Author: Farook

Bukhari-193

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 43 ஒரு மனிதர் தம் மனைவியுடன் (ஒரே பாத்திரத்தில்) உளூ செய்வதும், ஒரு பெண் உளூ செய்து விட்டுவைத்த மீதத் தண்ணீர் பற்றிய சட்டமும். உமர் (ரலி) அவர்கள் வெந்நீரில் உளூ செய்தார்கள்; ஒரு கிறிஸ்தவ பெண்ணின் வீட்டில் உளூ செய்தார்கள். 

193. ‘நபி(ஸல்) அவர்களின் காலத்தில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து (ஓரிடத்தில்) உளூச் செய்வார்கள்’ என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book : 4


كَانَ الرِّجَالُ وَالنِّسَاءُ يَتَوَضَّئُونَ فِي زَمَانِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَمِيعًا


Bukhari-192

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 42

தலைக்கு ஒரு தடவை ‘மஸ்ஹு’ செய்தல்

192. யஹ்யா பின் உமாரா அல்மாஸினீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அம்ர் பின் அபீஹசன் (ரஹ்) அவர்கள் அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் செய்த அங்கத் தூய்மை பற்றிக் கேட்டார்கள். அங்கு நானும் இருந்தேன். அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி, அவர்களுக்கு அங்கத் தூய்மை செய்துகாட்டினார்கள்.

(ஆரம்பமாகப் பாத்திரத்திலிருந்த தண்ணீரைத்) தம்மிரு கைகளில் ஊற்றி இரு (முன்)கைகளையும் மூன்று முறை கழுவினார்கள். பிறகு தமது கையைப் பாத்திரத்திற்குள் நுழைத்து மூன்று முறை தண்ணீர் அள்ளி மூன்று முறை வாய் கொப்புளித்து (மூக்கிற்குள் நீர் செலுத்தி சுத்தப்படுத்தி) மூக்கைச் சிந்தினார்கள். பிறகு தமது கையைப் பாத்திரத்தில் நுழைத்து மூன்று முறை முகத்தைக் கழுவி னார்கள். பிறகு தமது கையைப் பாத்திரத்தில் நுழைத்து (தண்ணீர் அள்ளி) இரு கைகளையும் முழங்கைவரை இரண்டு இரண்டு முறை கழுவினார்கள்.

பிறகு பாத்திரத்திற்குள் தமது கையை நுழைத்து (ஈரக் கையால்) தமது தலையைத் தடவி (மஸ்ஹு செய்யலா)னார்கள். அதாவது தமது இரு கைகளையும் முன்னிருந்து பின்னாக, பின்னிருந்து முன்னாகக் கொண்டுவந்தார்கள். பிறகு பாத்திரத்திற்குள்

شَهِدْتُ عَمْرَو بْنَ أَبِي حَسَنٍ، سَأَلَ عَبْدَ اللَّهِ بْنَ زَيْدٍ عَنْ وُضُوءِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «فَدَعَا بِتَوْرٍ مِنْ مَاءٍ فَتَوَضَّأَ لَهُمْ، فَكَفَأَ عَلَى يَدَيْهِ فَغَسَلَهُمَا ثَلاَثًا، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الإِنَاءِ فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ وَاسْتَنْثَرَ ثَلاَثًا، بِثَلاَثِ غَرَفَاتٍ مِنْ مَاءٍ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الإِنَاءِ، فَغَسَلَ وَجْهَهُ ثَلاَثًا، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الإِنَاءِ، فَغَسَلَ يَدَيْهِ إِلَى المِرْفَقَيْنِ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الإِنَاءِ فَمَسَحَ بِرَأْسِهِ، فَأَقْبَلَ بِيَدَيْهِ وَأَدْبَرَ بِهِمَا، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الإِنَاءِ فَغَسَلَ رِجْلَيْهِ»

وحَدَّثَنَا مُوسَى قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ قَالَ: مَسَحَ رَأْسَهُ مَرَّةً


Bukhari-191

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 41 ஒரு கை நீரில் வாய் கொப்பளித்து (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்கைச் சிந்துதல்.

