Author: Farook

Bukhari-3417

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 36

  • (அல்லாஹ் கூறுகிறான்:)

கடற்கரை ஓரத்தில் அமைந்திருந்த ஓர் ஊரைப் பற்றியும் இவர்களிடம் நீங்கள் கேளுங்கள். அங்கு வாழ்ந்த மக்கள் சனிக் கிழமையில் இறைக்கட்டளையை மீறியதை (இவர்களுக்கு) நினைவூட்டுங்கள்.

அந்தச் சனிக் கிழமைகளில் அவர்களுடைய மீன்கள் தண்ணீரின் மேல் மட்டத்தில் உயர்ந்து அவர்களிடம் வரும். சனிக் கிழமை அல்லாத நாட்களில் அம்மீன்கள் அவ்வாறு வர மாட்டா. அவர்கள் கீழ்ப்படியாதிருந்த காரணத்தால் அவர்களை இவ்வாறு சோதனைக்குள்ளாக்கினோம்……பிறகு, அவர்கள் எந்தச் செயல்களைச் செய்யக் கூடாதென்று தடுக்கப்பட்டார்களோ அவற்றையே அவர்கள் ஆணவத்துடன் செய்து கொண்டிருந்த போது, நீங்கள் குரங்குகளாகி இழிவடைந்து விடுங்கள் என்று நாம் கூறினோம். (அல்குர்ஆன்: 7:163-166)


பாடம்: 37

  • அல்லாஹ் கூறுகிறான்:

(நபியே!) நூஹுக்கும் அவருக்குப் பின்னால் வந்த நபிமார்களுக்கும் நாம் வஹி-வேதவாக்கு அறித்தது போல திண்ணமாக உங்களுக்கும் நாம் வஹி அறிவித்துள்ளோம். மேலும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோருக்கும் மற்றும் யஅகூபின் வழித் தோன்றல்களுக்கும் ஈசா, அய்யூப், யூனுஸ், ஹாரூன் மற்றும் சுலைமான் ஆகியோருக்கும் நாம் வஹி அறிவித்திருக்கின்றோம்.

«خُفِّفَ عَلَى دَاوُدَ عَلَيْهِ السَّلاَمُ القُرْآنُ، فَكَانَ يَأْمُرُ بِدَوَابِّهِ فَتُسْرَجُ، فَيَقْرَأُ القُرْآنَ قَبْلَ أَنْ تُسْرَجَ دَوَابُّهُ، وَلاَ يَأْكُلُ إِلَّا مِنْ عَمَلِ يَدِهِ»


Bukhari-3416

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3416. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர், (என்னைப் பற்றி) நாள் யூனுஸ் இப்னு மத்தா அவர்களை விடச் சிறந்தவன் என்று கூறுவது அவருக்குத் தகாது. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :60


لاَ يَنْبَغِي لِعَبْدٍ أَنْ يَقُولَ: أَنَا خَيْرٌ مِنْ يُونُسَ بْنِ مَتَّى


Bukhari-3415

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3415. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யூனுஸ் இப்னு மத்தா(அலை) அவர்களை விட ஒருவர் சிறந்தவர் என்று நான் கூற மாட்டேன். (அதே அறிவிப்புத் தொடர்)
Book :60


وَلاَ أَقُولُ: إِنَّ أَحَدًا أَفْضَلُ مِنْ يُونُسَ بْنِ مَتَّى


Bukhari-3414

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3414. அபூ ஹுரைரா(ரலி) கூறினார்

யூதர் ஒருவர் (சந்தையில்) தம் சரக்கை எடுத்துக் காட்டியபோது மிகக் குறைந்த விலை அவருக்குக் கொடுக்கப்பட்டது. அதை அவர் விரும்பவில்லை. உடனே அவர், ‘(நான் இந்த விலையை வாங்கிக் கொள்ள) மாட்டேன்; மனிதர்கள் அனைவரையும் விட (சிறந்தவராக) மூஸாவைக் தேர்ந்தெடுத்தவன் மீது சத்தியமாக!’ என்று கூறினார். இதை அன்சாரிகளில் ஒருவர் கேட்டுவிட்டார். உடனே எழுந்து அந்த யூதரின் முகத்தில் அறைந்து, ‘நபி(ஸல்) அவர்கள் நமக்கிடையே வாழ்ந்து கொண்டிருக்க, ‘மனிதர்கள் அனைவரையும் விட மூஸாவைத் தேர்ந்தெடுத்தவன் மீது சத்தியமாக!’ என்றா நீ கூறுகிறாய்?’ என்று கேட்டார்.

