தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3398

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 25

அல்லாஹ் கூறுகிறான்:

நாம் மூசாவுக்கு முப்பது இரவுகளை (நாள்களை) வாக்களித்(து சினாய் மலைக்கு அழைத்)தோம். இவ்வாறு, நாற்பது இரவுகள் என்று அவருடைய இறைவன் நிர்ணயித்த தவணை முழுமை அடைந்தது. மூசா (சினாய் மலைக்குச் சென்றபோது) தம் சகோதரர் ஹாரூனிடம், நான் சென்ற பிறகு நீர் என்னுடைய கூட்டத்தாரிடையே என் பிரதிநிதியாக இருந்து, சீராகச் செயல் புரிந்து வருவீராக! மேலும், குழப்பம் விளைவிப் போரின் நடைமுறையினை மேற் கொள்ளாதீர்! என்று கூறினார்.

நாம் குறிப்பிட்டிருந்த நேரத்தில் மூசா வந்தார். பிறகு அவருடைய இறைவன் அவரிடம் உரையாடிய போது அவர் வேண்டினார்: என் இறைவா! எனக்கு நீ காட்சி அளிப்பாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும்.

அதற்கு இறைவன் கூறினான்: என்னை நீர் காண முடியாது. ஆயினும் (எதிரிலுள்ள) மலையைப் பாரும்! அது தனது இருப்பிடத்தில் நிலைத்திருந்தால், என்னை நீர் காண முடியும். அவருடைய இறைவன் அம்மலையின் மீது வெளிப்பட்ட போது அது பொடிப் பொடியாகி விட்டது. மூசாவும் திடுக்கிட்டு மயங்கி விழுந்தார்.

பிறகு உணர்வு பெற்ற போது கூறினார்: நீ மிகவும் தூய்மையானவன். நான் உன்னிடம் மன்னிப்புக் கோரி மீள்கின்றேன். மேலும், நான் நம்பிக்கை கொள்வோரில் முதன்மையானவனாக இருக்கின்றேன். (7:142-143)

மேலும் இறை வசனங்கள் காண்க: 1)2 : 93, 2)7 : 160, 3)7 : 171

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்கள் மறுமை நாளில் மூர்ச்சை அடைந்து விடுவார்கள். மூர்ச்சை தெளி(ந்து எழு)பவர்களில் நான் தான் முதல் நபராக இருப்பேன். அப்போது நான் மூஸா(அலை) அவர்களுக்கு அருகே இருப்பேன். அவர்கள் அர்ஷின் கால்களில் ஒரு காலைப் பிடித்தபடி (நின்று) இருப்பார்கள்.

அவர்கள் எனக்கு முன்பே மூர்ச்சை தெளிந்து (எழுந்து) விட்டார்களா, அல்லது ‘தூர்’ சீனா மலையில் (இறைவனைச் சந்தித்தபோது) அடைந்த மூர்ச்சைக்குப் பகரமாக (இப்போது மூர்ச்சையாக்கப்படாமல்)விட்டு விடப்பட்டார்களா என்று எனக்குத் தெரியாது. என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
Book : 60

(புகாரி: 3398)

بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: {وَوَاعَدْنَا مُوسَى ثَلاَثِينَ لَيْلَةً وَأَتْمَمْنَاهَا بِعَشْرٍ فَتَمَّ مِيقَاتُ رَبِّهِ أَرْبَعِينَ لَيْلَةً وَقَالَ مُوسَى لِأَخِيهِ هَارُونَ اخْلُفْنِي فِي قَوْمِي وَأَصْلِحْ وَلاَ تَتَّبِعْ سَبِيلَ المُفْسِدِينَ. وَلَمَّا جَاءَ مُوسَى لِمِيقَاتِنَا وَكَلَّمَهُ رَبُّهُ. قَالَ رَبِّ أَرِنِي أَنْظُرْ إِلَيْكَ. قَالَ لَنْ تَرَانِي} [الأعراف: 143]- إِلَى قَوْلِهِ – {وَأَنَا أَوَّلُ المُؤْمِنِينَ} [الأعراف: 143]

 يُقَالُ: دَكَّهُ: زَلْزَلَهُ {فَدُكَّتَا} [الحاقة: 14]: فَدُكِكْنَ، جَعَلَ الجِبَالَ كَالوَاحِدَةِ، كَمَا قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {أَنَّ السَّمَوَاتِ وَالأَرْضَ كَانَتَا رَتْقًا}،

وَلَمْ يَقُلْ: كُنَّ، رَتْقًا: مُلْتَصِقَتَيْنِ، {أُشْرِبُوا} [البقرة: 93]: ثَوْبٌ مُشَرَّبٌ مَصْبُوغٌ 

قَالَ ابْنُ عَبَّاسٍ: {انْبَجَسَتْ}: انْفَجَرَتْ، {وَإِذْ نَتَقْنَا الجَبَلَ} [الأعراف: 171]: رَفَعْنَا

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ

«النَّاسُ يَصْعَقُونَ يَوْمَ القِيَامَةِ، فَأَكُونُ أَوَّلَ مَنْ يُفِيقُ، فَإِذَا أَنَا بِمُوسَى آخِذٌ بِقَائِمَةٍ مِنْ قَوَائِمِ العَرْشِ، فَلاَ أَدْرِي أَفَاقَ قَبْلِي أَمْ جُوزِيَ بِصَعْقَةِ الطُّورِ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.