Author: Farook

Bukhari-3811

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 18

அபூதல்ஹா – ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறப்புகள்.

3811. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஹுதுப் போரின்போது நபி (ஸல்) அவர்களை(த் தனியே)விட்டுவிட்டு மக்கள் தோற்று (ஓடி)விட்டனர். அபூதல்ஹா (ரலி) நபி (ஸல்) அவர்களைத் தம் தோல் கேடயத்தால் மறைத்துக் கொண்டு பாதுகாத்தபடி நின்றார்கள்.

மேலும், அபூதல்ஹா (ரலி) வில்லின் நாணை நன்கு இழுத்து வேகமாக அம்பெய்யக் கூடியவர்களாக இருந்தார்கள். (அப்படி வேகமாக இழுத்து அம்பெய்கையில்) இரண்டு அல்லது மூன்று விற்களை அவர்கள் அன்று உடைத்து விடுவார்கள். எவரேனும் ஒருவர் அம்புக் கூட்டுடன் செல்வதைக் கண்டால் நபி (ஸல்) அவர்கள், ‘அதை அபூதல்ஹாவிடம் போடு’ என்று சொல்வார்கள். அந்த நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் மேலேயிருந்து (தலையை உயர்த்தி) மக்களை எட்டிப் பார்க்க, அபூதல்ஹா அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும். எட்டிப் பார்க்காதீர்கள். எதிரிகளின் அம்புகளில் ஏதேனும் ஒன்று தங்களைத் தாக்கி விடலாம். (தாங்கள் எட்டிப் பார்க்காமலிருந்தால் என் மார்பு தங்கள் மார்புக்கு முன்னால் (கேடயம் போன்று உங்களுக்குப் பாதுகாப்பாக) இருக்கும்’ என்று கூறினார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்களின் மகள் ஆயிஷா (ரலி) அவர்களும் (என் தாயார்)

لَمَّا كَانَ يَوْمُ أُحُدٍ انْهَزَمَ النَّاسُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَبُو طَلْحَةَ بَيْنَ يَدَيِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُجَوِّبٌ بِهِ عَلَيْهِ بِحَجَفَةٍ لَهُ، وَكَانَ أَبُو طَلْحَةَ رَجُلًا رَامِيًا شَدِيدَ القِدِّ، يَكْسِرُ يَوْمَئِذٍ قَوْسَيْنِ أَوْ ثَلاَثًا، وَكَانَ الرَّجُلُ يَمُرُّ مَعَهُ الجَعْبَةُ مِنَ النَّبْلِ، فَيَقُولُ: «انْشُرْهَا لِأَبِي طَلْحَةَ». فَأَشْرَفَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْظُرُ إِلَى القَوْمِ، فَيَقُولُ أَبُو طَلْحَةَ: يَا نَبِيَّ اللَّهِ، بِأَبِي أَنْتَ وَأُمِّي، لاَ تُشْرِفْ يُصِيبُكَ سَهْمٌ مِنْ سِهَامِ القَوْمِ، نَحْرِي دُونَ نَحْرِكَ، وَلَقَدْ رَأَيْتُ عَائِشَةَ بِنْتَ أَبِي بَكْرٍ، وَأُمَّ سُلَيْمٍ وَإِنَّهُمَا لَمُشَمِّرَتَانِ، أَرَى خَدَمَ سُوقِهِمَا، تُنْقِزَانِ القِرَبَ عَلَى مُتُونِهِمَا، تُفْرِغَانِهِ فِي أَفْوَاهِ القَوْمِ، ثُمَّ تَرْجِعَانِ، فَتَمْلَآَنِهَا، ثُمَّ تَجِيئَانِ فَتُفْرِغَانِهِ فِي أَفْوَاهِ القَوْمِ، وَلَقَدْ وَقَعَ السَّيْفُ مِنْ يَدَيْ أَبِي طَلْحَةَ إِمَّا مَرَّتَيْنِ وَإِمَّا ثَلاَثًا


