Author: Farook

Bukhari-3407

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 30

(அல்லாஹ் கூ.றுகிறான்:) மேலும், இந்தச் சந்தர்ப்பத்தை நினைவு கூருங்கள்: மூசா தம் சமூகத்தாரிடம், ஒரு பசுவை நீங்கள் அறுக்க வேண்டும் என்று அல்லாஹ் நிச்சயமாக உங்களுக்குக் கட்டளையிடுகின்றான் எனக் கூறினார். (அப்போது அவர்கள், மூசாவே!) நீர் எங்களை கேலி செய்கிறீரா? என்றார்கள். அதற்கு அவர், நான் (அவ்வாறு பேசி) அறிவீனர்களில் ஒருவனாகி விடுவதிலிருந்து இறைவனிடம் பாதுகாவல் தேடுகிறேன் என்றார்.

அவர்கள் கூறினார்கள்: அது(பசு) எத்தன்மையுடையது என எங்களுக்கு விவரிக்கும்படி உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக! அதற்கு அவர், நிச்சயமாக அது கிழடாகவோ, கன்றாகவோ இல்லாமல் நடு வயதுள்ளதாய் இருக்க வேண்டும் என இறைவன் கூறுகின்றான்; எனவே, உங்களுக்கு இடப்படுகின்ற கட்டளையைச் செயல் படுத்துங்கள்! என்றார்.

மீண்டும் அவர்கள் கூறினார்கள்: (மூசாவே!) அதன் நிறம் என்ன என்று எங்களுக்கு விவரிக்குமாறு உமது இறைவனிடம் நீர் வேண்டுவீராக! அதற்கு அவர், நிச்சயமாக அது மஞ்சள் நிறமான பசுவாக இருக்க வேண்டும்; அதன் நிறம் பார்ப்பவர்களை பரவசப்படுத்தும் வண்ணம் (அடர்த்தியாக) இருக்க வேண்டும்! என்றார்.

அதற்கு அவர்கள் கூறினார்கள்: (மூசாவே!) அது எத்தன்மையுடையது என (மிக மிகத்) தெளிவாக எங்களுக்கு

أُرْسِلَ مَلَكُ المَوْتِ إِلَى مُوسَى عَلَيْهِمَا السَّلاَمُ، فَلَمَّا جَاءَهُ صَكَّهُ، فَرَجَعَ إِلَى رَبِّهِ، فَقَالَ: أَرْسَلْتَنِي إِلَى عَبْدٍ لاَ يُرِيدُ المَوْتَ، قَالَ: ارْجِعْ إِلَيْهِ فَقُلْ لَهُ يَضَعُ يَدَهُ عَلَى مَتْنِ ثَوْرٍ، فَلَهُ بِمَا غَطَّتْ يَدُهُ بِكُلِّ شَعَرَةٍ سَنَةٌ، قَالَ: أَيْ رَبِّ، ثُمَّ مَاذَا؟ قَالَ: ثُمَّ المَوْتُ، قَالَ: فَالْآنَ، قَالَ: فَسَأَلَ اللَّهَ أَنْ يُدْنِيَهُ مِنَ الأَرْضِ المُقَدَّسَةِ رَمْيَةً بِحَجَرٍ، قَالَ أَبُو هُرَيْرَةَ: فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ كُنْتُ ثَمَّ لَأَرَيْتُكُمْ قَبْرَهُ، إِلَى جَانِبِ الطَّرِيقِ تَحْتَ الكَثِيبِ الأَحْمَرِ» قَالَ وَأَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامٍ، حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ


Bukhari-3406

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 29

(அல்லாஹ் கூறுகிறான்:) நாம் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களை கடலைக் கடக்க வைத்தோம். பின்னர் (அவர்கள் தமது பயணத்தைத் தொடர்ந்த போது) தம் சிலைகள் மீது பக்தி கொண்டிருந்த ஒரு சமுதாயத்தை அவர்கள் கடந்து செல்ல நேர்ந்தது.

