Author: Farook

Bukhari-3427

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3427. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தாவூத் – அலை – அவர்களின் காலத்தில்) இரண்டு பெண்கள் இருந்தனர். அவர்களுடன் அவர்களின் மகன்களும் இருந்தனர். ஓநாய் (ஒன்று) அவ்விருவரில் ஒருவனைக் கொண்டு சென்றது. உடனே அவர்களில் ஒருத்தி, தன் தோழியிடம், ‘உன் மகனைத் தான் ஓநாய் கொண்டு சென்றது’ என்று கூற, மற்றொருத்தி அவளிடம், ‘உன் மகனைத் தான் ஓநாய் கொண்டு சென்றது’ என்று கூறினாள்.

எனவே, இருவரும் (தங்கள் தகராறைத் தீர்த்துக் கொள்ள) தாவூத்(அலை) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டு சென்றனர். அவர்கள் (அவ்விரு பெண்களில்) மூத்தவளுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தார்கள். (அவர்களின் தீர்ப்பில் கருத்து வேறுபட்டு) அப்பெண்கள் இருவரும் சுலைமான்(அலை) அவர்களிடம் (தீர்ப்புக் கேட்டுச்) சென்றனர். அவர்களிடம் விஷயத்தைத் தெரிவித்தனர். அதற்கு அவர்கள், ‘என்னிடம் ஒரு கத்தியைக் கொண்டு வாருங்கள். நான் உங்களிருவருக்குமிடையே (மீதமுள்ள) ஒரு மகனை ஆளுக்குப் பாதியாகப்) பிளந்து (பங்கிட்டு) விடுகிறேன்’ என்று கூறினார்கள்.

அப்போது இளையவள், ‘அவ்வாறு செய்யாதீர்கள். அல்லாஹ் உங்களுக்கு கருணை புரியட்டும். இவன் என் மகன்’ என்று (பதறிப்போய்) கூறினாள். உடனே, சுலைமான் (அலை) அவர்கள் ‘அந்தக் குழந்தை அ(ந்த இளைய)வளுக்கே உரியது’ என்று தீர்ப்பளித்தார்கள்.

كَانَتِ امْرَأَتَانِ مَعَهُمَا ابْنَاهُمَا، جَاءَ الذِّئْبُ فَذَهَبَ بِابْنِ إِحْدَاهُمَا، فَقَالَتْ صَاحِبَتُهَا: إِنَّمَا ذَهَبَ بِابْنِكِ، وَقَالَتِ الأُخْرَى: إِنَّمَا ذَهَبَ بِابْنِكِ، فَتَحَاكَمَتَا إِلَى دَاوُدَ، فَقَضَى بِهِ لِلْكُبْرَى، فَخَرَجَتَا عَلَى سُلَيْمَانَ بْنِ دَاوُدَ فَأَخْبَرَتَاهُ، فَقَالَ: ائْتُونِي بِالسِّكِّينِ أَشُقُّهُ بَيْنَهُمَا، فَقَالَتِ الصُّغْرَى: لاَ تَفْعَلْ يَرْحَمُكَ اللَّهُ، هُوَ ابْنُهَا، فَقَضَى بِهِ لِلصُّغْرَى ” قَالَ أَبُو هُرَيْرَةَ: وَاللَّهِ إِنْ سَمِعْتُ بِالسِّكِّينِ إِلَّا يَوْمَئِذٍ، وَمَا كُنَّا نَقُولُ إِلَّا المُدْيَةُ


Bukhari-3426

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3426. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என்னுடைய நிலையும் மக்களின் நிலையும் ஒருவர் தீயை மூட்டி விட, விட்டில் பூச்சிகளும் இதரப் பூச்சிகளும் அந்த நெருப்பில் விழுவதைப் போன்றதாகும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :60


مَثَلِي وَمَثَلُ النَّاسِ، كَمَثَلِ رَجُلٍ اسْتَوْقَدَ نَارًا، فَجَعَلَ الفَرَاشُ وَهَذِهِ الدَّوَابُّ تَقَعُ فِي النَّارِ


Bukhari-3425

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3425. அபூ தர்(ரலி) அறிவித்தார்

நான் நபி(ஸல்) அவர்களிடம்), ‘இறைத்தூதர் அவர்களே! முதலாவதாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் எது?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அல்மஸ்ஜிதுல் ஹராம் (மக்காவிலுள்ள புனித இறையில்லம்)’ என்று பதிலளித்தார்கள். நான், ‘பிறகு எது?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘பிறகு ‘அல் மஸ்ஜிதுல் அக்ஸா’ (ஜெரூசலம் நகரிலுள்ள ‘அல் அக்ஸா’ பள்ளி வாசல்)’ என்று பதிலளித்தார்கள்.

