Author: Farook

Bazzar-3481

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

3481. ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில், (ரியா எனும்) முகஸ்துதியை சிறிய இணைவைத்தல் என்று கருதி வந்தோம்.

அறிவிப்பவர்: யஃலா பின் ஷத்தாத் (ரஹ்)


كُنَّا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعُدُّ الشِّرْكَ الْأَصْغَرَ الرِّيَاءَ


Hakim-7937

ஹதீஸின் தரம்: Pending

7937. ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில், (ரியா) முகஸ்துதியை சிறிய இணை வைத்தலாக கருதிவந்தோம்.

அறிவிப்பவர்: யஃலா பின் ஷத்தாத் (ரஹ்)


«كُنَّا نَعُدُّ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ الرِّيَاءَ الشِّرْكُ الْأَصْغَرُ»


Musnad-Ahmad-23631

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

23631. ஹதீஸ் எண்-23630 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர் தொடரில் மஹ்மூத் பின் லபீத் (ரலி) அவர்களிடமிருந்து ஆஸிம் பின் உமர் அறிவிப்பதாக வந்துள்ளது.


إِنَّ أَخْوَفَ مَا أَخَافُ عَلَيْكُمْ فَذَكَرَ مَعْنَاهُ


Musnad-Ahmad-23630

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

23630.


«إِنَّ أَخْوَفَ مَا أَخَافُ عَلَيْكُمُ الشِّرْكُ الْأَصْغَرُ» قَالُوا: وَمَا الشِّرْكُ الْأَصْغَرُ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: ” الرِّيَاءُ، يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ لَهُمْ يَوْمَ الْقِيَامَةِ: إِذَا جُزِيَ النَّاسُ بِأَعْمَالِهِمْ: اذْهَبُوا إِلَى الَّذِينَ كُنْتُمْ تُرَاءُونَ فِي الدُّنْيَا فَانْظُرُوا هَلْ تَجِدُونَ عِنْدَهُمْ جَزَاءً


Musnad-Ahmad-23636

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

23636. “உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுவதெல்லாம் சிறிய இணை வைப்பைத் தான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அதற்கு நபித்தோழர்கள்) “சிறிய இணைவைப்பு என்றால் என்ன? அல்லாஹ்வின் தூதரே” என்று கேட்டார்கள். “அது, (ஒரு நல்லறத்தைப் பிறருக்கு காட்ட வேண்டுமென) முகஸ்துதிக்குச் செய்வதாகும்” என்று பதிலளித்தார்கள்.

மேலும், “மனிதர்களுக்கு கூலிகள் வழங்கப்படும் மறுமை நாளில் (முகஸ்திக்காக அமல் செய்த) நபர்களிடம், பூமியில் யாருக்கு காட்டுவதற்காக அமல் செய்தீர்களோ அவர்களிடம் சென்று, நீங்கள் கூலியை பெறுவீர்களா? கவனியுங்கள் என அல்லாஹ் கூறுவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: மஹ்மூத் பின் லபீத் (ரலி)


«إِنَّ أَخْوَفَ مَا أَخَافُ عَلَيْكُمُ الشِّرْكُ الْأَصْغَرُ» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ وَمَا الشِّرْكُ الْأَصْغَرُ؟ قَالَ: «الرِّيَاءُ» إِنَّ اللَّهَ يَقُولُ: «يَوْمَ تُجَازَى الْعِبَادُ بِأَعْمَالِهِمْ اذْهَبُوا إِلَى الَّذِينَ كُنْتُمْ تُرَاءُونَ بِأَعْمَالِكُمْ فِي الدُّنْيَا، فَانْظُرُوا هَلْ تَجِدُونَ عِنْدَهُمْ جَزَاءً»


Musannaf-Ibn-Abi-Shaybah-33010

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

33010. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமைநாள் வருவதற்குமுன், (தனக்கு எவரும் இணையில்லாதவனான அல்லாஹ்வை (மட்டுமே) வணங்கப்படவேண்டும் என்பதற்கு) வாளைக் கொண்டு (போர் செய்ய வேண்டிய நிலைக்கு) அல்லாஹ் என்னை அனுப்பினான்.

