنِ أَخِيهِ: يَا ابْنَ أَخِي، هَلْ لَكَ وَجْهٌ عِنْدَ هَذَا الأَمِيرِ، فَاسْتَأْذِنْ لِي عَلَيْهِ، قَالَ: سَأَسْتَأْذِنُ لَكَ عَلَيْهِ، قَالَ ابْنُ عَبَّاسٍ: «فَاسْتَأْذَنَ الحُرُّ لِعُيَيْنَةَ فَأَذِنَ لَهُ عُمَرُ»، فَلَمَّا دَخَلَ عَلَيْهِ قَالَ: هِيْ يَا ابْنَ الخَطَّابِ، فَوَاللَّهِ مَا تُعْطِينَا الجَزْلَ وَلاَ تَحْكُمُ بَيْنَنَا بِالعَدْلِ، فَغَضِبَ عُمَرُ حَتَّى هَمَّ أَنْ يُوقِعَ بِهِ، فَقَالَ لَهُ الحُرُّ: يَا أَمِيرَ المُؤْمِنِينَ، إِنَّ اللَّهَ تَعَالَى قَالَ لِنَبِيِّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: {خُذِ العَفْوَ وَأْمُرْ بِالعُرْفِ وَأَعْرِضْ عَنِ الجَاهِلِينَ} [الأعراف: 199]، وَإِنَّ هَذَا مِنَ الجَاهِلِينَ، «وَاللَّهِ مَا جَاوَزَهَا عُمَرُ حِينَ تَلاَهَا عَلَيْهِ، وَكَانَ وَقَّافًا عِنْدَ كِتَابِ اللَّهِ»


Bukhari-4641

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4 ‘ஹித்தத்துன் (எங்கள் பாவச்சுமையை இறக்கிடுவாயாக!) என்று சொல்(யவாறே செல்லு)ங்கள்’ எனும் (7:161ஆவது) வசனத் தொடர்.

4641. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

இஸ்ரவேலர்களிடம், ‘ஹித்ததுன்’ (எங்கள் பாவச்சுமையை இறக்கிடுவாயாக!) என்று கூறிக்கொண்டே அதன் வாசலில் சிரம் தாழ்த்தியவர்களாய் நுழையுங்கள். நாம் உங்களுடைய குற்றங்களை மன்னித்து விடுவோம்’ என்று கூறப்பட்டது. ஆனால், (அவர்கள் தமக்குக் கூறப்பட்ட வார்த்தையை) மாற்றி(க் கூறி)யபடி தம் பிட்டங்களால் தவழ்ந்த வண்ணம் சென்றார்கள். மேலும், (உள்ளே நுழையும் போது) ‘ஹப்பத்துன் ஃபீ ஷஅரத்தின்’ (ஒரு வாற்கோதுமைக்குள் ஒரு தானியவித்து) என்று (பரிகாசமாகச்) கூறினார்கள்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book : 65


قِيلَ لِبَنِي إِسْرَائِيلَ: {ادْخُلُوا البَابَ سُجَّدًا، وَقُولُوا حِطَّةٌ نَغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ} [البقرة: 58]، فَبَدَّلُوا فَدَخَلُوا يَزْحَفُونَ عَلَى أَسْتَاهِهِمْ، وَقَالُوا: حَبَّةٌ فِي شَعَرَةٍ


Bukhari-4640

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 3 (நபியே!) கூறுக: மனிதர்களே! திண்ணமாக வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி எவனுக்குரியதோ அந்த அல்லாஹ்வின் தூதராக நான் உங்கள் அனைவருக்காகவும் அனுப்பப்பட்டுள்ளேன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவனே உயிரக்கின்றான்; இறக்கச் செய்கின்றான். எனவே, அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்; அவனால் அனுப்பப்பட்ட உம்மீ’ (எழுத்தறிவற்ற) தூதர் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள். அவரோ அல்லாஹ்வையும் அவனது வேத வாக்கு களையும் நம்புகின்றார். ஆகவே, அவரைப் பின்பற்றுங்கள்; அதனால் நீங்கள் நேர்வழி பெறக்கூடும் (எனும்7:158ஆவது இறை வசனம்).

