Author: Farook

Bukhari-4492

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 18 ஒவ்வொரு(மதத்த)வருக்கும் அவரவர் திரும்பக் கூடிய ஒரு திசையிருக்கிறது. நீங்கள் நன்மைகள் புரிய முந்துங்கள். நீங்கள் எங்கி ருந்தாலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் ஒன்று திரட்டிக் கொண்டு வருவான். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொன் றின் மீதும் பேராற்றல் கொண்டவனாய் இருக்கின்றான் (எனும் 2:148ஆவது இறைவசனம்).30
4492. பராஉ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் பைத்துல் மக்திஸை நோக்கி ‘பதினாறு’ அல்லது ‘பதினேழு’ மாதங்கள் தொழுதோம். பிறகு அல்லாஹ் நபி(ஸல்) அவர்களை (தற்போதைய கஅபா எனும்) இந்தக் கிப்லாவை நோக்கித் திருப்பிவிட்டான்.
Book : 65


«صَلَّيْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَ بَيْتِ المَقْدِسِ سِتَّةَ عَشَرَ، أَوْ سَبْعَةَ عَشَرَ شَهْرًا، ثُمَّ صَرَفَهُ نَحْوَ القِبْلَةِ»


Bukhari-4491

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 17 எவருக்கு நாம் வேதம் அருளியிருக்கின் றோமோ அவர்கள் தங்களுடைய பிள்ளை களை (இனம் கண்டு) அறிந்து கொள்வதைப் போல் அதை/அவரை (-கஅபாவை அல்லது நபி முஹம்மதை-) நன்கு அறிவார்கள். எனினும், அவர்களில் ஒரு பிரிவினர் நன்கு அறிந்திருந்தும் உண்மையை மறைக்கி றார்கள். இந்த உண்மை, உங்கள் இறைவனி டமிருந்து வந்தது ஆகும். எனவே, (இது பற்றி) ஐயம் கொண்டோரில் நீங்களும் (ஒருவராக) ஆகிவிடவேண்டாம் (எனும் 2:146, 147 ஆகிய இறைவசனங்கள்).
4491. இப்னு உமர்(ரலி) கூறினார்.
மக்கள் குபாவில் சுப்ஹுத் தொழுகை தொழுது கொண்டிருந்தபோது அவர்களிடம் ஒருவர் வந்து, ‘சென்ற இரவு நபி(ஸல்) அவர்களுக்குக் குர்ஆன் (வசனம் ஒன்று) அருளப்பட்டது. (அதில்) அவர்கள் (தொழுகையில் இதுவரை நாம் முன்னோக்கி வந்த பைத்துல் மக்திஸைவிட்டுவிட்டு இனிமேல் மக்காவிலுள்ள இறையில்லம்) கஅபாவை தொழுகையில் முன்னோக்க வேண்டுமென்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. எனவே, நீங்களும் கஅபாவையே முன்னோக்குங்கள்’ என்று கூறினார். அப்போது மக்களின் முகங்கள் (பைத்துல் மக்திஸ் இருக்கும் திசையான) ஷாம் நாட்டை நோக்கியபடி இருந்தன. (இந்த அறிவிப்பைக் கேட்ட) உடனே மக்கள் வட்டமிட்டு கஅபாவை நோக்கித் திரும்பினார்கள்.
Book : 65


بَيْنَا النَّاسُ بِقُبَاءٍ فِي صَلاَةِ الصُّبْحِ، إِذْ جَاءَهُمْ آتٍ، فَقَالَ: «إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أُنْزِلَ عَلَيْهِ اللَّيْلَةَ قُرْآنٌ، وَقَدْ أُمِرَ أَنْ يَسْتَقْبِلَ الكَعْبَةَ فَاسْتَقْبِلُوهَا، وَكَانَتْ وُجُوهُهُمْ إِلَى الشَّأْمِ، فَاسْتَدَارُوا إِلَى الكَعْبَةِ»


