Author: Farook

Bukhari-4482

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 8

அல்லாஹ் (தனக்குச்) சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான் என்று அவர்கள் கூறுகின்றனர். அவன் (அதிலிருந்து) தூய்மையானவன் (எனும் 2:116 ஆவது வசனத் தொடர்).

4482. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆதமின் மகன் (மனிதன்) என்னை நம்ப மறுத்தான். ஆயினும், அதற்கான உரிமை அவனுக்கில்லை. என்னை அவன் ஏசினான். ஆயினும் அதற்கான உரிமை அவனுக்கில்லை.

என்னை அவன் நம்ப மறுத்தது, ‘அவனை நான் முன்பிருந்தது போன்றே மீண்டும் உயிராக்கி எழுப்ப என்னால் முடியாது’ என்று அவன் எண்ணியதேயாகும்.

அவன் என்னை ஏசியது, ‘எனக்குக் குழந்தை உண்டு’ என்று அவன் சொன்னதேயாகும். ஆனால், நான் ஒரு துணைவியையோ குழந்தையையோ பெற்றுக்கொள்வதிலிருந்து தூய்மையானவன் ஆவேன்’ என்று அல்லாஹ் கூறினான். என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.
Book : 65


قَالَ اللَّهُ: «كَذَّبَنِي ابْنُ آدَمَ وَلَمْ يَكُنْ لَهُ ذَلِكَ، وَشَتَمَنِي، وَلَمْ يَكُنْ لَهُ ذَلِكَ، فَأَمَّا تَكْذِيبُهُ  إِيَّايَ فَزَعَمَ أَنِّي لاَ أَقْدِرُ أَنْ أُعِيدَهُ كَمَا كَانَ، وَأَمَّا شَتْمُهُ إِيَّايَ، فَقَوْلُهُ لِي وَلَدٌ، فَسُبْحَانِي أَنْ أَتَّخِذَ صَاحِبَةً أَوْ وَلَدًا»


Bukhari-4481

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 7

எந்த ஒரு வசனத்தையாவது நாம் மாற்றிவிட்டால், அல்லது அகற்றிவிட்டால் (அதற்கு பதிலாக) அதனினும் சிறந்த, அல்லது அதைப் போன்ற வேறு வசனத்தை நாம் கொண்டு வருகிறோம். நிச்சயமாக,அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுள்ளவன் என்பதை நீங்கள் அறியவில்லையா? எனும் (2:106ஆவது) இறைவசனம்.

4481. உமர் (ரலி) அறிவித்தார்.

எங்களில் (குர்ஆனை) நன்கு ஓதத் தெரிந்தவர் உபை இப்னு கஅப் (ரலி) ஆவார். எங்களில் நன்கு தீர்ப்பு வழங்கும் ஞானமுடையவர் அலீ (ரலி) ஆவார். நாங்கள் உபை அவர்களின் சொற்களில் சிலவற்றை விட்டுவிடுவோம். ஏனெனில் அவர், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து நான் செவிமடுத்த எதையும் கைவிடமாட்டேன்’ என்று சொல்வார்.

ஆனால், அல்லாஹ்வோ, எந்த ஒரு வசனத்தையாவது நாம் மாற்றிவிட்டால், அல்லது அகற்றிவிட்டால் (அதற்கு பதிலாக) அதனினும் சிறந்த, அல்லது அதைப்போன்ற வேறு வசனத்தை நாம் கொண்டு வருகிறோம்’ என்று கூறியுள்ளான். என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.
Book : 65


أَقْرَؤُنَا أُبَيٌّ، وَأَقْضَانَا عَلِيٌّ، وَإِنَّا لَنَدَعُ مِنْ قَوْلِ أُبَيٍّ، وَذَاكَ أَنَّ أُبَيًّا يَقُولُ: لاَ أَدَعُ شَيْئًا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ “. وَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى: {مَا نَنْسَخْ مِنْ آيَةٍ أَوْ نُنْسِهَا} [البقرة: 106]


Bukhari-4480

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 6

(நபியே!) நீங்கள் சொல்லுங்கள்: எவர் ஜிப்ரீலுக்குப் பகைவரோ (அவர் அல்லாஹ்வுக்கும் பகைவரே). ஏனெனில், நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் ஆணைக்கிணங்கவே இ(வ்வேதத்)தை உங்களது இதயத்தில் இறக்கி வைத்தார். (இவ்வேதம்) தனக்கு முன்னிருந்த வேதங்களை உண்மைப்படுத்துவதுடன், நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தியாகவும் நேர்வழியாகவும் விளங்குகிறது எனும் (அல்குர்ஆன்: 2:97) ஆவது இறைவசனம்.

இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(ஜிப்ரயீல், மீக்காயில், இஸ்ராஃபீல் ஆகிய வானவர்களின் பெயர்களில் தொடக் கத்திலுள்ள) ஜப்ர், மீக், சராஃப் ஆகியன அடிமை எனும் பொருளுடையவை. இறுதியில் உள்ள ஈல் எனும் சொல்லுக்கு அல்லாஹ் என்று பொருள். (அதாவது அல்லாஹ்வின் அடியார் என்பது இவற்றின் பொருளாகும்.)

4480. அனஸ் (ரலி) அறிவித்தார்:

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) வந்திருக்கும் செய்தி (யூத அறிஞராயிருந்த) அப்துல்லாஹ் பின் ஸலாம் அவர்களுக்கு, அவர்கள் ஒரு (தோட்ட) நிலத்தில் பழம் பறித்துக் கொண்டிருந்தபோது எட்டியது. உடனே அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகிறேன். அவற்றை ஓர் இறைத்தூதர் மட்டுமே அறிவார்’ என்று கூறினார்கள்.

பிறகு,

‘1.

سَمِعَ عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ، بِقُدُومِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهْوَ فِي أَرْضٍ يَخْتَرِفُ، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنِّي سَائِلُكَ عَنْ ثَلاَثٍ لاَ يَعْلَمُهُنَّ إِلَّا نَبِيٌّ: فَمَا أَوَّلُ أَشْرَاطِ السَّاعَةِ؟، وَمَا أَوَّلُ طَعَامِ أَهْلِ الجَنَّةِ؟، وَمَا يَنْزِعُ الوَلَدُ إِلَى أَبِيهِ أَوْ إِلَى أُمِّهِ؟ قَالَ: «أَخْبَرَنِي بِهِنَّ جِبْرِيلُ آنِفًا» قَالَ: جِبْرِيلُ؟: قَالَ: «نَعَمْ»، قَالَ: ذَاكَ عَدُوُّ اليَهُودِ مِنَ المَلاَئِكَةِ، فَقَرَأَ هَذِهِ الآيَةَ: {مَنْ كَانَ عَدُوًّا لِجِبْرِيلَ فَإِنَّهُ نَزَّلَهُ عَلَى قَلْبِكَ بِإِذْنِ اللَّهِ} [البقرة: 97].

«أَمَّا أَوَّلُ أَشْرَاطِ السَّاعَةِ فَنَارٌ تَحْشُرُ النَّاسَ مِنَ المَشْرِقِ إِلَى المَغْرِبِ، وَأَمَّا أَوَّلُ طَعَامٍ يَأْكُلُهُ أَهْلُ الجَنَّةِ فَزِيَادَةُ كَبِدِ حُوتٍ، وَإِذَا سَبَقَ مَاءُ الرَّجُلِ مَاءَ المَرْأَةِ نَزَعَ الوَلَدَ، وَإِذَا سَبَقَ مَاءُ المَرْأَةِ نَزَعَتْ»، قَالَ: أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّكَ رَسُولُ اللَّهِ، يَا رَسُولَ اللَّهِ، إِنَّ اليَهُودَ قَوْمٌ بُهُتٌ، وَإِنَّهُمْ إِنْ يَعْلَمُوا بِإِسْلاَمِي قَبْلَ أَنْ تَسْأَلَهُمْ يَبْهَتُونِي،