நான், ‘அவ்விரண்டிற்குமிடையே எவ்வளவு காலம் (இடைவெளி) இருந்தது?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நாற்பதாண்டு காலம் (இடைவெளி) இருந்தது’ என்று கூறினார்கள். பிறகு, ‘உன்னைத் தொழுகை (நேரம்) எங்கே வந்தடைந்தாலும் நீ தொழுது கொள். ஏனெனில், பூமி முழுவதுமே உனக்கு ஸஜ்தா செய்யுமிடம் (இறைவனை வழிபடும் தலம்) ஆகும்’ என்று கூறினார்கள்.
Book :60


قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَيُّ مَسْجِدٍ وُضِعَ أَوَّلَ؟ قَالَ: «المَسْجِدُ الحَرَامُ». قُلْتُ: ثُمَّ أَيٌّ؟، قَالَ: «ثُمَّ المَسْجِدُ الأَقْصَى» قُلْتُ: كَمْ كَانَ بَيْنَهُمَا؟ قَالَ: ” أَرْبَعُونَ، ثُمَّ قَالَ: حَيْثُمَا أَدْرَكَتْكَ الصَّلاَةُ فَصَلِّ، وَالأَرْضُ لَكَ مَسْجِدٌ


Bukhari-3424

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3424. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தாவூத்(அலை) அவர்களின் மகன் சுலைமான்(அலை) அவர்கள், ‘இன்றிரவு நான் எழுபது மனைவிமார்களிடம் செல்வேன். (அவர்களில்) ஒவ்வொருவரும் இறைவழியில் போராடும் குதிரை வீரரைக் கருத்தரிப்பார்கள்’ என்று கூறினார்கள். அதற்கு அவரின் தோழர் ஒருவர், ‘அல்லாஹ் நாடினால்…’ என்று சொல்லுங்கள்’ என்று கூறினார்.

சுலைமான்(அலை) அவர்கள், ‘அல்லாஹ் நாடினால்’ என்று (மறந்து போய்) சொல்லாமலிருந்துவிட்டார்கள். (அவர்கள் அவ்வாறே சென்றும் கூட) தன் இரண்டு புஜங்களில் ஒன்று கீழே விழுந்த ஒரேயொரு குழந்தையைத் தவிர வேறெதையும் அவர்கள் கருத்தரிக்கவில்லை. ‘இன்ஷா அல்லாஹ்… (இறைவன் நாடினால்)’ என்று சுலைமான்(அலை) அவர்கள் கூறியிருந்தால் அவர்கள் (எழுபது பேரும் பிறந்து) இறைவழியில் பேராடியிருப்பார்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஷுஐப்(ரஹ்) அவர்களும் இப்னு அபிஸ் ஸினாத்(ரஹ்) அவர்களும் தங்கள் அறிவிப்பில் ‘தொண்ணூறு மனைவிமார்களிடம் செல்வேன்’ என்று சுலைமான்(அலை) அவர்கள் கூறினார்கள் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்களுடைய அறிவிப்பு தான் மேற் கண்ட அறிவிப்பை விடச் சரியானது. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :60


قَالَ: سُلَيْمَانُ بْنُ دَاوُدَ لَأَطُوفَنَّ اللَّيْلَةَ عَلَى سَبْعِينَ امْرَأَةً، تَحْمِلُ كُلُّ امْرَأَةٍ فَارِسًا يُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ، فَقَالَ لَهُ صَاحِبُهُ: إِنْ شَاءَ اللَّهُ، فَلَمْ يَقُلْ، وَلَمْ تَحْمِلْ شَيْئًا إِلَّا وَاحِدًا، سَاقِطًا أَحَدُ شِقَّيْهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَوْ قَالَهَا لَجَاهَدُوا فِي سَبِيلِ اللَّهِ ” قَالَ شُعَيْبٌ وَابْنُ أَبِي الزِّنَادِ: تِسْعِينَ وَهُوَ أَصَحُّ


Bukhari-3423

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 40

அல்லாஹ் கூறுகிறான்:

தாவூதுக்கு சுலைமானை (மகனாக) வழங்கினோம். அவர் மிகச் சிறந்த அடியாராகவும் தம்முடைய இறைவனின் பக்கம் அதிகம் திரும்பக் கூடியவராகவும் திகழ்ந்தார். (38:30)

