Author: Farook

Bukhari-3347

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3347. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள், யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடைச் சுவரிலிருந்து அல்லாஹ் இதைப்போல் (சிறிது) திறந்துவிட்டான்’ என்று கூறி தம் கையால் (அரபி எண் வடிவில்) என்று மடித்துக் காட்டினார்கள்.’
Book :60


«فَتَحَ اللَّهُ مِنْ رَدْمِ يَأْجُوجَ وَمَأْجُوجَ مِثْلَ هَذَا وَعَقَدَ بِيَدِهِ تِسْعِينَ»


Bukhari-3346

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 7

யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார்.

அல்லாஹ் கூறுகிறான்:

(நபியே!), இவர்கள்(யூதர்கள்) உங்களிடம் துல்கர்னைன் பற்றி கேட்கிறார்கள். நீங்கள் கூறுங்கள்: நான் அவரைப் பற்றிய சில விபரங்களை உங்களுக்கு எடுத்துச் சொல்வேன். திண்ணமாக நாம் அவருக்கு பூமியில் ஆட்சியதிகாரத்தை அளித்திருந்தோம். மேலும், அவருக்கு எல்லாவிதமான சாதனங்களையும் வாய்ப்புகளையும் வழங்கியிருந்தோம். அவர் (ஒரு முக்கியமான காரியத்திற்காக முதலில் மேற்கு நோக்கிப்) புறப்பட்டார்.

சூரியன் அஸ்தமிக்கும் எல்லையை அவர் அடைந்த போது சேற்றுக் கடலில் அது அஸ்தமிப்பதை(ப் போல்) கண்டார். அங்கு அவர், ஒரு சமுதாயத்தார் வாழ்வதைக் கண்டார். அப்போது நாம் கூறினோம்: துல்கர்னைனே! அவர்களைத் தண்டிக்கவும் உமக்கு ஆற்றல் இருக்கிறது. அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளவும் உம்மால் முடியும். அதற்கு அவர் கூறினார்: யாரேனும் அக்கிரமம் புரிந்தால் அவரைத் தண்டிப்போம். பிறகு, அவர் தன்னுடைய இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவார். அவன் அவருக்கு இன்னும் கடுமையாகத் தண்டனை அளிப்பான்.

ஆனால், அவர்களில் எவர் இறை நம்பிக்கை கொண்டு, நற்செயலும் புரிகின்றாரோ அவருக்கு நற்பலன் இருக்கிறது. நாம் அவருக்கு எளிதான

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، دَخَلَ عَلَيْهَا فَزِعًا يَقُولُ: «لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَيْلٌ لِلْعَرَبِ مِنْ شَرٍّ قَدِ اقْتَرَبَ، فُتِحَ اليَوْمَ مِنْ رَدْمِ يَأْجُوجَ وَمَأْجُوجَ مِثْلُ هَذِهِ» وَحَلَّقَ بِإِصْبَعِهِ الإِبْهَامِ وَالَّتِي تَلِيهَا، قَالَتْ زَيْنَبُ بِنْتُ جَحْشٍ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ: أَنَهْلِكُ وَفِينَا الصَّالِحُونَ؟ قَالَ: «نَعَمْ إِذَا كَثُرَ الخَبَثُ»


Bukhari-3345

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3345. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் ‘ஃப ஹல் மிம் முத்தகிர் – அறிவுரை பெறுபவர் எவரேனும் உண்டா?’ என்னும் (திருக்குர்ஆனின் 54-வது அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள) இறைவசனத்தை ஓதுவதை செவியுற்றேன்.
Book :60


يَقْرَأُ: {فَهَلْ مِنْ مُدَّكِرٍ} [القمر: 15]


Bukhari-3344

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3344. அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவித்தார்.