4640. அபுத் தர்தா(ரலி) அறிவித்தார்.

(ஒரு சமயம்) அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கும் உமர்(ரலி) அவர்களுக்குமிடையே நடந்த வாக்குவாதத்தில் அபூ பக்ர்(ரலி) உமர்(ரலி) அவர்களை கோபப்படுத்திவிட்டார்கள். அப்போது உமர்(ரலி) கோபத்துடன் அங்கிருந்து திரும்பிச் சென்றார்கள். உடனே அபூ பக்ர்(ரலி) உமர்(ரலி) அவர்களுக்குப் பின்னாலேயே சென்று தம்மை மன்னித்து விடுமாறு வேண்டினார்கள். ஆனால், உமர்(ரலி) மன்னிக்காமல் அபூ பக்ர்(ரலி) அவர்களின் முகத்திற்கு முன்னால் (தம் வீட்டுக்) கதவைச்

كَانَتْ بَيْنَ أَبِي بَكْرٍ وَعُمَرَ مُحَاوَرَةٌ، فَأَغْضَبَ أَبُو بَكْرٍ عُمَرَ فَانْصَرَفَ عَنْهُ عُمَرُ مُغْضَبًا، فَاتَّبَعَهُ أَبُو بَكْرٍ يَسْأَلُهُ أَنْ يَسْتَغْفِرَ لَهُ، فَلَمْ يَفْعَلْ حَتَّى أَغْلَقَ بَابَهُ فِي وَجْهِهِ، فَأَقْبَلَ أَبُو بَكْرٍ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ أَبُو الدَّرْدَاءِ وَنَحْنُ عِنْدَهُ: فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَّا صَاحِبُكُمْ هَذَا فَقَدْ غَامَرَ» قَالَ: وَنَدِمَ عُمَرُ عَلَى مَا كَانَ مِنْهُ، فَأَقْبَلَ حَتَّى سَلَّمَ وَجَلَسَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَصَّ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الخَبَرَ، قَالَ أَبُو الدَّرْدَاءِ: وَغَضِبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَجَعَلَ أَبُو بَكْرٍ يَقُولُ: وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ لَأَنَا كُنْتُ أَظْلَمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” هَلْ أَنْتُمْ تَارِكُونَ لِي صَاحِبِي، هَلْ أَنْتُمْ تَارِكُونَ لِي صَاحِبِي، إِنِّي قُلْتُ: يَا أَيُّهَا النَّاسُ، إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا، فَقُلْتُمْ: كَذَبْتَ، وَقَالَ أَبُو بَكْرٍ: صَدَقْتَ ” قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: ” غَامَرَ: سَبَقَ بِالخَيْرِ


Bukhari-4639

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4639. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

சமையல் காளான் (தானாக வளர்வதில்) ‘மன்னு’வின் வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்.

என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.

Book :65


«الكَمْأَةُ مِنَ المَنِّ، وَمَاؤُهَا شِفَاءُ العَيْنِ»


Bukhari-4638

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2 நாம் குறிப்பிட்டிருந்த நேரத்தில் (குறித்த இடத்திற்கு) மூசா வந்தார். பிறகு அவருடைய இறைவன் அவரிடம் உரையாடியபோது ‘என் இறைவா! எனக்கு உன்னைக் காண்பிப் பாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும்’ என்று அவர் வேண்டினார். அதற்கு இறைவன், ‘என்னை நீர் ஒருபோதும் காண முடியாது. ஆயினும் (எதிரிலுள்ள) மலை யைப் பாரும்! அது தனது இருப்பிடத்தில் நிலைத்திருந்தால் என்னை நீர் காண முடியும்’ என்று கூறினான். அவ்வாறே அவருடைய இறைவன் அம் மலையின் மீது வெப்பட்ட போது அது பொடிப் பொடியாகிவிட்டது; மூசாவும் திடுக்கிட்டு மயங்கி விழுந்தார். பிறகு உணர்வு பெற்றபோது ‘உன்னை நான் துதிக்கிறேன். உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன். மேலும்,நான் நம்பிக்கை கொண்டோரில் முதன்மையானவனாக இருக்கின்றேன்’ என்று கூறினார் (எனும் 7:143ஆவது வசனம்). இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) அரினீ’ எனும் சொல்லுக்கு எனக்கு வழங்குவாயாக’ என்று பொருள்.