மேலும் காண்க இறை வசனங்கள்: 1) 38:35 2) 2:102 3) 34:12 4) 34:13 5) 34:14 6) 38:32 7) 38:33 8) 38:38 9) 38:31 10) 38:34 11) 38:39

3423. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பலம் பொருந்திய ஜின் ஒன்று நேற்றிரவு என் தொழுகையை (இடையில்) துண்டிப்பதற்காக திடீரென்று வந்து நின்றது. அல்லாஹ் எனக்கு அதை வசப்படுத்தித் தந்தான். நான் அதைப் பிடித்துக் கொண்டேன். நீங்கள் ஒவ்வொருவரும் அதைப் பார்ப்பதற்காக அதைப் பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் கட்டி வைக்க விரும்பினேன்.

அப்போது, என் சகோதரர் சுலைமான்(அலை) அவர்கள் செய்த, ‘என் இறைவா! எனக்குப் பின் வேறெவருக்கும் கிடைக்காத ஓர் அதிகாரத்தை எனக்கு வழங்குவாயாக!’ (திருக்குர்ஆன் 38:35) என்னும் பிரார்த்தனையை நினைவு கூர்ந்தேன். உடனே, அதைச் சபித்து எறியப்பட்டதாகத் திருப்பியனுப்பி விட்டேன். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 60


«إِنَّ عِفْرِيتًا مِنَ الجِنِّ تَفَلَّتَ البَارِحَةَ لِيَقْطَعَ عَلَيَّ صَلاَتِي، فَأَمْكَنَنِي اللَّهُ مِنْهُ فَأَخَذْتُهُ، فَأَرَدْتُ أَنْ أَرْبُطَهُ عَلَى سَارِيَةٍ مِنْ سَوَارِي المَسْجِدِ حَتَّى تَنْظُرُوا إِلَيْهِ كُلُّكُمْ، فَذَكَرْتُ دَعْوَةَ أَخِي سُلَيْمَانَ رَبِّ هَبْ لِي مُلْكًا لاَ يَنْبَغِي لِأَحَدٍ مِنْ بَعْدِي فَرَدَدْتُهُ خَاسِئًا» {عِفْرِيتٌ} [النمل: 39] مُتَمَرِّدٌ مِنْ إِنْسٍ أَوْ جَانٍّ، مِثْلُ زِبْنِيَةٍ جَمَاعَتُهَا الزَّبَانِيَةُ


Bukhari-3422

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3422. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

‘ஸாத்’ (என்னும் 38-வது) அத்தியாயத்தில் உள்ள இறை வசனத்திற்கு சுஜூது (சிர வணக்கம்) செய்வது, கட்டாயம் செய்யப்பட வேண்டிய(வை என்று கட்டளையிடப்பட்டுள்ள) சுஜூதுகளில் ஒன்றல்ல. ஆயினும், நபி(ஸல்) அவர்கள் (சூரத்து ஸாதின்) அந்த இடத்தில் (திருக்குர்ஆன் 38:24) சுஜூது செய்வதை பார்த்திருக்கிறேன்.
Book :60


«لَيْسَ ص مِنْ عَزَائِمِ السُّجُودِ، وَرَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْجُدُ فِيهَا»


Bukhari-3421

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 39

(அல்லாஹ் கூறுகிறான்:) (நபியே!) இவர்கள் பேசும் பேச்சுகளைப் பொறுத்துக் கொள்ளுங்கள். மேலும், பெரும் ஆற்றல்களைக் கொண்டிருந்த நம்முடைய அடியார் தாவூதின் வரலாற்றை இவர்களுக்கு நீங்கள் எடுத்துக் கூறுங்கள். அவர் (ஒவ்வொரு விவகாரத்திலும் அல்லாஹ்விடமே) திரும்பக் கூடியவராக இருந்தார். நாம் மலைகளை அவருக்கு வசப்படுத்திக் கொடுத்திருந்தோம். அவை காலையிலும், மாலையிலும் அவருடன் சேர்ந்து (இறைவனைத்) துதி செய்த வண்ணம் இருந்தன. பறவைகளும் ஒன்று திரண்டு வந்தன. அவை அனைத்தும் அல்லாஹ்வைத் துதிப்பதில் கவனம் செலுத்தக் கூடியனவாய் இருந்தன. நாம் அவருடைய அரசாட்சியை வலுப்படுத்தியிருந்தோம். நுண்ணறிவையும் அவருக்குக் கொடுத்திருந்தோம். மிக நுட்பமாகத் தீர்ப்பளிக்கும் ஆற்றலையும் நல்கியிருந்தோம்.