அலீ (ரலி) (யமனிலிருந்து) நபி (ஸல்) அவர்களிடம் சிறிய தங்கக் கட்டி ஒன்றை அனுப்பி வைத்தார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் அக்ரவு இப்னு ஹாபிஸ் அல்ஹன்ழலீ அல்முஜாஷியீ (ரலி), உயைனா இப்னு பத்ர் அல் ஃபஸாரீ (ரலி), பனூ நப்ஹான் குலத்தவரில் ஒருவரான ஸைத் அத் தாயீ (ரலி) மற்றும் பனூ கிலாப் குலத்தாரில் ஒருவரான அல்கமா இப்னு உலாஸா அல் ஆமிரி (ரலி) ஆகிய நால்வரிடையே பங்கிட்டுவிட்டார்கள். அதனால் குறைஷிகளும் அன்சாரிகளும கோபமடைந்து, ‘நஜ்து வாசிகளின் தலைவர்களுக்குக் கொடுக்கிறார்; நம்மை விட்டுவிடுகிறாரே’ என்று கூறினார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘இவர்கள் (இப்போது தான் இஸ்லாத்தை தழுவியிருப்பதால்) அவர்களின் உள்ளங்களை (முழுமையாக) இணக்கமாக்குவதற்காக (அவர்களுடன் நேசம் பாராட்டும் விதத்தில்) தான் கொடுத்தேன்’ என்று கூறினார்கள்.

அப்போது கண்கள் பஞ்சடைந்த, கன்னங்கள் தடித்திருந்த, நெற்றியோரங்கள் உயர்ந்திருந்த, அடர்த்தியான தாடி கொண்ட, தலைமுடி மழிக்கப்பட்டிருந்த மனிதர் ஒருவர் முன் வந்து, ‘முஹம்மதே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்’ என்று கூறினார்.

உடனே நபி (ஸல்) அவர்கள் ‘நானே (அல்லாஹ்விற்கு) மாறு செய்தால் வேறெவர்தான் அவனுக்குக் கீழ்ப்படிவார்? பூமியில் வசிப்பவர்களின் விஷயத்தில் அல்லாஹ்

بَعَثَ عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ، إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِذُهَيْبَةٍ فَقَسَمَهَا بَيْنَ الأَرْبَعَةِ الأَقْرَعِ بْنِ حَابِسٍ الحَنْظَلِيِّ، ثُمَّ المُجَاشِعِيِّ، وَعُيَيْنَةَ بْنِ بَدْرٍ الفَزَارِيِّ، وَزَيْدٍ الطَّائِيِّ، ثُمَّ أَحَدِ بَنِي نَبْهَانَ، وَعَلْقَمَةَ بْنِ عُلاَثَةَ العَامِرِيِّ، ثُمَّ أَحَدِ بَنِي كِلاَبٍ، فَغَضِبَتْ قُرَيْشٌ، وَالأَنْصَارُ، قَالُوا: يُعْطِي صَنَادِيدَ أَهْلِ نَجْدٍ وَيَدَعُنَا، قَالَ: «إِنَّمَا أَتَأَلَّفُهُمْ». فَأَقْبَلَ رَجُلٌ غَائِرُ العَيْنَيْنِ، مُشْرِفُ الوَجْنَتَيْنِ، نَاتِئُ الجَبِينِ، كَثُّ اللِّحْيَةِ مَحْلُوقٌ، فَقَالَ: اتَّقِ اللَّهَ يَا مُحَمَّدُ، فَقَالَ: «مَنْ يُطِعِ اللَّهَ إِذَا عَصَيْتُ؟ أَيَأْمَنُنِي اللَّهُ عَلَى أَهْلِ الأَرْضِ فَلاَ تَأْمَنُونِي» فَسَأَلَهُ رَجُلٌ قَتْلَهُ، – أَحْسِبُهُ خَالِدَ بْنَ الوَلِيدِ – فَمَنَعَهُ، فَلَمَّا وَلَّى قَالَ: ” إِنَّ مِنْ ضِئْضِئِ هَذَا، أَوْ: فِي عَقِبِ هَذَا قَوْمًا يَقْرَءُونَ القُرْآنَ لاَ يُجَاوِزُ حَنَاجِرَهُمْ، يَمْرُقُونَ مِنَ الدِّينِ مُرُوقَ السَّهْمِ مِنَ الرَّمِيَّةِ، يَقْتُلُونَ أَهْلَ الإِسْلاَمِ وَيَدَعُونَ أَهْلَ الأَوْثَانِ، لَئِنْ أَنَا أَدْرَكْتُهُمْ لَأَقْتُلَنَّهُمْ قَتْلَ عَادٍ


