Author: Farook

Musnad-Ahmad-25813

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

25813. ஆயிஷா (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குணத்தைப் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குணம் குர்ஆனாகவே இருந்தது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹஸன் பஸரீ (ரஹ்)


سُئِلَتْ عَائِشَةُ عَنْ خُلُقِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَتْ: «كَانَ خُلُقُهُ الْقُرْآنَ»


Musnad-Ahmad-25302

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

25302. நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குணத்தைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குணம் குர்ஆனாகவே இருந்தது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஃது பின் ஹிஷாம் (ரஹ்)


سَأَلْتُ عَائِشَةَ، فَقُلْتُ: أَخْبِرِينِي عَنْ خُلُقِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَتْ: «كَانَ خُلُقُهُ الْقُرْآنَ»


Musnad-Ahmad-24601

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

24601. ஸஃது பின் ஹிஷாம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, “இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குணத்தைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குணம் குர்ஆனாகவே இருந்தது” என்று கூறினார்கள்.

மேலும், “நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர்” (அல்குர்ஆன் 68: 4) என்ற அல்லாஹ்வின் வசனத்தை குர்ஆனில் ஓதியதில்லையா? என்றும் கூறினார்கள்.


أَتَيْتُ عَائِشَةَ، فَقُلْتُ: يَا أُمَّ الْمُؤْمِنِينَ، أَخْبِرِينِي بِخُلُقِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: ” كَانَ خُلُقُهُ الْقُرْآنَ، أَمَا تَقْرَأُ الْقُرْآنَ، قَوْلَ اللَّهِ عَزَّ وَجَلَّ: {وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ} [القلم: 4]


Kubra-Bayhaqi-19013

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

19013. யாருக்கு வசதி இருந்தும் குர்பானி கொடுக்கவில்லையோ அவர் நம்முடைய பள்ளிவாசல்களுக்கு வரவே வேண்டாம் என்று அபூஹுரைரா (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் முஸைய்யிப் (ரஹ்)


مَنْ وَجَدَ سَعَةً فَلَمْ يُضَحِّ فَلَا يَقْرَبْنَا فِي مَسْجِدِنَا

مَوْقُوفٌ

أَخْبَرَنَاهُ أَبُو بَكْرِ بْنُ الْحَارِثِ , أنبأ عَلِيُّ بْنُ عُمَرَ الْحَافِظُ , ثنا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ , ثنا أَحْمَدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ وَهْبٍ , حَدَّثَنِي عَمِّي، ثنا عَبْدُ اللهِ بْنُ عَيَّاشٍ , فَذَكَرَهُ


Kubra-Bayhaqi-19012

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி


مَنْ وَجَدَ سَعَةً لِأَنْ يُضَحِّيَ فَلَمْ يُضَحِّ فَلَا يَحْضُرْ مُصَلَّانَا


Hakim-7566

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7566. யாருக்கு வசதி இருந்தும் நம்முடன் குர்பானி கொடுக்கவில்லையோ அவர் நம்முடைய (ஈதுல் அழ்ஹா) தொழும் இடத்திற்கு வரவே வேண்டாம் என்று அபூஹுரைரா (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் அல்அஃரஜ் (ரஹ்)


«مَنْ وَجَدَ سَعَةً فَلَمْ يُضَحِّ مَعَنَا فَلَا يَقْرَبَنَّ مُصَلَّانَا»


Hakim-7565

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7565. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாருக்கு செல்வம் இருந்தும் குர்பானி கொடுக்கவில்லையோ அவர் நம்முடைய (ஈதுல் அழ்ஹா) தொழும் இடத்திற்கு வரவே வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«مَنْ كَانَ لَهُ مَالٌ فَلَمْ يُضَحِّ فَلَا يَقْرَبَنَّ مُصَلَّانَا»

وَقَالَ مَرَّةً: «مَنْ وَجَدَ سَعَةً فَلَمْ يَذْبَحْ فَلَا يَقْرَبَنَّ مُصَلَّانَا»


Hakim-3468

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3468. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாருக்கு குர்பானி கொடுக்க வசதி இருந்தும் குர்பானி கொடுக்கவில்லையோ அவர் நம்முடைய (ஈதுல் அழ்ஹா) தொழும் இடத்திற்கு வரவே வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«مَنْ وَجَدَ سَعَةً لِأَنْ يُضَحِّيَ فَلَمْ يُضَحِّ، فَلَا يَحْضُرْ مُصَلَّانَا»


Daraqutni-4762

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4762. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவருக்கு வசதி இருந்தும் அவர் குர்பானி கொடுக்கவில்லையென்றால் அவர் நம்முடைய (ஈதுல் அழ்ஹா) தொழும் இடத்திற்கு வரவே வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«مَنْ وَجَدَ مِنْكُمْ سَعَةً فَلَمْ يُضَحِّ فَلَا يَقْرَبَنَّ مُصَلَّانَا»


Daraqutni-4743

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

4743. யாருக்கு வசதி இருந்தும் குர்பானி கொடுக்கவில்லையோ அவர் நம்முடைய பள்ளிவாசல்களுக்கு வரவே வேண்டாம் என்று அபூஹுரைரா (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் முஸய்யிப் (ரஹ்)


«مَنْ وَجَدَ سَعَةً وَلَمْ يُضَحِّ فَلَا يَقْرَبْنَا فِي مَسَاجِدِنَا»


Next Page » « Previous Page