மேலும், சுவர் ஏறி மாடத்தில் நுழைந்த வழக்காளிகளின் செய்தி உங்களுக்கு வந்ததா?…நீங்கள் எங்களிடையே மிகச் சரியாகத் தீர்ப்பு வழங்குங்கள். நேர்மை தவறி விடாதீர்கள். எங்களுக்கு நேரான வழியைக் காட்டுங்கள். இதோ! இவர் என் சகோதரர். இவரிடம் தொண்ணூற்றொன்பது செம்மறி ஆடுகள் இருக்கின்றன. என்னிடமோ ஒரேயொரு செம்மறியாடுதான் இருக்கின்றது…. (38:17-24)

3421. முஜாஹித்(ரஹ்) அறிவித்தார்

நான், ‘ஸாத்’ (என்னும்

قُلْتُ لِابْنِ عَبَّاسٍ: أَنَسْجُدُ فِي ص؟ فَقَرَأَ: {وَمِنْ ذُرِّيَّتِهِ دَاوُدَ وَسُلَيْمَانَ} – حَتَّى أَتَى – {فَبِهُدَاهُمُ اقْتَدِهْ} [الأنعام: 90]. فَقَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: نَبِيُّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِمَّنْ أُمِرَ أَنْ يَقْتَدِيَ بِهِمْ


Bukhari-3420

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 38

அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான தொழுகை (இறைத்தூதர்) தாவூத்அவர்களுடைய தொழுகையாகும். அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான நோன்பு தாவூத் அவர்களுடைய நோன்பாகும்.

தாவூத் அவர்கள் பாதி இரவு (வரை) உறங்குவார்கள். அதில் மூன்றில் ஒரு பகுதி நேரம் நின்று வணங்குவார்கள். (பிறகு, மீண்டும்) அதில் ஆறில் ஒரு பகுதி நேரம் உறங்குவார்கள். ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் நோன்பை விட்டு விடுவார்கள்.

அலீ பின் அப்தில்லாஹ் அல் மதீனீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(இரவில்) ஆறில் ஒரு பகுதி நேரம் மீண்டும் உறங்குவார்கள் என்பதையே ஆயிஷா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் என்னிடம் தூங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தான் ஸஹ்ர் நேரம் வரும் என்று சொன்னது குறிக்கின்றது.

3420. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், ‘அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான நோன்பு தாவூத்(அலை) அவர்களின் நோன்பாகும். அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்று, ஒரு நாள் விட்டு விடுவார்கள். அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான தொழுகை தாவூத்(அலை) அவர்களின் தொழுகையாகும். அவர்கள் இரவில் பாதி நேரம் உறங்குவார்கள். அதில் மூன்றில் ஒரு பகுதி நேரம் நின்று வணங்குவார்கள். அதில்

«أَحَبُّ الصِّيَامِ إِلَى اللَّهِ صِيَامُ دَاوُدَ، كَانَ يَصُومُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمًا، وَأَحَبُّ الصَّلاَةِ إِلَى اللَّهِ صَلاَةُ دَاوُدَ، كَانَ يَنَامُ نِصْفَ اللَّيْلِ وَيَقُومُ ثُلُثَهُ، وَيَنَامُ سُدُسَهُ»


Bukhari-3419

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3419. அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், ‘நீங்கள் இரவில் நின்று வணங்குவதாகவும் பகலில் நோன்பு நோற்பதாகவும் எனக்குச் செய்தி கிடைத்ததே’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம் (உண்மைதான்!)’ என்றேன். அவர்கள், ‘நீங்கள் அப்படிச் செய்தால் உங்கள் கண்கள் பஞ்சடைந்து விடும்; மனம் களைப்படைந்து விடும். எனவே, ஒவ்வொரு மாதத்திலிருந்தும் மூன்று நாள்கள் நோன்பு நோற்பீராக! அது காலமெல்லாம் நோன்பு நோற்றதாகும்… அல்லது காலமெல்லாம் நோன்பு நோற்றதைப் போன்றதாகும்’ என்று கூறினார்கள்.

