Author: Farook

Bukhari-4156

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4156. மரத்தினடியில் உறுதிப்பிரமாணம் (பைஅத்துர் ரிள்வான்) செய்தவர்களில் ஒருவரான மிர்தாஸ் இப்னு மாலிக் அல் அஸ்லமீ(ரலி) கூறினார்.
நல்லவர்களில் முதன்மையானவர்கள் முதலாவதாகவும் அவர்களுக்கடுத்தவர்கள் அடுத்ததாகவும் (உயிர்) கைப்பற்றப்படுவர். (இவ்வாறு நல்லவர்கள் மறைந்த பின் இப்புவியில்) மட்டமான பேரீச்சம் பழத்தையும் வாற்கோதுமையையும் போன்ற தரம் தாழ்ந்த மக்களே எஞ்சியிருப்பர். அவர்களை அல்லாஹ் சற்றும் பொருட்படுத்த மாட்டான்.
Book :64


«يُقْبَضُ الصَّالِحُونَ، الأَوَّلُ فَالأَوَّلُ، وَتَبْقَى حُفَالَةٌ كَحُفَالَةِ التَّمْرِ وَالشَّعِيرِ، لاَ يَعْبَأُ اللَّهُ بِهِمْ شَيْئًا»


Bukhari-4155

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4155. அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார்.
மரத்தினடியில் உறுதிப் பிரமாணம் செய்தவர்கள் (சுமார்) ஆயிரத்து முன்னூறு பேர் ஆவர். (இதில்) ‘அஸ்லம்’ குலத்தினர் முஹாஜிர்களில் எட்டில் ஒரு பகுதியினராக இருந்தனர்.
இந்த ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
Book :64


كَانَ أَصْحَابُ الشَّجَرَةِ أَلْفًا وَثَلاَثَ مِائَةٍ، وَكَانَتْ أَسْلَمُ، ثُمْنَ المُهَاجِرِينَ ” تَابَعَهُ مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا شُعْبَةُ


Bukhari-4154

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4154. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார்.

ஹுதைபிய்யா தினத்தன்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், ‘பூமியிலிருப்பவர்களில் நீங்களே சிறந்தவர்கள்’ என்று கூறினார்கள். (அப்போது) நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம். இப்போது (மட்டும்) எனக்குக் கண்பார்வை தெரியுமானால் அந்த (ரிள்வான் உறுதிப் பிரமாணம் நடைபெற்ற) மரத்தின் இடத்தைக் காண்பித்திருப்பேன்’ என்று கூறினார்கள்.

ஜாபிர் (ரலி) அவர்களின் இன்னோர் அறிவிப்பிலும் (அவர்கள்) ஆயிரத்து நானூறு பேர் (இருந்ததாகக் காணப்படுகிறது)
Book :64


قَالَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الحُدَيْبِيَةِ: «أَنْتُمْ خَيْرُ أَهْلِ الأَرْضِ» وَكُنَّا أَلْفًا وَأَرْبَعَ مِائَةٍ، وَلَوْ كُنْتُ أُبْصِرُ اليَوْمَ لَأَرَيْتُكُمْ مَكَانَ الشَّجَرَةِ تَابَعَهُ الأَعْمَشُ، سَمِعَ سَالِمًا، سَمِعَ جَابِرًا أَلْفًا وَأَرْبَعَ مِائَةٍ


Bukhari-4153

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4153. கத்தாதா(ரஹ்) கூறினார்.
நான் ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) அவர்களிடம், ‘அவர்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந்தார்கள்’ என்று ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறி வந்தார்கள்’ என்று எனக்குச் செய்தி கிடைத்துள்ளதே’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள் என்னிடம், ‘ஹுதைபிய்யா தினத்தன்று நபி(ஸல்) அவர்களிடம் உறுதிப் பிரமாணம் செய்து கொடுத்தவர்கள் ஆயிரத்து ஐநூறு பேர் இருந்தனர்’ என்று ஜாபிர் அவர்களே எனக்கு அறிவித்தார்கள்’ என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இன்னும் பல அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
Book :64


قُلْتُ لِسَعِيدِ بْنِ المُسَيِّبِ: بَلَغَنِي أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ كَانَ يَقُولُ: «كَانُوا أَرْبَعَ عَشْرَةَ مِائَةً»، فَقَالَ لِي سَعِيدٌ: حَدَّثَنِي جَابِرٌ: «كَانُوا خَمْسَ عَشْرَةَ مِائَةً، الَّذِينَ بَايَعُوا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الحُدَيْبِيَةِ» تَابَعَهُ أَبُو دَاوُدَ، حَدَّثَنَا قُرَّةُ، عَنْ قَتَادَةَ


