Author: Farook

Bukhari-103

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 36

ஒரு செய்தியைக் கேட்டுவிட்டு அதனை (நன்றாகப்) புரிந்துகொள்ளும் வரை அதையொட்டி மீண்டும் மீண்டும் கேள்விக் கேட்பது. 

103. ‘நபி (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) தமக்குத் தெரியாத ஒரு செய்தியைக் கேட்டால் அதனை அவர்கள் நன்கு புரிந்து கொள்ளும் வரை மீண்டும் மீண்டும் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள்.

‘(மறுமையில்) விசாரணை செய்யப்பட்டவர் தண்டிக்கப்படுவார்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது, ‘மிக எளிதான விசாரணையாகவே விசாரிக்கப்படுவார்’ என்று அல்லாஹ் (அல்குர்ஆன்: 84:08) கூறவில்லையா?’ என ஆயிஷா (ரலி) கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அது (ஒருவர் செய்தவற்றை அவருக்கு) எடுத்துக் காட்டுவதாகும். எனினும், எவனிடம் துருவி விசாரிக்கப்படுகிறதோ அவன் அழிந்துவிடுவான்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அபூமுலைக்கா (ரஹ்)

அத்தியாயம்: 3


أَنَّ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَتْ لَا تَسْمَعُ شَيْئًا لَا تَعْرِفُهُ إِلَّا رَاجَعَتْ فِيهِ حَتَّى تَعْرِفَهُ ، وَأَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ «مَنْ حُوسِبَ عُذِّبَ» قَالَتْ عَائِشَةُ: فَقُلْتُ أَوَلَيْسَ يَقُولُ اللَّهُ تَعَالَى: {فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا} [الانشقاق: 8] قَالَتْ: فَقَالَ: « إِنَّمَا ذَلِكِ العَرْضُ، وَلَكِنْ: مَنْ نُوقِشَ الحِسَابَ يَهْلِكْ »


Bukhari-102

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

102. ‘பருவ வயதை அடையாத மூன்று குழந்தைகளை (ஒரு பெண் பறிகொடுத்தால் அவளை நரகத்திலிருந்து காக்கும் திரையாக அக்குழந்தைகள் இருப்பார்கள்)’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அவர்களின் வாயிலாக இடம் பெற்றுள்ளது.
Book :3


«ثَلاَثَةً لَمْ يَبْلُغُوا الحِنْثَ»


Bukhari-101

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 35 பெண்களின் கல்விக்காகத் தனியே ஒரு நாளை ஒதுக்கலாமா? 

101. ‘(நாங்கள் உங்களை அணுகி மார்க்க விளக்கங்களை கேட்க முடியாதவாறு) தங்களிடம் (எப்போதும்) ஆண்களே எங்களை மிகைத்து நிற்கிறார். எனவே, தாங்களாகவே எங்களுக்கென்று ஒரு நாளை ஏற்பாடு செய்யுங்கள்’ என்று பெண்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள்.

அவர்களும் அப்பெண்களுக்கென ஒரு நாளை வாக்களித்து, அந்நாளில் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள். (மார்க்கக் கட்டளைகளை) ஏவினார்கள். அவர்கள் தங்களின் அறிவுரையில் ‘உங்களில் ஒரு பெண் தன் குழந்தைகளில் மூவரை (மரணத்தின் மூலம்) இழந்துவிட்டாள் என்றால் அந்தக் குழந்தைகள் அப்பெண்ணை நரகத்துக்குச் செல்லாமல் தடுத்துவிடக் கூடியவர்களாக இருப்பார்கள்’ என்று கூறினார்கள். அப்போது ஒரு பெண், ‘இரண்டு குழந்தைகளை ஒருத்தி இழந்துவிட்டால்?’ என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இரண்டு, குழந்தைகளை ஒருத்தி இழந்துவிட்டாலும் தான்’ என்று கூறினார்கள்’ அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.
Book : 3


قَالَتِ النِّسَاءُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: غَلَبَنَا عَلَيْكَ الرِّجَالُ، فَاجْعَلْ لَنَا يَوْمًا مِنْ نَفْسِكَ، فَوَعَدَهُنَّ يَوْمًا لَقِيَهُنَّ فِيهِ، فَوَعَظَهُنَّ وَأَمَرَهُنَّ، فَكَانَ فِيمَا قَالَ لَهُنَّ: «مَا مِنْكُنَّ امْرَأَةٌ تُقَدِّمُ ثَلاَثَةً مِنْ وَلَدِهَا، إِلَّا كَانَ لَهَا حِجَابًا مِنَ النَّارِ» فَقَالَتِ امْرَأَةٌ: وَاثْنَتَيْنِ؟ فَقَالَ: «وَاثْنَتَيْنِ»


Bukhari-100

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 34

கல்வி எவ்வாறு கைப்பற்றப்படும்?