அவர்கள், மூசாவே! இம் மக்களுக்குக் கடவுள்கள் இருப்பதுபோல் எங்களுக்கும் ஒரு கடவுளை உருவாக்கிக் கொடுங்கள் என்று கூறலானார்கள். அதற்கு மூசா நீங்கள் அறியாத மக்களாய் இருக்கிறீர்கள். இவர்கள் பின்பற்றிக் கொண்டிருக்கும் வழிமுறை அழிந்து போகக் கூடியதாகும். இவர்கள் செய்து கொண்டிருப்பவை முற்றிலும் வீணானவை என்று கூறினார். (7:138) மேலும் காண்க: 1) 7:139 2) 17:7

3406. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் (‘மர்ருழ் ழஹ்ரான்’ என்னுமிடத்தில்) ‘அராக்’ (மிஸ்வாக்) மரத்தின் பழங்களைப் பறித்துக் கொண்டிருந்தோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அதில் கருப்பான பழத்தை நீங்கள் பறியுங்கள்.

ஏனெனில், அதுதான்

كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَجْنِي الكَبَاثَ، وَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «عَلَيْكُمْ بِالأَسْوَدِ مِنْهُ، فَإِنَّهُ أَطْيَبُهُ» قَالُوا: أَكُنْتَ تَرْعَى الغَنَمَ؟ قَالَ: «وَهَلْ مِنْ نَبِيٍّ إِلَّا وَقَدْ رَعَاهَا»


Bukhari-3405

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3405. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை (போரில் கிடைத்த பொருட்களைப்) பங்கிட்டார்கள். அப்போது ஒருவர், ‘நிச்சயம் இது அல்லாஹ்வின் திருமுகம் (திருப்தி) நாடப்படாத பங்கீடாகும்’ என்று (அதிருப்தியுடன் கூறினார். நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்று அதைத் தெரிவித்தேன்.

(அதைக் கேட்டு) அவர்கள் கோபமடைந்தார்கள். எந்த அளவிற்கென்றால் கோப(த்தின் அடையாள)த்தை நான் அவர்களின் முகத்தில் கண்டேன். பிறகு, ‘மூஸா(அலை) அவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! இதை விட மிக அதிகமாக அவர் புண்படுத்தப்பட்டார்; இருப்பினும் அவர் (பொறுமையுடன்) சகித்துக் கொண்டார்’ என்று கூறினார்கள்.
Book :60


قَسَمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَسْمًا، فَقَالَ رَجُلٌ: إِنَّ هَذِهِ لَقِسْمَةٌ مَا أُرِيدَ بِهَا وَجْهُ اللَّهِ، فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرْتُهُ، فَغَضِبَ حَتَّى رَأَيْتُ الغَضَبَ فِي وَجْهِهِ، ثُمَّ قَالَ: يَرْحَمُ اللَّهَ مُوسَى، قَدْ أُوذِيَ بِأَكْثَرَ مِنْ هَذَا فَصَبَرَ


Bukhari-3404

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3404. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூஸா (அலை) அவர்கள் மிகவும் வெட்கப்படுபவர்களாகவும் அதிகமாக (தம் உடலை) மறைத்துக் கொள்பவர்களாகவும் இருந்தார்கள். அவர்களின் மேனியிலிருந்து சிறிதளவு கூட வெளியே தெரியாது. அவர்கள் (அதிகமாக) வெட்கப்பட்ட காரணத்தால் தான் இப்படி தம் உடலை அவர்கள் மறைத்துக் கொண்டார்கள்.

அப்போது, பனூ இஸ்ராயீல்களில் அவர்களுக்கு மனவேதனை தர விரும்பியவர்கள் அவர்களுக்குத் துன்பம் தந்தனர்; ‘இவருடைய சருமத்தில் ஏதோ குறைபாடு இருப்பதால் தான் இந்த அளவிற்கு இவர் (தன் மேனியை) மறைத்துக் கொள்கிறார். (இவருக்குக்) தொழு நோய் இருக்கவேண்டும்; அல்லது குடலிறக்க நோய் இருக்க வேண்டும்’ என்று கூறினார்கள்.

