Author: Farook

Bukhari-3437

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3437. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மிஅராஜ் இரவில்) நான் ஈசா(அலை), மூஸா(அலை), இப்ராஹீம்(அலை) ஆகியோரைப் பார்த்தேன். ஈசா(அலை) அவர்கள் சிவப்பு நிறமுடையவர்களாகவும் சுருள் முடியுடையவர்களாகவும் அகன்ற மார்புடையவர்களாகவும் இருந்தார்கள்.

மூஸா(அலை) அவர்களோ மாநிறமுடையவர்களாகவும், உயரமானவர்களாகவும், படிந்த, நெருங்லான முடியுடையவர்களாகவும் சூடானிய இனத்தவர்களில் ஒருவரைப் போன்று (நீண்டு மெலிந்தவர்களாகவு)ம் இருந்தார்கள். என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
Book :60


قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَيْلَةَ أُسْرِيَ بِهِ: ” لَقِيتُ مُوسَى، قَالَ: فَنَعَتَهُ، فَإِذَا رَجُلٌ – حَسِبْتُهُ قَالَ – مُضْطَرِبٌ رَجِلُ الرَّأْسِ، كَأَنَّهُ مِنْ رِجَالِ شَنُوءَةَ، قَالَ: وَلَقِيتُ عِيسَى فَنَعَتَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: – رَبْعَةٌ أَحْمَرُ، كَأَنَّمَا خَرَجَ مِنْ دِيمَاسٍ – يَعْنِي الحَمَّامَ -، وَرَأَيْتُ إِبْرَاهِيمَ وَأَنَا أَشْبَهُ وَلَدِهِ بِهِ، قَالَ: وَأُتِيتُ بِإِنَاءَيْنِ، أَحَدُهُمَا لَبَنٌ وَالآخَرُ فِيهِ خَمْرٌ، فَقِيلَ لِي: خُذْ أَيَّهُمَا شِئْتَ، فَأَخَذْتُ اللَّبَنَ فَشَرِبْتُهُ، فَقِيلَ لِي: هُدِيتَ الفِطْرَةَ، أَوْ أَصَبْتَ الفِطْرَةَ، أَمَا إِنَّكَ لَوْ أَخَذْتَ الخَمْرَ غَوَتْ أُمَّتُكَ


Bukhari-3436

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 48

(அல்லாஹ் கூறுகின்றான்:) மேலும், (நபியே!) மர்யமைப் பற்றி இந்த வேதத்தில் (உள்ளதை) நீர் எடுத்துரைப்பீராக! அவர் தம்முடைய குடும்பத்தாரைவிட்டு விலகி கிழக்குப் பக்கமாக ஒதுங்கியிருந்த நேரத்தில் அவர் ஒரு திரையிட்டு அவர்களிலிருந்து மறைந்திருந்தார். (அப்போது) நாம் அவரிடம் நம்முடைய ரூஹை (வானவரை) அனுப்பினோம். அவர் மர்யமின் முன் னிலையில் முழு மனித உருவில் தோன்றினார். உடனே மர்யம் கூறினார்: ‘‘உம்மை விட்டுக் கருணைமிக்க இறைவனிடம் நான் பாதுகாப்புக் கோருகின்றேன், நீர் இறையச்சம் உள்ளவராயின்”

அதற்கு அவர் கூறினார்: ‘‘நான் உம் இறைவனின் தூதராவேன்: தூய்மையான ஓர் ஆண் குழந்தையை உமக்கு வழங்குவதற்காக நான் அனுப்பப்பட்டுள்ளேன்.” மர்யம் கூறினார்: ‘‘எனக்கு எவ்வாறு ஆண் குழந்தை பிறக்கும்? என்னை எந்த மனிதனும் தீண்டவில்லையே; நான் தீய நடத்தையுடையவளும் அல்லவே!” அதற்கு வானவர் கூறினார்: ‘‘அவ்வாறே நிகழும்.” உம் இறைவன் கூறுகின்றான்: அவ்வாறு செய்வது எனக்கு மிகவும் எளிதானது; மேலும், நாம் அக்குழந்தையை மக்களுக்கு ஒரு சான்றாகவும் நம்மிடமிருந்து ஒரு கருணையாகவும் ஆக்குவதற் காகவே இவ்வாறு செய்கின்றோம். மேலும் அது நடந்தே தீரும்” (19:16-21)