Bukhari-3343

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 6

அல்லாஹ் கூறுகிறான்: மேலும், ஆத் சமுதாயத்தாரிடம் அவர்களின் சகோதரர் ஹூதை நாம் அனுப்பினோம். அவர், என் சமுதாயத்தாரே! நீங்கள் அல்லாஹ்வை (மட்டுமே) வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை என்று கூறினார். (11 : 50)

மேலும், அல்லாஹ் கூறுகிறான்:

ஆத் சமூகத்தாரின் சகோதரர் (ஹூது நபியுடைய) செய்தியை இவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள்: அப்போது அவர் அஹ்காஃப் எனும் பகுதியில் தன் சமூகத்தாருக்கு, நீங்கள் அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் அடிபணியாதீர்கள். உங்கள் விஷயத்தில் மிக பயங்கரமான ஒரு நாளின் வேதனைக்கு நான் அஞ்சுகிறேன் என்று எச்சரிக்கை செய்திருந்தார்-எச்சரிக்கை செய்பவர்கள் அவருக்கு முன்பும் வாழ்ந்திருக்கிறார்கள். அவருக்குப் பிறகும் வந்து கொண்டிருந்தார்கள்-

அப்போது அவர்கள், எங்களை எங்கள் கடவுளை விட்டு திசை திருப்பவா நீர் வந்திருக்கின்றீர்? சரி-நீர் உண்மையாளர் எனில், எங்களை எந்த வேதனையைக் கூறி அச்சுறுத்திக் கொண்டி ருக்கின்றீரோ அந்த வேதனையைக் கொண்டு வாரும் என்று கூறினார்கள். அவர், இது பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது. நான் எந்தத் தூதோடு அனுப்பப்பட்டிருக்கின்றேனோ அதனை மட்டுமே உங்களுக்கு எடுத்துரைக்கின்றேன். ஆனால்,

«نُصِرْتُ بِالصَّبَا، وَأُهْلِكَتْ عَادٌ بِالدَّبُورِ»


Bukhari-3342

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4

அல்லாஹ் கூறுகிறான்:

மேலும், திண்ணமாக இல்யாஸும் இறைத் தூதர்களில் ஒருவராயிருந்தார். அவர் தம் சமூகத்தாரிடம் இவ்வாறு கூறிய சந்தர்ப்பத்தை நினைத்துப்பாருங்கள்: நீங்கள் அஞ்சுவதில்லையா? பஅல் என்னும் (கற்பனைத்) தெய்வத்தை நீங்கள் அழைக்கிறீர்கள்.

படைப்பாளர்களிலெல்லாம் மிகச் சிறந்தவனை விட்டு விடுகிறீர்களே- (அதாவது,) உங்கள் அதிபதியும், உங்களுக்கு முன் சென்றவர்களின் அதிபதியுமான அல்லாஹ்வை (விட்டுவிடுகிறீர்களே)! ஆயினும், அவர்கள் அவரைப் பொய்யர் எனத் தூற்றினார்கள். ஆகையால், திண்ணமாக அவர்கள் (இப்போது தண்டனைக்காகக்) கொண்டு வரப்படுபவர்களாய் உள்ளனர். ஆனால், வாய்மையாளர்களாய் ஆக்கப்பட்ட அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர. மேலும், பின் தோன்றிய தலை முறைகளில் இல்யாஸ் மீது (நற்புகழை) நிலைப்படுத்தினோம். (37:123-129)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இந்த வசனத்திற்கு விளக்கமளிக்கும் போது (ஓர் அறிவிப்பில்), இல்யாஸ் (அலை) அவர்கள் (பிற்காலத் தலைமுறையினரால்) நல்ல விதமாகப் புகழ்ந்து பேசப்படுவார்கள் என்பது இதன் பொருளாகும் எனக் கூறியுள்ளார்கள்.

