8506. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு “முஸ்லிம் காணும்” கனவு நபித்துவத்தின் எழுபது பாகங்களில் ஒன்றாகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«رُؤْيَا الرَّجُلِ الْمُسْلِمِ جُزْءٌ مِنْ سَبْعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ»
8506. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு “முஸ்லிம் காணும்” கனவு நபித்துவத்தின் எழுபது பாகங்களில் ஒன்றாகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«رُؤْيَا الرَّجُلِ الْمُسْلِمِ جُزْءٌ مِنْ سَبْعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ»
8161. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நல்ல மனிதர் காணும் கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«رُؤْيَا الرَّجُلِ الصَّالِحِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ»
7643. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளர் காணும் (நல்ல) கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«رُؤْيَا الْمُؤْمِنِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ»
7642. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உலக இறுதி நாளின் (நெருக்கத்தில்) ஒரு இறைநம்பிக்கையாளர் காணும் கனவு பொய்யாகப் போவதில்லை. உங்களில் (நல்ல) உண்மையான கனவு காண்பவரே உண்மை பேசுகின்றவர் ஆவார்.
கனவுகள் மூன்று வகையாகும். நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வரும் நற்செய்தியாகும். இன்னொரு வகை ஒரு மனிதரின் உள்ளத்தில் தோன்றுகின்ற பிரமையாகும். கவலையளிக்கக்கூடிய கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும். ஆகவே, உங்களில் ஒருவர் தாம் விரும்பாத கனவொன்றைக் கண்டால், அதைப் பற்றி மக்களிடம் தெரிவிக்க வேண்டாம். உடனே அவர் எழுந்து (இறைவனைத்) தொழட்டும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
மேலும் அபூஹுரைரா (ரலி) கூறினார்:
நான் காலில் விலங்கிடப்படுவதைப் போன்று கனவு காண்பதை விரும்புகிறேன். கழுத்தில் விலங்கிடப்படுவதைப் போன்று காண்பதை வெறுக்கிறேன். கால் விலங்கு, மார்க்கத்தில் நிலைத்திருப்பதைக் குறிக்கும்.
மேலும் அபூஹுரைரா (ரலி) அவர்கள், “இறைநம்பிக்கையாளர் காணும் (நல்ல) கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அறிவித்தார்.
فِي آخِرِ الزَّمَانِ لَا تَكَادُ رُؤْيَا الْمُؤْمِنِ تَكْذِبُ، وَأَصْدَقُكُمْ رُؤْيَا أَصْدَقُكُمْ حَدِيثًا. وَالرُّؤْيَا ثَلَاثَةٌ: الرُّؤْيَا الْحَسَنَةُ بُشْرَى مِنَ اللَّهِ عَزَّ وَجَلَّ، وَالرُّؤْيَا يُحَدِّثُ بِهَا الرَّجُلُ نَفْسَهُ، وَالرُّؤْيَا تَحْزِينٌ مِنَ الشَّيْطَانِ، فَإِذَا رَأَى أَحَدُكُمْ رُؤْيَا يَكْرَهُهَا، فَلَا يُحَدِّثْ بِهَا أَحَدًا، وَلْيَقُمْ فَلْيُصَلِّ “
قَالَ أَبُو هُرَيْرَةَ: ” يُعْجِبُنِي الْقَيْدُ، وَأَكْرَهُ الْغُلَّ، الْقَيْدُ: ثَبَاتٌ فِي الدِّينِ
وَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رُؤْيَا الْمُؤْمِنِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ»
7183. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளர் காணும் (நல்ல) கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«رُؤْيَا الْمُؤْمِنِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ»
2749. ‘நற்செய்தி கூறுகின்றவை (‘முபஷ்ஷிராத்’) தவிர, நபித்துவத்தில் வேறெதுவும் எஞ்சியிருக்கவில்லை’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது மக்கள் அல்லாஹ்வின் தூதரே! ‘நற்செய்தி கூறுகின்றவை (முபஷ்ஷிராத்) என்றால் என்ன?’ என்று வினவினர்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் நல்ல மனிதர் காணும், (அல்லது அவருக்கு காட்டப்படும்) நல்ல (உண்மையான) கனவு’ ஆகும். இது நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும் என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அதாஉ பின் யஸார் (ரஹ்)
لَنْ يَبْقَى بَعْدِي مِنَ النُّبُوَّةِ إِلاَّ الْمُبَشِّرَاتُ، فَقَالُوا: وَمَا الْمُبَشِّرَاتُ يَا رَسُولَ اللهِ؟ قَالَ: الرُّؤْيَا الصَّالِحَةُ يَرَاهَا الرَّجُلُ الصَّالِحُ أَوْ تُرَى لَهُ، جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ.
8178. தூதுத்துவமும், நபித்துவமும் நிறைவு பெற்றுவிட்டன. எனக்குப் பிறகு எந்த ரசூலும் இல்லை. நபியும் இல்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அவர்கள் இவ்வாறு கூறியது) மக்களுக்கு மிகவும் கஷ்டமாகி விட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள், “என்றாலும் (முபஷ்ஷராத்) நற்செய்திகள் (எஞ்சியுள்ளது) என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதரே! (முபஷ்ஷராத்) நற்செய்திகள் என்றால் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஒரு முஸ்லிம் காண்கின்ற கனவு. அது நபித்துவத்தின் (நாற்பத்தாறு) பங்குகளில் ஒரு பங்காகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
«إِنَّ الرِّسَالَةَ وَالنُّبُوَّةَ قَدِ انْقَطَعَتْ فَلَا رَسُولَ بَعْدِي وَلَا نَبِيَّ» قَالَ: فَشَقَّ ذَلِكَ عَلَى النَّاسِ، فَقَالَ: «لَكِنِ الْمُبَشِّرَاتُ» فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ مَا الْمُبَشِّرَاتُ؟ قَالَ: «رُؤْيَا الْمَرْءِ الْمُسْلِمُ هِيَ جُزْءٌ مِنْ أَجْزَاءِ النُّبُوَّةِ»
3947. தூதுத்துவமும், நபித்துவமும் நிறைவு பெற்றுவிட்டன என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதனால் மக்கள் திடுக்குற்றனர் (கவலையடைந்தனர்). அதற்கு நபி (ஸல்) அவர்கள், “என்றாலும் (முபஷ்ஷராத்) நற்செய்திகள் (எஞ்சியுள்ளது). அது நபித்துவத்தின் (நாற்பத்தாறு) பங்குகளில் ஒரு பங்காகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
«إِنَّ النُّبُوَّةَ وَالرِّسَالَةَ قَدِ انْقَطَعَتْ»، فَجَزِعَ النَّاسُ، قَالَ: «قَدْ بَقِيَتْ مُبَشِّرَاتٌ، وَهِيَ جُزْءٌ مِنَ النُّبُوَّةِ»
7577.
«الرُّؤْيَا الْحَسَنَةُ مِنَ الرَّجُلِ الصَّالِحِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ»
3893.
«الرُّؤْيَا الْحَسَنَةُ مِنَ الرَّجُلِ الصَّالِحِ، جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ»
சமீப விமர்சனங்கள்