உமர் பின் அப்துல்அஸீஸ் (ரஹ்) அவர்கள் (மதீனாவின் ஆளுநராயிருந்த) அபூபக்ர் பின் ஹஸ்ம் (ரஹ்) அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள். அதில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றிய செய்தி (ஹதீஸ்)களை ஆராய்ந்து அவற்றை எழுதி(த் தொகுத்து) வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில், (மார்க்கக்) கல்வி அழிந்துபோய்விடு மென்றும்; (மார்க்க) அறிஞர்கள் (இவ்வுலகைவிட்டுச்) சென்றுவிடுவார்கள் என்றும் நான் அஞ்சுகின்றேன்.

(அவ்வாறு எழுதும் போது) நபி (ஸல்) அவர்களின் செய்தி (ஹதீஸ்)களைத் தவிர வேறு எதையும் (பதிவுக்கு) ஏற்கக் கூடாது.

(கற்றவர்கள்) அறிவைப் பரப்பட்டும்; கல்லாதவர்களுக்கு அது கற்பிக்கப்படும் வரை கற்றோர் (ஓரிடத்தில் நிலையாக) அமர்ந்து கொள்ளட்டும். ஏனெனில், கல்வி மறைக்கப்படும் போதுதான் அழிகிறது.


அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அறிஞர்கள் (உலகைவிட்டுச்) சென்றுவிடுவார்கள்” என்பது வரைதான் உமர் பின் அப்துல்அஸீஸ் (ரஹ்) அவர்களின் கடிதத்தில் இடம்பெற்றிருந்ததாகக் காணப்படுகிறது.


100. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் கல்வியை(த் தன்) அடியார்களிடமிருந்து ஒரேடியாகப் பறித்துக் கொள்ளமாட்டான்.

«إِنَّ اللَّهَ لاَ يَقْبِضُ العِلْمَ انْتِزَاعًا يَنْتَزِعُهُ مِنَ العِبَادِ، وَلَكِنْ يَقْبِضُ العِلْمَ بِقَبْضِ العُلَمَاءِ، حَتَّى إِذَا لَمْ يُبْقِ عَالِمًا اتَّخَذَ النَّاسُ رُءُوسًا جُهَّالًا، فَسُئِلُوا فَأَفْتَوْا بِغَيْرِ عِلْمٍ، فَضَلُّوا وَأَضَلُّوا»

قَالَ الفِرَبْرِيُّ: حَدَّثَنَا عَبَّاسٌ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ هِشَامٍ نَحْوَهُ


Bukhari-99

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 33 நபி (ஸல்) அவர்களைப் பற்றிய செய்திகளைக் (ஹதீஸ்கள்) கற்பதன் மீது பேரவாக்கொள்ளுதல். 

99. ‘இறைத்தூதர் அவர்களே! மறுமை நாளில் தங்களின் பரிந்துரைக்குத் தகுதி படைத்த மனிதர் யார்?’ என்று நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது, ‘அபூ ஹுரைராவே! என்னைப் பற்றிய செய்திகளின் மீது உமக்கிருக்கும் பேராவால் எனக்குத் தெரியும். எனவே, இச்செய்தியைப் பற்றியும் உமக்கு முன்னர் யாரும் என்னிடம் கேட்க மாட்டார்கள் என நான் நம்பியிருந்தேன்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, ‘மறுமை நாளில் மக்கள் அனைவரிலும் என் பரிந்துரைக்குத் தகுதி பெற்றவர் யாரெனில், உள்ளத்திலிருந்து – தூய்மையான எண்ணத்துடன் ‘வணங்கி வழிபடுவதற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்று சொன்னவர்தாம்’ என்று கூறினார்கள்’ அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 3


