Author: Farook

Bukhari-3931

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3931. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஈதுல் பித்ர்… அல்லது ஈதுல் அள்ஹா… (பெரு) நாளில் நபி(ஸல்) அவர்கள் என்னிடம் அமர்ந்திருந்தபோது அபூ பக்ர்(ரலி) என்னிடம் வந்தார்கள். அப்போது ‘புஆஸ்’ போர் நாளில் அன்சாரிகள் பாடிய பாடல்களை (சலங்கையில்லா கஞ்சிராவை அடித்துக் கொண்டு) பாடியபடி இரண்டு பாடகிகள் என்னருகே இருந்தனர். அபூ பக்ர்(ரலி), ‘ஷைத்தானின் (இசைக்) கருவி’ என்று இருமுறை கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அவ்விருவரையும்விட்டுவிடுங்கள், அபூ பக்ரே! ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பண்டிகை (நாள்) ஒன்று உண்டு. நம்முடைய பண்டிகை (நாள்) இந்த நாள் தான்’ என்று கூறினார்கள்.
Book :63


أَنَّ أَبَا بَكْرٍ، دَخَلَ عَلَيْهَا وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَهَا يَوْمَ فِطْرٍ أَوْ أَضْحًى، وَعِنْدَهَا قَيْنَتَانِ تُغَنِّيَانِ بِمَا تَقَاذَفَتْ الأَنْصَارُ يَوْمَ بُعَاثٍ، فَقَالَ أَبُو بَكْرٍ: مِزْمَارُ الشَّيْطَانِ؟ مَرَّتَيْنِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَعْهُمَا يَا أَبَا بَكْرٍ، إِنَّ لِكُلِّ قَوْمٍ عِيدًا، وَإِنَّ عِيدَنَا هَذَا اليَوْمُ»


Bukhari-3930

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3930. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
‘புஆஸ்’ போர் நாள், தன் தூதருக்காக அல்லாஹ் (சாதகமான சூழ்நிலையை உருவாக்கும் வகையில்) முன் கூட்டியே நிகழச் செய்த நாளாக அமைந்தது. (அந்தப் போரின் காரணத்தால்) மதீனாவாசிகளின் கூட்டமைப்பு (குலைந்து) பிளவுபட்டிருந்த நிலையிலும், அவர்களில் முக்கியப் பிரமுகர்கள் கொல்லப்பட்டு விட்டிருந்த நிலையிலும் அவர்கள் இஸ்லாத்தில் இணைய ஏதுவான நிலை உருவாகியிருந்தபோது தான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மதீனா வந்தார்கள்.
Book :63


«كَانَ يَوْمُ بُعَاثٍ يَوْمًا قَدَّمَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ لِرَسُولِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المَدِينَةَ، وَقَدِ افْتَرَقَ مَلَؤُهُمْ، وَقُتِلَتْ سَرَاتُهُمْ، فِي دُخُولِهِمْ فِي الإِسْلاَمِ»


Bukhari-3929

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3929. காரிஜா இப்னு ஸைத் இப்னி ஸாபித்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்திருந்த அன்சாரிப் பெண்களில் ஒருவரான (என் தாயார்) உம்முல் அலா(ரலி) என்னிடம் தெரிவித்தார்கள்.
(மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து வந்த) முஹாஜிர்களின் தங்குமிடத்தி(னை முடிவு செய்வதற்)காக அன்சாரிகள் சீட்டுக் குலுக்கிப் போட்டபோது, உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) அவர்களின் பெயர் எங்கள் பங்கில் வந்தது. எங்களிடம் (வந்து தங்கிய) உஸ்மான்(ரலி) நோய் வாய்ப்பட்டார். எனவே, அவருக்கு நான் நோய்க் காலப் பணிவிடைகள் செய்து வந்தேன். இறுதியில் அவர் இறந்தும்விட்டார். அவருக்கு அவரின் துணிகளால் கஃபனிட்டோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். நான் (இறந்த உஸ்மானை நோக்கி) ‘அபூ சாயிபே! அல்லாஹ்வின் கருணை உங்களின் மீது உண்டாகட்டும்! அல்லாஹ் உங்களைக் கண்ணியப்படுத்திவிட்டான் என்பதற்கு நான் சாட்சியம் பகர்கிறேன்’ என்று கூறினேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் அவரை கண்ணியப்படுத்திவிட்டான் என்று உனக்கெப்படித் தெரியும்?’ என்று கேட்டார்கள். நான், ‘எனக்குத் தெரியாது. என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும், இறைத்தூதர் அவர்களே! (அல்லாஹ் இவரை கண்ணியப்படுத்தாவிட்டால் பின்) யாரைத் தான் (கண்ணியப்படுத்துவான்)’ என்று

