Author: Farook

Kubra-Bayhaqi-6296

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6296. உமர் பின் அப்துல்அஸீஸ் (ரஹ்) அவர்களின் அடிமை அத்ஹம் அவர்கள் கூறியதாவது:

நாங்கள் இருபெருநாட்களிலும் உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்களுக்கு, “தகப்பலல்லாஹு மின்னா வமின்க யா அமீரல் முஃமினீன்” (இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! அல்லாஹ் உங்களிடமிருந்தும் எங்களிடமிருந்தும் ஏற்றுக் கொள்வானாக) என்று கூறுவோம். அவர்களும் அவ்வாறே எங்களுக்கு பதில் கூறுவார்கள். அதை அவர்கள் ஆட்சேபிக்கமாட்டார்கள்.


كُنَّا نَقُولُ لِعُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ فِي الْعِيدَيْنِ: ” تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ , فَيَرُدُّ عَلَيْنَا وَلَا يُنْكِرُ ذَلِكَ عَلَيْنَا


Kubra-Bayhaqi-6294

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

பெருநாளில் மக்கள், தகப்பலல்லாஹு மின்னா வமின்க என்று கூறிக் கொள்வது.

6294. நான் பெருநாள் அன்று வாஸிலா இப்னு அஸ்கஃ (ரலி) அவர்களைச் சந்தித்து தகப்பலல்லாஹு மின்னா வமின்க” (அல்லாஹ் உங்களிடமிருந்தும் என்னிடமிருந்தும் ஏற்றுக் கொள்வானாக) என்று கூறினேன்.

அதற்கவர்கள் ஆம் ! தகப்பலல்லாஹு மின்னா வமின்க என்று கூறினார்கள். பிறகு அவர்கள், ”நான் பெருநாளன்று நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து தகப்பலல்லாஹு மின்னா வமின்க என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள்  ”நஅம் (ஆம்), தகப்பலல்லாஹு மின்னா வமின்க என்று பதிலுரைத்தார்கள் என்று கூறினார்.

அறிவிப்பவர்: காலித் பின் மஃதான் (ரஹ்)


لَقِيتُ وَاثِلَةَ بْنَ الْأَسْقَعِ فِي يَوْمِ عِيدٍ , فَقُلْتُ: تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكَ , فَقَالَ: ” نَعَمْ، تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكَ ” , قَالَ وَاثِلَةُ: ” لَقِيتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عِيدٍ فَقُلْتُ: تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكَ , قَالَ: ” نَعَمْ , تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكَ


Almujam-Alkabir-17619

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

17619. நான் பெருநாளன்று வாஸிலா இப்னு அஸ்கஃ (ரலி) அவர்களைச் சந்தித்து “தகப்பலல்லாஹு மின்னா வமின்க” (அல்லாஹ் உங்களிடமிருந்தும் என்னிடமிருந்தும் ஏற்றுக் கொள்வானாக) என்று கூறினேன். அதற்கவர்கள் ஆம் ! தகப்பலல்லாஹு மின்னா வமின்க (அல்லாஹ் உங்களிடமிருந்தும் என்னிடமிருந்தும் ஏற்றுக் கொள்வானாக) என்று கூறினார்கள் என்று என் தந்தை எனக்கு அறிவித்தார்.

அறிவிப்பவர்: ஹபீப் பின் உமர் அல்அன்ஸாரீ

 


لَقِيتُ وَاثِلَةَ يَوْمَ عِيدٍ فَقُلْتُ: تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكَ فَقَالَ: نَعَمْ، تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكَ


Kubra-Bayhaqi-6295

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6295. ”நான் பெருநாளன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்து தகப்பலல்லாஹு மின்னா வமின்க (அல்லாஹ் உங்களிடமிருந்தும் என்னிடமிருந்தும் ஏற்றுக் கொள்வானாக) என்று கூறினேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் ”நஅம் (ஆம்), தகப்பலல்லாஹு மின்னா வமின்க என்று பதிலுரைத்தார்கள்.

அறிவிப்பவர்: வாஸிலா பின் அஸ்கஃ (ரலி)


لَقِيتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عِيدٍ، فَقُلْتُ: تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكَ , قَالَ: ” نَعَمْ , تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكَ


Al-Adabul-Mufrad-946

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

946. (உலகத்தில்) நபி (ஸல்) அவர்களை விட நபித்தோழர்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. ஆயினும் நபி (ஸல்) அவர்கள், அவர்களை நோக்கி வரும் போது அவர்களுக்காக எழ மாட்டார்கள். இதை நபி (ஸல்) அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள்’ என்பதே இதற்குக் காரணம்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


مَا كَانَ شَخْصٌ أَحَبَّ إِلَيْهِمْ رُؤْيَةً مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانُوا إِذَا رَأَوْهُ لَمْ يَقُومُوا إِلَيْهِ، لِمَا يَعْلَمُونَ مِنْ كَرَاهِيَتِهِ لِذَلِكَ


Musnad-Ahmad-13623

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

13623. (உலகத்தில்) நபி (ஸல்) அவர்களை விட நபித்தோழர்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. ஆயினும் நபி (ஸல்) அவர்கள், அவர்களை நோக்கி வரும் போது அவர்களுக்காக எழ மாட்டார்கள். இதை நபி (ஸல்) அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள்’ என்பதே இதற்குக் காரணம்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