உடனே அந்த யூதர் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, ‘அபுல் காசிம் அவர்களே! (என் உயிர்) உடைமை, மானத்தைப் பாதுகாப்பதாக) எனக்கு நீங்கள் பொறுப்பேற்று ஒப்பந்தம் செய்து தந்திருக்கிறீர்கள். என் முகத்தில் அறைந்தவரின் நிலை என்ன?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் அந்த முஸ்லிமை நோக்கி, ‘நீ ஏன் இவரின் முகத்தில் அறைந்தாய்?’ என்று கேட்டார்கள். அவர் விஷயத்தை நபி(ஸல்) அவர்களிடம் கூறினார். உடனே, நபி(ஸல்) அவர்களின் முகத்தில் கோபக்குறி தென்படுகிற அளவிற்கு அவர்கள் கோபமடைந்தார்கள்.

பிறகு, ‘அல்லாஹ்வின் நேசர்களுக்கிடையே (‘ஒருவர் மற்றவரை விடச் சிறப்பானவர்’

بَيْنَمَا يَهُودِيٌّ يَعْرِضُ سِلْعَتَهُ، أُعْطِيَ بِهَا شَيْئًا كَرِهَهُ، فَقَالَ: لاَ وَالَّذِي اصْطَفَى مُوسَى عَلَى البَشَرِ، فَسَمِعَهُ رَجُلٌ مِنَ الأَنْصَارِ، فَقَامَ فَلَطَمَ وَجْهَهُ، وَقَالَ: تَقُولُ: وَالَّذِي اصْطَفَى مُوسَى عَلَى البَشَرِ، وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ أَظْهُرِنَا؟ فَذَهَبَ إِلَيْهِ فَقَالَ: أَبَا القَاسِمِ، إِنَّ لِي ذِمَّةً وَعَهْدًا، فَمَا بَالُ فُلاَنٍ لَطَمَ وَجْهِي، فَقَالَ: «لِمَ لَطَمْتَ وَجْهَهُ» فَذَكَرَهُ، فَغَضِبَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى رُئِيَ فِي وَجْهِهِ، ثُمَّ قَالَ: ” لاَ تُفَضِّلُوا بَيْنَ أَنْبِيَاءِ اللَّهِ، فَإِنَّهُ يُنْفَخُ فِي الصُّورِ، فَيَصْعَقُ مَنْ فِي السَّمَوَاتِ وَمَنْ فِي الأَرْضِ، إِلَّا مَنْ شَاءَ اللَّهُ، ثُمَّ يُنْفَخُ فِيهِ أُخْرَى، فَأَكُونُ أَوَّلَ مَنْ بُعِثَ، فَإِذَا مُوسَى آخِذٌ بِالعَرْشِ، فَلاَ أَدْرِي أَحُوسِبَ بِصَعْقَتِهِ يَوْمَ الطُّورِ، أَمْ بُعِثَ قَبْلِي


Bukhari-3413

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3413. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

நான் யூனுஸ் இப்னு மத்தாவை விடச் சிறந்தவன் என்று (என்னைப் பற்றி) கூறுவது எந்த மனிதருக்கும் தகாது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(‘யூனுஸ் இப்னு மத்தா – மத்தாவின் மகன் யூனுஸ்’ என்று) யூனுஸ்(அலை) அவர்களை அவர்களின் தந்தையுடன் இணைத்து நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

Book :60


«مَا يَنْبَغِي لِعَبْدٍ أَنْ يَقُولَ إِنِّي خَيْرٌ مِنْ يُونُسَ بْنِ مَتَّى وَنَسَبَهُ إِلَى أَبِيهِ»


Bukhari-3412

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 33

(அல்லாஹ் கூறுகிறான்:)

உண்மையில், காரூன் மூஸாவின் சமுதாயத்தைச் சேர்ந்தவனாயிருந்தான். அவன் தன் சமூகத்திற்கு எதிராக வரம்பு மீறி நடந்தான். மேலும், நாம் அவனுக்கு எந்த அளவுக்கு செல்வக் கருவூலங்களை வழங்கியிருந்தோமெனில், அவற்றின் சாவிகளை பலசாலிகளின் ஒரு குழுவால் கூட சிரமப்பட்டுத் தான் தூக்க முடியும். ஒரு தடவை அவனுடைய சமூகத்தார் அவனிடம், நீ பூரித்துப் போய் விடாதே. ஏனெனில், பூரித்து விடுபவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. அல்லாஹ் உனக்கு வழங்கியுள்ள செல்வத்தின் மூலம் மறுமையின் வீட்டைப் பெற அக்கறை கொள்.