…….விலகியிருந்தோர்’ (இஅதஸலத்) ஒதுங்கி தனிமையில் இருந்தார்; கிழக்குப் பக்கம் (ஷர்கீ)கிழக்கை ஒட்டிய

لَمْ يَتَكَلَّمْ فِي المَهْدِ إِلَّا ثَلاَثَةٌ: عِيسَى، وَكَانَ فِي بَنِي إِسْرَائِيلَ رَجُلٌ يُقَالُ لَهُ جُرَيْجٌ، كَانَ يُصَلِّي، جَاءَتْهُ أُمُّهُ فَدَعَتْهُ، فَقَالَ: أُجِيبُهَا أَوْ أُصَلِّي، فَقَالَتْ: اللَّهُمَّ لاَ تُمِتْهُ حَتَّى تُرِيَهُ وُجُوهَ المُومِسَاتِ، وَكَانَ جُرَيْجٌ فِي صَوْمَعَتِهِ، فَتَعَرَّضَتْ لَهُ امْرَأَةٌ وَكَلَّمَتْهُ فَأَبَى، فَأَتَتْ رَاعِيًا فَأَمْكَنَتْهُ مِنْ نَفْسِهَا، فَوَلَدَتْ غُلاَمًا، فَقَالَتْ: مِنْ جُرَيْجٍ فَأَتَوْهُ فَكَسَرُوا صَوْمَعَتَهُ وَأَنْزَلُوهُ وَسَبُّوهُ، فَتَوَضَّأَ وَصَلَّى ثُمَّ أَتَى الغُلاَمَ، فَقَالَ: مَنْ أَبُوكَ يَا غُلاَمُ؟ قَالَ : الرَّاعِي، قَالُوا: نَبْنِي صَوْمَعَتَكَ مِنْ ذَهَبٍ؟ قَالَ: لاَ، إِلَّا مِنْ طِينٍ. وَكَانَتِ امْرَأَةٌ تُرْضِعُ ابْنًا لَهَا مِنْ بَنِي إِسْرَائِيلَ، فَمَرَّ بِهَا رَجُلٌ رَاكِبٌ ذُو شَارَةٍ فَقَالَتْ: اللَّهُمَّ اجْعَلِ ابْنِي مِثْلَهُ، فَتَرَكَ ثَدْيَهَا وَأَقْبَلَ عَلَى الرَّاكِبِ، فَقَالَ: اللَّهُمَّ لاَ تَجْعَلْنِي مِثْلَهُ، ثُمَّ أَقْبَلَ عَلَى ثَدْيِهَا يَمَصُّهُ، –

قَالَ: أَبُو هُرَيْرَةَ كَأَنِّي أَنْظُرُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمَصُّ إِصْبَعَهُ – ثُمَّ مُرَّ بِأَمَةٍ، فَقَالَتْ: اللَّهُمَّ لاَ تَجْعَلِ ابْنِي مِثْلَ هَذِهِ، فَتَرَكَ ثَدْيَهَا، فَقَالَ: اللَّهُمَّ اجْعَلْنِي مِثْلَهَا، فَقَالَتْ: لِمَ ذَاكَ؟ فَقَالَ: الرَّاكِبُ جَبَّارٌ مِنَ الجَبَابِرَةِ، وَهَذِهِ الأَمَةُ يَقُولُونَ: سَرَقْتِ، زَنَيْتِ، وَلَمْ تَفْعَلْ