மூஸா (அலை) அவர்களைப் பற்றி அவர்கள் சொன்ன குறைகளிலிருந்து அவர் தூய்மையானவர் என்று நிரூபித்திட அல்லாஹ் விரும்பினான். எனவே, (இறைவனின் திட்டப்படி) ஒரு நாள் மூஸா (அலை) அவர்கள் மட்டும் (குளிக்குமிடத்திற்குத்) தனியாகச் சென்று, தம் ஆடைகளை (கழற்றிக்) கல்லின் மீது வைத்துவிட்டுப் பிறகு குளித்தார்கள். குளித்து முடித்தவுடன் தம் துணிகளை எடுத்துக் கொள்வதற்காக அவற்றை நோக்கிச் சென்றார்கள். அப்போது அந்தக் கல் அவர்களின் துணியுடன் ஓடலாயிற்று.

மூஸா (அலை) அவர்கள், தம் தடியை எடுத்துக் கொண்டு கல்லை விரட்டிப்பிடிக்க

إِنَّ مُوسَى كَانَ رَجُلًا حَيِيًّا سِتِّيرًا، لاَ يُرَى مِنْ جِلْدِهِ شَيْءٌ اسْتِحْيَاءً مِنْهُ، فَآذَاهُ مَنْ آذَاهُ مِنْ بَنِي إِسْرَائِيلَ فَقَالُوا: مَا يَسْتَتِرُ هَذَا التَّسَتُّرَ، إِلَّا مِنْ عَيْبٍ بِجِلْدِهِ: إِمَّا بَرَصٌ وَإِمَّا أُدْرَةٌ: وَإِمَّا آفَةٌ، وَإِنَّ اللَّهَ أَرَادَ أَنْ يُبَرِّئَهُ مِمَّا قَالُوا لِمُوسَى، فَخَلاَ يَوْمًا وَحْدَهُ، فَوَضَعَ ثِيَابَهُ عَلَى الحَجَرِ، ثُمَّ اغْتَسَلَ، فَلَمَّا فَرَغَ أَقْبَلَ إِلَى ثِيَابِهِ لِيَأْخُذَهَا، وَإِنَّ الحَجَرَ عَدَا بِثَوْبِهِ، فَأَخَذَ مُوسَى عَصَاهُ وَطَلَبَ الحَجَرَ، فَجَعَلَ يَقُولُ: ثَوْبِي حَجَرُ، ثَوْبِي حَجَرُ، حَتَّى انْتَهَى إِلَى مَلَإٍ مِنْ بَنِي إِسْرَائِيلَ، فَرَأَوْهُ عُرْيَانًا أَحْسَنَ مَا خَلَقَ اللَّهُ، وَأَبْرَأَهُ مِمَّا يَقُولُونَ، وَقَامَ الحَجَرُ، فَأَخَذَ ثَوْبَهُ فَلَبِسَهُ، وَطَفِقَ بِالحَجَرِ ضَرْبًا بِعَصَاهُ، فَوَاللَّهِ إِنَّ بِالحَجَرِ لَنَدَبًا مِنْ أَثَرِ ضَرْبِهِ، ثَلاَثًا أَوْ أَرْبَعًا أَوْ خَمْسًا، فَذَلِكَ قَوْلُهُ: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تَكُونُوا كَالَّذِينَ آذَوْا مُوسَى فَبَرَّأَهُ اللَّهُ مِمَّا قَالُوا وَكَانَ عِنْدَ اللَّهِ وَجِيهًا


Bukhari-3403

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் 28

3403. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பனூ இஸ்ராயீல்களுக்கு, ‘(ஊருக்குள் நுழையும்போது) அதன் வாசலில், சிரம் தாழ்த்தியபடியும் ‘ஹித்தத்துன்’ (‘பாவ மன்னிப்புக்கோருகிறோம்’) என்று சொல்லிய படியும் நுழையுங்கள்’ என்று கட்டளையிடப்பட்டது.