فَجَاءَتِ اليَهُودُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيُّ رَجُلٍ عَبْدُ اللَّهِ فِيكُمْ». قَالُوا: خَيْرُنَا وَابْنُ خَيْرِنَا، وَسَيِّدُنَا وَابْنُ سَيِّدِنَا، قَالَ: «أَرَأَيْتُمْ إِنْ أَسْلَمَ عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ». فَقَالُوا: أَعَاذَهُ اللَّهُ مِنْ ذَلِكَ، فَخَرَجَ عَبْدُ اللَّهِ فَقَالَ: أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، فَقَالُوا: شَرُّنَا وَابْنُ شَرِّنَا، وَانْتَقَصُوهُ، قَالَ: فَهَذَا الَّذِي كُنْتُ أَخَافُ يَا رَسُولَ اللَّهِ


Bukhari-4479

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 5

மேலும், (அங்கிருக்கும்) இந்த ஊருக்குள் நுழையுங்கள். பிறகு அங்கு (கிடைப்பன வற்றை) நீங்கள் விரும்பியவாறு தாராளமாகப் புசியுங்கள். (ஊருக்குள் நுழையும் போது) அதன் தலைவாயிலில் சிரம் தாழ்த்தியவர்களாக நுழையுங்கள். ஹித்தத்துன் (பாவச்சுமையை இறக்கிடுவாயாக!) என்றும் கூறுங்கள். உங்கள் குற்றங்களை உங்களுக்கு நாம் மன்னித்து விடுவோம். மேலும், நல்லவர்களுக்கு அதிகமாக வழங்குவோம் என நாம் கூறியதையும் நினைவுகூருங்கள் (எனும் 2:58ஆவது இறைவசனம்).

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ரஃகதன் (தாரளமாக) எனும் சொல்லுக்கு விசாலமாகவும் அதிகமாகவும் என்று பொருள்.

4479. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பனூ இஸ்ராயீல்களுக்கு, ‘(ஊருக்குள் நுழையும்போது) அதன் தலைவாயிலில் சிரம் தாழ்த்தியவர்களாக நுழையுங்கள். ‘ஹித்தத்துன்’ (பாவச்சுமையை இறக்கிடுவாயாக!) என்றும் கூறுங்கள்’ (திருக்குர்ஆன் 02:58) என்று கூறப்பட்டது.

ஆனால், அவர்கள் தங்கள் புட்டங்களால் தவழ்ந்து சென்றபடி (நகருக்குள்) நுழைந்தார்கள். (கட்டளையிடப்பட்டதை) அவர்கள் மாற்றி, ‘ஹித்தத்துன்; ஹப்பத்துன் ஃபீ ஷஅரத்தின் (இறைவா! மன்னிப்பாயாக! ஒரு வாற்கோதுமைக்குள் ஒரு தானியவித்து)’ என்று (பரிகாசமாகச்) கூறினார்கள். என அபூ ஹுரைரா (ரலி)

قِيلَ لِبَنِي إِسْرَائِيلَ: {ادْخُلُوا البَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ} [البقرة: 58]. فَدَخَلُوا يَزْحَفُونَ عَلَى أَسْتَاهِهِمْ، فَبَدَّلُوا، وَقَالُوا: حِطَّةٌ، حَبَّةٌ فِي شَعَرَةٍ


Bukhari-4478

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 4

உங்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம். மன்னு, ஸல்வா (எனும் உண)வை உங்களுக்கு இறக்கினோம். “நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்!” (என்று கூறினோம்). (இதை மீறியதால்) அவர்கள் நமக்குத் தீங்கிழைக்கவில்லை. மாறாக தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர். (அல்குர்ஆன்: 2:57) எனும் இறைவசனம்.

முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

மன்னு என்பது வேலம் பசை ஆகும். சல்வா என்பது பறவை ஆகும்.


4478. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

சமையல் காளான் (தானாக வளர்வதில்) ‘மன்னு’ வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)


அத்தியாயம்: 65


«الكَمْأَةُ مِنَ المَنِّ، وَمَاؤُهَا شِفَاءٌ لِلْعَيْنِ»


Bukhari-4477

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2

முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

(2:14 ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) இலா ஷயாத்தீனிஹிம் (தங்களுடைய ஷைத்தான்களுடன்) எனும் சொல்லுக்கு, நயவஞ்சகர்களும் இணை வைப்பவர்களுமான தங்களுடைய தோழர்கள் என்று பொருள்.