மேலும், அல்லாஹ் கூறுகிறான்:

சாந்தி உண்டாகட்டும், இல்யாஸ் மீது! நன்மை செய்வோருக்கு நாம் இத்தகைய

فُرِجَ سَقْفُ بَيْتِي وَأَنَا بِمَكَّةَ، فَنَزَلَ جِبْرِيلُ فَفَرَجَ صَدْرِي، ثُمَّ غَسَلَهُ بِمَاءِ زَمْزَمَ، ثُمَّ جَاءَ بِطَسْتٍ مِنْ ذَهَبٍ، مُمْتَلِئٍ حِكْمَةً وَإِيمَانًا، فَأَفْرَغَهَا فِي صَدْرِي، ثُمَّ أَطْبَقَهُ، ثُمَّ أَخَذَ بِيَدِي فَعَرَجَ بِي إِلَى السَّمَاءِ، فَلَمَّا جَاءَ إِلَى السَّمَاءِ الدُّنْيَا  قَالَ جِبْرِيلُ لِخَازِنِ السَّمَاءِ: افْتَحْ، قَالَ مَنْ هَذَا؟ قَالَ هَذَا جِبْرِيلُ قَالَ: مَعَكَ أَحَدٌ قَالَ: مَعِي مُحَمَّدٌ، قَالَ أُرْسِلَ إِلَيْهِ؟ قَالَ: نَعَمْ فَافْتَحْ، فَلَمَّا عَلَوْنَا السَّمَاءَ الدُّنْيَا إِذَا رَجُلٌ عَنْ يَمِينِهِ أَسْوِدَةٌ، وَعَنْ يَسَارِهِ أَسْوِدَةٌ، فَإِذَا نَظَرَ قِبَلَ يَمِينِهِ ضَحِكَ، وَإِذَا نَظَرَ قِبَلَ شِمَالِهِ بَكَى، فَقَالَ: مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالِابْنِ الصَّالِحِ، قُلْتُ مَنْ هَذَا يَا جِبْرِيلُ؟ قَالَ: هَذَا آدَمُ وَهَذِهِ الأَسْوِدَةُ عَنْ يَمِينِهِ، وَعَنْ شِمَالِهِ نَسَمُ بَنِيهِ، فَأَهْلُ اليَمِينِ مِنْهُمْ أَهْلُ الجَنَّةِ، وَالأَسْوِدَةُ الَّتِي عَنْ شِمَالِهِ أَهْلُ النَّارِ، فَإِذَا نَظَرَ قِبَلَ يَمِينِهِ ضَحِكَ، وَإِذَا نَظَرَ قِبَلَ شِمَالِهِ بَكَى، ثُمَّ عَرَجَ بِي جِبْرِيلُ حَتَّى أَتَى السَّمَاءَ الثَّانِيَةَ، فَقَالَ لِخَازِنِهَا: افْتَحْ، فَقَالَ لَهُ خَازِنُهَا مِثْلَ مَا قَالَ الأَوَّلُ فَفَتَحَ ” قَالَ أَنَسٌ: فَذَكَرَ أَنَّهُ وَجَدَ فِي السَّمَوَاتِ إِدْرِيسَ، وَمُوسَى، وَعِيسَى، وَإِبْرَاهِيمَ وَلَمْ يُثْبِتْ لِي كَيْفَ مَنَازِلُهُمْ، غَيْرَ أَنَّهُ قَدْ ذَكَرَ: أَنَّهُ وَجَدَ آدَمَ فِي السَّمَاءِ الدُّنْيَا، وَإِبْرَاهِيمَ فِي السَّادِسَةِ، وَقَالَ أَنَسٌ: فَلَمَّا مَرَّ جِبْرِيلُ بِإِدْرِيسَ قَالَ: مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالأَخِ الصَّالِحِ، فَقُلْتُ مَنْ هَذَا قَالَ هَذَا إِدْرِيسُ، ثُمَّ مَرَرْتُ بِمُوسَى فَقَالَ: مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالأَخِ الصَّالِحِ، قُلْتُ مَنْ هَذَا قَالَ هَذَا مُوسَى، ثُمَّ مَرَرْتُ بِعِيسَى فَقَالَ: مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالأَخِ الصَّالِحِ، قُلْتُ مَنْ هَذَا قَالَ عِيسَى، ثُمَّ مَرَرْتُ بِإِبْرَاهِيمَ فَقَالَ: مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالِابْنِ الصَّالِحِ، قُلْتُ مَنْ هَذَا، قَالَ: هَذَا إِبْرَاهِيمُ ” قَالَ: وَأَخْبَرَنِي ابْنُ حَزْمٍ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، وَأَبَا حَيَّةَ الأَنْصَارِيَّ، كَانَا يَقُولاَنِ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ثُمَّ عُرِجَ بِي، حَتَّى ظَهَرْتُ لِمُسْتَوًى أَسْمَعُ صَرِيفَ الأَقْلاَمِ»، قَالَ ابْنُ حَزْمٍ، وَأَنَسُ بْنُ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” فَفَرَضَ اللَّهُ عَلَيَّ خَمْسِينَ صَلاَةً، فَرَجَعْتُ بِذَلِكَ حَتَّى أَمُرَّ بِمُوسَى، فَقَالَ: مُوسَى مَا الَّذِي فَرَضَ عَلَى أُمَّتِكَ؟ قُلْتُ: فَرَضَ عَلَيْهِمْ خَمْسِينَ صَلاَةً، قَالَ: فَرَاجِعْ رَبَّكَ، فَإِنَّ أُمَّتَكَ لاَ تُطِيقُ ذَلِكَ، فَرَجَعْتُ فَرَاجَعْتُ رَبِّي فَوَضَعَ شَطْرَهَا، فَرَجَعْتُ إِلَى مُوسَى، فَقَالَ رَاجِعْ رَبَّكَ: فَذَكَرَ مِثْلَهُ، فَوَضَعَ شَطْرَهَا، فَرَجَعْتُ إِلَى مُوسَى فَأَخْبَرْتُهُ فَقَالَ: رَاجِعْ رَبَّكَ، فَإِنَّ أُمَّتَكَ لاَ تُطِيقُ ذَلِكَ، فَرَجَعْتُ فَرَاجَعْتُ رَبِّي، فَقَالَ: هِيَ خَمْسٌ وَهِيَ خَمْسُونَ، لاَ يُبَدَّلُ القَوْلُ