Bukhari-4490

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 16 (நபியே!) வேதம் வழங்கப்பட்டவர்களிடம் நீங்கள் எத்தனைச் சான்றுகளைக் கொண்டு வந்தாலும் உங்கள் கிப்லாவை அவர்கள் பின்பற்றப்போவதில்லை. நீங்களும் அவர் களின் கிப்லாவைப் பின்பற்றுவரல்லர். இன்னும் அவர்களில் ஒரு பிரிவினர் மற்ற பிரிவினரின் கிப்லாவைப் பின்பற்றுவோ ராயும் இல்லை. எனவே, உங்களுக்கு (வஹீ மூலம்) மெய்யறிவு வந்த பின்னரும் அவர்களின் சுயவிருப்பங்களை நீங்கள் பின்பற்றினால் நிச்சயம் நீங்களும் அக்கிரமக் காரர்களில் (ஒருவராக) ஆகிவிடுவீர்கள் (எனும் 2:145ஆவது இறைவசனம்).
4490. இப்னு உமர்(ரலி) கூறினார்.
மக்கள் குபாவில் ‘சுப்ஹு’த் தொழுகையில் இருந்தபோது அவர்களிடம் ஒருவர் வந்து, ‘சென்ற இரவு இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குக் குர்ஆன் (வசனம் ஒன்று) அருளப்பட்டுள்ளது. (தொழுகையில் இது வரை முன்னோக்கித் வந்த பைத்துல் மக்திஸைவிட்டு) இனிமேல் இறையில்லம் கஅபாவை முன்னோக்க வேண்டுமென்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. எனவே, (மக்களே!) கஅபாவையே நீங்கள் முன்னோக்கித் தொழுங்கள்’ என்று கூறினார். அப்போது மக்களின் முகம் (பைத்துல் மக்திஸ் இருக்கும் திசையான) ஷாம் நாட்டை நோக்கியிருந்தது. (இந்த அறிவிப்பைக் கேட்ட) உடனே மக்கள் தங்கள் முகங்களை (அப்படியே) கஅபாவின் பக்கம் திருப்பிக்கொண்டார்கள்.
Book

بَيْنَمَا النَّاسُ فِي الصُّبْحِ بِقُبَاءٍ، جَاءَهُمْ رَجُلٌ فَقَالَ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أُنْزِلَ عَلَيْهِ اللَّيْلَةَ قُرْآنٌ، وَأُمِرَ أَنْ يَسْتَقْبِلَ الكَعْبَةَ، أَلاَ فَاسْتَقْبِلُوهَا، وَكَانَ وَجْهُ النَّاسِ إِلَى الشَّأْمِ، فَاسْتَدَارُوا بِوُجُوهِهِمْ إِلَى الكَعْبَةِ»


Bukhari-4489

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 15 (நபியே!) உங்கள் முகம் (அடிக்கடி) வானத்தின் பக்கம் திரும்புவதை நாம் காண்கிறோம். எனவே, நீங்கள் விரும்புகின்ற கிப்லா(வாகிய கஅபா)வின் பக்கம் நிச்சயமாக (இதோ) உங்களை நாம் திரும்பச் செய்கின்றோம். ஆகவே, உங்கள் முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் (புனிதப் பள்ளிவாசலை) நோக்தித் திருப்புங்கள். மேலும் நீங்கள் எங்கிருந்தாலும் அதன் பக்கமே உங்கள் முகங்களைத் திருப்புங்கள்! நிச்சயமாக வேதம் அருளப்பட்டவர்கள் அது தங்களுடைய இறைவனி டமிருந்து வந்த உண்மை என்பதை நன்கு அறிவர். மேலும், அவர்கள் செய்கின்ற வற்றைப்பற்றி அல்லாஹ் கவனமற்றவன் அல்லன் (எனும் 2:144ஆவது இறைவசனம்).
4489. அனஸ்(ரலி) அறிவித்தார்.
(பைத்துல் மக்திஸ், கஅபா ஆகிய) இரண்டு கிப்லாக்களையும் நோக்கித் தொழுதவர்களில் என்னைத் தவிர வேறெவரும் இப்போது உயிரோடில்லை.
Book : 65


«لَمْ يَبْقَ مِمَّنْ صَلَّى القِبْلَتَيْنِ غَيْرِي»


Bukhari-4488

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 14

இறைத்தூதரைப் பின்பற்றுகின்றவர் யார்; தம் குதிகால் புறமாகத் திரும்பிவிடுகின்றவர் யார் என்பதைப் பிரித்தறிவதற்காகவே நீங்கள் முன்பிருந்த கிப்லாவை(த் தொழும் திசையாக) ஆக்கி(பின்பு மாற்றி)னோம். அல்லாஹ் நேர்வழியில் செலுத்தியவர்களுக்கேயன்றி (மற்றவர்களுக்கு) இது நிச்சயம் பளுவாகவே இருந்தது. மேலும் அல்லாஹ் உங்களது நம்பிக்கையை வீணாக்குகின்றவன் அல்லன். (ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் மனிதர் களிடம் மிகுந்த இரக்கமுடையோனும் கருணையுடையோனுமாவான் (எனும் 2:143ஆவது வசனத் தொடர்).