இம்மையிலும் உனது பங்கை மறந்து விடாதே. மேலும் அல்லாஹ் உனக்கு உபகாரம் செய்திருப்பதைப் போல் நீயும் உபகாரம் செய். மேலும், பூமியில் அராஜகம் விளைவிக்க முயற்சி செய்யாதே! அராஜகம் விளைவிப்பவர்களைத் திண்ணமாக அல்லாஹ் நேசிப்பதில்லை என்று கூறினார்கள்.

அதற்கவன், இவையனைத்தும் என்னிடமுள்ள அறிவினால்தான் எனக்குக் கிடைத்திருக்கின்றன! என்றான்- அவனுக்கு முன்னால் அவனைவிட அதிக வலிமையையும் ஆள் பலத்தையும் பெற்றிருந்த சமூகங்களை அல்லாஹ் அழித்திருக்கின்றான், என்பது இவனுக்குத் தெரியாதா? மேலும், குற்றவாளிகளிடம் (அவர்களைத் தண்டிக்கும் போது) அவர்களின்

لاَ يَقُولَنَّ أَحَدُكُمْ: إِنِّي خَيْرٌ مِنْ يُونُسَ

زَادَ مُسَدَّدٌ: «يُونُسَ بْنِ مَتَّى»


Bukhari-3411

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 32

அல்லாஹ் கூறுகிறான்:

அல்லாஹ் ஃபிர் அவ்னுடைய மனைவியை இறை நம்பிக்கையாளார்களுக்கான உதாரணமாகக் கூறுகிறான். ஒரு முறை அவர், என் அதிபதியே! எனக்காக உன்னிடம் சொர்க்கத்தில் ஓர் இல்லத்தை அமைத்துக் கொடுப்பாயாக! ஃபிர் அவ்னிடமிருந்தும் அவனது (தீய) செயலிலிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக! அக்கிரமம் புரியும் சமுதாயத்தாரிடமிருந்தும் என்னைக் காப் பாற்றுவாயாக! என்று அவர் பிரார்த்தித்தார்.

மேலும், இம்ரானின் மகள் மர்யமை (மற்றொரு) உதாரணமாக எடுத்துக் காட்டு கிறான். அவர் தம் வெட்கத் தலத்தைப் பாதுகாத்துக் கொண்டார். பிறகு, நாம் நம்மிடமிருந்து ஆவியை அவருக்குள் ஊதினோம். மேலும், அவர் தம் இறைவனின் அறிவுரைகளையும் அவனுடைய வேதங்களையும் உண்மையென ஏற்றுக் கொண்டார். மேலும், அவர் கீழ்ப்படிந்து வாழ்பவர்களில் ஒருவராயும் இருந்தார். (66:11, 12)

3411. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆண்களில் நிறையப் பேர் முழுமையடைந்திருக்கிறார்கள். பெண்களில் ஃபிர்அவ்னின் துணைவியார் ஆஸியாவையும் இம்ரானின் மகள் மர்யமையும் தவிர வேறெவரும் முழுமையடையவில்லை. மற்ற பெண்களை விட ஆயிஷாவுக்குள்ள சிறப்பு எல்லாவகை உணவுகளை விடவும் ‘ஸரீத்’ உணவுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும்.’

كَمَلَ مِنَ الرِّجَالِ كَثِيرٌ، وَلَمْ يَكْمُلْ مِنَ النِّسَاءِ: إِلَّا آسِيَةُ امْرَأَةُ فِرْعَوْنَ، وَمَرْيَمُ بِنْتُ عِمْرَانَ، وَإِنَّ فَضْلَ عَائِشَةَ عَلَى النِّسَاءِ كَفَضْلِ الثَّرِيدِ عَلَى سَائِرِ الطَّعَامِ


Bukhari-3410

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3410. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் புறப்பட்டு வந்து, ‘(மிஅராஜுடைய இரவில்) பல சமுதாயங்கள் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டன. அடி வானத்தை அடைத்த படி ஏராளமான மக்களை கண்டேன். அப்போது, ‘தம் சமுதாயத்தினரிடையே மூஸா(அலை) அவர்கள் இருக்கும் காட்சி தான் இது’ என்று (எனக்குக்) கூறப்பட்டது.
Book :60


خَرَجَ عَلَيْنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَوْمًا قَالَ: ” عُرِضَتْ عَلَيَّ الأُمَمُ، وَرَأَيْتُ سَوَادًا كَثِيرًا سَدَّ الأُفُقَ، فَقِيلَ: هَذَا مُوسَى فِي قَوْمِهِ


Bukhari-3409

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

3409. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

(தடை செய்யப்பட்ட மரத்திலிருந்து சாப்பிட்ட) ஆதமும், மூஸாவும் தர்க்கித்தார்கள். ஆதமிடம் மூஸா, ‘உங்கள் தவறு உங்களை சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியதே அந்த ஆதம் நீங்கள் தானோ?’ என்று கேட்டார்கள். அதற்கு ஆதம் மூஸாவிடம், ‘நீங்கள் அல்லாஹ், தன் தூதுத்துவச் செய்திகளை அனுப்பிடவும் தன்னுடன் உரையாடவும் தேர்ந்தெடுத்த மூஸா ஆவீர். இருந்தும், நான் படைக்கப்படுவதற்கு முன்பே என் மீது விதிக்கப்பட்ட ஒரு விஷயத்திற்காக என்னைப் நீங்கள் பழிக்கிறீர்களே!’ என்று கேட்டார்கள்.