Bukhari-3435

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 47 அல்லாஹ் கூறுகிறான்: வேதக்காரர்களே! உங்களுடைய மார்க் கத்தில் (எதையும்) மிகைப்படுத்தாதீர்கள். மேலும், நீங்கள் அல்லாஹ்வின் விஷயத்தில் சத்தியத்தைத் தவிர வேறு எதையும் கூறா தீர்கள். திண்ணமாக, மர்யமின் மைந்தர் ஈசா-அல்-மஸீஹ், அல்லாஹ்வின் தூதரும் மர்யமுக்கு அவன் அனுப்பிய அவனுடைய கட்டளையுமாவார்.118 மேலும், அல்லாஹ் விடமிருந்து வந்த ஓர் உயிரும் ஆவார். (அது மர்யமின் கருவறையில் குழந்தையாக வடிவம் பெற்றது.) எனவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்கள் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்! மேலும், மூன்று (கடவுள்) எனச் சொல்லாதீர்கள். (அப்படிச் சொல்வதைத்) தவிர்த்துக் கொள்ளுங்கள். இதுவே உங்களுக்கு நன்மை பயக்கும். ஏனெனில், அல்லாஹ் ஒரே இறைவன்தான்; தனக்கு மகனை ஏற்படுத்திக் கொள்வதை விட்டு அவன் தூய்மையானவன். வானங்கள் மற்றும் பூமியிலுள்ளவை அனைத்தும் அவனுக்கே உரியனவாகும். மேலும் (அவை அனைத்தையும் பராமரித்துப் பாதுகாக்கும்) பொறுப்பினை ஏற்பதற்கு அவனே போது மானவனாவான். (4:171)
3435. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று பேர்களைத் தவிர வேறெவரும் தொட்டிலில் (குழந்தையாக இருக்கும் போது) பேசியதில்லை. (ஒருவர்) ஈசா (அலை) அவர்கள். (மற்றொருவர்) பனூ இஸ்ராயீல்களால் ‘ஜுரைஜ்’ என்றழைக்கப்பட்டு வந்த (இறைநேசரான)

«مَنْ شَهِدَ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، وَأَنَّ عِيسَى عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ، وَكَلِمَتُهُ أَلْقَاهَا إِلَى مَرْيَمَ وَرُوحٌ مِنْهُ، وَالجَنَّةُ حَقٌّ، وَالنَّارُ حَقٌّ، أَدْخَلَهُ اللَّهُ الجَنَّةَ عَلَى مَا كَانَ مِنَ العَمَلِ» قَالَ الوَلِيدُ، حَدَّثَنِي ابْنُ جَابِرٍ، عَنْ عُمَيْرٍ، عَنْ جُنَادَةَ وَزَادَ مِنْ أَبْوَابِ الجَنَّةِ الثَّمَانِيَةِ أَيَّهَا شَاءَ


Bukhari-3434

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3434. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குறைஷிப் பெண்கள் தாம் ஒட்டகத்தில் சவாரி செய்த பெண்களிலேயே சிறந்தவர்கள் (தம்) குழந்தைகளின் மீது அதிகப் பரிவுடையவர்கள். தம் கணவனின் செல்வத்தை அதிகமாகப் பேணிப் பாதுகாக்கக் கூடியவர்கள்.
இதை அபூ ஹுரைரா(ரலி) அறிவித்துவிட்டு பின்பு, ‘இம்ரானின் மகள் மர்யம் ஒட்டகம் எதிலும் சவாரி செய்ததேயில்லை’ என்று கூறினார்கள்.
ஸுஹ்ரீ(ரஹ்) வழியாக இதே போன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Book :60


«نِسَاءُ قُرَيْشٍ خَيْرُ نِسَاءٍ رَكِبْنَ الإِبِلَ، أَحْنَاهُ عَلَى طِفْلٍ، وَأَرْعَاهُ عَلَى زَوْجٍ فِي ذَاتِ يَدِهِ» يَقُولُ أَبُو هُرَيْرَةَ عَلَى إِثْرِ ذَلِكَ: وَلَمْ تَرْكَبْ مَرْيَمُ بِنْتُ عِمْرَانَ بَعِيرًا قَطُّ تَابَعَهُ ابْنُ أَخِي الزُّهْرِيِّ، وَإِسْحَاقُ الكَلْبِيُّ، عَنِ الزُّهْرِيِّ


Bukhari-3433

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 46

அல்லாஹ் கூறுகின்றான்:

வானவர்கள் இவ்வாறு கூறியதை நினைவு கூருங்கள்: மர்யமே! திண்ணமாக அல்லாஹ் உனக்கு தனது வாக்கு பற்றி நற்செய்தி சொல்கின்றான். அதன் பெயர் மர்யத்தின் குமாரர் ஈசா அல் மஸீஹ் என்பதாகும். அவர் இம்மையிலும், மறுமையிலும் கண்ணியமிக்கவராகவும், (அல்லாஹ்விடம்) நெருங்கிய நல்லடியார்களில் ஒருவராகவும் திகழ்வார். அன்றி, அவர் தொட்டிலில் (குழந்தையாக) இருக்கும் பொழுது (தன் தாயின் பரிசுத்தத் தன்மையைப் பற்றியு)ம், (தன் நபித்துவத்தைப் பற்றி) வாலிபத்திலும், மனிதர்களுடன் பேசுவார். தவிர, நல்லொழுக்கமுடையோரில் உள்ளவராகவுமிருப்பார்.