ஆனால், அவர்கள் (ஹித்தத்துன்’ என்னும் சொல்லை ‘ஹின்தத்துன் – கோதுமை என்று) மாற்றிவிட்டார்கள்; தங்கள் புட்டங்களால் தவழ்ந்த படி (ஊருக்குள்) நுழைந்தார்கள்; மேலும், ஒரு வாற்கோதுமைக்குள் ஒரு தானியவிதை என்று கூறினார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 60


قِيلَ لِبَنِي إِسْرَائِيلَ: {ادْخُلُوا البَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ} [البقرة: 58] فَبَدَّلُوا، فَدَخَلُوا يَزْحَفُونَ عَلَى أَسْتَاهِهِمْ، وَقَالُوا: حَبَّةٌ فِي شَعْرَةٍ


Bukhari-3402

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3402. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

களிர்(அலை) அவர்கள் ஒரு காய்ந்த பொட்டல் பூமியின் மீது அமர்ந்தார்கள். உடனே, அவர்களுக்குப் பின்னே அது பசுமையான (கதிர்களுடைய)தாக (உயிர்பெற்று) அசையலாயிற்று. எனவேதான் அவர்களுக்கு ‘களிர்’ (பசுமையானவர்) என்று பெயரிடப்பட்டது. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இந்த நபிமொழி முழுவதுமாக சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Book :60


«إِنَّمَا سُمِّيَ الخَضِرَ أَنَّهُ جَلَسَ عَلَى فَرْوَةٍ بَيْضَاءَ، فَإِذَا هِيَ تَهْتَزُّ مِنْ خَلْفِهِ خَضْرَاءَ»


Bukhari-3401

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3401. ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “நவ்ஃப் அல்பக்காலீ என்பவர், களிர் (அலை) அவர்களின் தோழரான மூஸா (அலை) அவர்கள் இஸ்ரவேலர்களின் (இறைத் தூதரான) மூஸா (அலை) அவர்கள் அல்ல; அவர் வேறொரு மூஸா தான் என்று கருதுகிறார்” என்று சொன்னேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் பகைவன் பொய் சொல்லிவிட்டான்.

உபை பின் கஅப் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடமிருந்து (கீழ்க்கண்டவாறு) நமக்கு அறிவித்து உள்ளார்கள் என்று கூறினார்:

(ஒருமுறை) மூஸா (அலை) அவர்கள் இஸ்ரவேலர்களிடையே எழுந்து நின்று உரையாற்றினார்கள். அப்போது அவர்களிடம், “மக்களிடையே மிகவும் அறிந்தவர் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘நான்தான்” என்று பதிலளித்து விட்டார்கள். ஆகவே, அவர்களை அல்லாஹ் கண்டித்தான். ஏனெனில், மூஸா (அலை) அவர்கள், ‘‘அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்” என்று சொல்லாமல் விட்டுவிட்டார்கள்.

ஆகவே, அல்லாஹ், மூஸா (அலை) அவர்களிடம், “இல்லை. இரு கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் என் அடியார் ஒருவர் இருக்கிறார். அவர் உங்களைவிட அதிகமாக அறிந்தவர்” என்று சொன்னான். மூஸா (அலை) அவர்கள், ‘‘என் இறைவா! அவரை நான் சந்திப்பதற்கு யார்

قُلْتُ لِابْنِ عَبَّاسٍ: إِنَّ نَوْفًا البَكَالِيَّ يَزْعُمُ: أَنَّ مُوسَى صَاحِبَ الخَضِرِ لَيْسَ هُوَ مُوسَى بَنِي إِسْرَائِيلَ، إِنَّمَا هُوَ مُوسَى آخَرُ، فَقَالَ: كَذَبَ عَدُوُّ اللَّهِ، حَدَّثَنَا أُبَيُّ بْنُ كَعْبٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” أَنَّ مُوسَى قَامَ خَطِيبًا فِي بَنِي إِسْرَائِيلَ، فَسُئِلَ أَيُّ النَّاسِ أَعْلَمُ؟ فَقَالَ: أَنَا، فَعَتَبَ اللَّهُ عَلَيْهِ، إِذْ لَمْ يَرُدَّ العِلْمَ إِلَيْهِ، فَقَالَ لَهُ: بَلَى، لِي عَبْدٌ بِمَجْمَعِ البَحْرَيْنِ هُوَ أَعْلَمُ مِنْكَ قَالَ: أَيْ رَبِّ وَمَنْ لِي بِهِ؟

