Author: Farook

Bukhari-3447

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3447. இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘நீங்கள் (மறுமை நாளில்) காலில் செருப்பணியாதவர்களாகவும், நிர்வாணமானவர்களாகவும் விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாகவும் எழுப்பப்படுவீர்கள்’ என்று கூறிவிட்டு, பிறகு,

‘எழுதப்பட்ட ஏடு சுருட்டப்படுவதைப் போல் நாம் வானத்தை சுருட்டும் அந்நாளில், நாம் முதலில் எவ்வாறு படைக்கத் தொடங்கினோமோ அவ்வாறே நாம் மீட்டுவோம். இது நம்முடைய பொறுப்பிலுள்ள ஒரு வாக்குறுதியாகும. அதனை நாம் நிறைவேற்றியே தீருவோம்’ என்னும் (திருக்குர்ஆன் 21:104) இறைவசனத்தை ஓதினார்கள்.

முதலாவதாக ஆடை அணிவிக்கப்படுபவர்கள் இப்ராஹீம்(அலை) அவர்கள் ஆவார்கள். பிறகு, என் தோழர்களில் சிலர் (சொர்க்கத்திற்காக) வலப்பக்கமும், (சிலர் நரகத்திற்காக) இடப்பக்கமும் கொண்டு செல்லப்படுவார்கள். நான், ‘இவர்கள் என் தோழர்கள்’ என்று கூறுவேன். ‘இவர்களை விட்டு நீங்கள் பிரிந்ததிலிருந்து இவர்கள், தம் கால் சுவடுகளின் வழியே (எங்கிருந்து) வந்தார்களோ அந்த மதத்திற்குத்) திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள்’ என்று சொல்லப்படும்.

அதற்கு நான் நல்லடியாரான மர்யமின் மகன் ஈசா(அலை) அவர்கள் சொன்னதைப் போன்றே, ‘(இறைவா!) நான் இவர்களிடையே (உயிருடன்) வாழ்ந்து வந்த வரை நான் இவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்தபோது

تُحْشَرُونَ حُفَاةً، عُرَاةً، غُرْلًا، ثُمَّ قَرَأَ: {كَمَا بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُعِيدُهُ وَعْدًا عَلَيْنَا إِنَّا كُنَّا فَاعِلِينَ} [الأنبياء: 104] فَأَوَّلُ مَنْ يُكْسَى إِبْرَاهِيمُ، ثُمَّ يُؤْخَذُ بِرِجَالٍ مِنْ أَصْحَابِي ذَاتَ اليَمِينِ وَذَاتَ الشِّمَالِ، فَأَقُولُ: أَصْحَابِي، فَيُقَالُ: إِنَّهُمْ لَمْ يَزَالُوا مُرْتَدِّينَ عَلَى أَعْقَابِهِمْ مُنْذُ فَارَقْتَهُمْ، فَأَقُولُ كَمَا قَالَ العَبْدُ الصَّالِحُ عِيسَى ابْنُ مَرْيَمَ: {وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا مَا دُمْتُ فِيهِمْ، فَلَمَّا تَوَفَّيْتَنِي كُنْتَ أَنْتَ الرَّقِيبَ عَلَيْهِمْ، وَأَنْتَ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٌ، إِنْ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ، وَإِنْ تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ العَزِيزُ الحَكِيمُ} [المائدة: 118]، قَالَ: مُحَمَّدُ بْنُ يُوسُفَ الفَرَبْرِيُّ، ذُكِرَ عَنْ أَبِي عَبْدِ اللَّهِ، عَنْ قَبِيصَةَ، قَالَ: ” هُمُ المُرْتَدُّونَ الَّذِينَ ارْتَدُّوا عَلَى عَهْدِ أَبِي بَكْرٍ فَقَاتَلَهُمْ أَبُو بَكرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ


Bukhari-3446

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3446. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தன் அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கம் கற்பித்து, அவளுக்கு ஒழுக்கம் கற்பிக்கும் பணியைச் செம்மையான முறையில் செய்து, பிறகு அவளுக்கு விடுதலை அளித்து அவளை (தானே) மணமும் முடித்தார் எனில் அவருக்கு இரண்டு நற்பலன்கள் கிடைக்கும்.