(2:19 ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) முஹீத்துன் பில் காஃபிரீன் (இந்த நிராகரிப்போரை அல்லாஹ் சூழ்ந்து கொண்டிருக்கின்றான்) எனும் சொற்றொடருக்கு, இறை மறுப்பாளர்களான அவர்களை அல்லாஹ் சுற்றி வளைத்துக் கொண்டிருக்கிறான். (அவர்களால் தப்ப முடியாது) என்று பொருள்.

(2:138 ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஸிப்ஃகத் (வர்ணம்) எனும் சொல்லுக்கு தீன் – மார்க்கம் என்று பொருள்.

(2:45 ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அலல் காஷியீன் (உள்ளச்சமுடையோர் மீது) எனும் சொற்றொடருக்கு உண்மையான இறை நம்பிக்கையாளர்கள் மீது என்று பொருள்.

(2:63 ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) பிகுவ்வத்தின் (உறுதியாக) எனும் சொல்லுக்கு, வேதத்திலுள்ளபடி செயல்படுங்கள் என்று பொருள்.

அபுல் ஆலியா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

 (2:10 ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) மரள் (நோய்) எனும் சொல்லுக்குச் சந்தேகம்

سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” أَيُّ الذَّنْبِ أَعْظَمُ عِنْدَ اللَّهِ؟ قَالَ: «أَنْ تَجْعَلَ لِلَّهِ نِدًّا وَهُوَ خَلَقَكَ». قُلْتُ: إِنَّ ذَلِكَ لَعَظِيمٌ، قُلْتُ: ثُمَّ أَيُّ؟ قَالَ: «وَأَنْ تَقْتُلَ وَلَدَكَ تَخَافُ أَنْ يَطْعَمَ مَعَكَ». قُلْتُ: ثُمَّ أَيُّ؟ قَالَ: «أَنْ تُزَانِيَ حَلِيلَةَ جَارِكَ»


Bukhari-4476

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

[2] அல்பகரா அத்தியாயம்

பாடம் : 1

அளவிலா அருளாளன், நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…. 

“அவன் ஆதமுக்குப் பெயர்கள் அனைத்தையும் கற்றுக் கொடுத்தான் (எனும் 2:31 ஆவது வசனத் தொடர்).

4476. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் இறைநம்பிக்கையாளர்கள் ஒன்றுகூடி, ‘(நமக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களிலிருந்து நம்மைக் காக்கும்படி யார் மூலமாவது) நம் இறைவனிடம் நாம் மன்றாடினால் (எவ்வளவு நன்றாயிருக்கும்!)’ என்று (தங்களிடையே) பேசிக் கொள்வார்கள். பிறகு, அவர்கள் ஆதம் (அலை) அவர்களிடம் வந்து, ‘நீங்கள் மனிதர்களின் தந்தையாவீர்கள். அல்லாஹ், தன் கையால் உங்களைப் படைத்தான். தன்னுடைய வானவர்களை உங்களுக்குச் சிரம் பணியச் செய்தான். மேலும், உங்களுக்கு எல்லாப் பொருள்களின் பெயர்களையும் கற்றுத் தந்தான். எனவே, இந்த(ச் சோதனையான) கட்டத்திலிருந்து எங்களை விடுவிப்பதற்காக உங்களுடைய இறைவனிடத்தில் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள்’ என்று சொல்வார்கள்.

அதற்கு ஆதம் (அலை) அவர்கள், ‘(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை’ என்று கூறிவிட்டு, தாம் புரிந்த பாவத்தை நினைத்துப் பார்த்து வெட்கப்படுவார்கள். ‘நீங்கள் (நபி) நூஹ் அவர்களிடம் செல்லுங்கள்.

