Author: Farook

Bukhari-3397

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3397. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு வந்தபோது யூதர்கள் ஒரு நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். அதாவது ஆஷூராவுடைய (முஹர்ரம் 10வது) நாளில் (யூதர்கள்) நோன்பு நோற்று வந்ததை இப்னு அப்பாஸ்(ரலி) குறிப்பிடுகிறார்கள் – யூதர்கள், ‘இது மாபெரும் நாள். மூஸா(அலை) அவர்களை இந்த நாளில் தான் அல்லாஹ் காப்பாற்றினான்; ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான்.

எனவே, மூஸா(அலை) அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் நோன்பு நோற்றார்கள்’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘நான் அவர்களை விட மூஸா அவர்களுக்கு, மிக நெருக்கமானவன்’ என்று கூறிவிட்டு, அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களுக்கும் (உபரியான) நோன்பு நோற்கும்படி ஆணையிட்டார்கள்.
Book :60


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَمَّا قَدِمَ المَدِينَةَ، وَجَدَهُمْ يَصُومُونَ يَوْمًا، يَعْنِي عَاشُورَاءَ، فَقَالُوا: هَذَا يَوْمٌ عَظِيمٌ، وَهُوَ يَوْمٌ نَجَّى اللَّهُ فِيهِ مُوسَى، وَأَغْرَقَ آلَ فِرْعَوْنَ، فَصَامَ مُوسَى شُكْرًا لِلَّهِ، فَقَالَ «أَنَا أَوْلَى بِمُوسَى مِنْهُمْ» فَصَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ


Bukhari-3396

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3396. மேலும், நபி(ஸல்) அவர்கள், தாம் (விண் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவை நினைவு கூர்ந்தார்கள். அப்போது, ‘மூஸா(அலை) அவர்கள் மாநிறமுடையவர்கள்; ‘ஷனூஆ’ குலத்து மனிதர்களைப் போல் உயரமானவர்கள்’ என்று கூறினார்கள்.

மேலும், ‘ஈசா(அலை) அவர்கள் சுருள் முடியுடையவர்கள்; நடுத்தர உயரமுடையவர்கள்’ என்று கூறினார்கள். நரகத்தின் காவலர் (வானவர்) மாலிக் அவர்களையும் நினைவு கூர்ந்தார்கள்; தஜ்ஜாலையும் நினைவு கூர்ந்தார்கள்.
Book :60


وَذَكَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ أُسْرِيَ بِهِ، فَقَالَ: ” مُوسَى آدَمُ، طُوَالٌ، كَأَنَّهُ مِنْ رِجَالِ شَنُوءَةَ، وَقَالَ: عِيسَى جَعْدٌ مَرْبُوعٌ ” وَذَكَرَ مَالِكًا خَازِنَ النَّارِ، وَذَكَرَ الدَّجَّالَ


Bukhari-3395

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3395. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள், ‘யூனுஸ் இப்னு மத்தா(அலை) அவர்களை விட நான் சிறந்தவன் என்று (என்னைப் பற்றிக்) கூறுவது எந்த அடியானுக்கும் அழகல்ல’ என்று கூறினார்கள்.

இவ்விதம், யூனுஸ்(அலை) அவர்களை அவர்களின் தந்தையுடன் இணைத்து, ‘மத்தாவின் மகன்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Book :60


لاَ يَنْبَغِي لِعَبْدٍ أَنْ يَقُولَ: أَنَا خَيْرٌ مِنْ يُونُسَ بْنِ مَتَّى “. وَنَسَبَهُ إِلَى أَبِيهِ


Bukhari-3394

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 23 (அல்லாஹ் கூறுகிறான்:)

(இந்தச் சந்தர்ப்பத்தில்) ஃபிர் அவ்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த – தம் (இறை) நம்பிக்கையை மறைத்து வைத்திருந்த – இறை நம்பிக்கையாளர் ஒருவர் கூறலானார்:

ஒரு மனிதர், அல்லாஹ்தான் என் இறைவன் என்று கூறுகின்றார் என்பதற்காகவா அவரை நீங்கள் கொன்று விடுவீர்கள்? அவரோ உங்களுடைய இறைவனின் சார்பிலிருந்து உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்திருக்கிறார். அவர் பொய்யராயிருந்தால், அவருடைய பொய் அவருக்கே கேடாக அமையும்.

