Author: Farook

Bukhari-3719

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3719. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வோர் இறைத்தூதருக்கும் ஒரு பிரத்யேக உதவியாளர் (ஹவாரிய்யு) உண்டு. என் பிரத்யேக உதவியாளர் ஸுபைர் இப்னு அவ்வாம் ஆவார்.
என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
Book :62


«إِنَّ لِكُلِّ نَبِيٍّ حَوَارِيًّا، وَإِنَّ حَوَارِيَّ الزُّبَيْرُ بْنُ العَوَّامِ»


Bukhari-3717

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 13 ஸுபைர் பின் அவ்வாம் -ரலியல்லாஹு அன்ஹு- அவர்களின் சிறப்புகள்.91 (ஸுபைர் – ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் (ஹவாரீ) பிரத்தியேக உதவியாளர் ஆவார் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.92 (ஈசா -அலை- அவர்களின் உதவியாளர் களான) ஹவாரிய்யீன்களுக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டதற்கு,அவர்களின் ஆடைகள் வெண்மையாக இருந்ததே காரணமாகும்.
3717. மர்வான் இப்னி ஹகம் அவர்கள் கூறினார்.
‘சில்லு மூக்கு’ நோய் (பரவலாக ஏற்பட்ட) ஆண்டில் உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களுக்கும் கடுமையான சில்லு மூக்கு இரத்த நோய் ஏற்பட்டது. எந்த அளவிற்கென்றால் அது அவர்களை ஹஜ் செய்ய விடாமல் தடுத்துவிட்டது. அவர்கள் தம் இறுதி விருப்பத்தையும் தெரிவித்து (மரண சாசனம் செய்து)விட்டார்கள். அப்போது குறைஷிகளில் ஒருவர் உஸ்மான்(ரலி) அவர்களிடம் வந்து, ‘(உங்களுக்குப் பின்) பிரதிநிதி ஒருவரை நியமியுங்கள்’ என்று கூறினார். உஸ்மான்(ரலி), ‘மக்கள் (இப்படி நியமிக்கச்) கூறினார்களா?’ என்று கேட்க அம்மனிதர், ‘ஆம்’ என்றார். ‘எவரை நியமிப்பது?’ என்று உஸ்மான்(ரலி) கேட்க, அவர் (பதில் சொல்லாமல்) மெளனமாயிருந்தார். அப்போது இன்னொரு மனிதர் வந்தார். அவர் (என் சகோதரர்) ஹாரிஸ் இப்னு ஹகம்) என்று நான் நினைக்கிறேன் – அவரும், ‘(உஸ்மான்(ரலி) அவர்களே!

أَصَابَ عُثْمَانَ بْنَ عَفَّانَ رُعَافٌ شَدِيدٌ سَنَةَ الرُّعَافِ، حَتَّى حَبَسَهُ عَنِ الحَجِّ، وَأَوْصَى، فَدَخَلَ عَلَيْهِ رَجُلٌ مِنْ قُرَيْشٍ قَالَ: اسْتَخْلِفْ، قَالَ: وَقَالُوهُ؟ قَالَ: نَعَمْ، قَالَ: وَمَنْ؟ فَسَكَتَ، فَدَخَلَ عَلَيْهِ رَجُلٌ آخَرُ – أَحْسِبُهُ الحَارِثَ -، فَقَالَ: اسْتَخْلِفْ، فَقَالَ عُثْمَانُ: وَقَالُوا؟ فَقَالَ: نَعَمْ، قَالَ: وَمَنْ هُوَ؟ فَسَكَتَ، قَالَ: فَلَعَلَّهُمْ قَالُوا الزُّبَيْرَ، قَالَ: نَعَمْ، قَالَ: أَمَا وَالَّذِي نَفْسِي بِيَدِهِ «إِنَّهُ لَخَيْرُهُمْ مَا عَلِمْتُ، وَإِنْ كَانَ لَأَحَبَّهُمْ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Bukhari-3716

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3716. நான் அதைப் பற்றி (நபி (ஸல்) அவர்கள் இரகசியமாகச் சொன்னது என்ன என்று) அவரிடம் கேட்டேன்.89 அதற்கு ஃபாத்திமா, “நபி (ஸல்) அவர்கள் (முதல் முறை) என்னிடம் இரகசியமாகப் பேசியபோது, தமக்கு ஏற்பட்டிருந்த அந்த (நோயின்) வலியி லேயே தாம் இறக்கவிருப்பதாகத் தெரிவித்தார்கள். அதனால் நான் அழுதேன். பிறகு (இரண்டாம் முறை) இரகசியமாகப் பேசியபோது அவர்களுடைய குடும்பத்தாரில் நான்தான் அவர்களைத் தொடர்ந்து (இறைவனிடம்) செல்லப்போகும் முதல் ஆள் என்று சொன்னார்கள். அதனால் நான் (மகிழ்ச்சியோடு) சிரித்தேன்” என்று பதிலளித்தார்கள்.90