(அதற்கு மர்யம் தன் இறைவனை நோக்கி,) என் இறைவனே! எந்த ஒரு மனிதருமே என்னைத் தீண்டாதிருக்கும் போது, எனக்கு எவ்வாறு சந்ததி ஏற்பட்டு விடும்? என்று கூறினார். (அதற்கு) இவ்வாறே, அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு பொருளை(ப் படைக்க) நாடினால், அதனை ஆகுக என அவன் கூறுவது தான் (தாமதம்)! உடனே அது ஆகிவிடும் என்று கூறினான். மேலும் அவருக்கு வேதத்தையும் ஞானத்தையும், தவ்ராத்தையும் இன்ஜீலையும் கற்பிப்பான். (3:45-48)

3433. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மற்ற பெண்களை விட ஆயிஷாவுக்கான சிறப்பு, மற்ற எல்லா உணவுகளையும் விட ‘ஸரீது’க்குள்ள

فَضْلُ عَائِشَةَ عَلَى النِّسَاءِ كَفَضْلِ الثَّرِيدِ عَلَى سَائِرِ الطَّعَامِ، كَمَلَ مِنَ الرِّجَالِ كَثِيرٌ، وَلَمْ يَكْمُلْ مِنَ النِّسَاءِ: إِلَّا مَرْيَمُ بِنْتُ عِمْرَانَ، وَآسِيَةُ امْرَأَةُ فِرْعَوْنَ


Bukhari-3432

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 45

(அல்லாஹ் கூறுகிறான்:)

மேலும், அந்நேரம் வந்த போது வானவர்கள் கூறினார்கள்: மர்யமே! திண்ணமாக அல்லாஹ் உன்னைத் தேர்ந்தெடுத்துக் தூய்மையாக்கினான். மேலும் அகிலத்துப் பெண்கள் அனைவரிலும்(உனக்கு முதலிடம் அளித்து, தனது திருப்பணிக்காக) உன்னைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். (ஆகவே,) மர்யமே! நீ உன்னுடைய இறைவனைக் குனிந்து (சிரம் பணிந்து) வணங்குபவர்களுடன் நீயும் குனிந்து சிரம் பணி(ந்து வணங்கு)வாயாக! (என்று கூறினார்கள்.)

(நபியே!) இவை (யாவும் நீர் அறியாத) மறைவான செய்திகளாகும். இவைகளை நாம் உமக்கு வஹீயின் மூலம் அறிவிக்கின்றோம். அன்றி, மர்யமை (வளர்க்க) அவர்களில் எவர் பிணையேற்றுக் கொள்வதென்று (முடிவு செய்ய) அவர்கள் தங்கள் எழுது கோல்களை (ஆற்றில்) எறிந்த போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (இதைப் பற்றி) அவர்கள் தர்க்கித்துக் கொண்ட போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (3:42-44)

3432. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இம்ரானின் மகள் மர்யம் தான் (அப்போது) உலகின் பெண்களிலேயே சிறந்தவராவார். (தற்போது) உலகப் பெண்களிலேயே சிறந்தவர் கதீஜா ஆவார். என அலீ(ரலி) அறிவித்தார்.
Book : 60


«خَيْرُ نِسَائِهَا مَرْيَمُ ابْنَةُ عِمْرَانَ، وَخَيْرُ نِسَائِهَا خَدِيجَةُ»


Bukhari-3431

ஹதீஸின் தரம்: விபரம் கீழே உள்ளது

பாடம்: 44

அல்லாஹ் கூறுகிறான்:

மேலும், (நபியே!) மர்யத்தைப் பற்றி இந்த வேதத்தில் (உள்ளதை) நீர் விவரித்துக் கூறுவீராக! அவர் தம்முடைய குடும்பத்தாரை விட்டு விலகி கிழக்குப் பக்கமாக ஒதுங்கியிருந்த நேரத்தில் அவர் ஒரு திரையிட்டு அவர்களிலிருந்து மறைந்திருந்தார். (அல்குர்ஆன்: 19:16)