4488. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

மக்கள் ‘சுப்ஹு’த் தொழுகையை ‘மஸ்ஜிது குபா’வில் தொழுது கொண்டிருந்தபோது ஒருவர் வந்து, ‘கஅபாவை (த் தொழுகையில்) முன்னோக்கும்படி கட்டளையிட்டு நபி(ஸல்) அவர்களுக்கு குர்ஆ(னின் ஒருவசனத்தி)னை அல்லாஹ் அருளியுள்ளான்’ என்று கூறினார். உடனே, (பைத்துல் மக்திஸின் திசையை நோக்கித் தொழுதுகொண்டிருந்த) அம்மக்கள், கஅபாவை நோக்கித் (தங்கள் முகங்களைத்) திருப்பிக்கொண்டனர்.
Book : 65


بَيْنَا النَّاسُ يُصَلُّونَ الصُّبْحَ فِي مَسْجِدِ قُبَاءٍ، إِذْ جَاءَ جَاءٍ فَقَالَ: ” أَنْزَلَ اللَّهُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قُرْآنًا: أَنْ يَسْتَقْبِلَ الكَعْبَةَ فَاسْتَقْبِلُوهَا، فَتَوَجَّهُوا إِلَى الكَعْبَةِ


Bukhari-4487

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 13

இவ்வாறே, உங்களை நாம் நடுநிலையான சமுதாயமாக ஆக்கினோம். நீங்கள் மக்களுக்குச் சான்று வழங்குபவர்களாகவும், இறைத்தூதர் உங்களுக்குச் சான்று வழங்குபவராகவும் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காக! (அல்குர்ஆன்: 2:143) ஆவது வசனத் தொடர்.

4487. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

மறுமை நாளில் (நபி) நூஹ் (அலை) அவர்கள் அழைக்கப்படுவார்கள். அவர்கள், ‘இதோ வந்துவிட்டேன்; என் இறைவா! கட்டளையிடு; காத்திருக்கிறேன்’ என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், ‘(நம்முடைய செய்தியை மக்களுக்கு) நீங்கள் எடுத்துரைத்துவிட்டீர்களா?’ என்று இறைவன் கேட்பான். அவர்கள், ‘ஆம் (எடுத்துரைத்து விட்டேன்)’ என்று சொல்வார்கள். அப்போது அவர்களின் சமுதாயத்தாரிடம், ‘உங்களுக்கு இவர் (நம் செய்தியை) எடுத்துரைத்தாரா?’ என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், ‘எங்களிடம் எச்சரிப்பவர் எவரும் வரவில்லை’ என்று சொல்வார்கள்.

அப்போது அல்லாஹ், ‘உங்களுக்கு சாட்சியம் சொல்கிறவர் யார்?’ என்று (நூஹிடம்) கேட்க அவர்கள், ‘முஹம்மதும் அவரின் சமுதாயத்தினரும்’ என்று பதிலளிப்பார்கள். அவ்வாறே அவர்களும், ‘நூஹ் (அலை) அவர்கள் (தம் சமுதாயத்தாருக்கு இறைச்செய்தியை) எடுத்துரைத்துவிட்டார்கள்’ என்று சாட்சியம் அளிப்பார்கள்.