 191. ‘அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) பாத்திரத்திலிருந்து தண்ணீரைத் தம் இரண்டு முன் கைகளிலும் ஊற்றிக் கழுவினார். பின்பு ஒரே கையில் தண்ணீரை எடுத்து வாய் கொப்புளித்து மூக்கிற்கும் தண்ணீர் செலுத்தினார். இவ்வாறு மூன்று முறை செய்தார். பின்னர் தம் இரண்டு கைகளையும் மூட்டு வரை இரண்டு இரண்டு முறை கழுவினார். மேலும் தம் தலையைத் தடவினார். (இரண்டு கையால்) மேலும் தம் தலையைத் தடவினார். (இரண்டு கையால்) தலையின் முன் புறமும் பின்புறமும தடவினார். மேலும் தம் இரண்டு கால்களையும் கரண்டை வரை கழுவினார். பின்னர், இதுதான் நபி(ஸல்) அவர்களின் உளூ என்று கூறினார்’ யஹ்யா அல் மாஸினி அறிவித்தார்.
Book : 4


أَنَّهُ أَفْرَغَ مِنَ الإِنَاءِ عَلَى يَدَيْهِ فَغَسَلَهُمَا، ثُمَّ غَسَلَ – أَوْ مَضْمَضَ وَاسْتَنْشَقَ – مِنْ كَفَّةٍ وَاحِدَةٍ، فَفَعَلَ ذَلِكَ ثَلاَثًا، فَغَسَلَ يَدَيْهِ إِلَى المِرْفَقَيْنِ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ، وَمَسَحَ بِرَأْسِهِ، مَا أَقْبَلَ وَمَا أَدْبَرَ، وَغَسَلَ رِجْلَيْهِ إِلَى الكَعْبَيْنِ، ثُمَّ قَالَ: (هَكَذَا وُضُوءُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ)


Bukhari-190

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

190. ‘என்னுடைய சிறிய தாயார் என்னை நபி(ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று ‘இறைத்தூதர் அவர்களே! என் சகோதரி மகன் இரண்டு பாதங்களிலும் வேதனையால் கஷ்டப்படுகிறான்’ எனக் கூறியபோது, நபி(ஸல்) அவர்கள் என்னுடைய தலையைத் தடவி என்னுடைய அபிவிருத்திக்காகப் பிரார்த்தித்தார்கள்.

பின்னர் நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். அவர்கள் மீதி வைத்த தண்ணீரிலிருந்து நான் குடித்தேன். பின்னர் நபி(ஸல்) அவர்களின் முதுகிற்குப் பின்னால் எழுந்து நின்றேன். அப்போது அவர்களின் இரண்டு புஜங்களுக்கிடையில் நபித்துவத்தின் முத்திரையை பார்த்தேன். அது ஒரு புறா முட்டை போன்று இருந்தது’ என ஸாயிப் இப்னு யஸீது(ரலி) அறிவித்தார்.
Book :4


ذَهَبَتْ بِي خَالَتِي إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ ابْنَ أُخْتِي وَجِعٌ «فَمَسَحَ رَأْسِي وَدَعَا لِي بِالْبَرَكَةِ، ثُمَّ تَوَضَّأَ، فَشَرِبْتُ مِنْ وَضُوئِهِ، ثُمَّ قُمْتُ خَلْفَ ظَهْرِهِ، فَنَظَرْتُ إِلَى خَاتَمِ النُّبُوَّةِ بَيْنَ كَتِفَيْهِ، مِثْلَ زِرِّ الحَجَلَةِ»


Bukhari-189

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

189. தாம் குழந்தையாக இருந்தபோது தம் வீட்டிலுள்ள கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து அதை நபி(ஸல்) அவர்கள் தங்களின் முகத்தில் உமிழ்ந்ததாக மஹ்மூத் இப்னு ரபீய்(ரலி) என்னிடம் கூறினார்கள்’ என இப்னுஷிஹாப் அறிவித்தார்.

‘நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்தால் அவர்கள் மீதி வைக்கிற தண்ணீரை எடுத்துக் கொள்வதில் ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொள்வார்கள்’ என்று உர்வா என்பவர் மிஸ்வர் என்பவர் வழியாகவும் மற்ற ஒருவர் வழியாகவும் அறிவித்தார். இவ்விருவரும் ஒருவர் மற்றவரை மெய்ப்பிக்கிறார்கள்.
Book :4