(போரில் கிடைக்கும் பொருள்களிலிருந்து எனக்குக் கிடைக்க வேண்டிய) எனது செல்வத்தை என் ஈட்டியின் நிழலுக்குக் கீழே அல்லாஹ் ஏற்படுத்தி உள்ளான். எவர் என் கட்டளைக்கு மாறுசெய்கிறாரோ, அவர் மீது பணிந்திருப்பதும் ஜிஸ்யா-காப்புவரி செலுத்துவதும் கடமையாகும்…

யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையே சார்ந்தவர்.

அறிவிப்பவர்: தாவூஸ் (ரஹ்)


«إِنَّ اللَّهَ بَعَثَنِي بِالسَّيْفِ بَيْنَ يَدَيِ السَّاعَةِ، وَجَعَلَ رِزْقِي تَحْتَ ظِلِّ رُمْحِي، وَجَعَلَ الذُّلَّ وَالصَّغَارَ عَلَى مَنْ خَالَفَنِي، وَمَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ»،


Musannaf-Ibn-Abi-Shaybah-19437

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

19437. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமைநாள் வருவதற்குமுன், (தனக்கு எவரும் இணையில்லாதவனான அல்லாஹ்வை (மட்டுமே) வணங்கப்படவேண்டும் என்பதற்கு) வாளைக் கொண்டு (போர் செய்ய வேண்டிய நிலைக்கு) அல்லாஹ் என்னை அனுப்பினான்.

(போரில் கிடைக்கும் பொருள்களிலிருந்து எனக்குக் கிடைக்க வேண்டிய) எனது செல்வத்தை என் ஈட்டியின் நிழலுக்குக் கீழே அல்லாஹ் ஏற்படுத்தி உள்ளான். எவர் என் கட்டளைக்கு மாறுசெய்கிறாரோ, அவர் மீது பணிந்திருப்பதும் ஜிஸ்யா-காப்புவரி செலுத்துவதும் கடமையாகும்…

யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையே சார்ந்தவர்.

அறிவிப்பவர்: தாவூஸ் (ரஹ்)


إِنَّ اللَّهَ بَعَثَنِي بِالسَّيْفِ بَيْنَ يَدَيِ السَّاعَةِ , وَجُعِلَ رِزْقِي تَحْتَ ظِلِّ رُمْحِي وَجُعِلَ الذُّلُّ وَالصَّغَارُ عَلَى مَنْ خَالَفَنِي وَمَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ


Bazzar-8606

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8606. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(போரில் கிடைக்கும் பொருள்களிலிருந்து எனக்குக் கிடைக்க வேண்டிய) எனது செல்வம் என் ஈட்டியின் நிழலுக்குக் கீழே உள்ளது. எவர் என் கட்டளைக்கு மாறுசெய்கிறாரோ, அவர் மீது பணிந்திருப்பதும், (ஜிஸ்யா) காப்புவரி செலுத்துவதும் கடமையாகும்.

யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையே சார்ந்தவர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


جعل رزقي تحت ظل رمحي وجعل الذلة والصغار على من خالف أمري، وَمَنْ تشبه بقوم فهو منهم.


Musannaf-Abdur-Razzaq-21911

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

21911. பிடரியை மழித்தும், பட்டாடையும் அணிந்திருந்த ஒரு மனிதரைக் கண்ட உமர் (ரலி) அவர்கள், யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையே சார்ந்தவர் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: கத்தாதா (ரஹ்)


أَنَّ عُمَرَ بن الْخَطَّابِ رَأَى رَجُلاً قَدْ حَلَقَ قَفَاهُ، وَلَبِسَ حَرِيرًا، فَقَالَ: مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ.


Next Page » « Previous Page