أَنَّ عُثْمَانَ بْنَ مَظْعُونٍ طَارَ لَهُمْ فِي السُّكْنَى، حِينَ اقْتَرَعَتِ الأَنْصَارُ عَلَى سُكْنَى المُهَاجِرِينَ، قَالَتْ أُمُّ العَلاَءِ: فَاشْتَكَى عُثْمَانُ عِنْدَنَا فَمَرَّضْتُهُ حَتَّى تُوُفِّيَ، وَجَعَلْنَاهُ فِي أَثْوَابِهِ، فَدَخَلَ عَلَيْنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: رَحْمَةُ اللَّهِ عَلَيْكَ أَبَا السَّائِبِ، شَهَادَتِي عَلَيْكَ لَقَدْ أَكْرَمَكَ اللَّهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَمَا يُدْرِيكِ أَنَّ اللَّهَ أَكْرَمَهُ»، قَالَتْ: قُلْتُ: لاَ أَدْرِي، بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ، فَمَنْ؟ قَالَ: «أَمَّا هُوَ فَقَدْ جَاءَهُ وَاللَّهِ اليَقِينُ، وَاللَّهِ إِنِّي لَأَرْجُو لَهُ الخَيْرَ، وَمَا أَدْرِي وَاللَّهِ وَأَنَا رَسُولُ اللَّهِ مَا يُفْعَلُ بِي»، قَالَتْ: فَوَاللَّهِ لاَ أُزَكِّي أَحَدًا بَعْدَهُ، قَالَتْ: فَأَحْزَنَنِي ذَلِكَ، فَنِمْتُ، وفَرِيتُ لِعُثْمَانَ بْنِ مَظْعُونٍ عَيْنًا تَجْرِي، فَجِئْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرْتُهُ، فَقَالَ: «ذَلِكِ عَمَلُهُ»


Bukhari-3928

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3928. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
உமர்(ரலி) செய்த இறுதி ஹஜ்ஜின்போது அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) ‘மினா’ பெரு வெளியில் தங்கியிருந்த சமயம் தம் (தங்குமிடத்தில் இருந்த) வீட்டாரை நோக்கித் திரும்பினார்கள். அப்போது அவர்கள் என்னைக் கண்டு, ‘(நான் உமர் – ரலி – அவர்களிடம்) விசுவாசிகளின் தலைவரே! ஹஜ்ஜுப் பருவத்தில் (நன் மக்களுடன்) தரம் தாழ்ந்த மக்களும், (வாய்க்கு வந்தபடி பேசி) குழப்பம் செய்யும் மக்களும் ஒன்று கூடுவர். (எனவே,) தாங்கள் மதீனா சென்றடையும் வரையிலும், (அங்குள்ள) மார்க்க அறிஞர்கள், பிரமுகர்கள், ஆலோசகர்களைப் போய்ச் சேரும் வரையிலும் தாங்கள் நிதானிக்க வேண்டுமென்று கருதுகிறேன். ஏனெனில் மதீனா, ஹிஜ்ரத் பிரதேசமும், நபிவழி (நடைமுறைப்படுத்தப்படும்) நாடும், பாதுகாப்புமிக்க நாடும் ஆகும்’ என்று கூறினேன். அதற்கு உமர்(ரலி), ‘இனி, நான் மதீனாவில் (உரை நிகழ்த்த) நிற்கப் போகும் முதல் கூட்டத்திலேயே (இது குறித்து எச்சரிக்க) உறுதியோடு நிற்பேன்’ என்று கூறினார்கள் எனத் தெரிவித்தார்கள்.
Book :63


أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ رَجَعَ إِلَى أَهْلِهِ وَهُوَ بِمِنًى، فِي آخِرِ حَجَّةٍ حَجَّهَا عُمَرُ فَوَجَدَنِي، فَقَالَ عَبْدُ الرَّحْمَنِ: فَقُلْتُ: يَا أَمِيرَ المُؤْمِنِينَ، إِنَّ المَوْسِمَ يَجْمَعُ رَعَاعَ النَّاسِ وَغَوْغَاءَهُمْ، وَإِنِّي أَرَى أَنْ تُمْهِلَ حَتَّى تَقْدَمَ المَدِينَةَ، فَإِنَّهَا دَارُ الهِجْرَةِ وَالسُّنَّةِ وَالسَّلاَمَةِ، وَتَخْلُصَ لِأَهْلِ الفِقْهِ وَأَشْرَافِ النَّاسِ وَذَوِي رَأْيِهِمْ، قَالَ عُمَرُ: «لَأَقُومَنَّ فِي أَوَّلِ مَقَامٍ أَقُومُهُ بِالْمَدِينَةِ»


Bukhari-3927

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3927. உபைதுல்லாஹ் இப்னு அதீ இப்னி கியார்(ரஹ்) அறிவித்தார்.
நான் உஸ்மான்(ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்கள் ஏகத்துவ உறுதிமொழி கூறி (இறைவனைப் புகழ்ந்து)விட்டு, ‘நிற்க, அல்லாஹ் முஹம்மத்(ஸல்) அவர்களை சத்திய(மார்க்க)த்துடன் அனுப்பினான். நான் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் அழைப்பை ஏற்று முஹம்மத்(ஸல்) அவர்கள் எ(ந்த வேதத்)தைக் கொண்டு அனுப்பப்பட்டார்களோ அதை நான் நம்பி ஏற்றுக் கொண்டேன். பிறகு, (மக்காவைத் துறந்து அபிசீனியாவுக்கும் அடுத்து (மதீனாவுக்குமாக) இரண்டு ஹிஜ்ரத்துகள் செய்தேன். மேலும், நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் மருமகனாக இருந்தேன். அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்து (உறுதிமொழி) கொடுத்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களை அல்லாஹ் மரணிக்கச் செய்யும் வரை அவர்களுக்கு நான் மாறு செய்யவுமில்லை; மோசடி செய்யவுமில்லை’ என்று கூறினார்கள்.
‘ஸுஹ்ரீ(ரஹ்) எனக்கு இதையே அறிவித்தார்கள்’ என்று இஸ்ஹாக் அல் கல்பீ(ரஹ்) என்னும் அறிவிப்பாளர் கூறுகிறார்கள்.
Book :63


دَخَلْتُ عَلَى عُثْمَانَ فَتَشَهَّدَ ثُمَّ قَالَ: «أَمَّا بَعْدُ، فَإِنَّ اللَّهَ بَعَثَ مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالحَقِّ، وَكُنْتُ مِمَّنِ اسْتَجَابَ لِلَّهِ وَلِرَسُولِهِ، وَآمَنَ بِمَا بُعِثَ بِهِ مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ هَاجَرْتُ هِجْرَتَيْنِ، وَنِلْتُ صِهْرَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبَايَعْتُهُ، فَوَاللَّهِ مَا عَصَيْتُهُ وَلاَ غَشَشْتُهُ، حَتَّى تَوَفَّاهُ اللَّهُ» تَابَعَهُ إِسْحَاقُ الكَلْبِيُّ، حَدَّثَنِي الزُّهْرِيُّ مِثْلَهُ