يَجْتَمِعُ المُؤْمِنُونَ يَوْمَ القِيَامَةِ، فَيَقُولُونَ: لَوِ اسْتَشْفَعْنَا إِلَى رَبِّنَا، فَيَأْتُونَ آدَمَ فَيَقُولُونَ: أَنْتَ أَبُو النَّاسِ، خَلَقَكَ اللَّهُ بِيَدِهِ، وَأَسْجَدَ لَكَ مَلاَئِكَتَهُ، وَعَلَّمَكَ أَسْمَاءَ كُلِّ شَيْءٍ، فَاشْفَعْ لَنَا عِنْدَ رَبِّكَ حَتَّى يُرِيحَنَا مِنْ مَكَانِنَا هَذَا، فَيَقُولُ: لَسْتُ هُنَاكُمْ، وَيَذْكُرُ ذَنْبَهُ فَيَسْتَحِي، ائْتُوا نُوحًا، فَإِنَّهُ أَوَّلُ رَسُولٍ بَعَثَهُ اللَّهُ إِلَى أَهْلِ الأَرْضِ،

فَيَأْتُونَهُ فَيَقُولُ: لَسْتُ هُنَاكُمْ، وَيَذْكُرُ سُؤَالَهُ رَبَّهُ مَا لَيْسَ لَهُ بِهِ عِلْمٌ فَيَسْتَحِي، فَيَقُولُ: ائْتُوا خَلِيلَ الرَّحْمَنِ،

فَيَأْتُونَهُ  فَيَقُولُ: لَسْتُ هُنَاكُمْ، ائْتُوا مُوسَى، عَبْدًا كَلَّمَهُ اللَّهُ وَأَعْطَاهُ التَّوْرَاةَ،

فَيَأْتُونَهُ فَيَقُولُ: لَسْتُ هُنَاكُمْ، وَيَذْكُرُ قَتْلَ النَّفْسِ بِغَيْرِ نَفْسٍ، فَيَسْتَحِي مِنْ رَبِّهِ، فَيَقُولُ: ائْتُوا عِيسَى عَبْدَ اللَّهِ وَرَسُولَهُ، وَكَلِمَةَ اللَّهِ وَرُوحَهُ،

فَيَقُولُ: لَسْتُ هُنَاكُمْ، ائْتُوا مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَبْدًا غَفَرَ اللَّهُ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ،

فَيَأْتُونِي، فَأَنْطَلِقُ حَتَّى أَسْتَأْذِنَ عَلَى رَبِّي، فَيُؤْذَنَ لِي، فَإِذَا رَأَيْتُ رَبِّي وَقَعْتُ سَاجِدًا، فَيَدَعُنِي مَا شَاءَ اللَّهُ، ثُمَّ يُقَالُ: ارْفَعْ رَأْسَكَ وَسَلْ تُعْطَهْ، وَقُلْ يُسْمَعْ وَاشْفَعْ تُشَفَّعْ، فَأَرْفَعُ رَأْسِي، فَأَحْمَدُهُ بِتَحْمِيدٍ يُعَلِّمُنِيهِ، ثُمَّ أَشْفَعُ فَيَحُدُّ لِي حَدًّا، فَأُدْخِلُهُمُ الجَنَّةَ، ثُمَّ أَعُودُ إِلَيْهِ فَإِذَا رَأَيْتُ رَبِّي مِثْلَهُ، ثُمَّ أَشْفَعُ فَيَحُدُّ لِي حَدًّا، فَأُدْخِلُهُمُ الجَنَّةَ،

ثُمَّ أَعُودُ الرَّابِعَةَ، فَأَقُولُ مَا بَقِيَ فِي النَّارِ إِلَّا مَنْ حَبَسَهُ القُرْآنُ، وَوَجَبَ عَلَيْهِ الخُلُودُ


Bukhari-4475

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2

(அவர்கள் உனது) கோபத்திற்குள்ளானவர்களும் அல்லர்; வழிதவறிச் சென்றவர்களும் அல்லர் (எனும்1:7ஆவது இறைவசனம்).

4475. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தொழுகையில்) இமாம், ‘ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலள் ளால்லீன்’ என்று ஓதியவுடன் நீங்கள், ‘ஆமீன் (அவ்வாறே ஆகட்டும்)’ என்று சொல்லுங்கள்.

