Author: Farook

Bukhari-4502

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4502. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

ரமளானு(டைய நோன்பு)க்கு முன்பு ‘ஆஷூரா’ (முஹர்ரம் பத்தாம்) நாளில் நோன்பு நோற்கப்பட்டு வந்தது. ரமளான் (நோன்பு) கடமையானபோது விரும்பியவர் ஆஷூரா நாளில் நோன்பு நோற்றனர்; (விட்டுவிட) விரும்பியவர் அதை விட்டுவிட்டார்கள்.
Book :65


كَانَ عَاشُورَاءُ يُصَامُ قَبْلَ رَمَضَانَ فَلَمَّا نَزَلَ رَمَضَانُ قَالَ: «مَنْ شَاءَ صَامَ، وَمَنْ شَاءَ أَفْطَرَ»


Bukhari-4501

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 24

இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டதைப் போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது; நீங்கள் தூய்மை அடையும் பொருட்டு (எனும் 2:183 ஆவது இறைவசனம்).

4501. இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

அறியாமைக்கால மக்கள் (குறைஷியர்) ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளில் நோன்பு நோற்றுவந்தனர். ரமளான் (நோன்பு) கடமையானபோது நபி (ஸல்) அவர்கள், ‘(ஆஷூரா நோன்பை நோற்க) விரும்புகிறவர் அதை நோற்கலாம்; (விட்டுவிட) விரும்புகிறவர் அதைவிட்டுவிடலாம்’ என்று கூறினார்கள்.
Book : 65


كَانَ عَاشُورَاءُ يَصُومُهُ أَهْلُ الجَاهِلِيَّةِ، فَلَمَّا نَزَلَ رَمَضَانُ قَالَ: «مَنْ شَاءَ صَامَهُ، وَمَنْ شَاءَ لَمْ يَصُمْهُ»


Bukhari-4500

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4500. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
என் தந்தையின் சகோதரி (அத்தை) ‘ருபய்யிஉ’ (பின்த் நள்ர்) அவர்கள் ஒர் இளம் பெண்ணின் முன்பல்லை உடைத்துவிட்டார்கள். எனவே, என் அத்தையின் குலத்தார் அப்பெண்ணி(ன் குலத்தாரி)டம் மன்னித்து விடும்படி கோரினார். அவர்கள் (மன்னிக்க) மறுத்துவிட்டார்கள். எனவே, என் அத்தையில் குலத்தார் ஈட்டுத் தொகை செலுத்த முன் வந்தனர். அதற்கும் அவர்கள் மறுத்துவிடவே இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (இறைச் சட்டப்படி தீர்ப்பளிக்கும்படி கேட்டு) வந்தனர். அப்போதும் அவர்கள் பழிவாங்குவதைத் தவிர வேறெதற்கும் (ஒப்புக் கொள்ள) மறுத்துவிட்டார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பழிவாங்கும்படி உத்தரவிட்டார்கள். அப்போது (என் தந்தையின் சகோதரர்) அனஸ் இப்னு நள்ர்(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! (என் சகோதரி) ‘ருபய்யிஉ’வின் முன்பல் உடைக்கப்படுமா? வேண்டாம்! உங்களைச் சத்திய (மார்க்கத்)துடன் அனுப்பிவைத்தவன் மீதாணையாக அவரின் முன்பல் உடைக்கப்படக்கூடாது’ என்று கூறினார்கள். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘அனஸே! அல்லாஹ்வின் சட்டம் பழிவாங்குவதாகும்’ என்று கூறினார்கள். அதற்குள் அந்த (இளம் பெண்ணின்) குலத்தார் (ஈட்டுத் தொகை பெற) ஒப்புக்கொண்டு (ருபய்யிஉவை) மன்னித்தார்கள். அப்போது, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘அல்லாஹ்வின்