Bukhari-3926

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3926. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்தபோது அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் பிலால் (ரலி) அவர்களுக்கும் காய்ச்சல் கண்டிருந்தது. அவ்விருவரிடமும் நான் சென்று, ‘என் தந்தையே! எப்படியிருக்கிறீர்கள்? பிலால் அவர்களே! எப்படியிருக்கிறீர்கள்’ என்று கேட்டேன். அபூபக்ர் அவர்களுக்கு காய்ச்சல் ஏற்படும்போது அவர்கள் பின் வரும் கவிதையைக் கூறுவார்கள்:

காலை வாழ்த்துக் கூறப்பெற்ற நிலையில் ஒவ்வொரு மனிதனும்
தம் குடும்பத்தாரோடு காலைப் பொழுதை அடைகிறான்….(ஆனால்,)
மரணம் – அவன் செருப்பு வாரை விட மிக அருகில் இருக்கிறது (என்பது -அவனுக்குத் தெரிவதில்லை).

பிலால் (ரலி) காய்ச்சல் நீங்கியதும் வேதனைக்குரல் எழுப்பி,

‘இத்கிர்’ (நறுமணப்) புல்லும்
‘ஜலீல்’ (கூரைப்) புல்லும்
என்னைச் சூழ்ந்திருக்க..
(மக்காவின்) பள்ளத்தாக்கில்
ஓர் இராப் பொழுதையேனும்
நான் கழிப்பேனா?…
‘மஜின்னா’ எனும்
(மக்காவின் இனிப்புச்சுனை) நீரை
ஒரு நாள் ஒரு பொழுதாவது
நான் பருகுவேனா…?
(மக்கா நகரின்)
ஷாமா, தஃபீல் மலைகள்
(இனி எப்போதாவது)
எனக்குத் தென்படுமா?…
என்ற கவிதையைக் கூறுவார்கள்.

உடனே, நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, (அவர்களின் நிலையைத்) தெரிவித்தேன்.

لَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المَدِينَةَ، وُعِكَ أَبُو بَكْرٍ، وَبِلاَلٌ، قَالَتْ: فَدَخَلْتُ عَلَيْهِمَا، فَقُلْتُ: يَا أَبَتِ كَيْفَ تَجِدُكَ؟ وَيَا بِلاَلُ كَيْفَ تَجِدُكَ؟ قَالَتْ: فَكَانَ أَبُو بَكْرٍ إِذَا أَخَذَتْهُ الحُمَّى يَقُولُ:
كُلُّ امْرِئٍ مُصَبَّحٌ فِي أَهْلِهِ … وَالمَوْتُ أَدْنَى مِنْ شِرَاكِ نَعْلِهِ
وَكَانَ بِلاَلٌ إِذَا أَقْلَعَ عَنْهُ الحُمَّى يَرْفَعُ عَقِيرَتَهُ وَيَقُولُ:
أَلاَ لَيْتَ شِعْرِي هَلْ أَبِيتَنَّ لَيْلَةً … بِوَادٍ وَحَوْلِي إِذْخِرٌ وَجَلِيلُ
وَهَلْ أَرِدَنْ يَوْمًا مِيَاهَ مَجَنَّةٍ … وَهَلْ يَبْدُوَنْ لِي شَامَةٌ وَطَفِيلُ
قَالَتْ عَائِشَةُ: فَجِئْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرْتُهُ فَقَالَ: «اللَّهُمَّ حَبِّبْ إِلَيْنَا المَدِينَةَ كَحُبِّنَا مَكَّةَ، أَوْ أَشَدَّ وَصَحِّحْهَا وَبَارِكْ لَنَا فِي صَاعِهَا وَمُدِّهَا، وَانْقُلْ حُمَّاهَا فَاجْعَلْهَا بِالْجُحْفَةِ»


