தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3400

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 26 தூஃபான் என்பது பெரு வெள்ளமாகும். தொடர் இறப்புக்கும் தூஃபான் என்பர். இறை வசனங்கள்:- 1) 7:133 2) 7:105 3) 7: 149

பாடம் : 27 மூசா (அலை) அவர்களுடன் களிர் (அலை) அவர்கள் சந்தித்த நிகழ்ச்சி. 

 உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அறிவித்தார்

இப்னு அப்பாஸ்(ரலி) ஹுர்ரு இப்னு கைஸ் அல்ஃபஸாரீ(ரலி) அவர்களுடன் மூஸா(அலை) அவர்களின் தோழர் யார் என்னும் விஷயத்தில் தர்க்கித்தார்கள். இப்னு அப்பாஸ்(ரலி), ‘அவர் கிள்ர்(அலை) அவர்கள் தாம்’ என்று கூறினார்கள். அவர்கள் இருவரையும் உபை இப்னு கஅப்(ரலி) கடந்து சென்றார்கள். இப்னு அப்பாஸ்(ரலி), உபை இப்னு கஅப் அவர்களை அழைத்து, ‘நானும் என்னுடைய இந்தத் தோழரும், தாம் சந்திக்க விருப்பவரிடம் செல்ல வேண்டிய பாதையை விசாரித்த மூஸா(அலை) அவர்களின் (சந்திப்புக்குரிய) தோழரைக் குறித்து தர்க்கித்தோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், அவரைப் பற்றிக் கூற நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?’ என்று வினவினார்கள்.

அதற்கு உபை இப்னு கஅப்(ரலி), ‘ஆம்; இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறக் கேட்டேன்’ என்றார்கள். பனூ இஸ்ராயீல் குலத்தாரின் பிரமுகர்கள் நிறைந்த ஓர் அவையில் ஒருவர் வந்து, மூஸா(அலை) அவர்களிடம், ‘உங்களை விட அதிகமாக அறிந்தவர் எவரையாவது உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டார். மூஸா(அலை) அவர்கள், ‘(அப்படி எவரும் இருப்பதாக) எனக்குத் தெரியவில்லை’ என்று பதிலளித்தார்கள். எனவே, அல்லாஹ் மூஸா(அலை) அவர்களுக்கு, ‘அப்படியல்ல நம் அடியார் ‘களிர்’ உங்களை விட அறிந்தவராயிருக்கிறார்’ என்று கூறினான்.

எனவே, மூஸா(அலை) அவர்கள் அவரைச் சென்றடைவதற்கான பாதையை விசாரித்தார்கள். எனவே, (களிர் – அலை – அவர்களைச் சந்திக்கும் இடம் வந்துவிட்டது என்பதை) மூஸா(அலை) அவர்கள் புரிந்து கொள்ள மீன் அடையாளமாக ஆக்கப்பட்டது. மேலும், அவர்களிடம், ‘மீனை நீங்கள் தவற விட்டுவிட்டால் உடனே (வந்த வழியே) திரும்பி வாருங்கள். அப்போது அவரை நீங்கள் சந்திப்பீர்கள்’ என்று சொல்லப்பட்டது. அதன்படி, அவர்கள் கடலில் மீனைப் பின்தொடர்ந்து (சென்று) கொண்டிருந்தார்கள்.

அப்போது மூஸா(அலை) அவர்களிடம் அவர்களின் (உதவியாளரான) இளைஞன், ‘நான் அந்தப் பாறையின் பக்கம் ஒதுங்கி ஓய்வெடுத்த போது மீனை மறந்து (தவறவிட்டு) விட்டேன். அதை நினைவில் வைத்திருக்க விடாமல் ஷைத்தான் தான் அதை எனக்கு மறக்கடித்துவிட்டான்’ என்று கூறினார்.

உடனே, மூஸா(அலை) அவர்கள், ‘(அது நம்மைவிட்டு நழுவிச் செல்லும்) அந்த சந்தர்ப்பத்தைத் தான் நாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்’ என்று கூறினார்கள். பிறகு இருவரும் தம் சுவடுகளின் வழியே நடந்து திரும்பிச் சென்றனர். (வழியில்) களிர்(அலை) அவர்களைச் சந்தித்தனர். பிறகு, அல்லாஹ் தன் வேதத்தில் எடுத்துரைத்துள்ள அவ்விருவர் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
Book : 60

(புகாரி: 3400)

بَابُ طُوفَانٍ مِنَ السَّيْلِ

يُقَالُ لِلْمَوْتِ الكَثِيرِ طُوفَانٌ، القُمَّلُ: الحُمْنَانُ يُشْبِهُ صِغَارَ الحَلَمِ،

{حَقِيقٌ} [الأعراف: 105]: حَقٌّ،

{سُقِطَ} [الأعراف: 149]: كُلُّ مَنْ نَدِمَ فَقَدْ سُقِطَ فِي يَدِهِ

بَابُ حَدِيثِ الخَضِرِ مَعَ مُوسَى عَلَيْهِمَا السَّلاَمُ

حَدَّثَنَا عَمْرُو بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ عُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ، أَخْبَرَهُ عَنِ ابْنِ عَبَّاسٍ

أَنَّهُ تَمَارَى هُوَ وَالحُرُّ بْنُ قَيْسٍ الفَزَارِيُّ، فِي صَاحِبِ مُوسَى، قَالَ ابْنُ عَبَّاسٍ: هُوَ خَضِرٌ، فَمَرَّ بِهِمَا أُبَيُّ بْنُ كَعْبٍ، فَدَعَاهُ ابْنُ عَبَّاسٍ فَقَالَ: إِنِّي تَمَارَيْتُ أَنَا وَصَاحِبِي هَذَا فِي صَاحِبِ مُوسَى، الَّذِي سَأَلَ السَّبِيلَ إِلَى لُقِيِّهِ، هَلْ سَمِعْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَذْكُرُ شَأْنَهُ؟ قَالَ: نَعَمْ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” بَيْنَمَا مُوسَى فِي مَلَإٍ مِنْ بَنِي إِسْرَائِيلَ، جَاءَهُ رَجُلٌ فَقَالَ: هَلْ تَعْلَمُ أَحَدًا أَعْلَمَ مِنْكَ؟ قَالَ: لاَ، فَأَوْحَى اللَّهُ إِلَى مُوسَى: بَلَى، عَبْدُنَا خَضِرٌ، فَسَأَلَ مُوسَى السَّبِيلَ إِلَيْهِ، فَجُعِلَ لَهُ الحُوتُ آيَةً، وَقِيلَ لَهُ إِذَا فَقَدْتَ الحُوتَ فَارْجِعْ فَإِنَّكَ سَتَلْقَاهُ، فَكَانَ يَتْبَعُ أَثَرَ الحُوتِ فِي البَحْرِ، فَقَالَ لِمُوسَى فَتَاهُ: (أَرَأَيْتَ إِذْ أَوَيْنَا إِلَى الصَّخْرَةِ فَإِنِّي نَسِيتُ الحُوتَ، وَمَا أَنْسَانِيهِ إِلَّا الشَّيْطَانُ أَنْ أَذْكُرَهُ)، فَقَالَ مُوسَى: {ذَلِكَ مَا كُنَّا نَبْغِ} [الكهف: 64]، فَارْتَدَّا عَلَى آثَارِهِمَا قَصَصًا، فَوَجَدَا خَضِرًا، فَكَانَ مِنْ شَأْنِهِمَا الَّذِي قَصَّ اللَّهُ فِي كِتَابِهِ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.