أَخْبَرَنِي مَحْمُودُ بْنُ الرَّبِيعِ، قَالَ «وَهُوَ الَّذِي مَجَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي وَجْهِهِ وَهُوَ غُلاَمٌ مِنْ بِئْرِهِمْ» وَقَالَ عُرْوَةُ، عَنِ المِسْوَرِ، وَغَيْرِهِ يُصَدِّقُ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا صَاحِبَهُ «وَإِذَا تَوَضَّأَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَادُوا يَقْتَتِلُونَ عَلَى وَضُوئِهِ»


Bukhari-188

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

188. ‘நபி (ஸல்) அவர்கள், தண்ணீர் உள்ள ஒரு பாத்திரத்தைக் கொண்டு வரச் சொல்லி அதில் தங்கள் இரண்டு கைகளையும் தங்கள் முகத்தையும் கழுவினார்கள். அதில் தண்ணிரைத் துப்பினார்கள். பின்னர் என்னிடமும் பிலால் அவர்களிடமும் இதிலிருந்து நீங்கள் இருவரும் குடியுங்கள்; உங்களின் முகத்திலும் கழுத்திலும் ஊற்றிக் கொள்ளுங்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ மூஸா அல் அஷ்அரீ (ரலி) அறிவித்தார்.

Book :4


دَعَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَدَحٍ فِيهِ مَاءٌ، فَغَسَلَ يَدَيْهِ وَوَجْهَهُ فِيهِ، وَمَجَّ فِيهِ، ثُمَّ قَالَ لَهُمَا: «اشْرَبَا مِنْهُ، وَأَفْرِغَا عَلَى وُجُوهِكُمَا وَنُحُورِكُمَا»


Bukhari-187

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 40 மக்கள் உளூ செய்துவிட்டு வைத்த மீதித் தண்ணீரைப் பயன்படுத்துதல்.

தாம் பல் துலக்கிவிட்டு மீதிவைத்த தண்ணீரில் உளூ செய்ய தம் வீட்டாரை ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அனுமதித்தார்கள்.

187. ‘நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் நடுப்பகலில் எங்களிடம் புறப்பட்டு வந்தார்கள். அவர்களுக்கு உளூச் செய்யத் தண்ணீர் கொண்டு வரப்பட்டு அதில் அவர்கள் உளூச் செய்தார்கள். அவர்கள் மீதி வைத்த தண்ணீரிலிருந்து மக்கள் எடுத்து அதை தங்களின் மீது தடவினார்கள். நபி(ஸல்) அவர்கள் லுஹரையும் அஸரையும் இரண்டு இரண்டு ரக்அத்துக்களாக தொழுதார்கள். அவர்களுக்கு முன்னால் ஒரு கைத்தடி இருந்தது’ என அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார்.
Book : 4


خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالهَاجِرَةِ، فَأُتِيَ بِوَضُوءٍ فَتَوَضَّأَ، فَجَعَلَ النَّاسُ يَأْخُذُونَ مِنْ فَضْلِ وَضُوئِهِ فَيَتَمَسَّحُونَ بِهِ، فَصَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الظُّهْرَ رَكْعَتَيْنِ، وَالعَصْرَ رَكْعَتَيْنِ، وَبَيْنَ يَدَيْهِ عَنَزَةٌ


Bukhari-186

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 39

இரு கால்களையும் கணுக்கால்கள் வரை கழுவுதல். 

186. யஹ்யா அல்மாஸினீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அம்ர் பின் அபூஹஸன் (ரஹ்) அவர்களுடன் (ஒரு நாள்) நான் இருந்தேன். அவர்கள் அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் செய்த அங்கத்தூய்மை பற்றிக் கேட்டார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் ஒரு கல் பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி, நபி (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்று அங்கத் தூய்மை செய்துக் காட்டினார்கள்:

(ஆரம்பமாக) பாத்திரத்திலிருந்த தண்ணீரைத் தமது கையில் ஊற்றி மூன்று முறை கைகளைக் கழுவினார்கள். பின்னர் தமது கையைப் பாத்திரத்தில் நுழைத்து மூன்று முறை தண்ணீர் அள்ளி வாய்கொப்புளித்து மூக்கிற்குள் நீர் செலுத்திச் சிந்தினார்கள். மீண்டும் தமது கையைப் பாத்திரத்தில் நுழைத்து மூன்று முறை முகத்தைக் கழுவினார்கள். பின்னர் தம் இரு கைகளையும் முழங்கைவரை இரு முறை கழுவினார்கள்.