மேலும்,

يُدْعَى نُوحٌ يَوْمَ القِيَامَةِ، فَيَقُولُ: لَبَّيْكَ وَسَعْدَيْكَ يَا رَبِّ، فَيَقُولُ: هَلْ بَلَّغْتَ؟ فَيَقُولُ: نَعَمْ، فَيُقَالُ لِأُمَّتِهِ: هَلْ بَلَّغَكُمْ؟

فَيَقُولُونَ: مَا أَتَانَا مِنْ نَذِيرٍ، فَيَقُولُ: مَنْ يَشْهَدُ لَكَ؟

فَيَقُولُ: مُحَمَّدٌ وَأُمَّتُهُ، فَتَشْهَدُونَ أَنَّهُ قَدْ بَلَّغَ: {وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا} [البقرة: 143] فَذَلِكَ قَوْلُهُ جَلَّ ذِكْرُهُ: {وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا} [البقرة: 143] ” وَالوَسَطُ: العَدْلُ


Bukhari-4486

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 12

அவர்கள் முன்னர் (முன்னோக்கிக் கொண்டு) இருந்த தமது கிப்லா – தொழும் திசையிலிருந்து அவர்களைத் திருப்பியது எது? என மக்களில் அறிவீனர்கள் வினவுவார்கள். (நபியே) நீர் கூறுவீராக: கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. தான் நாடுகின்றவர்களை அவன் நேரான வழியில் செலுத்துவான் (எனும் 2:142ஆவது இறைவசனம்).

4486. பராஉ இப்னு ஆஸிப் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் (ஜெரூசலத்திலுள்ள) பைத்துல் மக்திஸை நோக்கிப் ‘பதினாறு மாதங்கள்’ அல்லது ‘பதினேழு மாதங்கள்’ தொழுதார்கள். (மக்காவிலுள்ள) இறையில்லம் கஅபாவே, தாம் முன்னோக்கும் திசையாக இருக்கவேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக இருந்தது. (எனவே, தொழுகையில் கஅபாவையே முன்னோக்கும் படி ஆணையிட்டு அல்லாஹ் 2:144வது வசனத்தை அருளினான்.

உடனே, அவர்கள் அஸ்ருத் தொழுகையை (கஅபாவை முன்னோக்கித்) தொழுதார்கள். அவர்களுடன் மக்கள் சிலரும் தொழுதனர். பிறகு அவர்களுடன் தொழுதிருந்தவர்களில் ஒருவர் புறப்பட்டு, (மற்றொரு) பள்ளிவாசலில் (தொழுதுகொண்டு) இருந்தவர்களைக் கடந்து சென்றார். அப்போது அங்கிருந்தவர்கள் ‘ருகூஉ’ செய்து கொண்டிருந்தனர். அவர், ‘அல்லாஹ்வை முன்வைத்து நான் சொல்கிறேன். நான், நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்து மக்கா(விலுள்ள கஅபா)வை நோக்கித்

«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى إِلَى بَيْتِ المَقْدِسِ سِتَّةَ عَشَرَ شَهْرًا، أَوْ سَبْعَةَ عَشَرَ شَهْرًا، وَكَانَ يُعْجِبُهُ أَنْ تَكُونَ قِبْلَتُهُ قِبَلَ البَيْتِ، وَأَنَّهُ صَلَّى، أَوْ صَلَّاهَا، صَلاَةَ العَصْرِ وَصَلَّى مَعَهُ قَوْمٌ» فَخَرَجَ رَجُلٌ مِمَّنْ كَانَ صَلَّى مَعَهُ فَمَرَّ عَلَى أَهْلِ المَسْجِدِ وَهُمْ رَاكِعُونَ، قَالَ: أَشْهَدُ بِاللَّهِ، لَقَدْ صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قِبَلَ مَكَّةَ، فَدَارُوا كَمَا هُمْ قِبَلَ البَيْتِ، وَكَانَ الَّذِي مَاتَ عَلَى القِبْلَةِ قَبْلَ أَنْ تُحَوَّلَ قِبَلَ البَيْتِ رِجَالٌ قُتِلُوا، لَمْ نَدْرِ مَا نَقُولُ فِيهِمْ، فَأَنْزَلَ اللَّهُ: {وَمَا كَانَ اللَّهُ لِيُضِيعَ إِيمَانَكُمْ إِنَّ اللَّهَ بِالنَّاسِ لَرَءُوفٌ رَحِيمٌ}