أَنَّ الرُّبَيِّعَ عَمَّتَهُ كَسَرَتْ ثَنِيَّةَ جَارِيَةٍ، فَطَلَبُوا إِلَيْهَا العَفْوَ فَأَبَوْا، فَعَرَضُوا الأَرْشَ فَأَبَوْا، فَأَتَوْا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَوْا، إِلَّا القِصَاصَ فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالقِصَاصِ، فَقَالَ أَنَسُ بْنُ النَّضْرِ: يَا رَسُولَ اللَّهِ أَتُكْسَرُ ثَنِيَّةُ الرُّبَيِّعِ؟ لاَ وَالَّذِي بَعَثَكَ بِالحَقِّ لاَ تُكْسَرُ ثَنِيَّتُهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَنَسُ، كِتَابُ اللَّهِ القِصَاصُ». فَرَضِيَ القَوْمُ فَعَفَوْا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ مِنْ عِبَادِ اللَّهِ مَنْ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لَأَبَرَّهُ


Bukhari-4499

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4499. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
(கொலைக் குற்றத்தில்) அல்லாஹ்வின் சட்டம் பழி வாங்குவதாகும்.
என அனஸ்(ரலி) அறிவித்தார்.
Book :65


«كِتَابُ اللَّهِ القِصَاصُ»


Bukhari-4498

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 23 இறை நம்பிக்கை கொண்டோரே! கொலை செய்யப்பட்டவர்களுக்காகப் பழிவாங்குவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. சுதந்திர மனிதன் சுதந்திர மனிதனுக்கு பதிலாகவும், அடிமை அடிமைக்கு பதிலாக வும், பெண் பெண்ணுக்கு பதிலாகவுமே (பழிவாங்கப்படுவர். கொலை செய்த) எவனுக்கேனும் (பாதிக்கப்பட்ட) அவனுடைய சகோதரனால் ஏதேனும் மன்னிப்பு அளிக்கப்பட்டால், நியதியைப் பின்பற்றி நன்முறையில் அவனிடம் (உயிரீட்டுத் தொகையை) நிறைவேற்றிட வேண்டும். இது, உங்கள் இறைவனிடமிருந்து வழங்கப்பட்ட சலுகையும் கருணையுமாகும். இதன் பின்னரும் யாராவது வரம்பு மீறினால் அவருக்குத் துன்பமிகு வேதனை உண்டு (எனும் 2:178ஆவது இறைவசனம்). (இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) உஃபிய (மன்னிக்கப்பட்டால்) எனும் சொல்லுக்கு விட்டுக் கொடுக்கப் பட்டால் என்று பொருள்.
4498. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
இஸ்ரவேலர்களிடையே பழிக்குப்பழி வாங்கும் (கிஸாஸ்) சட்டம் (நடை முறையில்) இருந்தது. ஆனால், அவர்களிடையே உயிரீட்டுத் தொகை (பெற்றுக் கொண்டு கொலை செய்தவனை மன்னித்துவிடும் சட்டம் நடைமுறையில்) இருக்கவில்லை. எனவே, அல்லாஹ் (முஹம்மத்(ஸல்) அவர்களின்) இந்தச் சமுதாயத்திற்கு, ‘கொலை செய்யப்பட்டவர்களுக்காகப் பழிவாங்குவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