பின்னர் கையை (பாத்திரத்தில்) நுழைத்து (ஈரக் கையால்) தமது தலையைத் தடவினார்கள். (அதாவது) இரு கைகளையும் முன் தலையில் வைத்து பின்னால் கொண்டுசென்றார்கள். அப்படியே பின்னாலிருந்து முன் பகுதிக்கு (ஆரம்பித்த இடத்திற்கே) கொண்டுவந்தார்கள். இவ்வாறு ஒரு தடவை மட்டுமே செய்தார்கள் (மூன்று

سَأَلَ عَبْدَ اللَّهِ بْنَ زَيْدٍ، عَنْ وُضُوءِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَدَعَا بِتَوْرٍ مِنْ مَاءٍ، فَتَوَضَّأَ لَهُمْ وُضُوءَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ  فَأَكْفَأَ عَلَى يَدِهِ مِنَ التَّوْرِ، فَغَسَلَ يَدَيْهِ ثَلاَثًا، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي التَّوْرِ، فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ وَاسْتَنْثَرَ، ثَلاَثَ غَرَفَاتٍ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فَغَسَلَ وَجْهَهُ ثَلاَثًا، ثُمَّ غَسَلَ يَدَيْهِ مَرَّتَيْنِ إِلَى المِرْفَقَيْنِ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فَمَسَحَ رَأْسَهُ، فَأَقْبَلَ بِهِمَا وَأَدْبَرَ مَرَّةً وَاحِدَةً، ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ إِلَى الكَعْبَيْنِ


Bukhari-185

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 38

உளூவில் ஈரக்கையால் தலை முழுவதும் தடவுதல்.

ஏனெனில் உயர்ந்தோனாகிய அல்லாஹ், (ஈரக்கையால்) உங்களுடைய தலையையும் தடவுங்கள் (5:6) என்று கூறுகின்றான்.

சயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்) அவர்கள், பெண்களும் ஆண்களைப் போன்றே (ஈரக்கையால் தலை முழுவதும்) தடவ வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.

மாலிக் (ரஹ்) அவர்களிடம், (உளூவில்) தலையில் ஒரு பகுதி மட்டும் (ஈரக்கையால்) தடவினால் போதுமா? என்று கேட்கப்பட்டது அதற்கு மாலிக் (ரஹ்) அவர்கள் பின்வரும் அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்களின் ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு பதிலளித்தார்கள். 

185. ‘அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘நபி(ஸல்) அவர்கள் எப்படி உளூச் செய்தார்கள்? என்பதை எனக்கு நீர் செய்து காட்ட முடியுமா? எனக் கேட்டதற்கு அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) ‘ஆம்’ என்று கூறித் தண்ணீர் கொண்டு வரக் கூறினார். அதைத் தம் இரண்டு முன் கைகளிலும் ஊற்றி இருமுறை கழுவினார். பின்னர் மூன்று முறை வாய் கொப்புளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்திச் சீந்தினார். பின்னர் தம் முகத்தை மூன்று முறை கழுவினார். பின்னர் தம் இரண்டு கைகளையும் மூட்டுவரை இரண்டு இரண்டு முறை கழுவினார். பின்னர் தம் இரண்டு கைகளையும் தலையில்

أَنَّ رَجُلًا، قَالَ لِعَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ، وَهُوَ جَدُّ عَمْرِو بْنِ يَحْيَى أَتَسْتَطِيعُ أَنْ تُرِيَنِي، كَيْفَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ؟ فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ: نَعَمْ، فَدَعَا بِمَاءٍ، فَأَفْرَغَ عَلَى يَدَيْهِ فَغَسَلَ مَرَّتَيْنِ، ثُمَّ مَضْمَضَ وَاسْتَنْثَرَ ثَلاَثًا، ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلاَثًا، ثُمَّ غَسَلَ يَدَيْهِ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ إِلَى المِرْفَقَيْنِ، ثُمَّ مَسَحَ رَأْسَهُ بِيَدَيْهِ، فَأَقْبَلَ بِهِمَا وَأَدْبَرَ، بَدَأَ بِمُقَدَّمِ رَأْسِهِ حَتَّى ذَهَبَ بِهِمَا إِلَى قَفَاهُ، ثُمَّ رَدَّهُمَا إِلَى المَكَانِ الَّذِي بَدَأَ مِنْهُ، ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ “


Bukhari-184

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 37 உணர்வு நிலையற்ற (முழுமையான) மயக்கத்தினால்தான் உளூ நீங்கும். 