Bukhari-3925

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3925. பராஉ இப்னு ஆஸிப் (ரலி) அறிவித்தார்:

எங்களிடம் (மதீனாவுக்கு முஹாஜிராக) முதலில் வருகை தந்தவர்கள் முஸ்அப் இப்னு உமைர் (ரலி) அவர்களும் இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்களும் தாம். இவர்கள் மக்களுக்கு (குர்ஆன்) ஓதக் கற்றுக் கொடுத்து வந்தனர். பிறகு பிலால் (ரலி) அவர்களும், ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்களும், அம்மார் இப்னு யாஸிர் (ரலி) அவர்களும் வருகை தந்தனர். பிறகு உமர்பின் கத்தாப் (ரலி), நபித்தோழர்கள் இருபது பேர் (கொண்ட ஒரு குழு) உடன் வந்தார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களால்(அவர்களது வருகையால்) மதீனாவாசிகள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்று வேறெதற்காகவும் அவர்கள் மகிழ்ச்சியடைந்ததை நான் பார்க்கவில்லை. எந்த அளவுக்கென்றால் (மதீனாவின்) அடிமைப்பெண்கள், ‘இறைத்தூதர் வந்துவிட்டார்கள்’ என்று பாடி (மகிழலா)னார்கள். ‘ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா’ என்னும் (87-வது) அத்தியாயத்தை, குர்ஆனின் (மற்ற) விரிவான (முஃபஸ்ஸல்) அத்தியாயங்கள் சிலவற்றுடன் நான் (மனப்பாடமாக) ஓதும் வரை நபி (ஸல்) அவர்கள் (மதீனா) வருகை தரவில்லை.

அத்தியாயம்: 63


أَوَّلُ مَنْ قَدِمَ عَلَيْنَا مُصْعَبُ بْنُ عُمَيْرٍ، وَابْنُ أُمِّ مَكْتُومٍ وَكَانَا يُقْرِئَانِ النَّاسَ، فَقَدِمَ بِلاَلٌ وَسَعْدٌ وَعَمَّارُ بْنُ يَاسِرٍ، ثُمَّ قَدِمَ عُمَرُ بْنُ الخَطَّابِ فِي عِشْرِينَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ ” قَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَمَا رَأَيْتُ أَهْلَ المَدِينَةِ فَرِحُوا بِشَيْءٍ فَرَحَهُمْ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَتَّى جَعَلَ الإِمَاءُ يَقُلْنَ: قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَمَا قَدِمَ حَتَّى قَرَأْتُ: سَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى فِي سُوَرٍ مِنَ المُفَصَّلِ


Bukhari-3924

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3924. பராஉ(ரலி) அறிவித்தார்.
எங்களிடம் (மதீனாவுக்கு முஹாஜிராக) முதன் முதலில் வருகை தந்தவர்கள் முஸ்அப் இப்னு உமைர்(ரலி) அவர்களும், இப்னு உம்மி மக்தூம்(ரலி) அவர்களும் தாம். பிறகு எங்களிடம் அம்மார் இப்னு யாசிர்(ரலி) அவர்களும், பிலால்(ரலி) அவர்களும் வந்தனர்.
Book :63


«أَوَّلُ مَنْ قَدِمَ عَلَيْنَا مُصْعَبُ بْنُ عُمَيْرٍ، وَابْنُ أُمِّ مَكْتُومٍ، ثُمَّ قَدِمَ عَلَيْنَا عَمَّارُ بْنُ يَاسِرٍ، وَبِلاَلٌ رَضِيَ اللَّهُ عَنْهُمْ»