வானவர்கள் இவ்வாறு கூறியதை நினைவு கூருங்கள்: மர்யமே! திண்ணமாக அல்லாஹ் உனக்கு தனது வாக்கு பற்றி நற்செய்தி சொல்கின்றான். அதன் பெயர் மர்யத்தின் குமாரர் ஈஸா அல்மஸீஹ் என்பதாகும். அவர் இம்மையிலும், மறுமையிலும் கண்ணியமிக்கவராகவும், அல்லாஹ்விடம் நெருங்கிய நல்லடியார்களில் ஒருவராகவும் திகழ்வார். (அல்குர்ஆன்: 3:45)

திண்ணமாக அல்லாஹ், அகிலத்தார்களைக் காட்டிலும் (முன்னுரிமை வழங்கி தனது தூதுப் பணிக்காக) ஆதத்தையும், நூஹையும், இப்ராஹீமின் வழித் தோன்றல்களையும், இம்ரானின் வழித்தோன்றல்களையும் தேர்ந்தெடுத்துக் கொண்டான். (அல்குர்ஆன்:


Bukhari-3430

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 42

அல்லாஹ் கூறுகிறான்:

மேலும், ஒரு கிராமவாசிகளிடம் (நம்) தூதர்கள் வந்த போது நடந்த சம்பவத்தை உதாரணமாக இவர்களுக்குக் கூறுவீராக. நாம் அவர்களிடம் இரு தூதர்களை அனுப்பிய போது, அவர்கள் அவ்விருவரையும் பொய்யர்கள் எனத் தூற்றினார்கள். பிறகு நாம் மூன்றாமவரை அனுப்பி (அவ்விரு தூதர்களுக்கு) உதவினோம். அத்தூதர்கள் அனைவரும் (அம் மக்களை நோக்கி) உண்மையில் நாங்கள் உங்களிடம் இறைத் தூதர்களாய் அனுப்பப்பட்டுள்ளோம் எனக் கூறினார்கள்.

நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி வேறிலர். மேலும் கருணைமிக்க இறைவன் எதையும் இறக்கிவைக்கவில்லை. நீங்கள் வெறும் பொய்யே கூறுகின்றீர்கள் என்று அந்தக் கிராமவாசிகள் கூறினார்கள்.

தூதர்கள் கூறினார்கள்: திண்ணமாக, நாங்கள் உங்களிடம் தூதர்களாக அனுப்பப்பட்டுள்ளோம் என்பதை எங்கள் அதிபதி நன்கறிகின்றான். மேலும் எங்கள் மீதுள்ள கடமை, தூதைத் தெளிவாய் (உங்களிடம்) சேர்ப்பித்து விடுவதைத் தவிர வேறில்லை! அதற்கு அக்கிராம வாசிகள், நாங்களோ, உங்களை எங்களுக்கு ஏற்பட்ட அபசகுனமாகக் கருதுகின்றோம். நீங்கள் (இந்த அழைப்பிலிருந்து) விலகிக் கொள்ளா விட்டால், நிச்சயமாக நாங்கள் உங்களைக் கல்லால் அடிப்போம். மேலும், நீங்கள் எங்க ளிடமிருந்து அவசியம்

أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدَّثَهُمْ عَنْ لَيْلَةَ أُسْرِيَ بِهِ ” ثُمَّ صَعِدَ حَتَّى أَتَى السَّمَاءَ الثَّانِيَةَ فَاسْتَفْتَحَ، قِيلَ: مَنْ هَذَا؟ قَالَ: جِبْرِيلُ قِيلَ: وَمَنْ مَعَكَ؟ قَالَ: مُحَمَّدٌ قِيلَ: وَقَدْ أُرْسِلَ إِلَيْهِ؟ قَالَ: نَعَمْ، فَلَمَّا خَلَصْتُ فَإِذَا يَحْيَى وَعِيسَى وَهُمَا ابْنَا خَالَةٍ، قَالَ: هَذَا يَحْيَى وَعِيسَى فَسَلِّمْ عَلَيْهِمَا، فَسَلَّمْتُ فَرَدَّا، ثُمَّ قَالاَ: مَرْحَبًا بِالأَخِ الصَّالِحِ وَالنَّبِيِّ الصَّالِحِ


Bukhari-3429

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3429. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

‘இறைநம்பிக்கைகொண்டு (பின்னர்) தம் இறைநம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திடாதவர்’ என்னும் (திருக்குர்ஆன் 06:82) வசனம் அருளப்பட்டபோது அது முஸ்லிம்களுக்கு மிகவும் கடினமானதாகத் தென்பட்டது.