அத்தியாயம் : 62


قَالَتْ: فَسَأَلْتُهَا عَنْ ذَلِكَ، فَقَالَتْ: سَارَّنِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَنِي: أَنَّهُ يُقْبَضُ فِي وَجَعِهِ الَّذِي تُوُفِّيَ فِيهِ، فَبَكَيْتُ، ثُمَّ سَارَّنِي فَأَخْبَرَنِي، أَنِّي أَوَّلُ أَهْلِ بَيْتِهِ أَتْبَعُهُ، فَضَحِكْتُ


Bukhari-3715

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3715. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது, தம் மகள் ஃபாத்திமாவை அழைத்து அவரிடம் ஏதோ இரகசியமாகச் சொன்னார் கள். (நபி (ஸல்) அவர்கள் சொன்னதைக் கேட்டு) ஃபாத்திமா அழுதார். மீண்டும் ஃபாத்திமாவை நபி (ஸல்) அவர்கள் அழைத்து எதையோ இரகசியமாகக் கூறினார்கள். (அதைக் கேட்டவுடன்) ஃபாத்திமா சிரித்தார்.

இதன் தொடர்ச்சி பார்க்க: புகாரி-3716 .

அத்தியாயம் : 62

 

 


دَعَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاطِمَةَ ابْنَتَهُ فِي شَكْوَاهُ الَّذِي قُبِضَ فِيهَا ” فَسَارَّهَا بِشَيْءٍ فَبَكَتْ، ثُمَّ دَعَاهَا فَسَارَّهَا فَضَحِكَتْ،


Bukhari-3714

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3714. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். எனவே, அவருக்குக் கோபமூட்டியவர் எனக்குக் கோபமூட்டியவராவார்.
என மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அறிவித்தார்.
Book :62


«فَاطِمَةُ بَضْعَةٌ مِنِّي، فَمَنْ أَغْضَبَهَا أَغْضَبَنِي»


Bukhari-3713

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3713. அபூ பக்ர்(ரலி) கூறினார்கள்.’
முஹம்மத்(ஸல்) அவர்களின் குடும்பத்தார் விஷயத்தில் கவனமாக நடந்து கொள்ளுங்கள். (அவர்களைப் பாதுகாத்து வாருங்கள். அவர்களுக்குத் துன்பம் தராதீர்கள்.)
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :62


«ارْقُبُوا مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَهْلِ بَيْتِهِ»


Bukhari-3712

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3712. அதற்கு அபூ பக்ர்(ரலி), ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘(நபிமார்களான) எங்கள் சொத்துகளுக்கு வாரிசாக யாரும் வரமுடியாது. நாங்கள்விட்டுச் செல்வதெல்லாம் தர்மம் தான்’ என்று கூறினார்கள்; மேலும், முஹம்மதின் குடும்பத்தார் உண்பதெல்லாம் இச்செல்வத்திலிருந்து தான்; அதாவது அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து தான் அதில் தங்கள் உணவுச் செலவை விட அதிகமாக எடுத்துக்கொள்ள அவர்களுக்கு உரிமையில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்களின் தர்மப் பொருள்கள், நபியவர்களின் காலத்தில் எந்த வழி முறைப்படி கையாளப்பட்டு வந்தனவோ அதில் சிறிதையும் நான் மாற்றமாட்டேன். அவற்றின் விஷயத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எப்படி நடந்து கொண்டார்களோ அவ்வாறே நான் நடந்து கொள்வேன்’ என்று கூறினார்கள். உடனே, அலீ அவர்கள், ஏகத்துவ உறுதிமொழியைக் கூறி இறைவனைப் புகழ்ந்துவிட்டு, ‘அபூ பக்ர் அவர்களே! உங்கள் சிறப்பை நாங்கள் அறிந்திருக்கிறோம்’ என்று கூறினார்கள் – மேலும், இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் தமக்கிருக்கும் உறவையும் அவர்களின் உரிமையையும் எடுத்துரைத்தார்கள். உடனே அபூ பக்ர்(ரலி) (தாம் பங்கு தர மறுப்பதற்குக் காரணம் கூறும் விதத்தில்) பேசினார்கள். ‘என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! என் உறவினர்களின் உறவைப் பேணி (அவர்களுடன்