Bukhari-3341

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3341. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘ஃபஹல் மிம் முத்தகிர் – அறிவுரை பெறுபவர் எவராவது இருக்கிறாரா?’ என்னும் (திருக்குர்ஆனின் 54வது அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ள) இறை வசனத்தைப் பொதுவாக மக்கள் ஓதும் பிரபலமான முறைப்படியே ‘ஃபhஹல் மிம் முdத்dதகிர்’ என்று ஓதினார்கள்.

(வெகு சிலர் ஓதுவதைப் போல் ‘முdhத்dதகிர்’ என்று பிரித்தோ, வேறொரு முறைப்படி ‘முdhத்dhதகிர்’ என்றோ ஓதவில்லை)
Book :60


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَرَأَ «فَهَلْ مِنْ مُدَّكِرٍ» مِثْلَ قِرَاءَةِ العَامَّةِ


Bukhari-3340

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3340. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன், ஒரு விருந்தில் இருந்தோம். அப்போது (சமைக்கப்பட்ட) முன்கால் சப்பை ஒன்று நபி (ஸல்) அவர்களிடம் வழங்கப்பட்டது. அது அவர்களுக்கு மிகவும் விருப்பமானதாக இருந்துவந்தது. நபி (ஸல்) அவர்கள் (அதைத் தம்) பற்களால் கடித்து அதிலிருந்து சிறிது உண்டார்கள்.

பிறகு கூறினார்கள்: ‘‘நான் மறுமை நாளில் மக்களின் தலைவன் ஆவேன். (மறுமை நாளில்) அல்லாஹ் (மக்களில்) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெளியில் எவரைக் கொண்டு ஒன்று திரட்டுவான் என்பது உங்களுக்குத் தெரியுமா? பார்ப்பவர் அந்த மக்களைப் பார்க்க முடியும். (தம்மை) அழைப்பவர்களை அவர்களும் செவியுறுவார்கள்.

சூரியன் அவர்களுக்கு அருகில் வரும். அப்போது மக்கள் சிலர் (மற்ற மக்களை நோக்கி), ‘‘நீங்கள் எத்தகைய (துன்பகரமான) நிலையில் இருக்கிறீர்கள் என்பதையும் உங்களுக்கு எத்தகைய (ஆபத்தான) நிலை நேர்ந்திருக்கின்றது என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா? உங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரை செய்பவரைத் (தேடிப்)பார்க்கமாட்டீர்களா?” என்று கேட்பார்கள்.