Bukhari-3810

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 17 ஸைத் பின் ஸாபித்-ரலியல்லாஹு அன்ஹு- அவர்களின் சிறப்புகள்.46
3810. கதாதா(ரஹ்) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் நான்கு பேர் (கொண்ட குழுவினர்) குர்ஆனை (மனனம் செய்து) திரட்டினார்கள். அவர்கள் அனைவருமே அன்சாரிகள் ஆவர். 1. உபை இப்னு கஅப். 2. முஆத் இப்னு ஜபல். 3. அபூ ஸைத். 4. ஸைத் இப்னு ஸாபித்(ரலி) ஆகியோர் தாம் அவர்கள்’ என்று அனஸ்(ரலி) கூறினார். நான் அனஸ்(ரலி) அவர்களிடம், ‘அபூ ஸைத் என்பவர் யார்?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘என் தந்தையின் சகோதரர்களில் ஒருவர்’ என்று பதிலளித்தார்கள்.
Book : 63


جَمَعَ القُرْآنَ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعَةٌ، كُلُّهُمْ مِنَ الأَنْصَارِ: أُبَيٌّ، وَمُعَاذُ بْنُ جَبَلٍ، وَأَبُو زَيْدٍ، وَزَيْدُ بْنُ ثَابِتٍ ” قُلْتُ لِأَنَسٍ: مَنْ أَبُو زَيْدٍ؟ قَالَ: أَحَدُ عُمُومَتِي


Bukhari-3809

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3809. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களிடம் அல்லாஹ் உங்களுக்கு, ‘வேதம் அருளப்பட்டவர்களிலும் இணைவைப்பவர்களிலும் உள்ள இறை நிராகரிப்பாளர்கள் தெளிவான சான்று தங்களிடம் வரும் வரை தங்களின் நிராகரிப்பிலிருந்து விலகிக் கொள்வோராய் இருக்கவில்லை..’ என்றும் (திருக்குர்ஆனின் 98-ம்) அத்தியாயத்தை ஓதிக் காட்டும்படி எனக்குக் கட்டளையிட்டான்’ என்று கூறினார்கள். அதற்கு உபை இப்னு கஅப்(ரலி), ‘என் பெயரைக் குறிப்பிட்டா. (அப்படிச்) சொன்னான்?’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள். அதைக் கேட்டு உபை இப்னு கஅப் அவர்கள் (ஆனந்தம் மேலிட்டு) அழுதார்கள்.
Book :63


قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأُبَيٍّ: ” إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ {لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الكِتَابِ} [البينة: 1] قَالَ: وَسَمَّانِي؟ قَالَ: «نَعَمْ» فَبَكَى


Bukhari-3808

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 16 உபை பின் கஅப் -ரலியல்லாஹு அன்ஹு- அவர்களின் சிறப்புகள்.44
3808. மஸ்ரூக்(ரஹ்) அறிவித்தார்.
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்களிடம் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) குறித்துக் கூறப்பட்டது. அப்போது அவர்கள் கூறினார்கள்: அவர் நான் நேசித்துக கொண்டேயிருக்கும் ஒருவர். (ஏனெனில்,) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், அபூ ஹுதைஃபாவின் (முன்னாள்) அடிமை சாலிம், முஆத் இப்னு ஜபல், உபை இப்னு கஅப் ஆகிய நான்கு பேரிடமிருந்து குர்ஆனை (ஓதும் முறையை) எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்ல கேட்டேன். நபி(ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அவர்களையே முதலில் குறிப்பிட்டார்கள்.
Book : 63


ذُكِرَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ عِنْدَ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، فَقَالَ: ذَاكَ رَجُلٌ لاَ أَزَالُ أُحِبُّهُ، سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «خُذُوا القُرْآنَ مِنْ أَرْبَعَةٍ مِنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ – فَبَدَأَ بِهِ -، وَسَالِمٍ، مَوْلَى أَبِي حُذَيْفَةَ، وَمُعَاذِ بْنِ جَبَلٍ، وَأُبَيِّ بْنِ كَعْبٍ»