فَقَالَ أَبُو بَكْرٍ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لاَ نُورَثُ مَا تَرَكْنَا فَهُوَ صَدَقَةٌ، إِنَّمَا يَأْكُلُ آلُ مُحَمَّدٍ مِنْ هَذَا المَالِ، يَعْنِي مَالَ اللَّهِ، لَيْسَ لَهُمْ أَنْ يَزِيدُوا عَلَى المَأْكَلِ»، وَإِنِّي وَاللَّهِ لاَ أُغَيِّرُ شَيْئًا مِنْ صَدَقَاتِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّتِي كَانَتْ عَلَيْهَا فِي عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَأَعْمَلَنَّ فِيهَا بِمَا عَمِلَ فِيهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَتَشَهَّدَ عَلِيٌّ ثُمَّ قَالَ: إِنَّا قَدْ عَرَفْنَا يَا أَبَا بَكْرٍ فَضِيلَتَكَ، وَذَكَرَ قَرَابَتَهُمْ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَحَقَّهُمْ، فَتَكَلَّمَ أَبُو بَكْرٍ فَقَالَ: وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَقَرَابَةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحَبُّ إِلَيَّ أَنْ أَصِلَ مِنْ قَرَابَتِي


Bukhari-3711

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 12 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய உறவினர்களின் சிறப்புகளும்83 நபி (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா (-அவர்கள் மீது சாந்தி நிலவட்டும்-) அவர்களின் சிறப்பும்.84 நபி (ஸல்) அவர்கள், ஃபாத்திமா, சொர்க்கவாசிகளில் பெண்களின் தலைவி யாவார் என்று சொன்னார்கள்.85
3711. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ஒதுக்கித் தந்த ‘பய்உ’ செல்வத்திலிருந்து தமக்கு நபி(ஸல்) அவர்களிடமிருந்து வரவேண்டிய வாரிசுப் பங்கைக் கொடுக்கும்படி அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் கேட்டு ஃபாத்திமா ஆளனுப்பினார். நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் தர்மமாகவிட்டுச் சென்ற நிலத்தையும் ‘ஃபதக்’ பிரதேசத்திலிருந்து நிலத்தையும் கைபரில் கிடைத்த ‘குமுஸ்’ நிதியில் மீதமானதையும் அவர் கேட்டார்.
Book : 62


أَنَّ فَاطِمَةَ، عَلَيْهَا السَّلاَمُ، أَرْسَلَتْ إِلَى أَبِي بَكْرٍ تَسْأَلُهُ مِيرَاثَهَا مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا أَفَاءَ اللَّهُ عَلَى رَسُولِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، تَطْلُبُ صَدَقَةَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّتِي بِالْمَدِينَةِ وَفَدَكٍ، وَمَا بَقِيَ مِنْ خُمُسِ خَيْبَرَ


Bukhari-3710

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 11 அப்பாஸ் பின் அப்தில் முத்த-ப் – ரலியல்லாஹுஅன்ஹு- அவர்கள் பற்றிய குறிப்பு.81
3710. அனஸ்(ரலி) அறிவித்தார்.
மக்கள் பஞ்சத்தால் பீடிக்கப்படும்போது உமர் இப்னு கத்தாப்(ரலி), அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப்(ரலி) அவர்களை (அல்லாஹ்விடம்) மழை கோரிப் பிரார்த்திக்கும்படி கேட்பார்கள். (அத்தகைய சந்தர்ப்பங்களில்) உமர்(ரலி), ‘இறைவா! நாங்கள் எங்கள் நபி(ஸல்) உயிருடன் இருந்த போது) அவர்கள் (உன்னிடம் பிரார்த்தித்தன்) மூலம் உன்னிடம் நாங்கள் உதவி கோரி வந்தோம். அப்போது (அதை ஏற்று) நீயும் எங்களுக்கு மழை பொழிவித்து வந்தாய். இப்போது எங்கள் நபியின் பெரிய தந்தை (அப்பாஸ் – ரலி – அவர்கள் உன்னிடம் பிரார்த்திப்பதன்) வாயிலாக உன்னிடம் (மழை பொழியும்படி) கோருகிறோம். எங்களுக்கு மழை பொழிவிப்பாயாக!’ என்று கேட்பார்கள். அதன்படியே மக்களுக்கு மழை பொழிவிக்கப்பட்டு வந்தது.
இறைத்தூதர்(ஸல்) அவர்களின் உறவினர்களின் சிறப்புகளும் நபி(ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா(ரலி) அவர்களின் சிறப்பும்.
நபி(ஸல்) அவர்கள், ‘ஃபாத்திமா, சொர்க்கவாசிகளில் பெண்களின் தலைவியாவார்’ என்று கூறினார்கள்.
Book : 62


أَنَّ عُمَرَ بْنَ الخَطَّابِ، كَانَ إِذَا قَحَطُوا اسْتَسْقَى بِالعَبَّاسِ بْنِ عَبْدِ المُطَّلِبِ فَقَالَ: «اللَّهُمَّ إِنَّا كُنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِنَبِيِّنَا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتَسْقِينَا، وَإِنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِعَمِّ نَبِيِّنَا فَاسْقِنَا» قَالَ: فَيُسْقَوْنَ


Next Page » « Previous Page