– وَرُبَّمَا قَالَ سُفْيَانُ، أَيْ رَبِّ، وَكَيْفَ لِي بِهِ؟ –

قَالَ: تَأْخُذُ حُوتًا، فَتَجْعَلُهُ فِي مِكْتَلٍ، حَيْثُمَا فَقَدْتَ  الحُوتَ فَهُوَ ثَمَّ،

– وَرُبَّمَا قَالَ: فَهُوَ ثَمَّهْ -،

وَأَخَذَ حُوتًا فَجَعَلَهُ فِي مِكْتَلٍ، ثُمَّ انْطَلَقَ هُوَ وَفَتَاهُ يُوشَعُ بْنُ نُونٍ، حَتَّى إِذَا أَتَيَا الصَّخْرَةَ وَضَعَا رُءُوسَهُمَا، فَرَقَدَ مُوسَى وَاضْطَرَبَ الحُوتُ فَخَرَجَ، فَسَقَطَ فِي البَحْرِ فَاتَّخَذَ سَبِيلَهُ فِي البَحْرِ سَرَبًا، فَأَمْسَكَ اللَّهُ عَنِ الحُوتِ جِرْيَةَ المَاءِ، فَصَارَ مِثْلَ الطَّاقِ، فَقَالَ: هَكَذَا مِثْلُ الطَّاقِ، فَانْطَلَقَا يَمْشِيَانِ بَقِيَّةَ لَيْلَتِهِمَا وَيَوْمَهُمَا، حَتَّى إِذَا كَانَ مِنَ الغَدِ قَالَ لِفَتَاهُ: آتِنَا غَدَاءَنَا، لَقَدْ لَقِينَا مِنْ سَفَرِنَا هَذَا نَصَبًا، وَلَمْ يَجِدْ مُوسَى النَّصَبَ حَتَّى جَاوَزَ حَيْثُ أَمَرَهُ اللَّهُ، قَالَ لَهُ فَتَاهُ: (أَرَأَيْتَ إِذْ أَوَيْنَا إِلَى الصَّخْرَةِ فَإِنِّي نَسِيتُ الحُوتَ وَمَا أَنْسَانِيهِ إِلَّا الشَّيْطَانُ أَنْ أَذْكُرَهُ وَاتَّخَذَ سَبِيلَهُ فِي البَحْرِ عَجَبًا) فَكَانَ لِلْحُوتِ سَرَبًا وَلَهُمَا عَجَبًا، قَالَ لَهُ مُوسَى: (ذَلِكَ مَا كُنَّا نَبْغِي فَارْتَدَّا عَلَى آثَارِهِمَا قَصَصًا)، رَجَعَا يَقُصَّانِ آثَارَهُمَا، حَتَّى انْتَهَيَا إِلَى الصَّخْرَةِ،

فَإِذَا رَجُلٌ مُسَجًّى بِثَوْبٍ، فَسَلَّمَ مُوسَى فَرَدَّ عَلَيْهِ، فَقَالَ وَأَنَّى بِأَرْضِكَ السَّلاَمُ؟ قَالَ: أَنَا مُوسَى، قَالَ: مُوسَى بَنِي إِسْرَائِيلَ قَالَ: نَعَمْ، أَتَيْتُكَ لِتُعَلِّمَنِي مِمَّا عُلِّمْتَ رُشْدًا، قَالَ: يَا مُوسَى: إِنِّي عَلَى عِلْمٍ مِنْ عِلْمِ اللَّهِ عَلَّمَنِيهِ اللَّهُ لاَ تَعْلَمُهُ، وَأَنْتَ عَلَى عِلْمٍ مِنْ عِلْمِ اللَّهِ عَلَّمَكَهُ اللَّهُ لاَ أَعْلَمُهُ، قَالَ: هَلْ أَتَّبِعُكَ؟ قَالَ: {إِنَّكَ لَنْ تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا. وَكَيْفَ تَصْبِرُ عَلَى مَا لَمْ تُحِطْ بِهِ خُبْرًا} [الكهف: 68]- إِلَى قَوْلِهِ – {إِمْرًا} [الكهف: 71] فَانْطَلَقَا يَمْشِيَانِ عَلَى سَاحِلِ البَحْرِ، فَمَرَّتْ بِهِمَا سَفِينَةٌ كَلَّمُوهُمْ أَنْ يَحْمِلُوهُمْ، فَعَرَفُوا الخَضِرَ فَحَمَلُوهُ بِغَيْرِ نَوْلٍ، فَلَمَّا رَكِبَا فِي السَّفِينَةِ جَاءَ عُصْفُورٌ، فَوَقَعَ عَلَى حَرْفِ السَّفِينَةِ فَنَقَرَ فِي البَحْرِ