Bukhari-3807

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 15 சஅத் பின் உபாதா -ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறப்பு.41 (சஅத் -ரலி- அவர்களைப் பற்றி) அவர்கள் அதற்கு முன் நல்ல மனிதராக இருந்தார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்னார்கள்.42
3807. அனஸ்(ரலி) அறிவித்தார்.
‘அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்தது. பனூ நஜ்ஜார் குடும்பம் ஆகும். பிறகு பனூ அப்தில் அஷ்ஹல் குடும்பம் ஆகும். பிறகு பனூல் ஹாரிஸ் இப்னு கஸ்ரஜ் குடும்பம் ஆகும். பிறகு பனூ சாஇதா குடும்பம் ஆகும். அன்சாரி கிளைக் குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் நன்மை உண்டு’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ உசைத்(ரலி) அறிவித்தார்.
அப்போது ஸஅத் இப்னு உபாதா(ரலி) இஸ்லாத்தில் செல்வாக்கு உடையவர்களாக அன்னார் இருந்தார்கள். ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நம்மை விட (மற்ற குடும்பங்களை) சிறப்புக்குரியவர்களாக ஆக்கிவிட்டதை நான் பார்க்கிறேன்’ என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், ‘உங்களை நபி(ஸல்) அவர்கள் நிறைய மக்களை விடச் சிறப்பித்துக் கூறினார்கள்’ என்று சொல்லப்பட்டது.
Book : 63


«خَيْرُ دُورِ الأَنْصَارِ، بَنُو النَّجَّارِ، ثُمَّ بَنُو عَبْدِ الأَشْهَلِ، ثُمَّ بَنُو الحَارِثِ بْنِ الخَزْرَجِ، ثُمَّ بَنُو سَاعِدَةَ وَفِي كُلِّ دُورِ الأَنْصَارِ خَيْرٌ» فَقَالَ سَعْدُ بْنُ عُبَادَةَ: ” وَكَانَ ذَا قِدَمٍ فِي الإِسْلاَمِ: أَرَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ فَضَّلَ عَلَيْنَا، فَقِيلَ لَهُ: قَدْ فَضَّلَكُمْ عَلَى نَاسٍ كَثِيرٍ


Bukhari-3806

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 14 முஆத் பின் ஜபல் -ரலியல்லாஹு அன்ஹு -அவர்களின் சிறப்புகள்.39
3806. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இப்னு மஸ்வூத்(ரலி), அபூ ஹுதைஃபாவின் (முன்னாள்) அடிமையான சாலிம், உபை இப்னு கஅப் மற்றும் முஆத் இப்னு ஜபல் ஆகிய நான்கு பேரிடமிருந்து குர்ஆனை ஓதக் கற்றுக் கொள்ளுங்கள்.
என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
Book : 63


«اسْتَقْرِئُوا القُرْآنَ مِنْ أَرْبَعَةٍ، مِنْ ابْنِ مَسْعُودٍ، وَسَالِمٍ، مَوْلَى أَبِي حُذَيْفَةَ، وَأُبَيٍّ، وَمُعَاذِ بْنِ جَبَلٍ»