ஏனெனில், எவரது ஆமீன், வானவர்கள் கூறும் ஆமீனுடன் ஒத்தமைந்து விடுகிறதோ அவருக்கு, அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும். என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.
Book : 65


إِذَا قَالَ الإِمَامُ: {غَيْرِ المَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ} [الفاتحة: 7] فَقُولُوا آمِينَ، فَمَنْ وَافَقَ قَوْلُهُ قَوْلَ المَلاَئِكَةِ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ


Bukhari-4474

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அத்தியாயம்: 65

திருக்குர்ஆன் விளக்கவுரை

( ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ என்பதிலுள்ள ) அர்ரஹ்மான் – அளவற்ற அருளாளன்- அர்ரஹீம் -நிகரற்ற அன்புடையோன்- ஆகிய இரு சொற்களும் ரஹ்மத் (கருணை) எனும் வேர்ச் சொல்லிலிருந்து பிறந்த இரு பெயர்ச் சொற்களாகும். அர்ரஹீம், அர்ராஹிம் ஆகிய இரண்டும் ஒரே பொருளுடையவைதாம். இவை, (பொருள் தருவதில்) ஆலிம் மற்றும் அலீம் -அறிந்தவன்- எனும் சொற்களை போன்றைவாயாகும்.

பாடம்: 1

குர்ஆனின் தொடக்க (அத்தியாயமான அல்ஃபாத்திஹா) அத்தியாயம் தொடர்பாக வந்துள்ளவை.

இதற்கு உம்முல் கிதாப் (இறைவேதத்தின் தாய்) என்று பெயரிடப்பட்டுள்ளது. காரணம், ஏடுகளில் (முதலாவதாக) இதை எழுதித் தான் (திருக்குர்ஆன்) தொடங்கப்படுகின்றது. தொழுகையிலும் இதை (முதலாவதாக) ஓதித் தான் தொடங்கப்படுகின்றது.

(இந்த அத்தியாயத்தின் மூன்றாவது வசனத்தின் மூலத்தில் மாலிகி யவ்மித்தீன் என்பதில் இடம்பெற்றுள்ள) தீன் எனும் சொல், நன்மைக்கும் தீமைக்கும் வழங்கப்பட விருக்கின்ற பிரதிபலனைக் குறிக்கும். (எனவே, பிரதிபலன் அளிக்கப்படும் நாளின் அதிபதி என இவ்வசனத்தின் பொருள் அமையும்.)

கமா ததீனு துதானு (நீ எப்படி நடந்து கொள்வாயோ அப்படியே நடத்தப்படுவாய் எனும் பழமொழியின் மூலத்தில் தீன் எனும் சொல்லில் தொனிக்கின்றபடி, ஒரு செயலுக்கு அதன் பதிலாக

كُنْتُ أُصَلِّي فِي المَسْجِدِ، فَدَعَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ أُجِبْهُ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي كُنْتُ أُصَلِّي، فَقَالَ: ” أَلَمْ يَقُلِ اللَّهُ: {اسْتَجِيبُوا لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمْ لِمَا يُحْيِيكُمْ} [الأنفال: 24].

ثُمَّ قَالَ لِي: «لَأُعَلِّمَنَّكَ سُورَةً هِيَ أَعْظَمُ السُّوَرِ فِي القُرْآنِ، قَبْلَ أَنْ تَخْرُجَ مِنَ المَسْجِدِ».

ثُمَّ أَخَذَ بِيَدِي، فَلَمَّا أَرَادَ أَنْ يَخْرُجَ، قُلْتُ لَهُ: «أَلَمْ تَقُلْ لَأُعَلِّمَنَّكَ سُورَةً هِيَ أَعْظَمُ سُورَةٍ فِي القُرْآنِ»،

قَالَ: {الحَمْدُ لِلَّهِ رَبِّ العَالَمِينَ} [الفاتحة: 2] «هِيَ السَّبْعُ المَثَانِي، وَالقُرْآنُ العَظِيمُ الَّذِي أُوتِيتُهُ»


Bukhari-4473

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4473. புரைதா இப்னு ஹுஸைப்(ரலி) அறிவித்தார்
நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் பதினாறு புனிதப் போர்களில் கலந்துகொண்டேன்.
Book :64


«غَزَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سِتَّ عَشْرَةَ غَزْوَةً»


Next Page » « Previous Page