4638. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

யூதர்களில் ஒருவர் (அன்சாரி ஒருவரிடம்) தம் முகத்தில் அறைவாங்கிக் கொண்டு நபி(ஸல்)

جَاءَ رَجُلٌ مِنَ اليَهُودِ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ لُطِمَ وَجْهُهُ، وَقَالَ: يَا مُحَمَّدُ، إِنَّ رَجُلًا مِنْ أَصْحَابِكَ مِنَ الأَنْصَارِ لَطَمَ فِي وَجْهِي، قَالَ: «ادْعُوهُ» فَدَعَوْهُ، قَالَ: «لِمَ لَطَمْتَ وَجْهَهُ؟» قَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي مَرَرْتُ بِاليَهُودِ، فَسَمِعْتُهُ يَقُولُ: وَالَّذِي اصْطَفَى مُوسَى عَلَى البَشَرِ، فَقُلْتُ: وَعَلَى مُحَمَّدٍ، وَأَخَذَتْنِي غَضْبَةٌ فَلَطَمْتُهُ، قَالَ: «لَا تُخَيِّرُونِي مِنْ بَيْنِ الأَنْبِيَاءِ، فَإِنَّ النَّاسَ يَصْعَقُونَ يَوْمَ القِيَامَةِ، فَأَكُونُ أَوَّلَ مَنْ يُفِيقُ، فَإِذَا أَنَا بِمُوسَى آخِذٌ بِقَائِمَةٍ مِنْ قَوَائِمِ العَرْشِ، فَلَا أَدْرِي أَفَاقَ قَبْلِي أَمْ جُزِيَ بِصَعْقَةِ الطُّورِ»


Bukhari-4637

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 1 என் இறைவன் வெப்படையாகவும், மறைவாகவும் உள்ள மானக்கேடான செயல்களையே தடைசெய்துள்ளான் என்று (நபியே!) நீங்கள் சொல்லுங்கள் (எனும் 7:33ஆவது வசனத் தொடர்).

4637. அம்ர் இப்னு முர்ரா(ரஹ்) அறிவித்தார்.

நான் அபூ வாயில் ஷகீக் இப்னு ஸலமா(ரஹ்) அவர்களிடம், ‘நீங்கள் (பின்வரும்) இந்த ஹதீஸை அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடமிருந்து நேரடியாகச் செவியுற்றீர்களா?’ என்று கேட்டேன். அவர்கள், ஆம்! அதை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றும் அவர்கள் கூறினார்கள் என்று பதிலளித்தார்கள்.

‘அல்லாஹ்வை விட அதிக ரோஷமுடையவர் வேறெவருமிலர். எனவேதான் மானக் கேடான செயல்களில் வெளிப்படையானவை, மறைவானவை அனைத்தையும் அவன் தடைசெய்துள்ளான். மேலும், அல்லாஹ்வை விட அதிகமாகப் புகழ்ச்சியை விரும்பக்கூடியவர் வேறெவரும் இலர். எனவே, தான் அவன் தன்னைத்தானே புகழ்ந்து கொண்டுள்ளான்’ என்று கூறினார்கள்.