Bukhari-3805

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 13 உசைத் பின் ஹுளைர் (ரலி) மற்றும் அப்பாத் பின் பிஷ்ர் (ரலி) ஆகியோரின் சிறப்பு.37
3805. அனஸ்(ரலி) அறிவித்தார்.
(நபித் தோழர்களில்) இரண்டு மனிதர்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து (விடை பெற்றுக் கொண்டு) இருண்ட ஓர் இரவில் (தம் இல்லங்களுக்குப்) புறப்பட்டார்கள். அப்போது அவ்விருவருக்கும் முன்னால் ஒளி ஒன்று பிரகாசித்தபடி அவர்கள் ஒருவரை ஒருவர் பிரியும் வரை சென்று கொண்டேயிருந்தது. (அவர்கள்) ஒருவரையொருவர் பிரிந்து சென்றவுடன்) அந்த ஒளியும் அவர்களுடன் பிரிந்து சென்றுவிட்டது.
அனஸ்(ரலி) அவர்களிடமிருந்தே ஸாபித்(ரஹ்) வழியாக மஅமர்(ரஹ்) அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பில், ‘இரண்டு மனிதர்கள்’ என்பதற்கு பதிலாக, ‘உசைத் இப்னு ஹுளைர்(ரலி) அவர்களும் அன்சாரிகளில் ஒரு மனிதரும்’ என்று இடம் பெற்றுள்ளது.
அனஸ்(ரலி) அவர்களிடமிருந்தே ஸாபித்(ரஹ்) வழியாக ஹம்மாத்(ரஹ்) அறிவிக்கும் இன்னோர் அறிவிப்பில், ‘உசைத் இப்னு ஹுளைர்(ரலி) அவர்களும் அப்பாத் இப்னு பிஷ்ர்(ரலி) அவர்களும் நபி(ஸல் அவர்களிடம் இருந்தனர். (இருவரும் நபி(ஸல்) அவர்களிடமிருந்து புறப்பட்டு தம் இல்லங்களுக்குச் சென்ற போது)’ என்று இடம் பெற்றுள்ளது.
Book : 63


«أَنَّ رَجُلَيْنِ، خَرَجَا مِنْ عِنْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي لَيْلَةٍ مُظْلِمَةٍ وَإِذَا نُورٌ بَيْنَ أَيْدِيهِمَا، حَتَّى تَفَرَّقَا، فَتَفَرَّقَ النُّورُ مَعَهُمَا» وَقَالَ مَعْمَرٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، إِنَّ أُسَيْدَ بْنَ حُضَيْرٍ، وَرَجُلًا مِنَ الأَنْصَارِ، وَقَالَ حَمَّادٌ، أَخْبَرَنَا ثَابِتٌ، عَنْ أَنَسٍ، كَانَ أُسَيْدُ بْنُ حُضَيْرٍ، وَعَبَّادُ بْنُ بِشْرٍ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-3804

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3804. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
ஸஅத் இப்னு முஆத்(ரலி) அவர்களின் தீர்ப்பை ஏற்பதாக ஒப்புக் கொண்டு (பனூ குறைழா யூத) மக்கள் (கைபரிலுள்ள கோட்டையிலிருந்து) இறங்கி வந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஸஅத் இப்னு முஆத் அவர்களுக்கு ஆளனுப்பிட அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீயிலிருந்து) கழுதையின் மீது (சவாரி செய்தபடி) வந்தார்கள். (நபியவர்கள் தற்காலிமாக அமைத்திருந்த) தொழுமிடத்திறகு அருகே அவர்கள் வந்து சேர்ந்ததும், நபி(ஸல்) அவர்கள், ‘உங்களில் சிறந்தவரை… அல்லது உங்கள் தலைவரை.. நோக்கி எழுந்திரு(த்துச் சென்று அவரை வாகனத்திலிருந்து இறக்கி விடு)ங்கள்’ என்று கூறினார்கள். பிறகு, ‘சஅதே! இவர்கள் உங்கள் தீர்ப்பின் மீது (இசைவு தெரிவித்து) இறங்கி வந்திருக்கிறார்கள். (நீங்கள் என்ன தீர்ப்பு அளிக்கப் போகிறீர்கள்?)’ என்று கேட்டார்கள். ஸஅத்(ரலி), ‘இவர்களில் போரிடும் வலிமையுடையவர்கள் கொல்லப்படவேண்டும் என்றும், இவர்களுடைய பெண்களும் குழந்தைகளும் கைது செய்யப்படவேண்டும் என்றும் நான் இவர்களிடையே தீர்ப்பளிக்கிறேன்’ என்று கூறினார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் தீர்ப்புப் படியே நீங்கள் தீர்ப்பளித்தீர்கள்.’. அல்லது ‘அரசனின் (அல்லாஹ்வின்) தீர்ப்புப்படியே நீங்கள் தீர்ப்பளித்தீர்கள்’ என்று கூறினார்கள்.