‘இதை கூறிய பின் நபி (ஸல்) அவர்கள், ‘ஆக, ஆதம் விவாதத்தில் மூஸாவை வென்றுவிட்டார்கள்’ என்று இருமுறை கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 60


احْتَجَّ آدَمُ وَمُوسَى، فَقَالَ لَهُ مُوسَى: أَنْتَ آدَمُ الَّذِي أَخْرَجَتْكَ خَطِيئَتُكَ مِنَ الجَنَّةِ، فَقَالَ لَهُ آدَمُ: أَنْتَ مُوسَى الَّذِي اصْطَفَاكَ اللَّهُ بِرِسَالاَتِهِ وَبِكَلاَمِهِ، ثُمَّ تَلُومُنِي عَلَى أَمْرٍ قُدِّرَ عَلَيَّ قَبْلَ أَنْ أُخْلَقَ ” فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَحَجَّ آدَمُ مُوسَى مَرَّتَيْنِ»


Bukhari-3408

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3408. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

முஸ்லிம்களில் ஒருவரும் யூதர்களில் ஒருவரும் (ஒருவரோடொருவர்) சச்சரவிட்டார்கள். அந்த முஸ்லிம், ‘அகிலத்தார் அனைவரை விடவும் முஹம்மதை (சிறந்தவராக்கித்) தேர்ந்தெடுத்தவன் மீதாணையாக!’ என்று அவர் செய்த ஒரு சத்தியத்தின்போது கூறினார். அந்த யூதர், ‘அகிலத்தார் அனைவரை விடவும் மூஸா(அலை) அவர்களை (சிறந்தவராகத்) தேர்ந்தெடுத்தவன் மீது சத்தியமாக!’ என்று கூறினார்.

(யூதரின்) இச்சொல்லைக் கேட்டபோது அந்த முஸ்லிம் தம் கையை உயர்த்தி யூதரை அறைந்துவிட்டார். உடனே, அந்த யூதர் நபி(ஸல்) அவர்களிடம் சென்று நடந்த, தன்னுடைய விவகாரத்தையும் அந்த முஸ்லிமின் விவகாரத்தையும் தெரிவித்தார்.

அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘மூஸாவைவிடச் சிறந்தவராக என்னை ஆக்காதீர்கள் . ஏனெனில், (மறுமை நாளில்) மக்கள் மூர்ச்சையுற்று (கீழே) விழுந்து விடுவார்கள். அப்போது, நானே மயக்கம் தெளி(ந்து எழு)பவர்களில் முதல் ஆளாக இருப்பேன். அந்த நேரத்தில் மூஸா இறை சிம்மாசனத்தின் ஓர் ஓரத்தைப் பிடித்துக் கொண்டிருப்பார்கள்.

اسْتَبَّ رَجُلٌ مِنَ المُسْلِمِينَ وَرَجُلٌ مِنَ اليَهُودِ، فَقَالَ المُسْلِمُ : وَالَّذِي اصْطَفَى مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى العَالَمِينَ، فِي قَسَمٍ يُقْسِمُ بِهِ، فَقَالَ اليَهُودِيُّ: وَالَّذِي اصْطَفَى مُوسَى عَلَى العَالَمِينَ، فَرَفَعَ المُسْلِمُ عِنْدَ ذَلِكَ يَدَهُ فَلَطَمَ اليَهُودِيَّ، فَذَهَبَ اليَهُودِيُّ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَهُ الَّذِي كَانَ مِنْ أَمْرِهِ وَأَمْرِ المُسْلِمِ، فَقَالَ «لاَ تُخَيِّرُونِي عَلَى مُوسَى، فَإِنَّ النَّاسَ يَصْعَقُونَ، فَأَكُونُ أَوَّلَ مَنْ يُفِيقُ، فَإِذَا مُوسَى بَاطِشٌ بِجَانِبِ العَرْشِ، فَلاَ أَدْرِي أَكَانَ فِيمَنْ صَعِقَ فَأَفَاقَ قَبْلِي، أَوْ كَانَ مِمَّنِ اسْتَثْنَى اللَّهُ»