ஆனால், அவர் உண்மையாளராயிருந்தால், எந்த பயங்கரமான விளைவுகளைக் குறித்து அவர் உங்களை எச்சரிக்கை செய்கிறாரோ, அவற்றில் சில அவசியம் உங்களைப் பீடிக்கவே செய்யும். எவன் வரம்பு மீறுபவனாகவும் பெரும் பொய்யனாகவும் இருக்கின்றானோ அவனுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை. (40:28)

பாடம் : 24 அல்லாஹ் கூறுகின்றான்:

மேலும், (நபியே!) மூசாவின் செய்தி உங்களுக்கு எட்டியதா? அவர் நெருப்பைக் கண்ட போது தம்முடைய குடும்பத்தாரிடம் கூறினார்: கொஞ்சம் இருங்கள்; நான் நெருப்பைக் காண்கிறேன். அதிலிருந்து ஒரு கொள்ளியை உங்களுக்கு நான் கொண்டுவரக் கூடும்; அல்லது அந்த நெருப்பிற்கு அருகில் (பாதையை அறிந்து கொள்ள) ஏதாவது ஒரு வழிகாட்டுதல்

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ أُسْرِيَ بِي: ” رَأَيْتُ مُوسَى: وَإِذَا هُوَ رَجُلٌ ضَرْبٌ رَجِلٌ، كَأَنَّهُ مِنْ رِجَالِ شَنُوءَةَ، وَرَأَيْتُ عِيسَى، فَإِذَا هُوَ رَجُلٌ رَبْعَةٌ أَحْمَرُ، كَأَنَّمَا خَرَجَ مِنْ دِيمَاسٍ، وَأَنَا أَشْبَهُ وَلَدِ إِبْرَاهِيمَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهِ، ثُمَّ أُتِيتُ بِإِنَاءَيْنِ: فِي أَحَدِهِمَا لَبَنٌ وَفِي الآخَرِ خَمْرٌ، فَقَالَ: اشْرَبْ أَيَّهُمَا شِئْتَ، فَأَخَذْتُ اللَّبَنَ فَشَرِبْتُهُ، فَقِيلَ: أَخَذْتَ الفِطْرَةَ أَمَا إِنَّكَ لَوْ أَخَذْتَ الخَمْرَ غَوَتْ أُمَّتُكَ


Bukhari-3393

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 22 அல்லாஹ் கூறுகிறான்:

மேலும், (நபியே!) மூசாவின் செய்தி உங்களுக்கு எட்டியதா? அவர் நெருப்பைக் கண்ட போது தம்முடைய குடும்பத்தாரிடம் கூறினார்: கொஞ்சம் இருங்கள்; நான் நெருப்பைக் காண்கிறேன். அதிலிருந்து ஒரு கொள்ளியை உங்களுக்கு நான் கொண்டுவரக் கூடும்; அல்லது அந்த நெருப்பிற்கு அருகில் (பாதையை அறிந்து கொள்ள) ஏதாவது ஒரு வழிகாட்டுதல் எனக்குக் கிடைக்கக் கூடும்.

அங்கு சென்றதும் அவர் உரக்க அழைக்கப்பட்டார்: மூசாவே! நானே உங்க ளுடைய இறைவன். உங்கள் காலணிகளைக் கழற்றி விடுங்கள். திண்ணமாக, நீங்கள் துவா எனும் புனிதமான பள்ளத்தாக்கில் இருக்கிறீர்கள். (20 :9-12)