Bukhari-3923

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3923. அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
கிராமவாசி ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ஹிஜ்ரத் குறித்துக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘உனக்கு என்ன கேடு?’ (எனச் செல்லமாகக் கேட்டுவிட்டு) நிச்சயமாக அதன் நிலை மிகவும் கடினமானது. உன்னிடம் ஒட்டகங்கள் இருக்கின்றனவா?’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம்’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘அவற்றிற்குரிய ஸகாத் கொடுத்து வருகிறாயா?’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம்’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘அவற்றிலிருந்து (இலவசமாகப் பால் கறந்து கொள்ள, ஏழைகளுக்கு) இரவல் கொடுக்கிறாயா?’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம்’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘அவை (நீர் நிலைகளுக்கு) நீரருந்தச் செல்லும் (முறை வரும்) நாளில் அவற்றின் பாலைக் கறந்து (ஏழைகளுக்குக்) கொடுக்கிறாயா?’ என்று கேட்க அவர், ‘ஆம்’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால், நீ கடல்களுக்கு அப்பால் சென்று கூட வேலை செய்(து வாழலாம்..) அல்லாஹ் உன் நற் செயல்(களின் பிரதிபலன்)களிலிருந்து எதையும் குறைக்க மாட்டான்’ என்று கூறினார்கள்.
இரண்டு அறிவிப்பாளர் தொடர் வழியாக இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
Book :63


جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُ عَنِ الهِجْرَةِ، فَقَالَ: «وَيْحَكَ إِنَّ الهِجْرَةَ شَأْنُهَا شَدِيدٌ، فَهَلْ لَكَ مِنْ إِبِلٍ؟» قَالَ: نَعَمْ، قَالَ: «فَتُعْطِي صَدَقَتَهَا»، قَالَ: نَعَمْ، قَالَ: «فَهَلْ تَمْنَحُ مِنْهَا؟» قَالَ: نَعَمْ، قَالَ: «فَتَحْلُبُهَا يَوْمَ وُرُودِهَا»، قَالَ: نَعَمْ، قَالَ: «فَاعْمَلْ مِنْ وَرَاءِ البِحَارِ، فَإِنَّ اللَّهَ لَنْ يَتِرَكَ مِنْ عَمَلِكَ شَيْئًا»


Bukhari-3922

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3922. அபூ பக்ர்(ரலி) அறிவித்தார்.
(ஹிஜ்ரத் பணயித்தின்போது வழியில்) நபி(ஸல்) அவர்களுடன் நான் (‘ஸவ்ர்’ மலைக்குகையில் (தங்கி) இருந்தேன். நான் தலையை உயர்த்தியபோது (எங்களைத் தேடி வந்த) கூட்டத்தாரின் பாதங்கள் என் (தலைக்கு) மேலே தெரிந்தன. நான், ‘இறைத்தூதர் அவர்களே! அவர்களில் எவராவது தம் பார்வையைத் தாழ்த்தி (குகைக்குள் உற்று நோக்கி)னால் நம்பை; பார்த்து விடுவாரே! (இப்போது என்ன செய்வது?’ என்று சொன்னேன். (நபி(ஸல்) அவர்கள், ‘அமைதியாயிருங்கள்; அபூ பக்ரே! (நாம்) இருவர்; நம்முடன் அல்லாஹ் மூன்றாமவன். (அவன் நம்மைக் காப்பாற்றுவான்)’ என்று கூறினார்கள்.
Book :63


كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الغَارِ، فَرَفَعْتُ رَأْسِي فَإِذَا أَنَا بِأَقْدَامِ القَوْمِ، فَقُلْتُ: يَا نَبِيَّ اللَّهِ، لَوْ أَنَّ بَعْضَهُمْ طَأْطَأَ بَصَرَهُ رَآنَا، قَالَ: «اسْكُتْ يَا أَبَا بَكْرٍ، اثْنَانِ اللَّهُ ثَالِثُهُمَا»


Next Page » « Previous Page