«كَانَ فِي بَنِي إِسْرَائِيلَ القِصَاصُ، وَلَمْ تَكُنْ فِيهِمُ الدِّيَةُ». فَقَالَ اللَّهُ تَعَالَى لِهَذِهِ الأُمَّةِ: {كُتِبَ عَلَيْكُمُ القِصَاصُ فِي القَتْلَى الحُرُّ بِالحُرِّ وَالعَبْدُ بِالعَبْدِ، وَالأُنْثَى بِالأُنْثَى، فَمَنْ عُفِيَ لَهُ مِنْ أَخِيهِ شَيْءٌ} [البقرة: 178] «فَالعَفْوُ أَنْ يَقْبَلَ الدِّيَةَ فِي العَمْدِ» {فَاتِّبَاعٌ بِالْمَعْرُوفِ وَأَدَاءٌ إِلَيْهِ بِإِحْسَانٍ} [البقرة: 178] «يَتَّبِعُ بِالْمَعْرُوفِ وَيُؤَدِّي بِإِحْسَانٍ» {ذَلِكَ تَخْفِيفٌ مِنْ رَبِّكُمْ وَرَحْمَةٌ} [البقرة: 178] «مِمَّا كُتِبَ عَلَى مَنْ كَانَ قَبْلَكُمْ» {فَمَنِ اعْتَدَى بَعْدَ ذَلِكَ فَلَهُ عَذَابٌ أَلِيمٌ} [البقرة: 178] «قَتَلَ بَعْدَ قَبُولِ الدِّيَةِ»


Bukhari-4497

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 22 அல்லாஹ் அல்லாதவற்றை அவனுக்கு இணைகளாக்கி அல்லாஹ்வை நேசிப்பதைப் போல அவற்றை நேசிக்கின்றவர்களும் மனிதர்களில் உள்ளனர் எனும் (2:165 ஆவது) வசனத் தொடர். (இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) அன்தாத் (இணைகள்) எனும் சொல்லுக்கு நேர் எதிரானவைகள் (அள்தாத்) என்று பொருள். இதன் ஒருமை நித்து என்பதாகும்.
4497. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (ஒரு கருத்தை) ஒரு வாக்கியத்தில் சொல்ல, நான் (அதே கருத்தை) வேறொரு வாக்கியத்தில் சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் அல்லாததை அவனுக்கு இணை என வாதித்தபடி இறந்து விடுகிறவர் நரகம் புகுவார்’ என்று கூறினார்கள். ‘(அப்படியானால்) அல்லாஹ் அல்லாததை அவனுக்கு இணை கற்பிக்காதவராக இறந்துவிடுகிறவர் சொர்க்கம் புகுவார்’ என்று நான் சொன்னேன்.
Book : 65


«مَنْ مَاتَ وَهْوَ يَدْعُو مِنْ دُونِ اللَّهِ نِدًّا دَخَلَ النَّارَ» وَقُلْتُ أَنَا: مَنْ مَاتَ وَهْوَ لاَ يَدْعُو لِلَّهِ نِدًّا دَخَلَ الجَنَّةَ


Bukhari-4496

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4496. ஆஸிம் இப்னு சுலைமான்(ரஹ்) கூறினார்.
நான் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம், ‘ஸஃபா மர்வா(வுக்கிடையே ஹஜ், உம்ராவின்போது ஓடுவதை நீங்கள் வெறுத்துவந்தீர்களா என்பது) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நாங்கள் அதனை அறியாமைக் காலச் செய்கை என்று கருதிவந்தோம். எனவே, இஸ்லாம் வந்தபோது நாங்கள் அவற்றுக்கிடையே ஓடுவதை நிறுத்திவிட்டோம். அப்போது உயர்ந்தோனாகிய அல்லாஹ், ‘ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாகும். எனவே, இறையில்லத்தில் ஹஜ் அல்லது உம்ரா செய்ய விரும்புகிறவர் அவ்விரண்டுக்குமிடையே சுற்றிவருவதில் குற்றமில்லை’ எனும் (திருக்குர்ஆன் 02:158வது) இவ்வசனத்தை அருளினான்’ என்று பதிலளித்தார்கள்.
Book :65


سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ الصَّفَا، وَالمَرْوَةِ فَقَالَ: «كُنَّا نَرَى أَنَّهُمَا مِنْ أَمْرِ الجَاهِلِيَّةِ، فَلَمَّا كَانَ الإِسْلاَمُ أَمْسَكْنَا عَنْهُمَا» فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى: {إِنَّ الصَّفَا وَالمَرْوَةَ مِنْ شَعَائِرِ} [البقرة: 158] اللَّهِ فَمَنْ حَجَّ البَيْتَ أَوِ اعْتَمَرَ فَلاَ جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا


Bukhari-4495

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 21

நிச்சயமாக ஸஃபா, மர்வா (ஆகிய குன்றுகள்) அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாகும். ஆகவே, யார் இறையில்லத்தில் ஹஜ் அல்லது உம்ரா (எனும் வழிபாடுகளைச்) செய்கின்றாரோ, அவர் மீது அவ்விரண்டுக்குமிடையே சுற்றி வருவது குற்றமாகாது. மேலும், யார் தாமாக முன்வந்து நல்லவற்றைச் செய்கிறாரோ (அவரது செயலை) அல்லாஹ் மதிப்பவனும் மிக அறிபவனுமாவான். (அல்குர்ஆன்: 2:158) எனும் இறைவசனம்.

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) ஷஆயிர் (அடையாளச் சின்னங்கள்) எனும் சொல்லுக்கு அடையாளங்கள் என்று பொருள். அதன் ஒருமை ஷஈரா என்பதாகும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: ஸஃப்வான் எனும் சொல்லுக்கு கற்கள் என்று பொருள். எதையும் முளைக்கவிடாத வழுக்குப் பாறைகளும் ஸஃப்வான் எனப்படுவதுண்டு. இதன் ஒருமை ஸஃப்வானா என்பதாகும். இதுவும் ஸஃபாவும் பொருளில் ஒன்றே. (ஆனால்,) ஸஃபா என்பது பன்மைக்குப் பயன்படுத்தப்படுகிறது.


4495. உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியாராகிய ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘நிச்சயமாக ஸஃபா, மர்வா (எனும் குன்றுகள்) அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவை. எனவே, யார் (கஅபா எனும்) அவ்வீட்டில் ஹஜ் அல்லது உம்ராச் செய்கிறார்களோ அவர்கள்

قُلْتُ لِعَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَنَا يَوْمَئِذٍ حَدِيثُ السِّنِّ: أَرَأَيْتِ قَوْلَ اللَّهِ تَبَارَكَ وَتَعَالَى: {إِنَّ الصَّفَا وَالمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ البَيْتَ أَوِ اعْتَمَرَ، فَلاَ جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا} [البقرة: 158]. فَمَا أُرَى عَلَى أَحَدٍ شَيْئًا أَنْ لاَ يَطَّوَّفَ بِهِمَا؟ فَقَالَتْ عَائِشَةُ: ” كَلَّا، لَوْ كَانَتْ كَمَا تَقُولُ، كَانَتْ: فَلاَ جُنَاحَ عَلَيْهِ أَنْ لاَ يَطَّوَّفَ بِهِمَا، إِنَّمَا أُنْزِلَتْ هَذِهِ الآيَةُ فِي الأَنْصَارِ، كَانُوا يُهِلُّونَ لِمَنَاةَ، وَكَانَتْ مَنَاةُ حَذْوَ قُدَيْدٍ، وَكَانُوا يَتَحَرَّجُونَ أَنْ يَطُوفُوا بَيْنَ الصَّفَا وَالمَرْوَةِ، فَلَمَّا جَاءَ الإِسْلاَمُ سَأَلُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ، فَأَنْزَلَ اللَّهُ: {إِنَّ الصَّفَا وَالمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ البَيْتَ أَوِ اعْتَمَرَ فَلاَ جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا} [البقرة: 158]


