Author: Farook

Musannaf-Ibn-Abi-Shaybah-12806

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

கஅபாவை சுற்றிவருவதின் நன்மை.

12806. கஅபாவை சுற்றிவருபவருக்கு அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஒரு நன்மை எழுதப்படும். அவரின் கணக்கிலிருந்து (அவர் புரிந்த) ஒரு தீமை அழிக்கப்படும். சொர்க்கத்தில் அவருக்கு ஒரு அந்தஸ்து உயர்த்தப்படும்.

(மேலும்) இந்த கஅபாவை ஏழு முறை கணக்கிட்டு சுற்றிவருபவர் ஒரு அடிமையை உரிமைவிட்டவர் போன்றவராவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


مَنْ طَافَ بِالْبَيْتِ لَمْ يَرْفَعْ قَدَمًا ، وَلَمْ يَضَعْ أُخْرَى ، إِلاَّ كُتِبَتْ لَهُ بَهَا حَسَنَةٌ ، وَحُطَّتْ عَنْهُ بَهَا خَطِيئَةٌ ، وَرُفِعَتْ لَهُ بِهَا دَرَجَةٌ.

وَسَمِعْتُهُ يَقُولُ : مَنْ أَحْصَى سُبُوعًا كَانَ كَعَدْلِ رَقَبَةٍ.


Ibn-Majah-2956

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

கஅபாவை சுற்றுவதின் சிறப்பு.

2956. “கஅபாவை சுற்றிவந்து, இரண்டு ரக்அத்கள் தொழுபவர் ஒரு அடிமையை உரிமை விட்டவர் போன்றவராவார்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

 


«مَنْ طَافَ بِالْبَيْتِ، وَصَلَّى رَكْعَتَيْنِ، كَانَ كَعِتْقِ رَقَبَةٍ»


Shuabul-Iman-4472

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4472. ஸஃப்வான் பின் ஸுலைம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு முஃமின் கோழையாக இருப்பானா? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் “ஆம்” என்று பதிலளித்தார்கள். ஒரு முஃமின் கஞ்சனாக இருப்பானா? எனக் கேட்கப்பட்டது. அதற்கும் அவர்கள் “ஆம்” என்று பதிலளித்தார்கள். ஒரு முஃமின் பொய் சொல்பவனாக இருப்பானா? எனக் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் “இல்லை” என்று பதிலளித்தார்கள்.


أَنَّهُ قِيلَ لِرَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيَكُونُ الْمُؤْمِنُ جَبَانًا؟ قَالَ: ” نَعَمْ ” قِيلَ: أَيَكُونُ الْمُؤْمِنُ بَخِيلًا؟ قَالَ: ” نَعَمْ ” فَقِيلَ لَهُ: أَيَكُونُ الْمُؤْمِنُ كَذَّابًا؟ قَالَ: ” لَا “


Muwatta-Malik-2832

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2832. ஸஃப்வான் பின் ஸுலைம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு முஃமின் கோழையாக இருப்பானா? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் “ஆம்” என்று பதிலளித்தார்கள். ஒரு முஃமின் கஞ்சனாக இருப்பானா? எனக் கேட்கப்பட்டது. அதற்கும் அவர்கள் “ஆம்” என்று பதிலளித்தார்கள். ஒரு முஃமின் பொய் சொல்பவனாக இருப்பானா? எனக் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் “இல்லை” என்று பதிலளித்தார்கள்.


قِيلَ لِرَسُولِ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ: أَيَكُونُ الْمُؤْمِنُ جَبَانًا؟ فَقَالَ: نَعَمْ، فَقِيلَ لَهُ: أَيَكُونُ الْمُؤْمِنُ بَخِيلاً؟ فَقَالَ: نَعَمْ، فَقِيلَ لَهُ: أَيَكُونُ الْمُؤْمِنُ كَذَّابًا؟ فَقَالَ: لاَ.