Book : 65


«لاَ أَحَدَ أَغْيَرُ مِنَ اللَّهِ، فَلِذَلِكَ حَرَّمَ الفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ، وَلاَ أَحَدَ أَحَبُّ إِلَيْهِ المِدْحَةُ مِنَ اللَّهِ فَلِذَلِكَ مَدَحَ نَفْسَهُ»


Bukhari-4636

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4636. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘சூரியன் மேற்குத் திசையிலிருந்து உதயமாகாத வரை உலக முடிவு நாள் வராது. சூரியன் (மேற்குத் திசையில்) உதயமாகி மக்கள் அதைப் பார்க்கும்போது அவர்கள் அனைவருமே இறைநம்பிக்கை கொள்வார்கள். அது, எந்த மனிதருக்கும் அவரின் (அப்போதைய புதிய) நம்பிக்கை பயனளிக்காத நேரமாகும்’ என்று கூறிவிட்டு, ‘உம்முடைய இறைவனின் சான்றுகள் சில வெளிப்படும் (இறுதி) நாளில் முன்னரே நம்பிக்கை கொள்ளாதிருந்த மனிதருக்கும், அல்லது நம்பிக்கை கொண்டிருந்தும் அதற்கேற்ப நன்மை புரியாதிருந்த மனிதருக்கும் அவர் (அப்போது) நம்பிக்கை கொள்வது எவ்விதப் பயனையும் அளிக்காது’ எனும் இந்த (திருக்குர்ஆன் 06:158 வது) வசனத்தை ஓதினார்கள்.

Book :65


«لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا، فَإِذَا طَلَعَتْ وَرَآهَا النَّاسُ آمَنُوا أَجْمَعُونَ، وَذَلِكَ حِينَ لاَ يَنْفَعُ نَفْسًا إِيمَانُهَا» ثُمَّ قَرَأَ الآيَةَ


Bukhari-4635

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 8 (6:102ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) வ(க்)கீல்’ எனும் சொல்லுக்குக் கண்காணித்துப் பாதுகாப்பவன்’ என்று பொருள். (6:111ஆவது வசனத்தின் மூலத்திலுள்) குபுல்’ எனும் சொல் கபீல் எனும் சொல்ன் பன்மையாகும். பல வகை வேதனைகள்’ என்பது அதன் பொருளாகும். ஒவ்வொரு வகையும் கபீல்’ என்று கூறப்படும். (6: 112ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஸுக்ருஃபுல் கவ்ல்’ எனும் சொற்றொட ரானது, நீ எழிலூட்டி அலங்கரித்துக் காட்டும் எல்லா போகளையும் குறிக்கும். (6:138ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஹிஜ்ர்’ எனும் சொல்லுக்குத் தடுக்கப்பட்டது’ என்று பொருள். தடைவிதிக்கப்பட்ட எல்லாப் பொருட்களுக்கும் ஹிஜ்ருன் மஹ்ஜுர்’ எனப் படும். நீ கட்டி முடித்த கட்டடங்களுக்கும் அல் ஹிஜ்ர்’ எனலாம். பெட்டைக் குதிரையும் ஹிஜ்ர்’ எனப்படுகிறது. (அதைப் போன்று) அறிவும் ஹிஜ்ர்’ என்றும்,ஹிஜா’ என்றும் சொல்லப்படுவதுண்டு. ஸமூத்’ குலத்தார் வாழ்ந்த பகுதியும் ஹிஜ்ர்’ எனப்படுவதுண்டு. தரையில் நீ பிரித்துவிட்ட பகுதியும் ஹிஜ்ர்’ எனப்படும். இதனால்தான், இறை யில்லம் கஅபாவை ஒட்டியுள்ள ஹத்தீம்’ (எனும் வில் வடிவ அமைப்பிலுள்ள கால் வட்டச் சுவரும்) ஹிஜ்ர்’ (பிரிக்கப்பட்டது) எனப்படுகிறது. (ஃபஈல்’ எனும் வாய்பாட்டில் அமைந்த இந்த) ஹத்தீம்’

لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا، فَإِذَا رَآهَا النَّاسُ آمَنَ مَنْ عَلَيْهَا، فَذَاكَ حِينَ: {لاَ يَنْفَعُ نَفْسًا إِيمَانُهَا لَمْ تَكُنْ آمَنَتْ مِنْ قَبْلُ} [الأنعام: 158]


Bukhari-4634

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 7 ‘மானக்கேடான செயல்கல் வெப்படை யானவை, மறைவானவை எதனையும் நெருங்காதீர்கள்’ எனும் (6:151ஆவது) வசனத் தொடர்.