Bukhari-4494

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 20 மேலும், (நபியே!) நீங்கள் எங்கிருந்து புறப்பட்டுச் சென்றாலும் (தொழும் வேளையில்) உங்கள் முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் பக்கமாகவே திருப்புங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் முகங்களை (தொழுகையின் போது) அதன் பக்கமேத் திருப்புங்கள் (எனும் 2:150ஆவது வசனத் தொடர்).33
4494. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
மக்கள் குபாவில் ‘சுப்ஹுத்’ தொழுகையில் இருந்தபோது ஒருவர் வந்து, ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குச் சென்ற இரவு (குர்ஆன்வசனம்) அருளப்பெற்றது. (அதில்) கஅபாவை நோக்கித் தொழ வேண்டும் என்று அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, அ(ந்த இறையில்லத்)தை நீங்களும் முன்னோக்கித் தொழுங்கள்’ என்று கூறினார். அப்போது அவர்களின் முகங்கள் (பைத்துல் மக்திஸ் திசையில்) ஷாம் நாட்டை நோக்கியபடி இருந்தன. (இந்த அறிவிப்பைக் கேட்ட) உடனே அவர்கள் வட்டமிட்டு (தற்போதைய) கிப்லா(வான கஅபா)வை நோக்கித் திரும்பினார்கள்.
Book : 65


بَيْنَمَا النَّاسُ فِي صَلاَةِ الصُّبْحِ بِقُبَاءٍ، إِذْ جَاءَهُمْ آتٍ فَقَالَ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أُنْزِلَ عَلَيْهِ اللَّيْلَةَ، وَقَدْ أُمِرَ أَنْ يَسْتَقْبِلَ الكَعْبَةَ، فَاسْتَقْبِلُوهَا، وَكَانَتْ وُجُوهُهُمْ إِلَى الشَّأْمِ، فَاسْتَدَارُوا إِلَى القِبْلَةِ»


Bukhari-4493

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 19 மேலும், நீங்கள் எங்கிருந்து புறப்பட்டுச் சென்றாலும் (தொழும்வேளையில்) உங்கள் முகத்தை மஸ்ஜிதுல் ஹராமை நோக்கித் திருப்புங்கள். இது உங்கள் இறைவனிட மிருந்து வந்த உண்மை(யான கட்டளை) யாகும். அல்லாஹ் நீங்கள் செய்கின்றவை பற்றிக் கவனமற்றவன் அல்லன் (எனும் 2:149ஆவது இறைவசனம்). (இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள பாதி எனும் சொற்பொருள் கொண்ட) ஷத்ர் எனும் சொல்லுக்கு நோக்கி (திசையில்) என்று பொருள்.
4493. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
மக்கள் ‘குபா’வில் ‘சுப்ஹு’த் தொழுகையிலிருந்தபோது, ஒருவர் வந்து, ‘சென்ற இரவு (நபி(ஸல்) அவர்களுக்கு) குர்ஆன் (வசனம் ஒன்று) அருளப்பட்டுள்ளது. (அதில் இனி தொழுகையில்) கஅபாவை நோக்கித் தொழ வேண்டுமென்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் கஅபாவை நோக்கித் தொழுங்கள்’ என்று கூறினார். உடனே மக்கள் தாம் இருந்த அதே நிலையிலேயே வட்டமிட்டு கஅபாவை நோக்கி முகத்தைத் திருப்பினார்கள். (அதற்கு முன்) மக்களின் முகம் (பைத்துல் மக்திஸின திசையில்) ஷாம் நாட்டை நோக்கியிருந்தது.
Book : 65


بَيْنَا النَّاسُ فِي الصُّبْحِ بِقُبَاءٍ، إِذْ جَاءَهُمْ رَجُلٌ فَقَالَ: «أُنْزِلَ اللَّيْلَةَ قُرْآنٌ، فَأُمِرَ أَنْ يَسْتَقْبِلَ الكَعْبَةَ فَاسْتَقْبِلُوهَا، وَاسْتَدَارُوا كَهَيْئَتِهِمْ فَتَوَجَّهُوا إِلَى الكَعْبَةِ وَكَانَ وَجْهُ النَّاسِ إِلَى الشَّأْمِ»


Next Page » « Previous Page