மக்கள் சிலர், ‘‘உங்கள் தந்தை ஆதம் (அலை) அவர்கள் (உங்களுக்காகப் பரிந்துரை செய்வார்கள்)” என்று கூறுவார்கள்.

ஆகவே, மக்கள் ஆதம் (அலை) அவர்களிடம் சென்று, ‘‘ஆதமே!

كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي دَعْوَةٍ، «فَرُفِعَ إِلَيْهِ الذِّرَاعُ، وَكَانَتْ تُعْجِبُهُ فَنَهَسَ مِنْهَا نَهْسَةً»
وَقَالَ: ” أَنَا سَيِّدُ القَوْمِ يَوْمَ القِيَامَةِ، هَلْ تَدْرُونَ بِمَ؟ يَجْمَعُ اللَّهُ الأَوَّلِينَ وَالآخِرِينَ فِي صَعِيدٍ وَاحِدٍ، فَيُبْصِرُهُمُ النَّاظِرُ وَيُسْمِعُهُمُ  الدَّاعِي، وَتَدْنُو مِنْهُمُ الشَّمْسُ، فَيَقُولُ بَعْضُ النَّاسِ: أَلاَ تَرَوْنَ إِلَى مَا أَنْتُمْ فِيهِ، إِلَى مَا بَلَغَكُمْ؟ أَلاَ تَنْظُرُونَ إِلَى مَنْ يَشْفَعُ لَكُمْ إِلَى رَبِّكُمْ، فَيَقُولُ بَعْضُ النَّاسِ: أَبُوكُمْ آدَمُ فَيَأْتُونَهُ فَيَقُولُونَ: يَا آدَمُ أَنْتَ أَبُو البَشَرِ، خَلَقَكَ اللَّهُ بِيَدِهِ، وَنَفَخَ فِيكَ مِنْ رُوحِهِ، وَأَمَرَ المَلاَئِكَةَ فَسَجَدُوا لَكَ، وَأَسْكَنَكَ الجَنَّةَ، أَلاَ تَشْفَعُ لَنَا إِلَى رَبِّكَ، أَلاَ تَرَى مَا نَحْنُ فِيهِ وَمَا بَلَغَنَا؟ فَيَقُولُ: رَبِّي غَضِبَ غَضَبًا لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ، وَلاَ يَغْضَبُ بَعْدَهُ مِثْلَهُ، وَنَهَانِي عَنِ الشَّجَرَةِ فَعَصَيْتُهُ، نَفْسِي نَفْسِي، اذْهَبُوا إِلَى غَيْرِي، اذْهَبُوا إِلَى نُوحٍ، فَيَأْتُونَ نُوحًا، فَيَقُولُونَ: يَا نُوحُ، أَنْتَ أَوَّلُ الرُّسُلِ إِلَى أَهْلِ الأَرْضِ، وَسَمَّاكَ اللَّهُ عَبْدًا شَكُورًا، أَمَا تَرَى إِلَى مَا نَحْنُ فِيهِ، أَلاَ تَرَى إِلَى مَا بَلَغَنَا، أَلاَ تَشْفَعُ لَنَا إِلَى رَبِّكَ؟ فَيَقُولُ: رَبِّي غَضِبَ اليَوْمَ غَضَبًا لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ، وَلاَ يَغْضَبُ بَعْدَهُ مِثْلَهُ، نَفْسِي نَفْسِي، ائْتُوا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَيَأْتُونِي فَأَسْجُدُ تَحْتَ العَرْشِ، فَيُقَالُ يَا مُحَمَّدُ ارْفَعْ رَأْسَكَ، وَاشْفَعْ تُشَفَّعْ، وَسَلْ تُعْطَهْ ” قَالَ مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ: لاَ أَحْفَظُ سَائِرَهُ


Bukhari-3339

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3339. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமையில் நூஹ் அவர்களும் அவர்களின் சமுதாயத்தினரும் வருவார்கள். அப்போது அல்லாஹ் (நூஹ் – அலை – அவர்களை நோக்கி), ‘(என்னுடைய செய்தியை நீங்கள் உங்கள் சமுதாயத்தாருக்கு) எடுத்துரைத்து விட்டீர்களா?’ என்று கேட்பான். அதற்கு நூஹ் அவர்கள், ‘ஆம், என் இறைவா! (எடுத்துரைத்து விட்டேன்)’ என்று பதிலளிப்பார்கள்.