மேலும் காண்க இறை வசனங்கள்: 1)20 : 9-12 2)20 : 10 3)20 : 12 4)20 : 21 5)20 : 54 6)20 : 87 7)20 : 81 8)28 : 10 9)28 : 34 10)28 : 19 11)28 : 20 12)28 : 29 13)28 : 35 14)20 : 27 15)20 : 31 16)20 : 61 17)20 : 63 18)20 : 64 19)20 : 67 20)20 : 71 21)20 : 95 22)20 : 97 23)20 : 119 24)28 : 11 25)12 : 3 26)20 : 40 27)20 : 42 28)20 : 77 29)20 : 87 30)20 : 88

3393. மாலிக் இப்னு ஸஃஸஆ(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தாம் (விண் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட (மிஃராஜ்) இரவைப் பற்றிய (செய்திகளை) எங்களுக்கு அறிவித்தார்கள்: நான் ஐந்தாவது வானத்திற்குச் சென்றபோது, அங்கே ஹாரூன் அவர்கள் இருந்தார்கள். ஜிப்ரீல் அவர்கள், ‘இவர்கள் தாம் ஹாரூன் அவர்கள். இவர்களுக்கு ஸலாம் சொல்லுங்கள்’ என்று கூறினார்கள். நான்

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَدَّثَهُمْ عَنْ ” لَيْلَةَ أُسْرِيَ بِهِ: حَتَّى أَتَى السَّمَاءَ الخَامِسَةَ، فَإِذَا هَارُونُ، قَالَ: هَذَا هَارُونُ فَسَلِّمْ عَلَيْهِ، فَسَلَّمْتُ عَلَيْهِ فَرَدَّ، ثُمَّ قَالَ: مَرْحَبًا بِالأَخِ الصَّالِحِ وَالنَّبِيِّ الصَّالِحِ


Bukhari-3392

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 25 இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்.

3392. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

(முதன் முதலாக தமக்கு வேத வெளிப்பாடு அருளப்பட்ட பின்பு) நபி(ஸல்) அவர்கள் (தம் துணைவியாரன) கதீஜா(ரலி) அவர்களிடம், தம் மனம் பதறியவராகத் திரும்பி வந்தார்கள். உடனே, கதீஜா(ரலி) நபி(ஸல்) அவர்களை (தம் ஒன்றுவிட்ட சகோதரரும், வேதம் கற்றவருமான) வரகா இப்னு நவ்ஃபல் அவர்களிடம் அழைத்துச் சென்றார்கள். வரகா கிறிஸ்துவராக மாறி விட்டிருந்த ஒரு மனிதராயிருந்தார். அவர், (நபி ஈசாவுக்கு அருளப்பெற்ற வேதமான) இன்ஜீலை அரபி மொழியில் ஓதி வந்தார்.

வரகா, நபி(ஸல்) அவர்களிடம், ‘நீங்கள் என்ன பார்த்தீர்கள்’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் விவரம் தெரிவித்தார்கள். அதைக் கேட்ட வரகா, ‘இவர்தாம் (இறைத்தூதர்) மூஸாவின் மீது அல்லாஹ் இறங்கச் செய்த (வேத வெளிப்பாட்டைக் கொண்டு வரும்) ‘நாமூஸ்’ எனும் வானவர். (மார்க்கப் பிரசாரத்தில் ஈடுபட்டுப் பல சோதனைகளைச் சந்திக்கப் போகிற) உங்களுடைய காலத்தை நான் அடைந்தால், உங்களுக்கு வலிமையுடன் உதவுவேன்’ என்று கூறினார்.

‘நாமூஸ்’ என்பவர் பிறருக்கு அறிவிக்காமல் மறைக்கிற விஷயங்களை (இறை கட்டளைப்படி) இறைத்தூதருக்கு அறிவித்துத் தரும் வானவராவார்.
Book : 60


فَرَجَعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى خَدِيجَةَ يَرْجُفُ فُؤَادُهُ، فَانْطَلَقَتْ بِهِ إِلَى  وَرَقَةَ بْنِ نَوْفَلٍ، وَكَانَ رَجُلًا تَنَصَّرَ، يَقْرَأُ الإِنْجِيلَ بِالعَرَبِيَّةِ، فَقَالَ وَرَقَةُ: مَاذَا تَرَى؟ فَأَخْبَرَهُ، فَقَالَ وَرَقَةُ: هَذَا النَّامُوسُ الَّذِي أَنْزَلَ اللَّهُ عَلَى مُوسَى، وَإِنْ أَدْرَكَنِي يَوْمُكَ أَنْصُرْكَ نَصْرًا مُؤَزَّرًا “

النَّامُوسُ: صَاحِبُ السِّرِّ الَّذِي يُطْلِعُهُ بِمَا يَسْتُرُهُ عَنْ غَيْرِهِ


Bukhari-3391

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 20 அல்லாஹ் கூறுகிறான்:

அய்யூப் தம் இறைவனிடம் பிரார்த்தித்ததை நினைவு கூருங்கள்: என்னை நோய் பீடித்து விட்டது. நீயோ கிருபை செய்வோரில் எல்லாம் பெருங்கிருபையாளனாக இருக்கின்றாய் என்று அவர் பிரார்த்தித்தார். (21:83) 69,  மேலும் காண்க: 38:42

3391. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அய்யூப்(அலை) அவர்கள் தங்களின் ஆடை முழுவதையும் களைந்துவிட்டு குளித்துக் கொண்டிருந்தபோது அவர்களின் மீது தங்கத்தாலான வெட்டுக்கிளி ஒன்றின் கால் வந்து விழுந்தது. உடனே, அவர்கள் அதைத் தம் துணியில் எடுக்கலானார்கள்.

அப்போது அவர்களின் இறைவன் (அவர்களை) அழைத்து, ‘அய்யூபே! நீங்கள் பார்க்கிற இச்செல்வம் உங்களுக்குத் தேவையில்லை என்ற நிலையில் நான் உங்களை (போதிய செல்வமுடையவராக) வைத்திருக்கவில்லையா?’ என்று கேட்டான். அதற்கு அவர்கள், ‘ஆம்; (உண்மை தான்.) என் இறைவா! ஆயினும், உன் அருள்வளம் எனக்குத் தேவைப்படுகிறதே!’ என்று பதிலளித்தார்கள்.
Book : 60


«بَيْنَمَا أَيُّوبُ يَغْتَسِلُ عُرْيَانًا، خَرَّ عَلَيْهِ رِجْلُ جَرَادٍ مِنْ ذَهَبٍ، فَجَعَلَ يَحْثِي فِي ثَوْبِهِ، فَنَادَاهُ رَبُّهُ يَا أَيُّوبُ أَلَمْ أَكُنْ أَغْنَيْتُكَ عَمَّا تَرَى، قَالَ بَلَى يَا رَبِّ، وَلَكِنْ لاَ غِنَى لِي عَنْ بَرَكَتِكَ»


Bukhari-3390

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3390. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கண்ணியத்திற்குரியவரின் மகனான கண்ணியத்திற்குரியவரின் மகனான கண்ணியத்திற்குரியவரின் மகன் தான் கண்ணியத்திற்குரியவர். அவர் இப்ராஹீம்(அலை) அவர்களின் புதல்வரான இஸ்ஹாக்(அலை) அவர்களின் புதல்வரான யஅகூஃப்(அலை) அவர்களின் புதல்வரான யூசுஃப்(அலை) அவர்களேயாவார். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :60


«الكَرِيمُ، ابْنُ الكَرِيمِ، ابْنِ الكَرِيمِ، ابْنِ الكَرِيمِ يُوسُفُ بْنُ يَعْقُوبَ بْنِ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ عَلَيْهِمُ السَّلاَمُ»


Bukhari-3389

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3389. உர்வா(ரஹ்) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அவர்களிடம், ‘(நிராகரிக்கும்) மக்கள் இனி நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் என்று இறைத்தூதர்கள் நிராசையடைந்தார்கள்; மேலும், தங்களிடம் (இறை உதவி வருமென்று) பொய்யுரைக்கப்பட்டது என (நம்பிக்கை கொண்ட மக்களும் கூட)க் கருதலானார்கள். இந்நிலையில் நம்முடைய உதவி அவர்களுக்கு வந்தது’ என்று அல்லாஹ் கூறினான். (திருக்குர்ஆன் 12:110)