ஒருவர் ஈசாவின் மீது நம்பிக்கை கொண்டு, பிறகு என்னை நம்பினால் அவருக்கு இரண்டு நற்பலன்கள் கிடைக்கும், ஓர் அடிமை தன் இறைவனுக்கு அஞ்சி, தன் எஜமானார்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பானாயின் அவனுக்கும் இரண்டு நற்பலன்கள் கிடைக்கும். என அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
Book :60


«إِذَا أَدَّبَ الرَّجُلُ أَمَتَهُ فَأَحْسَنَ تَأْدِيبَهَا، وَعَلَّمَهَا فَأَحْسَنَ تَعْلِيمَهَا، ثُمَّ أَعْتَقَهَا فَتَزَوَّجَهَا كَانَ لَهُ أَجْرَانِ، وَإِذَا آمَنَ بِعِيسَى، ثُمَّ آمَنَ بِي فَلَهُ أَجْرَانِ، وَالعَبْدُ إِذَا اتَّقَى رَبَّهُ وَأَطَاعَ مَوَالِيَهُ، فَلَهُ أَجْرَانِ»


Bukhari-3445

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3445. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

‘நபி(ஸல்) அவர்கள், ‘கிறிஸ்தவர்கள் மர்யமின் மகன் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்திவிட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள்.

ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியான் தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) ‘அல்லாஹ்வின் அடியார்’ என்றும் ‘இறைத்தூதர் என்றும் சொல்லுங்கள்’ என்று கூறினார்கள்’ என மிம்பரின் (உரை மேடை) மீதிருந்தபடி உமர்(ரலி) சொல்ல கேட்டிருக்கிறேன்.
Book :60


«لاَ تُطْرُونِي، كَمَا أَطْرَتْ النَّصَارَى ابْنَ مَرْيَمَ، فَإِنَّمَا أَنَا عَبْدُهُ، فَقُولُوا عَبْدُ اللَّهِ، وَرَسُولُهُ»


Bukhari-3444

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3444. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மர்யமின் மகன் ஈசா(அலை) அவர்கள், ஒருவர் திருடிக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவனிடம், ‘நீ திருடினாயா’ என்று கேட்டார்கள். அதற்கு அவன், ‘இல்லை; எவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லையோ அவன் மீதாணையாக!’ என்று பதிலளித்தான்.

உடனே ஈசா(அலை) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீது நான் நம்பிக்கை கொண்டு, என் கண்ணை நம்ப மறுத்து விட்டேன்’ என்று கூறினார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :60


رَأَى عِيسَى ابْنُ مَرْيَمَ رَجُلًا يَسْرِقُ، فَقَالَ لَهُ: أَسَرَقْتَ؟ قَالَ: كَلَّا وَاللَّهِ الَّذِي لاَ إِلَهَ إِلَّا هُوَ، فَقَالَ عِيسَى: آمَنْتُ بِاللَّهِ، وَكَذَّبْتُ عَيْنِي


Bukhari-3443

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3443. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் மர்யமின் மகன் ஈசா(அலை)  அவர்களுக்கு உலகிலும் மறுமையிலும் மக்களிலேயே மிகவும் நெருக்கமானவன் ஆவேன். இறைத் தூதர்கள் ஒரே தந்தையின் பிள்ளைகள் ஆவர். அவர்களின் தாய்மார்கள் பலராவர். அவர்களின் மார்க்கம் ஒன்றே.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இதே நபிமொழி அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்து வேறொரு அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Book :60