பிறகு, அல்லாஹ் நூஹ் அவர்களின் சமுதாயத்தினரிடம், ‘இவர் உங்களுக்கு (என் செய்தியை) எடுத்துரைத்துவிட்டாரா?’ என்று கேட்பான். அதற்கு அவர்கள், ‘இல்லை. எங்களிடம் எந்த இறைத்தூதரும் வரவில்லை’ என்று பதில் கூறுவார்கள். உடனே, அல்லாஹ் நூஹ் அவர்களிடம் ‘உங்களுக்காக சாட்சியம் சொல்பவர் யார்?’ என்று கேட்பான். நூஹ் அவர்கள், ‘முஹம்மத்(ஸல்) அவர்களும், அவர்களின் சமுதாயத்தினரும் (எனக்காக சாட்சியம் சொல்வார்கள்)’ என்று பதிலளிப்பார்கள்.

அவ்வாறே நாம் நூஹ் அவர்கள் (இறைச் செய்தியைத் தம் சமுதாயத்தாருக்கு) எடுத்துரைத்து விட்டார்கள் என்று சாட்சியம் சொல்வோம்.

‘அவ்வாறே உங்களை மக்களுக்கு சாட்சியம் சொல்வதற்காக நடுநிலையான சமுதாயமாக ஆக்கினோம்’ என்னும் புகழுயர்ந்த இறைவனின் (திருக்குர்ஆன் 02:143) வசனம் இதைத் தான் குறிக்கிறது.

‘நடுநிலையான’ என்னும் சொல்லின் கருத்து

يَجِيءُ نُوحٌ وَأُمَّتُهُ، فَيَقُولُ اللَّهُ تَعَالَى، هَلْ بَلَّغْتَ؟ فَيَقُولُ نَعَمْ أَيْ رَبِّ، فَيَقُولُ لِأُمَّتِهِ: هَلْ بَلَّغَكُمْ؟ فَيَقُولُونَ لاَ مَا جَاءَنَا مِنْ نَبِيٍّ، فَيَقُولُ لِنُوحٍ: مَنْ يَشْهَدُ لَكَ؟ فَيَقُولُ: مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأُمَّتُهُ، فَنَشْهَدُ أَنَّهُ قَدْ بَلَّغَ، وَهُوَ قَوْلُهُ جَلَّ ذِكْرُهُ: وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَالوَسَطُ العَدْلُ


Bukhari-3338

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3338. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்

நான் உங்களிடம் தஜ்ஜாலைப் பற்றிய செய்தி ஒன்றைச் சொல்லப் போகிறேன் வேறெந்த இறைத்தூதரும் அதைத் தன் சமூகத்தாருக்குச் சொன்னதில்லை. அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். அவன் தன்னுடன் சொர்க்கம் நரகம் போன்றதைக் கொண்டு வருவான்.

அவன் எதை சொர்க்கம் என்று கூறுகிறானோ அதுதான் நரகமாக இருக்கும். நூஹ் அவர்கள் அவனைக் குறித்து தன் சமூகத்தாரை எச்சரித்ததைப் போன்று நானும் உங்களை (அவனைக் குறித்து) எச்சரிக்கிறேன். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :60


أَلاَ أُحَدِّثُكُمْ حَدِيثًا عَنِ الدَّجَّالِ، مَا حَدَّثَ بِهِ نَبِيٌّ قَوْمَهُ: إِنَّهُ أَعْوَرُ، وَإِنَّهُ يَجِيءُ مَعَهُ بِمِثَالِ الجَنَّةِ وَالنَّارِ، فَالَّتِي يَقُولُ إِنَّهَا الجَنَّةُ هِيَ النَّارُ، وَإِنِّي أُنْذِرُكُمْ كَمَا أَنْذَرَ بِهِ نُوحٌ قَوْمَهُ


Next Page » « Previous Page