4634. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

‘அல்லாஹ்வை விட அதிக ரோஷமுள்ளவர் வேறெவருமிலர். அதனால்தான், மானக்கேடான செயல்களில் வெளிப்படையானவை, அந்தரங்கமானவை அனைத்திருக்கும் அல்லாஹ் தடைவிதித்துள்ளான். தன்னைப் புகழ்வதைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானது எதுவுமில்லை. எனவேதான், அவன் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டுள்ளான்’ (என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.)

அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் இப்னு முர்ரா(ரஹ்) கூறினார்:

நான் அபூ வாயில் ஷகீக் இப்னு ஸலமா(ரஹ்) அவர்களிடம் ‘இதை நீங்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடமிருந்து (நேரடியாகக்) கேட்டீர்களா?’ என்று கேட்க, அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள். நான், ‘இதை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) குறிப்பிட்டார்களா?’ என்று கேட்க, அவர்கள், ‘ஆம்’ என்று பதில்

«لاَ أَحَدَ أَغْيَرُ مِنَ اللَّهِ، وَلِذَلِكَ حَرَّمَ الفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ، وَلاَ شَيْءَ أَحَبُّ إِلَيْهِ المَدْحُ مِنَ اللَّهِ، وَلِذَلِكَ مَدَحَ نَفْسَهُ» قُلْتُ: سَمِعْتَهُ مِنْ عَبْدِ اللَّهِ؟ قَالَ: نَعَمْ، قُلْتُ: وَرَفَعَهُ؟ قَالَ: نَعَمْ {وَكِيلٌ} [الأنعام: 102]: «حَفِيظٌ وَمُحِيطٌ بِهِ». {قُبُلًا} [الأنعام: 111]: ” جَمْعُ قَبِيلٍ، وَالمَعْنَى: أَنَّهُ ضُرُوبٌ لِلْعَذَابِ، كُلُّ ضَرْبٍ مِنْهَا قَبِيلٌ “. {زُخْرُفَ القَوْلِ} [الأنعام: 112]: «كُلُّ شَيْءٍ حَسَّنْتَهُ وَوَشَّيْتَهُ، وَهُوَ بَاطِلٌ فَهُوَ زُخْرُفٌ»، {وَحَرْثٌ حِجْرٌ} [الأنعام: 138]: ” حَرَامٌ، وَكُلُّ مَمْنُوعٍ فَهْوَ حِجْرٌ مَحْجُورٌ، وَالحِجْرُ كُلُّ بِنَاءٍ بَنَيْتَهُ [ص:58]، وَيُقَالُ لِلْأُنْثَى مِنَ الخَيْلِ: حِجْرٌ، وَيُقَالُ لِلْعَقْلِ: حِجْرٌ وَحِجًى، وَأَمَّا الحِجْرُ فَمَوْضِعُ ثَمُودَ، وَمَا حَجَّرْتَ عَلَيْهِ مِنَ الأَرْضِ فَهُوَ حِجْرٌ، وَمِنْهُ سُمِّيَ حَطِيمُ البَيْتِ حِجْرًا، كَأَنَّهُ مُشْتَقٌّ مِنْ مَحْطُومٍ، مِثْلُ: قَتِيلٍ مِنْ مَقْتُولٍ، وَأَمَّا حَجْرُ اليَمَامَةِ فَهْوَ مَنْزِلٌ


Next Page » « Previous Page