எனவே, அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! எங்களில் தனக்குத்தானே அநீதியிழைத்துக் கொள்ளாதவர் யார்?’ என்று கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘(இந்த வசனம் குறிப்பிடுவது) அதுவல்ல. அது இணைவைப்பையே குறிக்கிறது.

‘என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணைவைக்காதே. நிச்சயமாக, இணை வைப்பு மாபெரும் அநீதியாகும்’ என்று (அறிஞர்) லுக்மான், தம் மகனுக்கு அறிவுரை கூறுவதை (திருக்குர்ஆன் எடுத்துரைக்கிறதே, (திருக்குர்ஆன் 31:13) அதை) நீங்கள் கேட்க வில்லையா?’ என்று கூறினார்கள்.
Book :60


لَمَّا نَزَلَتْ {الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا} [الأنعام: 82] إِيمَانَهُمْ بِظُلْمٍ شَقَّ ذَلِكَ عَلَى المُسْلِمِينَ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، أَيُّنَا لاَ يَظْلِمُ نَفْسَهُ؟ قَالَ: «لَيْسَ ذَلِكَ إِنَّمَا هُوَ الشِّرْكُ أَلَمْ تَسْمَعُوا مَا قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لاَ تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ»


Bukhari-3428

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 1

ஆதம் (அலை) அவர்களையும், அவர்களின் சந்ததிகளையும் படைத்தது.

அல்லாஹ் கூறுகிறான்:

அந்த நேரத்தை நினைவு கூரும். உங்கள் இறைவன் வானவர்களிடம், நான் ஒரு பிரதிநிதியை (கலீஃபாவை) பூமியில் ஏற்படுத்தப் போகிறேன் என்று கூறினான். அப்போது அவர்கள், பூமியில் அதன் ஒழுங்கமைப்பைச் சீர்குலைத்து, இரத்தம் சிந்தக் கூடியவரையா அதில் (பிரதிநிதியாக) நீ ஏற்படுத்தப் போகிறாய்? நாங்கள் தாம் உன்னைப் புகழ்ந்து துதித்து உன் தூய்மையைப் போற்றிக் கொண்டிருக்கின்றோமே என்று கேட்டார்கள்.

அதற்கு இறைவன், நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயம் நான் அறிவேன் என்று பதிலளித்தான். (2:30)

மேலும் பார்க்க இறை வசனங்கள்: 1)15:26 2)7:189 3) 7:12 4) 2:30 5) 6:165 6)-86:4 7) 90:4 8) 7:26 9) 56:58 10)86:8 11)89:3 12)51:49 13)95:4 14)95:5 15) 103:2 16)37:11 17)56:61 18)2:30 19)2:36 20)2:37 21)2:259 22)7:23 23)47:15 24)21:111 25)7:27

3428. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

‘இறை நம்பிக்கை கொண்டு, தம் இறைநம்பிக்கையில் அநீதியைக் கலந்திடாதவர்’ என்னும் (திருக்குர்ஆன் 06:82) இறைவசனம் அருளப்பட்டபோது நபித்தோழர்கள், ‘தம் இறைநம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திடாதவர் நம்மில் யார் ?’ என்று கேட்டார்கள்.

‘அப்போது (என் அருமை மகனே!) அல்லாஹ்வுக்கு இணைவைக்காதே. இணை வைப்பது மாபெரும் அநீதியாகும்’

لَمَّا نَزَلَتْ {الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ} [الأنعام: 82] قَالَ أَصْحَابُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّنَا لَمْ يَلْبِسْ إِيمَانَهُ بِظُلْمٍ؟ فَنَزَلَتْ {لاَ تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ} [لقمان: 13]


Next Page » « Previous Page