Bukhari-4485

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 11

(நம்பிக்கை கொண்டவர்களே!) அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பெற்ற (இவ் வேதத்)தையும்,மற்றும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் இன்னும் (இவர்களின்) சந்ததியினர்(களான நபிமார்கள்) மீது அருளப்பெற்றதையும், மற்றும் மூசாவுக்கும் ஈசாவுக்கும் அருளப்பட்டவற்றையும், (இதர) அனைத்து இறைத் தூதர்களுக்கும் தங்களுடைய இரட்சகனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் நம்புகிறோம். அவர்களில் எவருக்கிடையி லும் நாங்கள் பாகுபாடு காட்டமாட்டோம். நாங்கள் அல்லாஹ்வுக்கே அடிபணிபவர்களாக இருக்கின்றோம் என்று கூறுங்கள்! (எனும் 2:136ஆவது இறைவசனம்).

4485. அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

வேதக்காரர்(களான யூதர்)கள், தவ்ராத்தை ஹீப்ரு மொழியில் ஓதி, அதை இஸ்லாமியர்களக்கு அரபு மொழியில் விளக்கம் கொடுத்து வந்தார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘வேதக்காரர்களை (அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என) நம்பவும் வேண்டாம்; (பொய் என) மறுக்கவும் வேண்டாம்.

(மாறாக, முஸ்லிம்களே!) நீங்கள் சொல்லுங்கள்: நாங்கள் அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பெற்றதையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோருக்கும், யஅகூபின் வழித்தோன்றல்களுக்கும் அருளப்பெற்றதையும் மற்றும் மூஸாவுக்கும் ஈசாவுக்கும் வழங்கப்பெற்றதையும், மேலும்

كَانَ أَهْلُ الكِتَابِ يَقْرَءُونَ التَّوْرَاةَ بِالعِبْرَانِيَّةِ، وَيُفَسِّرُونَهَا بِالعَرَبِيَّةِ لِأَهْلِ الإِسْلاَمِ،

فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” لا تُصَدِّقُوا أَهْلَ الكِتَابِ وَلا تُكَذِّبُوهُمْ،

وَقُولُوا: {آمَنَّا بِاللَّهِ وَمَا أُنْزِلَ إِلَيْنَا} [البقرة: 136] الآيَةَ


Bukhari-4484

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 10

மேலும், (நபியே! நினைவு கூருக:) இப்ராஹீமும் இஸ்மாயீலும் அந்த (இறை) இல்லத்தின் அடித்தளங்களை உயர்த்திக் கொண்டிருந்த பொழுது எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீயே (அனைத் தையும்) செவியுறுவோனும் நன்கறிவோனும் ஆவாய் (எனப் பிரார்த்தித்தார்கள்) எனும் (2:127ஆவது) இறைவசனம்.

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) அல்கவாஇத் (அடித்தளங்கள்) எனும் சொல், அந்த இ(றையி)ல்லத்தின் அஸ்திவாரத்தைக் குறிக்கும். இதன் ஒருமை: காஇதா ஆகும். (மாதவிடாய் நின்று போன முதிய) பெண்களைக் குறிக்கின்ற அல்கவாஇத் எனும் சொல்லின் ஒருமை, காஇத் என்பதாகும்.

4484. நபி (ஸல்) அவர்களின் மனைவியாராகிய ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்) உன்னுடைய சமுதாயத்தார் (குறைஷியர்) கஅபாவை(ப் புதுப்பித்து)க் கட்டி இப்ராஹீம் அவர்கள் அமைத்த அடித்தளங்களைவிட சுருக்கி (சற்று உள்ளடக்கி) விட்டதை நீ காணவில்லையா என்று கேட்டார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதரே! இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளங்களின் மீது அதை தாங்கள் மீண்டும் கட்டக்கூடாதா? என கேட்டேன்.

உன் சமுதாயத்தார் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாயில்லாவிட்டால் (அவ்வாறே நான் செய்திருப்பேன்) என்றார்கள்.