Bukhari-3400

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 26 தூஃபான் என்பது பெரு வெள்ளமாகும். தொடர் இறப்புக்கும் தூஃபான் என்பர். இறை வசனங்கள்:- 1) 7:133 2) 7:105 3) 7: 149

பாடம் : 27 மூசா (அலை) அவர்களுடன் களிர் (அலை) அவர்கள் சந்தித்த நிகழ்ச்சி. 

3400. உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அறிவித்தார்

இப்னு அப்பாஸ்(ரலி) ஹுர்ரு இப்னு கைஸ் அல்ஃபஸாரீ(ரலி) அவர்களுடன் மூஸா(அலை) அவர்களின் தோழர் யார் என்னும் விஷயத்தில் தர்க்கித்தார்கள். இப்னு அப்பாஸ்(ரலி), ‘அவர் கிள்ர்(அலை) அவர்கள் தாம்’ என்று கூறினார்கள். அவர்கள் இருவரையும் உபை இப்னு கஅப்(ரலி) கடந்து சென்றார்கள். இப்னு அப்பாஸ்(ரலி), உபை இப்னு கஅப் அவர்களை அழைத்து, ‘நானும் என்னுடைய இந்தத் தோழரும், தாம் சந்திக்க விருப்பவரிடம் செல்ல வேண்டிய பாதையை விசாரித்த மூஸா(அலை) அவர்களின் (சந்திப்புக்குரிய) தோழரைக் குறித்து தர்க்கித்தோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், அவரைப் பற்றிக் கூற நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?’ என்று வினவினார்கள்.

அதற்கு உபை இப்னு கஅப்(ரலி), ‘ஆம்; இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறக் கேட்டேன்’ என்றார்கள். பனூ இஸ்ராயீல் குலத்தாரின் பிரமுகர்கள் நிறைந்த ஓர் அவையில் ஒருவர் வந்து, மூஸா(அலை) அவர்களிடம், ‘உங்களை விட அதிகமாக அறிந்தவர் எவரையாவது உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டார். மூஸா(அலை)

أَنَّهُ تَمَارَى هُوَ وَالحُرُّ بْنُ قَيْسٍ الفَزَارِيُّ، فِي صَاحِبِ مُوسَى، قَالَ ابْنُ عَبَّاسٍ: هُوَ خَضِرٌ، فَمَرَّ بِهِمَا أُبَيُّ بْنُ كَعْبٍ، فَدَعَاهُ ابْنُ عَبَّاسٍ فَقَالَ: إِنِّي تَمَارَيْتُ أَنَا وَصَاحِبِي هَذَا فِي صَاحِبِ مُوسَى، الَّذِي سَأَلَ السَّبِيلَ إِلَى لُقِيِّهِ، هَلْ سَمِعْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَذْكُرُ شَأْنَهُ؟ قَالَ: نَعَمْ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” بَيْنَمَا مُوسَى فِي مَلَإٍ مِنْ بَنِي إِسْرَائِيلَ، جَاءَهُ رَجُلٌ فَقَالَ: هَلْ تَعْلَمُ أَحَدًا أَعْلَمَ مِنْكَ؟ قَالَ: لاَ، فَأَوْحَى اللَّهُ إِلَى مُوسَى: بَلَى، عَبْدُنَا خَضِرٌ، فَسَأَلَ مُوسَى السَّبِيلَ إِلَيْهِ، فَجُعِلَ لَهُ الحُوتُ آيَةً، وَقِيلَ لَهُ إِذَا فَقَدْتَ الحُوتَ فَارْجِعْ فَإِنَّكَ سَتَلْقَاهُ، فَكَانَ يَتْبَعُ أَثَرَ الحُوتِ فِي البَحْرِ، فَقَالَ لِمُوسَى فَتَاهُ: (أَرَأَيْتَ إِذْ أَوَيْنَا إِلَى الصَّخْرَةِ فَإِنِّي نَسِيتُ الحُوتَ، وَمَا أَنْسَانِيهِ إِلَّا الشَّيْطَانُ أَنْ أَذْكُرَهُ)، فَقَالَ مُوسَى: {ذَلِكَ مَا كُنَّا نَبْغِ} [الكهف: 64]، فَارْتَدَّا عَلَى آثَارِهِمَا قَصَصًا، فَوَجَدَا خَضِرًا، فَكَانَ مِنْ شَأْنِهِمَا الَّذِي قَصَّ اللَّهُ فِي كِتَابِهِ