قِيلَ يَا رَسُولَ اللَّهِ مَنْ أَسْعَدُ النَّاسِ بِشَفَاعَتِكَ يَوْمَ القِيَامَةِ؟ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَقَدْ ظَنَنْتُ يَا أَبَا هُرَيْرَةَ أَنْ لاَ يَسْأَلُنِي عَنْ هَذَا الحَدِيثِ أَحَدٌ أَوَّلُ مِنْكَ لِمَا رَأَيْتُ مِنْ حِرْصِكَ عَلَى الحَدِيثِ أَسْعَدُ النَّاسِ بِشَفَاعَتِي يَوْمَ القِيَامَةِ، مَنْ قَالَ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، خَالِصًا مِنْ قَلْبِهِ، أَوْ نَفْسِهِ»


Bukhari-98

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 32

தலைவர் (இமாம்) பெண்களுக்கு அறிவுரை வழங்குவதும் அவர்களுக்கு (கல்வி) போதிப்பதும். 

98. பெண்களுக்கு (தம் உரையைக்) கேட்க வைக்க முடியவில்லை என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கருதி, பிலால் (ரலி) அவர்களுடன் பெண்கள் பகுதிக்குச் சென்றார்கள். அங்கு அவர்களுக்கு அறிவுரை கூறிவிட்டு அவர்களிடம் தர்மம் செய்யும்படி ஏவினார்கள். உடனே பெண்கள் தம் காதணிகளையும், மோதிரத்தையும் கழற்றிப் போட ஆரம்பித்தார்கள். பிலால் (ரலி) தம் ஆடையி(ன் ஒரு புறத்தை விரித்து அதி)ல் அவற்றைப் பெற்றுக் கொண்டே சென்றார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
Book : 3


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – «خَرَجَ وَمَعَهُ بِلاَلٌ، فَظَنَّ أَنَّهُ لَمْ يُسْمِعْ فَوَعَظَهُنَّ وَأَمَرَهُنَّ بِالصَّدَقَةِ، فَجَعَلَتِ المَرْأَةُ تُلْقِي القُرْطَ وَالخَاتَمَ، وَبِلاَلٌ يَأْخُذُ فِي طَرَفِ ثَوْبِهِ» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: وَقَالَ: إِسْمَاعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ عَطَاءٍ، وَقَالَ: عَنْ ابْنِ عَبَّاسٍ، أَشْهَدُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-97

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 31 ஒருவர் அடிமைப் பெண்ணுக்கும் தம் குடும்பத்தாருக்கும் கல்வி கற்றுக்கொடுத்தல். 

97. மூன்று மனிதர்களுக்கு (அல்லாஹ்விடம்) இரண்டு விதமான கூலிகள் உள்ளன. ஒருவர் வேதக்காரர்களில் உள்ளவர். இவர் தம் (சமூகத்திற்கு அனுப்பப்பட்ட) தூதரையும், முஹம்மதையும் நம்பியவர். மற்றொருவர் தம் இறைவனின் கடமைகளையும், தம் எஜமானுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றும் அடிமை. மூன்றாமவர் தம்மிடத்திலுள்ள ஓர் அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கப் பயிற்சி அளித்து, அந்தப் பயிற்சியை அழகுறச் செய்து, அவளுக்கு மார்க்கச் சட்டங்களைக் கற்பித்து, கற்றுத் தந்ததையும் அழகுறச் செய்து, பின்னர் அவளை அடிமைத்தளையிலிருந்து விடுவித்து அவளை மணந்தவர்.

இம்மூவருக்கும் இரண்டு விதக் கூலிகள் உண்டு’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

‘இதை எந்தப் பகரமும் இல்லாமல் உமக்கு நாம் வழங்கி விட்டோம். முன்னர் இதை விடச் சின்னப் பிரச்சினைகளுக்காக மதீனாவுக்கு (வாகனங்களில்) பயணம் மேற்கொள்ளப்பட்டதுண்டு’ என்று (தம்மிடம் சட்ட விளக்கம் கேட்டு வந்தவரிடம்) ஆமிர் கூறினார்.
Book : 3