«مَا كَانَ شَخْصٌ أَحَبَّ إِلَيْهِمْ رُؤْيَةً مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانُوا إِذَا رَأَوْهُ لَمْ يَقُومُوا، لِمَا يَعْلَمُونَ مِنْ كَرَاهِيَتِهِ لِذَلِكَ»


Musnad-Ahmad-12345

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

12345. (உலகத்தில்) நபி (ஸல்) அவர்களை விட நபித்தோழர்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. ஆயினும் நபி (ஸல்) அவர்கள், அவர்களை நோக்கி வரும் போது அவர்களுக்காக எழ மாட்டார்கள். இதை நபி (ஸல்) அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள்’ என்பதே இதற்குக் காரணம்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


«مَا كَانَ شَخْصٌ أَحَبَّ إِلَيْهِمْ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانُوا إِذَا رَأَوْهُ لَمْ يَقُومُوا لِمَا يَعْلَمُونَ مِنْ كَرَاهِيَتِهِ لِذَلِكَ»


Almujam-Alawsat-1260

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1260. ஒரு மனிதர் (முதன் முதலாக நபி (ஸல்) அவர்களை சந்திக்க வந்தார். அப்போது (பயத்தினால்) அவருக்கு உடல் நடுக்கம் ஏற்பட்டது.

நபி (ஸல்) அவர்கள், ‘சாதாரணமாக இருப்பீராக! நான் அரசன் அல்ல. உலர்ந்த இறைச்சியைச் சாப்பிட்டு வந்த குரைஷி குலத்துப் பெண்ணுடைய மகன் தான் நான்‘ என்று அவரிடம் கூறி அவரை சகஜ நிலைக்குக் கொண்டு வந்தார்கள்.

அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி)


أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ يَدَيْهِ، فَاسْتَقْبَلَتْهُ رِعْدَةٌ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَوِّنْ عَلَيْكَ، فَإِنِّي لَسْتُ بِمَلِكٍ إِنَّمَا أَنَا ابْنُ امْرَأَةٍ مِنْ قُرَيْشٍ، كَانَتْ تَأْكُلُ الْقَدِيدَ»


Hakim-4366

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4366. ஒரு மனிதர் மக்காவெற்றியின் போது நபி (ஸல்) அவர்களிடம் பேசினார். அப்போது (பயத்தினால்) அவருக்கு  உடல் நடுக்கம் ஏற்பட்டது.

நபி (ஸல்) அவர்கள், ‘சாதாரணமாக இருப்பீராக! உலர்ந்த இறைச்சியைச் சாப்பிட்டு வந்த குரைஷி குலத்துப் பெண்ணுடைய மகன் தான் நான்‘ என்று அவரிடம் கூறி அவரை சகஜ நிலைக்குக் கொண்டு வந்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ மஸ்வூத் (ரலி)


أَنَّ رَجُلًا كَلَّمَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْفَتْحِ، فَأَخَذَتْهُ الرِّعْدَةُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَوِّنْ عَلَيْكَ فَإِنَّمَا أَنَا ابْنُ امْرَأَةٍ مِنْ قُرَيْشٍ كَانَتْ تَأْكُلُ الْقَدِيدَ»


Ibn-Majah-3312

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

உலர்ந்த இறைச்சி.

3312. ஒரு மனிதர் முதன் முதலாக (மன்னர்) நபி (ஸல்) அவர்களை சந்திக்க வந்து பேச ஆரம்பித்தார். (பொதுவாக மன்னர்கள் முன்னிலையில் நடுநடுங்கிக் கொண்டு தான் மக்கள் நிற்பார்கள்) நபி (ஸல்) அவர்களையும் அது போல் கருதிக்கொண்டு உடல் நடுங்கினார்.

நபி (ஸல்) அவர்கள், ‘சாதாரணமாக இருப்பீராக! நான் அரசன் அல்ல. உலர்ந்த இறைச்சியைச் சாப்பிட்டு வந்த குரைஷி குலத்துப் பெண்ணுடைய மகன் தான் நான்‘ என்று அவரிடம் கூறி அவரை சகஜ நிலைக்குக் கொண்டு வந்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ மஸ்வூத் (ரலி)

இப்னு மாஜா கூறுகிறார்:

ஜஃபர் பின் அவ்ன் அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களில் இஸ்மாயீல் பின் அஸத் தான் இந்த செய்தியை நபி (ஸல்) அவர்களின் கூற்றாக அறிவித்துள்ளார். (ஆனால் இது தவறாகும்)


أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ، فَكَلَّمَهُ، فَجَعَلَ تُرْعَدُ فَرَائِصُهُ، فَقَالَ لَهُ: «هَوِّنْ عَلَيْكَ، فَإِنِّي لَسْتُ بِمَلِكٍ، إِنَّمَا أَنَا ابْنُ امْرَأَةٍ تَأْكُلُ الْقَدِيدَ»

قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: إِسْمَاعِيلُ وَحْدَهُ، وَصَلَهُ


Next Page » « Previous Page