Bukhari-3399

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3399. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பனூ இஸ்ராயீல் குலத்தார் மட்டும் இருந்திராவிட்டால், இறைச்சி துர்நாற்றமெடுக்காது. ஹவ்வா (ஏவாள்) அவர்கள் மட்டும் இருந்திராவிட்டால் பெண், தன் கணவனை எக்காலத்திலும் (ஆசையூட்டி) ஏமாற்ற மாட்டாள்) . என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.
Book :60


«لَوْلاَ بَنُو إِسْرَائِيلَ لَمْ يَخْنَزِ اللَّحْمُ، وَلَوْلاَ حَوَّاءُ لَمْ تَخُنْ أُنْثَى زَوْجَهَا الدَّهْرَ»


Bukhari-3398

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 25

அல்லாஹ் கூறுகிறான்:

நாம் மூசாவுக்கு முப்பது இரவுகளை (நாள்களை) வாக்களித்(து சினாய் மலைக்கு அழைத்)தோம். இவ்வாறு, நாற்பது இரவுகள் என்று அவருடைய இறைவன் நிர்ணயித்த தவணை முழுமை அடைந்தது. மூசா (சினாய் மலைக்குச் சென்றபோது) தம் சகோதரர் ஹாரூனிடம், நான் சென்ற பிறகு நீர் என்னுடைய கூட்டத்தாரிடையே என் பிரதிநிதியாக இருந்து, சீராகச் செயல் புரிந்து வருவீராக! மேலும், குழப்பம் விளைவிப் போரின் நடைமுறையினை மேற் கொள்ளாதீர்! என்று கூறினார்.

நாம் குறிப்பிட்டிருந்த நேரத்தில் மூசா வந்தார். பிறகு அவருடைய இறைவன் அவரிடம் உரையாடிய போது அவர் வேண்டினார்: என் இறைவா! எனக்கு நீ காட்சி அளிப்பாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும்.

அதற்கு இறைவன் கூறினான்: என்னை நீர் காண முடியாது. ஆயினும் (எதிரிலுள்ள) மலையைப் பாரும்! அது தனது இருப்பிடத்தில் நிலைத்திருந்தால், என்னை நீர் காண முடியும். அவருடைய இறைவன் அம்மலையின் மீது வெளிப்பட்ட போது அது பொடிப் பொடியாகி விட்டது. மூசாவும் திடுக்கிட்டு மயங்கி விழுந்தார்.

பிறகு உணர்வு பெற்ற போது கூறினார்: நீ மிகவும் தூய்மையானவன். நான் உன்னிடம் மன்னிப்புக் கோரி மீள்கின்றேன். மேலும், நான் நம்பிக்கை கொள்வோரில் முதன்மையானவனாக

«النَّاسُ يَصْعَقُونَ يَوْمَ القِيَامَةِ، فَأَكُونُ أَوَّلَ مَنْ يُفِيقُ، فَإِذَا أَنَا بِمُوسَى آخِذٌ بِقَائِمَةٍ مِنْ قَوَائِمِ العَرْشِ، فَلاَ أَدْرِي أَفَاقَ قَبْلِي أَمْ جُوزِيَ بِصَعْقَةِ الطُّورِ»


Next Page » « Previous Page