أَنَّ أُنَاسًا نَزَلُوا عَلَى حُكْمِ سَعْدِ بْنِ مُعَاذٍ، فَأَرْسَلَ إِلَيْهِ فَجَاءَ عَلَى حِمَارٍ، فَلَمَّا بَلَغَ قَرِيبًا مِنَ المَسْجِدِ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: « قُومُوا إِلَى خَيْرِكُمْ، أَوْ سَيِّدِكُمْ». فَقَالَ: «يَا سَعْدُ إِنَّ هَؤُلاَءِ نَزَلُوا عَلَى حُكْمِكَ». قَالَ: فَإِنِّي أَحْكُمُ فِيهِمْ أَنْ تُقْتَلَ مُقَاتِلَتُهُمْ وَتُسْبَى ذَرَارِيُّهُمْ، قَالَ: ” حَكَمْتَ بِحُكْمِ اللَّهِ، أَوْ: بِحُكْمِ المَلِكِ


Bukhari-3803

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3803. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஸஅத் இப்னு முஆத் அவர்களின் இறப்பிற்காக அர்ஷு இறைசிம்மாசனம் (மகிழ்ச்சியால்) சிலிர்த்தது.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து இதே ஹதீஸ் வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் ஜாபிர் (ரலி) அவர்களிடம், ‘பராஉ (ரலி), ‘ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்களைச் சுமந்து சென்ற (ஜனாஸாப்) பெட்டி தான் அசைந்தது’ என்று இதற்கு விளக்கம் தருகிறார்கள்’ என்று சொன்னதற்கு ஜாபிர் (ரலி), ‘இந்த (அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ்) இரண்டு குடும்பங்களுக்கிடையே குரோதங்கள் இருந்தன. நபி (ஸல்) அவர்கள், ‘ஸஅத் இப்னு முஆத் அவர்களின் இறப்பிற்காகக் கருணையாள(னான இறைவ)னின் சிம்மாசனம் (மகிழ்ச்சியால்) சிலிர்த்தது.’ என்று சொல்ல கேட்டிருக்கிறேன்’ என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம்: 63


«اهْتَزَّ العَرْشُ لِمَوْتِ سَعْدِ بْنِ مُعَاذٍ»،
وَعَنِ الأَعْمَشِ، حَدَّثَنَا أَبُو صَالِحٍ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مِثْلَهُ،
فَقَالَ رَجُلٌ: لِجَابِرٍ، فَإِنَّ البَرَاءَ يَقُولُ: اهْتَزَّ السَّرِيرُ، فَقَالَ: إِنَّهُ كَانَ بَيْنَ هَذَيْنِ الحَيَّيْنِ ضَغَائِنُ، سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «اهْتَزَّ عَرْشُ الرَّحْمَنِ لِمَوْتِ سَعْدِ بْنِ مُعَاذٍ»


Bukhari-3802

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 12

சஅத் பின் முஆத் -ரலியல்லாஹு அன்ஹு- அவர்களின் சிறப்புகள்.31

3802. பராஉ (ரலி) அறிவித்தார்.
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்களுக்கு பட்டு அங்கி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் அதைத் தொட்டுப் பார்த்து அதன் மென்மையைக் கண்டு வியப்படையலானார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘இதன் மென்மையைக் கண்டு நீங்கள் வியக்கிறீர்களா? (சொர்க்கத்தில்) ஸஅத் இப்னு முஆத் அவர்களின் கைக்குட்டைகள் இதை விடச் சிறந்தவை அல்லது இதை விட மென்மையானவை ஆகும்’ என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Book : 63


أُهْدِيَتْ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حُلَّةُ حَرِيرٍ، فَجَعَلَ أَصْحَابُهُ يَمَسُّونَهَا وَيَعْجَبُونَ مِنْ لِينِهَا، فَقَالَ: «أَتَعْجَبُونَ مِنْ لِينِ هَذِهِ؟ لَمَنَادِيلُ سَعْدِ بْنِ مُعَاذٍ خَيْرٌ مِنْهَا، أَوْ أَلْيَنُ» رَوَاهُ قَتَادَةُ، وَالزُّهْرِيُّ، سَمِعَا أَنَسًا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Next Page » « Previous Page