184. ஒரு சூரிய கிரகணத்தன்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் நான் சென்றேன். ஆயிஷா(ரலி) தொழுது கொண்டிருந்தார்கள். மக்களும் தொழுதார்கள். நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் வந்து, ‘மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது?’ என்று கேட்டேன். (தொழுகையில் நின்ற) ஆயிஷா(ரலி) வானை நோக்கித் தம் கையால் சுட்டிக் காட்டினார்கள். (தொழுகையில் பேசக் கூடாது என்பதை உணர்த்துவதற்காக) ‘ஸுப்ஹானல்லாஹ்’ என்றும் கூறினார்கள். அப்போது இது (ஏதாவது) அடையாளமா? என்று நான் கேட்டதற்கு ஆயிஷா(ரலி) ‘ஆமாம் அப்படித்தான்’ என்று தலையால் சைகை செய்தார்கள்.

உடனே நானும் (தொழுகையில்) நின்று கொண்டேன். (நீண்ட நேரம் நின்றதால்) நான் மயக்கமுற்றேன். (அதனால்) என் தலை மீது தண்ணீரை ஊற்றினேன். நபி(ஸல்) அவர்கள் தங்களின் உரையில் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, ‘எனக்கு இது வரை காட்டப்படாத சுவர்க்கம் நரகம் உட்பட அத்தனைப் பொருட்களையும் இந்த இடத்திலேயே கண்டேன். மேலும் நிச்சயமாக நீங்கள் உங்கள் மண்ணறைகளில் மஸீஹுத் தஜ்ஜால் என்பவனின் குழப்பத்துக்கு நிகரான சோதனைக்கு உள்ளாக்கப்படுவீர்கள். (அப்போது மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்டவரிடம்) ‘இந்த மனிதரைப் பற்றி உமக்கு என்ன தெரியும்?’ என்று

أَتَيْتُ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ خَسَفَتِ الشَّمْسُ، فَإِذَا النَّاسُ قِيَامٌ يُصَلُّونَ، وَإِذَا هِيَ قَائِمَةٌ تُصَلِّي، فَقُلْتُ: مَا لِلنَّاسِ؟ فَأَشَارَتْ بِيَدِهَا نَحْوَ السَّمَاءِ، وَقَالَتْ: سُبْحَانَ اللَّهِ، فَقُلْتُ: آيَةٌ؟ فَأَشَارَتْ: أَيْ نَعَمْ، فَقُمْتُ حَتَّى تَجَلَّانِي الغَشْيُ، وَجَعَلْتُ أَصُبُّ فَوْقَ رَأْسِي مَاءً، فَلَمَّا انْصَرَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ: ” مَا مِنْ شَيْءٍ كُنْتُ لَمْ أَرَهُ إِلَّا قَدْ رَأَيْتُهُ فِي مَقَامِي هَذَا، حَتَّى الجَنَّةَ وَالنَّارَ، وَلَقَدْ أُوحِيَ إِلَيَّ أَنَّكُمْ تُفْتَنُونَ فِي القُبُورِ مِثْلَ – أَوْ قَرِيبَ مِنْ – فِتْنَةِ الدَّجَّالِ – لاَ أَدْرِي أَيَّ ذَلِكَ، قَالَتْ: أَسْمَاءُ – يُؤْتَى أَحَدُكُمْ، فَيُقَالُ لَهُ: مَا عِلْمُكَ بِهَذَا الرَّجُلِ؟ فَأَمَّا المُؤْمِنُ أَوِ المُوقِنُ – لاَ أَدْرِي أَيَّ ذَلِكَ قَالَتْ: أَسْمَاءُ – فَيَقُولُ: هُوَ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ، جَاءَنَا بِالْبَيِّنَاتِ وَالهُدَى، فَأَجَبْنَا وَآمَنَّا وَاتَّبَعْنَا، فَيُقَالُ لَهُ: نَمْ صَالِحًا، فَقَدْ عَلِمْنَا إِنْ كُنْتَ لَمُؤْمِنًا، وَأَمَّا المُنَافِقُ أَوِ المُرْتَابُ – لاَ أَدْرِي أَيَّ ذَلِكَ قَالَتْ أَسْمَاءُ – فَيَقُولُ: لاَ أَدْرِي، سَمِعْتُ النَّاسَ يَقُولُونَ شَيْئًا فَقُلْتُهُ “


Next Page » « Previous Page