இவ்வசனத்தில் மூலத்தில் (‘பொய்யுரைக்கப்பட்டது’ என்பதைக் குறிப்பதற்குரிய சொல்லை) ‘குத்திபூ’ – தாம் பொய்ப்பிக்கப்பட்டு விட்டோம் (என இறைத் தூதர்கள் கருதலானார்கள்) என்று வாசிக்க வேண்டுமா? அல்லது ‘குதிபூ’ – மக்கள் தங்களிடம் பொய்யுரைக்கப்பட்டது (எனக் கருதலானார்கள்) என்று வாசிக்க வேண்டுமா? என்று கேட்டேன்.

‘ ‘குத்திபூ’ (தாம் பொய்யிக்கப்பட்டு விட்டோமோ என்று இறைத்தூதர்கள் கருதலானார்கள் என்றே ஓத வேண்டும்)’ என்று ஆயிஷா(ரலி) பதிலளித்தார்கள்.
உடனே, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களின் சமுதாயத்தினர் தங்களைப் பொய்ப்பிக்கிறார்கள் என்று இறைத்தூதர்கள் சந்தேகிக்கவில்லையே! உறுதியாக நம்பித்தானே இருந்தார்கள்? (ஆனால் ‘ழன்னூ’ – நபிமார்கள் சந்தேகித்தார்கள் என்று தானே குர்ஆனின் இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ளது.

أَنَّهُ سَأَلَ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَرَأَيْتِ قَوْلَهُ: (حَتَّى إِذَا اسْتَيْأَسَ الرُّسُلُ وَظَنُّوا أَنَّهُمْ قَدْ كُذِّبُوا) أَوْ كُذِبُوا؟ قَالَتْ: «بَلْ كَذَّبَهُمْ قَوْمُهُمْ» ، فَقُلْتُ: وَاللَّهِ لَقَدِ اسْتَيْقَنُوا أَنَّ قَوْمَهُمْ كَذَّبُوهُمْ، وَمَا هُوَ بِالظَّنِّ، فَقَالَتْ: «يَا عُرَيَّةُ لَقَدِ اسْتَيْقَنُوا بِذَلِكَ»، قُلْتُ: فَلَعَلَّهَا أَوْ كُذِبُوا، قَالَتْ: ” مَعَاذَ اللَّهِ، لَمْ تَكُنِ الرُّسُلُ تَظُنُّ ذَلِكَ بِرَبِّهَا، وَأَمَّا هَذِهِ الآيَةُ، قَالَتْ: هُمْ أَتْبَاعُ الرُّسُلِ، الَّذِينَ آمَنُوا بِرَبِّهِمْ وَصَدَّقُوهُمْ، وَطَالَ عَلَيْهِمُ البَلاَءُ، وَاسْتَأْخَرَ عَنْهُمُ النَّصْرُ، حَتَّى إِذَا اسْتَيْأَسَتْ مِمَّنْ كَذَّبَهُمْ مِنْ قَوْمِهِمْ، وَظَنُّوا أَنَّ أَتْبَاعَهُمْ كَذَّبُوهُمْ، جَاءَهُمْ نَصْرُ اللَّهِ ” قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: ” {اسْتَيْأَسُوا} [يوسف: 80] اسْتَفْعَلُوا، مِنْ يَئِسْتُ مِنْهُ مِنْ يُوسُفَ، {لاَ تَيْأَسُوا مِنْ رَوْحِ اللَّهِ} [يوسف: 87] مَعْنَاهُ الرَّجَاءُ


Bukhari-3388

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3388. மஸ்ரூக்(ரஹ்) அறிவித்தார்

ஆயிஷா(ரலி) அவர்களைப் பற்றி அவதூறு பேசப்பட்டபோது (நடந்தவை பற்றி அவர்களின் தாயாரான) உம்மு ரூமான்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அவர்கள் கூறினார்கள்.