Bukhari-4152

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4152. ஜாபிர் (ரலி) அறிவித்தார்:

ஹுதைபிய்யா உடன்படிக்கையின்போது மக்களுக்குத் தாகம் ஏற்பட்டது. இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் தோலால் ஆன (நீர்க்) குவளை ஒன்று இருந்தது. அதிலிருந்து நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். அதன் பிறகு மக்கள் நபி (ஸல்) அவர்களை நோக்கி வந்தனர். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘உங்களுக்கு என்ன (நேர்ந்தது)?’ என்று கேட்டார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! தங்கள் குவளையிலிருக்கும் தண்ணீரைத் தவிர நாங்கள் உளூச் செய்வதற்கோ குடிப்பதற்கோ எங்களிடம் வேறு தண்ணீரில்லை’ என்று கூறினர்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் தங்களின் கரத்தை அந்தக் குவளைக்குள் வைத்தார்கள். அவர்களின் விரல்களுக்கிடையிலிருந்து ஊற்றுக் கண் போன்று தண்ணீர் பொங்கி வரத் தொடங்கியது.
அப்போது நாங்கள் அந்தத் தண்ணீரை அருந்தவும் செய்தோம். மேலும், உளூவும் செய்தோம்.

(அறிவிப்பாளர் சாலிம் இப்னு அபில் ஜஅத் – ரஹ் – அவர்கள் கூறுகிறார்கள்:) ‘நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம், ‘அன்று நீங்கள் எத்தனை பேர் இருந்தீர்கள்?’ என்று கேட்டேன். ‘நாங்கள் ஒரு லட்சம் பேராக இருந்திருந்தாலும் அந்தத் தண்ணீர் எங்களுக்குப் போதுமானதாக இருந்திருக்கும். நாங்கள் ஆயிரத்து ஐநூறு பேர் தாம் இருந்தோம்.’ என்று பதிலளித்தார்கள்.
Book :64


عَطِشَ النَّاسُ يَوْمَ الحُدَيْبِيَةِ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ يَدَيْهِ رَكْوَةٌ فَتَوَضَّأَ مِنْهَا، ثُمَّ أَقْبَلَ النَّاسُ نَحْوَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا لَكُمْ؟» قَالُوا يَا رَسُولَ اللَّهِ: لَيْسَ عِنْدَنَا مَاءٌ نَتَوَضَّأُ بِهِ وَلاَ  نَشْرَبُ، إِلَّا مَا فِي رَكْوَتِكَ، قَالَ: «فَوَضَعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ فِي الرَّكْوَةِ، فَجَعَلَ المَاءُ يَفُورُ مِنْ بَيْنِ أَصَابِعِهِ كَأَمْثَالِ العُيُونِ». قَالَ: فَشَرِبْنَا وَتَوَضَّأْنَا فَقُلْتُ لِجَابِرٍ: كَمْ كُنْتُمْ يَوْمَئِذٍ؟ قَالَ: لَوْ كُنَّا مِائَةَ أَلْفٍ لَكَفَانَا، كُنَّا خَمْسَ عَشْرَةَ مِائَةً


Bukhari-4151

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

4151. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹுதைபிய்யா தினத்தன்று இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் ஆயிரத்து நானூறு பேர்… அல்லது அதை விட(க் கொஞ்சம்) அதிகம் பேர்… இருந்தனர். அவர்கள் ஒரு கிணற்றருகில் தங்கினர். அப்போது அந்தக் கிணற்றிலிருந்து (எல்லா நீரையும்) இறைத்துவிட்டனர். (தண்ணீர் தீர்ந்து வட்ட போது) நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். (அது பற்றிக் கூறினர்.)

அப்போது, நபி (ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றுக்கு வந்து அதன் ஓரத்தில் அமர்ந்தார்கள். பின்பு, ‘அந்தக் கிணற்று நீரிலிருந்து ஒரு வாளித் தண்ணீர் கொண்டு வாருங்கள்’ என்று கூறினார்கள். தண்ணீர் கொண்டு வரப்பட்டபோது அதில் உமிழ்ந்தார்கள். பிறகு பிரார்த்தனை புரிந்தார்கள். பிறகு (அதைக் கிணற்றுக்குள் கொட்டிவிட்டு), ‘அதைக் கொஞ்ச நேரம் அப்படியேவிட்டு விடுங்கள்’ என்று கூறினார்கள். பின்பு (நபித்தோழர்கள்) தாங்களும் தங்கள் வாகனப் பிராணிகளும் தாகம் தணித்துக் கொண்டுப் புறப்பட்டுச் சென்றார்கள்.