நான், ‘எனக்கு (இதை விட அதிகமாக நோற்பதற்கு) சக்தியிருப்பதாக நான் உணர்கிறேன்’ என்று சொன்னேன். உடனே, நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால், தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நோன்பை நீங்கள் நோற்பீராக! அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் விட்டு விடுவார்கள். (போர்க்காலத்தில் பகைவர்களைச்) சந்திக்கும்போது பின் வாங்கி ஓடமாட்டார்கள்’ என்று கூறினார்கள்.
Book :60


قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَمْ أُنَبَّأْ أَنَّكَ تَقُومُ اللَّيْلَ وَتَصُومُ النَّهَارَ» فَقُلْتُ: نَعَمْ، فَقَالَ: «فَإِنَّكَ إِذَا فَعَلْتَ ذَلِكَ هَجَمَتِ العَيْنُ، وَنَفِهَتِ النَّفْسُ، صُمْ مِنْ كُلِّ شَهْرٍ ثَلاَثَةَ أَيَّامٍ، فَذَلِكَ صَوْمُ الدَّهْرِ، أَوْ كَصَوْمِ الدَّهْرِ» قُلْتُ: إِنِّي أَجِدُ بِي، – قَالَ مِسْعَرٌ يَعْنِي قُوَّةً – قَالَ: «فَصُمْ صَوْمَ دَاوُدَ عَلَيْهِ السَّلاَمُ، وَكَانَ يَصُومُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمًا، وَلاَ يَفِرُّ إِذَا لاَقَى»


Bukhari-3418

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3418. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்

‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஆயுள் முழுவதும் பகலில் நோன்பு நோற்று இரவில் நின்று வணங்குவேன்’ என்று நான் கூறுவதாக இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், ‘நீங்கள் தான் ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஆயுள் முழுவதும் பகலில் நோன்பு நோற்று இரவில் நின்று வணங்குவேன்’ என்று கூறியதா என்று கேட்டார்கள்.

‘நான் அப்படிச் சொல்லத்தான் செய்தேன்’ என்று பதிலளித்தேன். நபி(ஸல்) அவர்கள், ‘உங்களால் அது முடியாது. எனவே, (சில சமயம்) நோன்பு வையுங்கள். (சில சமயம்) நோன்பை விடுங்கள். (இரவில்) நின்று வணங்குங்கள். தூங்கவும் செய்யுங்கள். மாதத்தில் மூன்று நாள்கள் நோன்பு வையுங்கள். ஏனெனில், ஒரு நற்செயலுக்கு அதைப் போன்று பத்து மடங்கு பிரதிபலன் அளிக்கப்படும். அதுவே காலம் முழுவதும் நோன்பு வைத்ததாகும்’ என்று கூறினார்கள்.

நான், ‘இதை விட அதிக நாள் நோற்பதற்கு எனக்கு சக்தியுண்டு இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறினேன். அதற்கு அவர்கள், ‘அப்படியென்றால் ஒரு நாள் நோன்பு நோற்று இரண்டு நாள்கள் நோன்பை விட்டு விடுங்கள்’ என்று கூறினார்கள். நான், ‘அதை விட அதிகத்திற்கு எனக்கு சக்தியுண்டு, இறைத்தூதர் அவர்களே!’ என்று சொன்னேன். அதற்கு

أُخْبِرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنِّي أَقُولُ: وَاللَّهِ لَأَصُومَنَّ النَّهَارَ، وَلَأَقُومَنَّ اللَّيْلَ مَا عِشْتُ ” فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنْتَ الَّذِي تَقُولُ وَاللَّهِ لَأَصُومَنَّ النَّهَارَ وَلَأَقُومَنَّ اللَّيْلَ مَا عِشْتُ» قُلْتُ: قَدْ قُلْتُهُ قَالَ: «إِنَّكَ لاَ تَسْتَطِيعُ ذَلِكَ، فَصُمْ وَأَفْطِرْ، وَقُمْ وَنَمْ، وَصُمْ مِنَ الشَّهْرِ ثَلاَثَةَ أَيَّامٍ، فَإِنَّ الحَسَنَةَ بِعَشْرِ أَمْثَالِهَا، وَذَلِكَ مِثْلُ صِيَامِ الدَّهْرِ» فَقُلْتُ: إِنِّي أُطِيقُ أَفْضَلَ مِنْ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «فَصُمْ يَوْمًا وَأَفْطِرْ يَوْمَيْنِ» قَالَ: قُلْتُ: إِنِّي أُطِيقُ أَفْضَلَ مِنْ ذَلِكَ، قَالَ: فَصُمْ يَوْمًا وَأَفْطِرْ يَوْمًا، وَذَلِكَ صِيَامُ دَاوُدَ وَهُوَ أَعْدَلُ الصِّيَامِ ” قُلْتُ إِنِّي أُطِيقُ أَفْضَلَ مِنْهُ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «لاَ أَفْضَلَ مِنْ ذَلِكَ»


Next Page » « Previous Page