நான் ஆயிஷாவுடன் உட்கார்ந்து கொண்டிருந்தேன். அப்போது அன்சாரிப் பெண் ஒருத்தி எங்களிடம், ‘இன்னாரை (மிஸ்தஹ் இப்னு உஸாஸா – ரலி – அவர்களை) அல்லாஹ் நிந்திக்கட்டும்’ என்று கூறியபடி வந்தாள். நான், ‘ஏன் (இப்படிச் சொல்கிறாய்?’) என்று கேட்டேன். அதற்கு அவள், ‘(அவதூறுச்) செய்தியை அவர் (அறியாமையால் பரப்பி வருகிறார்’ என்று பதிலளித்தாள். ஆயிஷா(ரலி), ‘எந்த (அவதூறுச்) செய்தியை?’ என்று கேட்டார். அவள் அந்த அவதூறுச் செய்தியைத் தெரிவித்தாள். ஆயிஷா(ரலி), ‘இதை (என் தந்தை) அபூ பக்ர்(ரலி) அவர்களும் (என் கணவர்) இறைத்தூதர்(ஸல்) அவர்களும் செவியுற்றார்களா?’ என்று கேட்டார். நான், ‘ஆம் (செவியுற்றார்கள்)’ என்று பதில் சொன்னேன்.

உடனே, ஆயிஷா(ரலி) மூர்ச்சையடைந்து விழுந்து விட்டார்கள். பிறகு குளிர் காய்ச்சலுடன் தான், மூர்ச்சை தெளிந்து கண் விழித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் வந்து, ‘இவளுக்கென்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள். நான், ‘தன்னைப் பற்றி பேசப்பட்ட அவதூறுச் செய்தியைக் கேள்விப்பட்ட காரணத்தால் காய்ச்சல் அவரைப் பீடித்துவிட்டது’

سَأَلْتُ أُمَّ رُومَانَ، وَهِيَ أُمُّ عَائِشَةَ، عَمَّا قِيلَ فِيهَا مَا قِيلَ، قَالَتْ: بَيْنَمَا أَنَا مَعَ عَائِشَةَ جَالِسَتَانِ، إِذْ وَلَجَتْ عَلَيْنَا امْرَأَةٌ مِنَ الأَنْصَارِ، وَهِيَ تَقُولُ: فَعَلَ اللَّهُ بِفُلاَنٍ وَفَعَلَ، قَالَتْ: فَقُلْتُ: لِمَ؟ قَالَتْ: إِنَّهُ نَمَى ذِكْرَ الحَدِيثِ، فَقَالَتْ عَائِشَةُ: أَيُّ حَدِيثٍ؟ فَأَخْبَرَتْهَا. قَالَتْ: فَسَمِعَهُ أَبُو بَكْرٍ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَتْ: نَعَمْ، فَخَرَّتْ مَغْشِيًّا عَلَيْهَا، فَمَا أَفَاقَتْ إِلَّا وَعَلَيْهَا حُمَّى بِنَافِضٍ،

فَجَاءَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «مَا لِهَذِهِ» قُلْتُ: حُمَّى أَخَذَتْهَا مِنْ أَجْلِ حَدِيثٍ تُحُدِّثَ بِهِ، فَقَعَدَتْ فَقَالَتْ: وَاللَّهِ لَئِنْ حَلَفْتُ لاَ تُصَدِّقُونِي، وَلَئِنِ اعْتَذَرْتُ لاَ تَعْذِرُونِي، فَمَثَلِي وَمَثَلُكُمْ كَمَثَلِ يَعْقُوبَ وَبَنِيهِ، فَاللَّهُ المُسْتَعَانُ عَلَى مَا تَصِفُونَ، فَانْصَرَفَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَنْزَلَ اللَّهُ مَا أَنْزَلَ، فَأَخْبَرَهَا، فَقَالَتْ: بِحَمْدِ اللَّهِ لاَ بِحَمْدِ أَحَدٍ


Next Page » « Previous Page