Nasaayi-3435

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3435. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் உம்மத்தினரின் உள்ளங்களில் ஊசலாடும் தீய எண்ணங்களை, அவர்கள் அதை (வெளிப்படுத்தி)ப் பேசாதவரை அல்லது அதன்படி செயல்படாதவரை அல்லாஹ் மன்னித்துவிட்டான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«إِنَّ اللَّهَ تَعَالَى تَجَاوَزَ لِأُمَّتِي عَمَّا حَدَّثَتْ بِهِ أَنْفُسَهَا، مَا لَمْ تَكَلَّمْ أَوْ تَعْمَلْ بِهِ»


Nasaayi-3434

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3434. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் உம்மத்தினரின் உள்ளங்களில் ஊசலாடும் தீய எண்ணங்களை, அவர்கள் அதன்படி செயல்படாதவரை அல்லது அதை (வெளிப்படுத்தி)ப் பேசாதவரை மாண்பும் வலிவுமிக்க அல்லாஹ் மன்னித்துவிட்டான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ تَجَاوَزَ لِأُمَّتِي مَا وَسْوَسَتْ بِهِ وَحَدَّثَتْ بِهِ أَنْفُسَهَا، مَا لَمْ تَعْمَلْ أَوْ تَتَكَلَّمْ بِهِ»


Tirmidhi-1183

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

ஒருவர் தனது மனைவியை தலாக் கூறிவிட்டேன் என்று மனதில் எண்ணினால்?

1183. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் உம்மத்தினரின் உள்ளங்களில் ஊசலாடும் தீய எண்ணங்களை, அவர்கள் அதை (வெளிப்படுத்தி)ப் பேசாதவரை அல்லது அதன்படி செயல்படாதவரை அல்லாஹ் மன்னித்துவிட்டான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«تَجَاوَزَ اللَّهُ لِأُمَّتِي مَا حَدَّثَتْ بِهِ أَنْفُسَهَا مَا لَمْ تَكَلَّمْ بِهِ أَوْ تَعْمَلْ بِهِ»


Abu-Dawood-2209

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

தலாக் (கூறிவிடலாம் என்று உள்ளத்தில்) ஊசலாட்டம் ஏற்பட்டால்?

2209. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் உம்மத்தினரின் உள்ளங்களில் ஊசலாடும் தீய எண்ணங்களை, அவர்கள் அதை (வெளிப்படுத்தி)ப் பேசாதவரை அல்லது அதன்படி செயல்படாதவரை அல்லாஹ் மன்னித்துவிட்டான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«إِنَّ اللَّهَ تَجَاوَزَ لِأُمَّتِي عَمَّا لَمْ تَتَكَلَّمْ بِهِ، أَوْ تَعْمَلْ بِهِ، وَبِمَا حَدَّثَتْ بِهِ أَنْفُسَهَا»


Ibn-Majah-2044

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2044. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் எழும் தீய எண்ணங்களை அவர்கள் அதன்படி செயல்படாத வரை அல்லது அதை (வெளிப்படுத்திப்) பேசாத வரை அல்லாஹ் மன்னித்துவிட்டான்.

மேலும் அவர்கள் நிர்பந்திக்கப்பட்டு செய்யும் செயல்களையும் அல்லாஹ் மன்னித்துவிட்டான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«إِنَّ اللَّهَ تَجَاوَزَ لِأُمَّتِي عَمَّا تُوَسْوِسُ بِهِ صُدُورُهَا، مَا لَمْ تَعْمَلْ بِهِ، أَوْ تَتَكَلَّمْ بِهِ، وَمَا اسْتُكْرِهُوا عَلَيْهِ»


Ibn-Majah-2040

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

ஒருவர் மனதில் தலாக் கூறினால்?

2040. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் எழும் தீய எண்ணங்களை அவர்கள் அதன்படி செயல்படாத வரை அல்லது அதை (வெளிப்படுத்திப்) பேசாத வரை அல்லாஹ் மன்னித்துவிட்டான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«إِنَّ اللَّهَ تَجَاوَزَ لِأُمَّتِي عَمَّا حَدَّثَتْ بِهِ أَنْفُسَهَا، مَا لَمْ تَعْمَلْ بِهِ، أَوْ تَكَلَّمْ بِهِ»


Next Page » « Previous Page