«أَنَا أَوْلَى النَّاسِ بِعِيسَى ابْنِ مَرْيَمَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، وَالْأَنْبِيَاءُ إِخْوَةٌ لِعَلَّاتٍ، أُمَّهَاتُهُمْ شَتَّى وَدِينُهُمْ وَاحِدٌ» وَقَالَ: إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-3442

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3442. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் மர்யமின் மைந்தருக்கு மிகவும் நெருக்கமானவன் ஆவேன் – இறைத் தூதர்கள். தந்தை வழிச் சகோதரர்கள் ஆவர் – எனக்கும் அவருக்கும் இடையே இறைத்தூதர் எவருமில்லை. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :60


«أَنَا أَوْلَى النَّاسِ بِابْنِ مَرْيَمَ، وَالأَنْبِيَاءُ أَوْلاَدُ عَلَّاتٍ، لَيْسَ بَيْنِي وَبَيْنَهُ نَبِيٌّ»


Bukhari-3441

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3441. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! ஈசா(அலை) அவர்களைக் குறித்து ‘அவர்கள் சிவப்பு நிறமுடையவர்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை. மாறாக (இப்படித்தான்) கூறினார்கள்: நான் தூங்கிக் கொண்டிருக்கையில் (கனவில்) கஅபாவை வலம் வந்து கொண்டிருந்தேன். அப்போது மாநிறமுடைய தலைமுடி படிந்து தொங்கிய வண்ணமிருந்த ஒருவர் தம் தலையிலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருக்க… அல்லது வழிந்து கொண்டிருக்க… அங்கே இருந்தார். நான், ‘இவர் யார்?’ என்று கேட்டேன். ‘மர்யமின் குமாரர்’ என்று பதிலளித்தார்கள்.

நான் (தொடர்ந்து முன்னேறிச்) சென்றேன். அங்கு சிவப்பான, தடிமனமான, சுருட்டைத் தலை முடியுள்ள, வலக் கண் குருடான மனிதன் ஒருவன் இருந்தான். அவனுடைய கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருந்தது. நான், ‘யார் இது?’ என்று கேட்டேன், ‘தஜ்ஜால்’ என்று பதிலளித்தார்கள் (தோற்றத்தில்) மக்களிலேயே அவனுக்கு அதிக ஒப்பானவர் ‘இப்னு கத்தன்’ தான்.

இமாம் ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்:

இப்னு கத்தன் ‘குஸாஆ’ குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதன் அறியாமைக் காலத்திலேயே அவன் அழிந்து விட்டிருந்தான்.
Book :60


بَيْنَمَا أَنَا نَائِمٌ أَطُوفُ بِالكَعْبَةِ، فَإِذَا رَجُلٌ آدَمُ، سَبْطُ الشَّعَرِ، يُهَادَى بَيْنَ رَجُلَيْنِ، يَنْطِفُ رَأْسُهُ مَاءً، أَوْ يُهَرَاقُ رَأْسُهُ مَاءً، فَقُلْتُ: مَنْ هَذَا؟ قَالُوا: ابْنُ مَرْيَمَ، فَذَهَبْتُ أَلْتَفِتُ، فَإِذَا رَجُلٌ أَحْمَرُ جَسِيمٌ، جَعْدُ الرَّأْسِ، أَعْوَرُ عَيْنِهِ اليُمْنَى، كَأَنَّ عَيْنَهُ عِنَبَةٌ طَافِيَةٌ، قُلْتُ: مَنْ هَذَا؟ قَالُوا: هَذَا الدَّجَّالُ، وَأَقْرَبُ النَّاسِ بِهِ، شَبَهًا ابْنُ قَطَنٍ ” قَالَ الزُّهْرِيُّ: رَجُلٌ مِنْ خُزَاعَةَ، هَلَكَ فِي الجَاهِلِيَّةِ