அத்தியாயம்: 64


أَنَّهُمْ كَانُوا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الحُدَيْبِيَةِ أَلْفًا وَأَرْبَعَ مِائَةٍ أَوْ أَكْثَرَ، فَنَزَلُوا عَلَى بِئْرٍ فَنَزَحُوهَا، فَأَتَوْا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَتَى البِئْرَ وَقَعَدَ عَلَى شَفِيرِهَا، ثُمَّ قَالَ: «ائْتُونِي بِدَلْوٍ مِنْ مَائِهَا»، فَأُتِيَ بِهِ، فَبَصَقَ فَدَعَا، ثُمَّ قَالَ: «دَعُوهَا سَاعَةً». فَأَرْوَوْا أَنْفُسَهُمْ وَرِكَابَهُمْ حَتَّى ارْتَحَلُوا


Bukhari-4150

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்: 36

ஹுதைபியா போர்.

உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (அல்குர்ஆன்: 48:18)

4150. பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(“நிச்சயமாக நாம் உங்களுக்கு ஒரு மகத்தான வெற்றியளித்துள்ளோம்” எனும் 48:1ஆம் வசனத்திலுள்ள) “வெற்றி’ என்பது மக்கா வெற்றி(யைத்தான் குறிக்கிறது) என்று நீங்கள் கருதுகிறீர்கள். மக்கா வெற்றியும் வெற்றியாகத்தானிருந்தது. (ஆனால்) நாங்கள் ஹுதைபியா சமாதான ஒப்பந்த நாளில் (நடைபெற்ற) “ரிள்வான்’ உறுதிப் பிரமாணத்தையே பெரும் வெற்றியாகக் கருதுகிறோம்.

(அன்று) நாங்கள் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன்) ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம். ஹுதைபியா என்பது ஒரு கிணறாகும். அந்தக் கிணற்றிலிருந்து ஒரு துளி நீரைக்கூட விட்டுவிடாமல் நாங்கள் (தண்ணீரை) இறைத்துவிட்டோம். இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது அங்கு அவர்கள் வந்து அந்தக் கிணற்றின் ஓரத்தில் அமர்ந்துகொண்டார்கள். பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவரும்படி கூறினார்கள். (அந்தத் தண்ணீரால்) அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். பின்னர் வாய் கொப்புளித்துவிட்டுப் பிரார்த்தித்தார்கள். பிறகு (உளூ செய்து வாய் கொப்புளித்த)

تَعُدُّونَ أَنْتُمُ الفَتْحَ فَتْحَ مَكَّةَ، وَقَدْ كَانَ فَتْحُ مَكَّةَ فَتْحًا، وَنَحْنُ نَعُدُّ الفَتْحَ بَيْعَةَ الرِّضْوَانِ يَوْمَ الحُدَيْبِيَةِ، كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعَ عَشْرَةَ مِائَةً، وَالحُدَيْبِيَةُ بِئْرٌ، فَنَزَحْنَاهَا فَلَمْ نَتْرُكْ فِيهَا قَطْرَةً، فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَاهَا، فَجَلَسَ عَلَى شَفِيرِهَا ثُمَّ «دَعَا بِإِنَاءٍ مِنْ مَاءٍ فَتَوَضَّأَ، ثُمَّ مَضْمَضَ وَدَعَا ثُمَّ صَبَّهُ فِيهَا، فَتَرَكْنَاهَا غَيْرَ بَعِيدٍ، ثُمَّ إِنَّهَا أَصْدَرَتْنَا مَا شِئْنَا نَحْنُ وَرِكَابَنَا»


Bukhari-4149

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4149. அபூ கதாதா(ரலி) அறிவித்தார்
ஹுதைபிய்யா ஆண்டில் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் சென்றோம். அப்போது நபி(ஸல்) அவர்களின் தோழர்கள் ‘இஹ்ராம்’ உடையணிந்திருந்தார்கள். நான் (மட்டும்) அணியவில்லை.
Book :64


انْطَلَقْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الحُدَيْبِيَةِ، فَأَحْرَمَ أَصْحَابُهُ وَلَمْ أُحْرِمْ