(இதன்

«أَلَمْ تَرَيْ أَنْ قَوْمَكِ بَنَوْا الكَعْبَةَ، وَاقْتَصَرُوا عَنْ قَوَاعِدِ إِبْرَاهِيمَ». فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَلاَ تَرُدُّهَا عَلَى قَوَاعِدِ إِبْرَاهِيمَ؟ قَالَ: «لَوْلاَ حِدْثَانُ قَوْمِكِ بِالكُفْرِ» فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ: «لَئِنْ كَانَتْ عَائِشَةُ سَمِعَتْ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَا أُرَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَرَكَ اسْتِلاَمَ الرُّكْنَيْنِ اللَّذَيْنِ يَلِيَانِ الحِجْرَ، إِلَّا أَنَّ البَيْتَ لَمْ يُتَمَّمْ عَلَى قَوَاعِدِ إِبْرَاهِيمَ»


Bukhari-4483

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 9

மேலும் (நினைவு கூருங்கள்:) நாம் (கஅபா எனும்) இந்த ஆலயத்தை மக்களுக்கு ஒன்றுகூடும் இடமாகவும், அமைதி அளிக்கும் இடமாகவும் ஆக்கினோம். மேலும், இப்ராஹீம் நின்ற இடத்தை நீங்கள் தொழும் இடமாக வைத்துக் கொள்ளுங்கள் என்றும் மக்களுக்கு நாம் கட்டளையிட்டோம் எனும் (2:125ஆவது) வசனத் தொடர்.

(இவ்வசனத்தின் மூலத்தில் ஒன்றுகூடும் இடம் என்ற பொருளைக் குறிக்கும்) மஸாபத்தன் எனும் சொல்லுக்கு மீளுமிடம் என்று பொருள். (அதன் எதிர்கால வினைச் சொல்லான) யஸுபூன எனும் சொல்லுக்கு மீண்டு(ம் மீண்டும்) வருவார்கள் என்று பொருள்.

4483. உமர் (ரலி) அறிவித்தார்.

‘மூன்று விஷயங்களில் நான் அல்லாஹ்வுக்கு இசைவான கருத்துக் கொண்டேன்’ அல்லது ‘என் இறைவன் மூன்று விஷயங்களில் எனக்கு இசைவாகக் கருத்துக் கொண்டான்

‘ நான் (நபி (ஸல்) அவர்களிடம்) ‘இறைத்தூதர் அவர்களே! இப்ராஹீம் (அலை) அவர்கள் (கஅபாவைக் கட்டும்போது) நின்ற இடத்தைத் தொழுமிடமாக நீங்கள் ஆக்கிக் கொள்ளலாமே!’ என்று கேட்டேன். (அவ்வாறே ஆக்கிக்கொள்ளும்படி அல்லாஹ்வும் வசனத்தை அருளினான்.)

மேலும், நான், (அவர்களிடம்), ‘இறைத்தூதர் அவர்களே! தங்களிடம் நல்லவரும் கெட்டவரும் (எல்லா வகை மனிதர்களும்) வருகிறார்கள். எனவே, (தங்கள் துணைவியரான) இறைநம்பிக்கையாளர்களின்

وَافَقْتُ اللَّهَ فِي ثَلاَثٍ، أَوْ وَافَقَنِي رَبِّي فِي ثَلاَثٍ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ لَوِ اتَّخَذْتَ مَقَامَ إِبْرَاهِيمَ مُصَلًّى،

وَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، يَدْخُلُ عَلَيْكَ البَرُّ وَالفَاجِرُ، فَلَوْ أَمَرْتَ أُمَّهَاتِ المُؤْمِنِينَ بِالحِجَابِ، فَأَنْزَلَ اللَّهُ آيَةَ الحِجَابِ،

قَالَ: وَبَلَغَنِي مُعَاتَبَةُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْضَ نِسَائِهِ، فَدَخَلْتُ عَلَيْهِنَّ، قُلْتُ: إِنِ انْتَهَيْتُنَّ أَوْ لَيُبَدِّلَنَّ اللَّهُ رَسُولَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْرًا مِنْكُنَّ، حَتَّى أَتَيْتُ إِحْدَى نِسَائِهِ، قَالَتْ: يَا عُمَرُ، أَمَا فِي رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا يَعِظُ نِسَاءَهُ، حَتَّى تَعِظَهُنَّ أَنْتَ؟

فَأَنْزَلَ اللَّهُ: (عَسَى رَبُّهُ إِنْ طَلَّقَكُنَّ أَنْ يُبَدِّلَهُ أَزْوَاجًا خَيْرًا مِنْكُنَّ مُسْلِمَاتٍ) الآيَةَ


Next Page » « Previous Page