Bukhari-3440

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3440. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! ஈசா(அலை) அவர்களைக் குறித்து ‘அவர்கள் சிவப்பு நிறமுடையவர்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை. மாறாக (இப்படித்தான்) கூறினார்கள்: நான் தூங்கிக் கொண்டிருக்கையில் (கனவில்) கஅபாவை வலம் வந்து கொண்டிருந்தேன். அப்போது மாநிறமுடைய தலைமுடி படிந்து தொங்கிய வண்ணமிருந்த ஒருவர் தம் தலையிலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருக்க… அல்லது வழிந்து கொண்டிருக்க… அங்கே இருந்தார். நான், ‘இவர் யார்?’ என்று கேட்டேன். ‘மர்யமின் குமாரர்’ என்று பதிலளித்தார்கள். நான் (தொடர்ந்து முன்னேறிச்) சென்றேன்.

அங்கு சிவப்பான, தடிமனமான, சுருட்டைத் தலை முடியுள்ள, வலக் கண் குருடான மனிதன் ஒருவன் இருந்தான். அவனுடைய கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருந்தது. நான், ‘யார் இது?’ என்று கேட்டேன், ‘தஜ்ஜால்’ என்று பதிலளித்தார்கள் (தோற்றத்தில்) மக்களிலேயே அவனுக்கு அதிக ஒப்பானவர் ‘இப்னு கத்தன்’ தான்.

இமாம் ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்:

இப்னு கத்தன் ‘குஸாஆ’ குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதன் அறியாமைக் காலத்திலேயே அவன் அழிந்து விட்டிருந்தான்.
Book :60


وَأَرَانِي اللَّيْلَةَ عِنْدَ الكَعْبَةِ فِي المَنَامِ، فَإِذَا رَجُلٌ آدَمُ، كَأَحْسَنِ مَا يُرَى مِنْ أُدْمِ الرِّجَالِ تَضْرِبُ لِمَّتُهُ بَيْنَ مَنْكِبَيْهِ، رَجِلُ الشَّعَرِ، يَقْطُرُ رَأْسُهُ مَاءً، وَاضِعًا يَدَيْهِ عَلَى مَنْكِبَيْ رَجُلَيْنِ وَهُوَ يَطُوفُ بِالْبَيْتِ، فَقُلْتُ: مَنْ هَذَا؟ فَقَالُوا: هَذَا المَسِيحُ ابْنُ مَرْيَمَ، ثُمَّ رَأَيْتُ رَجُلًا وَرَاءَهُ جَعْدًا قَطِطًا أَعْوَرَ العَيْنِ اليُمْنَى، كَأَشْبَهِ مَنْ رَأَيْتُ بِابْنِ قَطَنٍ، وَاضِعًا يَدَيْهِ عَلَى مَنْكِبَيْ رَجُلٍ يَطُوفُ بِالْبَيْتِ، فَقُلْتُ: مَنْ هَذَا؟ قَالُوا: المَسِيحُ الدَّجَّالُ


Bukhari-3439

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3439. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இன்றிரவு கஅபாவின் அருகே நான் கனவில் (ஒரு நிகழ்ச்சியைக்) கண்டேன். மனிதர்களின் மாநிறத்திலேயே மிக அழகான மாநிறமான மனிதர் ஒருவர் அங்கிருந்தார். அவரின் தலைமுடி அவரின் தோள்களுக்கிடையே தொங்கிக் கொண்டிருந்தது; படியவாரப்பட்ட தொங்கலான முடியுடையவராக அவர் இருந்தார். அவரின் தலையிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. இரண்டு மனிதர்களின் தோள்களின் மீது தம் இரண்டு கைகளையும் அவர் வைத்துக் கொண்டு கஅபாவைச் சுற்றிக் கொண்டிருந்தார். நான், ‘இவர் யார்?’ என்று கேட்டேன். ‘மர்யமின் மகன் ஈசா அவர்கள்’ என்று பதிலளித்தார்கள்.