Bukhari-4148

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4148. கத்தாதா(ரஹ்) அறிவித்தார்
அனஸ்(ரலி), ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் வாழ்நாளில்) நான்கு உம்ராக்கள் செய்தார்கள். அவற்றில் தம் ஹஜ்ஜின்போது செய்த உம்ராவைத் தவிர (மற்ற) அனைத்தையும் ‘துல் கஅதா’ மாதத்திலேயே செய்தார்கள்’ என்று என்னிடம் சொல்லிவிட்டு, அந்த நான்கையும் கூறினார்கள்:
1. ஹுதைபிய்யா நிகழ்வின்போது செய்த உம்ரா. இதை (ஹிஜ்ரி 6-ம் ஆண்டு) துல்கஅதா மாதத்தில் செய்தார்கள்.
2. அதற்கு அடுத்த (ஹிஜ்ரி 7-ம்) ஆண்டு துல்கஅதாவில் செய்த உம்ரா.
3. ஹுனைன் போர்ச் செல்வங்களைப் பங்கிட்டுக் கொடுத்த ‘ஜிஃரானா’ என்னுமிடத்திலிருந்து சென்று (ஹிஜ்ரி 8-ம் ஆண்டு) துல்கஅதாவில் செய்த உம்ரா.
4. தம் ஹஜ்ஜுடன் (ஹிஜ்ரி 10-ம் ஆண்டு) செய்த உம்ரா.
Book :64


اعْتَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعَ عُمَرٍ، كُلَّهُنَّ فِي ذِي القَعْدَةِ، إِلَّا الَّتِي كَانَتْ مَعَ حَجَّتِهِ: عُمْرَةً مِنَ الحُدَيْبِيَةِ فِي ذِي القَعْدَةِ، وَعُمْرَةً مِنَ العَامِ المُقْبِلِ فِي ذِي القَعْدَةِ، وَعُمْرَةً مِنَ الجِعْرَانَةِ، حَيْثُ قَسَمَ غَنَائِمَ حُنَيْنٍ فِي ذِي القَعْدَةِ، وَعُمْرَةً مَعَ حَجَّتِهِ


Bukhari-4147

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 36 ஹுதைபிய்யாப் போரும், (நபியே!) இறை நம்பிக்கையாளர்கள் அந்த மரத்தடியில் உங்களிடம் உறுதிப் பிரமாணம் செய்த போது மெய்யாகவே அல்லாஹ் அவர்கள் குறித்து திருப்தி கொண்டான் என்னும் (48:18-வது) இறைவசனமும்.221
4147. ஸைத் இப்னு காலித்(ரலி) அறிவித்தார்
ஹுதைபிய்யா ஆண்டில் நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றோம். ஓரிரவு எங்களுக்கு மழைபெய்தது. (அன்று காலை) நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு ஸுப்ஹு தொழுகை நடத்தினார்கள். பிறகு எங்களை நோக்கி நேராகத் திரும்பி, ‘உங்களுடைய இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா?’ என்று கேட்டார்கள். ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்’ என்று நாங்கள் கூறினோம்.
அப்போது, ‘என்னை விசுவாசிக்கக் கூடியவர்களும் என்னை நிராகரிக்கக் கூடியவர்களுமாக என் அடியார்கள் (இரண்டு பிரிவினராக) உள்ளனர். ‘அல்லாஹ்வின் கருணையினாலும், அல்லாஹ் அளித்த வாழ்வாதாரத்தாலும், அவனுடைய அருட்கொடையினாலும் நமக்கு மழை பொழிந்தது’ என்று கூறுபவர்கள் என்னை நம்பி நட்சத்திரத்திரத்தை மறுத்தவர்களாவர். ‘இந்த நட்சத்திரத்தினால் தான் எங்களுக்கு மழை பொழிந்தது’ எனக் கூறுபவர்கள் என்னை நிராகரித்து நட்சத்திரத்தை விசுவாசித்தவர்களாவர்’ என்று அல்லாஹ் சொன்னான்’ என்று

خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الحُدَيْبِيَةِ، فَأَصَابَنَا مَطَرٌ ذَاتَ لَيْلَةٍ، فَصَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الصُّبْحَ، ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا فَقَالَ: «أَتَدْرُونَ مَاذَا قَالَ رَبُّكُمْ؟». قُلْنَا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، فَقَالَ: ” قَالَ اللَّهُ: أَصْبَحَ مِنْ عِبَادِي مُؤْمِنٌ بِي وَكَافِرٌ بِي، فَأَمَّا مَنْ قَالَ: مُطِرْنَا بِرَحْمَةِ اللَّهِ وَبِرِزْقِ اللَّهِ وَبِفَضْلِ اللَّهِ، فَهُوَ مُؤْمِنٌ بِي، كَافِرٌ بِالكَوْكَبِ، وَأَمَّا مَنْ قَالَ: مُطِرْنَا بِنَجْمِ كَذَا، فَهُوَ مُؤْمِنٌ بِالكَوْكَبِ كَافِرٌ بِي


Next Page » « Previous Page