«ثَلاَثَةٌ لَهُمْ أَجْرَانِ: رَجُلٌ مِنْ أَهْلِ الكِتَابِ، آمَنَ بِنَبِيِّهِ وَآمَنَ بِمُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَالعَبْدُ المَمْلُوكُ إِذَا أَدَّى حَقَّ اللَّهِ وَحَقَّ مَوَالِيهِ، وَرَجُلٌ كَانَتْ عِنْدَهُ أَمَةٌ فَأَدَّبَهَا فَأَحْسَنَ تَأْدِيبَهَا، وَعَلَّمَهَا فَأَحْسَنَ تَعْلِيمَهَا، ثُمَّ أَعْتَقَهَا فَتَزَوَّجَهَا فَلَهُ أَجْرَانِ »، ثُمَّ قَالَ عَامِرٌ: أَعْطَيْنَاكَهَا بِغَيْرِ شَيْءٍ، قَدْ كَانَ يُرْكَبُ فِيمَا دُونَهَا إِلَى المَدِينَةِ


Bukhari-96

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

96. ‘நாங்கள் சென்ற பயணம் ஒன்றில் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தார்கள். அஸர் தொழுகையின் நேரம் நெருங்கிவிட்ட நிலையில் நாங்கள் உளூச் செய்து கொண்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் எங்களை வந்தடைந்தார்கள்.

அப்போது நாங்கள் எங்கள் கால்களைத் தண்ணீரால் தடவிக் கொண்டிருந்தோம். (அதைக் கண்டதும்) ‘குதிங்கால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு நரகம் தான்!’ என்று இரண்டு அல்லது மூன்று முறை தம் குரலை உயர்த்திக் கூறினார்கள்’ அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
Book :3


تَخَلَّفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ سَافَرْنَاهُ، فَأَدْرَكَنَا وَقَدْ أَرْهَقْنَا الصَّلاَةَ، صَلاَةَ العَصْرِ، وَنَحْنُ نَتَوَضَّأُ، فَجَعَلْنَا نَمْسَحُ عَلَى أَرْجُلِنَا فَنَادَى بِأَعْلَى صَوْتِهِ «وَيْلٌ لِلْأَعْقَابِ مِنَ النَّارِ مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا»


Bukhari-95

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

95. ‘நபி(ஸல்) அவர்கள் ஏதாவது ஒரு வார்த்தை பேசினால் அது அவர்களிடமிருந்து நன்கு புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக மும்முறை அதைத் திரும்பக் கூறுவார்கள். ஏதாவது ஒரு சமூகத்தாரிடம் சென்றால் மும்முறை ஸலாம் கூறுவார்கள்’ அனஸ்(ரலி) அறிவித்தார்.
Book :3


«إِذَا تَكَلَّمَ بِكَلِمَةٍ أَعَادَهَا ثَلاَثًا، حَتَّى تُفْهَمَ عَنْهُ، وَإِذَا أَتَى عَلَى قَوْمٍ فَسَلَّمَ عَلَيْهِمْ، سَلَّمَ عَلَيْهِمْ ثَلاَثًا»


Bukhari-94

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 30

தாம் சொல்வது நன்கு புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்பதற்காக ஒரு செய்தியை மும்முறை திருப்பிச் சொல்லுதல்.

(ஒருமுறை பெரும்பாவங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்த) நபி (ஸல்) அவர்கள், எச்சரிக்கை! பொய் சாட்சியும் அவற்றில் ஒன்றுதான் எனத் திரும்பத்திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

நபி (ஸல்) அவர்கள் (விடைபெறும் ஹஜ்ஜுப் பேருரையின் இறுதியில்) நான் எல்லாவற்றையும் (உங்களுக்கு) சமர்ப்பித்து விட்டேனா? என்று மூன்றுமுறை கேட்டார்கள். 

94. ‘நபி (ஸல்) அவர்கள் ஸலாம் கூறினால் மூன்று முறை ஸலாம் கூறுவார்கள்; ஏதாவது ஒரு வார்த்தையைப் பேசினால் அதனை மூன்று முறை திரும்பக் கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

அத்தியாயம்: 3


«إِذَا سَلَّمَ سَلَّمَ ثَلاَثًا، وَإِذَا تَكَلَّمَ بِكَلِمَةٍ أَعَادَهَا ثَلاَثًا»


Next Page » « Previous Page