பிறகு, அவருக்குப் பின்னால் நிறைய சுருள் முடி கொண்ட, வலக் கண் குருடான ஒரு மனிதனைக் கண்டேன். அவன் நான் பார்த்தவர்களிலேயே இப்னு கத்தனுக்கு அதிக ஒப்பானவனாயிருந்தான். அவன் இறையில்லம் கஅபாவை வலம் வந்து கொண்டிருந்த ஒரு மனிதரின் தோள்களின் மீது தன் இரண்டு கைகளையும் வைத்திருந்தான். நான், ‘யார் இது?’ என்று கேட்டேன். ‘இவன் தஜ்ஜால் என்னும் மஸீஹ்’ என்று பதிலளித்தார்கள்.
நாஃபிவூ(ரஹ்) அவர்களிடமிருந்து உபைதுல்லாஹ்(ரஹ்) அவர்களும் இதை அறிவித்தார்கள்.
Book :60


ذَكَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَوْمًا بَيْنَ ظَهْرَيِ النَّاسِ المَسِيحَ الدَّجَّالَ، فَقَالَ: ” إِنَّ اللَّهَ لَيْسَ بِأَعْوَرَ، أَلاَ إِنَّ المَسِيحَ الدَّجَّالَ أَعْوَرُ العَيْنِ اليُمْنَى، كَأَنَّ عَيْنَهُ عِنَبَةٌ طَافِيَةٌ


Bukhari-3438

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3438. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மிஃராஜ் இரவில்) நான் ஈஸா (அலை), மூஸா (அலை), இப்ராஹீம் (அலை) ஆகியோரைப் பார்த்தேன்.

ஈஸா (அலை) அவர்கள் சிவப்பு நிறமுடையவர்களாகவும், சுருள்முடி உடையவர்களாகவும், அகன்ற மார்புடையவர்களாகவும் இருந்தார்கள்.

மூஸா (அலை) அவர்களோ மாநிறமுடையவர்களாகவும், உயரமானவர்களாகவும், படிந்த, தொங்கலான முடியுடையவர்களாகவும், சூடானிய இனத்தவர்களில் ஒருவரைப் போன்று (நீண்டு மெலிந்தவர்களாகவு)ம் இருந்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 60


குறிப்பு:

صحيح البخاري (3/ 292 بترقيم الشاملة آليا):
قالَ الحافظ أبو ذر: هكذا في سائر الروايات المسموعة عن الفربري: «مجاهد عن ابن عمر» فلا أدري هكذا حدَّث به البخاري، أو غلط فيه الفربري؛ لأنَّني رأيته في سائر الروايات عن ابن كثير وغيره: «مجاهد عن ابن عباس» وهو الصواب، والله أعلم.

புகாரீ நூலின் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூதர்-அப்து பின் அஹ்மத் அல்ஹரவீ அவர்கள், இந்தச் செய்தியை புகாரீ அவர்களின் மாணவரான ஃபர்பரீ-முஹம்மத் பின் யூஸுஃப் அவர்களிடமிருந்து கேட்டு அறிவித்தவர்கள் இதை இப்னு உமர் (ரலி) அவர்களின் செய்தியாக அறிவித்துள்ளனர்.

புகாரீ அவர்கள் இவ்வாறு தான் அறிவித்தார்களா? அல்லது புகாரீ அவர்களின் மாணவரான ஃபர்பரீ அவர்கள் இவ்வாறு தவறாக அறிவித்தாரா? என்று எனக்கு தெரியவில்லை

«رَأَيْتُ عِيسَى ومُوسَى وَإِبْرَاهِيمَ، فَأَمَّا عِيسَى فَأَحْمَرُ جَعْدٌ عَرِيضُ الصَّدْرِ، وَأَمَّا مُوسَى، فَآدَمُ جَسِيمٌ سَبْطٌ كَأَنَّهُ مِنْ رِجَالِ الزُّطِّ»


Next Page » « Previous Page