Author: Farook

Ibn-Majah-3807

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3807. நிலத்தில் பயிரை நட்டுக் கொண்டிருந்த அபூஹுரைரா (ரலி) அவர்களை கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள், ‘‘அபூஹுரைராவே! என்ன ஊன்றுகிறீர்கள்?’’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘நான் எனக்காக ஒரு கன்றை ஊன்றுகிறேன்’’ என்றார்கள்.

‘‘இதனை விட உமக்குச் சிறந்த பயிரை உமக்கு நான் அறிவிக்கட்டுமா?’’ என்று கேட்க, ‘‘அறிவியுங்கள்! அல்லாஹ்வின் தூதரே!’’ என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘‘சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், லா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர்’ என்று கூறுவீராக! இவை ஒவ்வொன்றிற்கும் சொர்க்கத்தில் ஒரு மரம் நடப்படும்’’ என்றார்கள்.

-இதை அபூஹுரைரா (ரலி) கூறியதாக உஸ்மான் பின் அபூஸவ்தா (ரஹ்) அறிவித்தார்.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِهِ وَهُوَ يَغْرِسُ غَرْسًا، فَقَالَ: «يَا أَبَا هُرَيْرَةَ، مَا الَّذِي تَغْرِسُ؟» قُلْتُ: غِرَاسًا لِي، قَالَ: «أَلَا أَدُلُّكَ عَلَى غِرَاسٍ خَيْرٍ لَكَ مِنْ هَذَا؟» قَالَ: بَلَى يَا رَسُولَ اللَّهِ، قَالَ: ” قُلْ: سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، يُغْرَسْ لَكَ بِكُلِّ وَاحِدَةٍ شَجَرَةٌ فِي الْجَنَّةِ


Musannaf-Ibn-Abi-Shaybah-29451

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

29451. சுப்ஹானல்லாஹில் அழீமி, வபிஹம்திஹி (கண்ணிய மிக்க அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று சொல்லக் கூடியவருக்கு சுவனத்தில் அவருக்காக ஒரு பேரீச்ச மரம் நடப்படும் என்று அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஷுஐப் பின் முஹம்மது (ரஹ்)


مَنْ قَالَ: سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ وَبِحَمْدِهِ غُرِسَ لَهُ بِهَا نَخْلَةٌ فِي الْجَنَّةِ


Musannaf-Ibn-Abi-Shaybah-29438

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

29438. சுப்ஹானல்லாஹில் அழீமி, வபிஹம்திஹி (கண்ணிய மிக்க அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று சொல்லக் கூடியவருக்கு சுவனத்தில் அவருக்காக ஒரு பேரீச்ச மரம் நடப்படும் என்று அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஷுஐப் பின் முஹம்மது (ரஹ்)


مَنْ قَالَ: سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ، وَبِحَمْدِهِ، غُرِسَ لَهُ بِهَا نَخْلَةٌ فِي الْجَنَّةِ


Bazzar-2468

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2468. சுப்ஹானல்லாஹில் அழீமி, வபிஹம்திஹி (கண்ணிய மிக்க அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று சொல்லக் கூடியவருக்கு அவர் புகழ்ந்ததன் காரணமாக சுவனத்தில் அவருக்காக ஒரு பேரீச்ச மரம் நடப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«مَنْ قَالَ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ غُرِسَتْ لَهُ نَخْلَةٌ فِي الْجَنَّةِ»


Almujam-Alkabir-445

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

445. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சுப்ஹானல்லாஹில் அழீம் (கண்ணிய மிக்க அல்லாஹ்வைப் போற்றி துதிக்கிறேன்) என்று சொல்லக் கூடியவருக்கு அவர் புகழ்ந்ததன் காரணமாக சுவனத்தில் அவருக்காக ஒரு மரம் நடப்படும்.

அல்குர்ஆனை ஓதி மனனம் செய்து அதன் படி நடந்தவரின் பெற்றோருக்கு மறுமை நாளில் ஒளியிலான ஒரு கிரீடம் அணிவிக்கப்படும். அதன் பிரகாசம் இந்த (உலகத்தின்) சந்திரனைவிட அழகாக இருக்கும்.

அறிவிப்பவர்: முஆத் பின் அனஸ் (ரலி)


«مَنْ قَالَ سُبْحَانَ اللهِ الْعَظِيمِ بُنِيَ لَهُ غَرْسٌ فِي الْجَنَّةِ،

وَمَنْ قَرَأَ الْقُرْآنَ فَأَحْكَمَهُ وَعَمِلَ بِمَا فِيهِ أَلْبَسَ اللهُ وَالِدَيْهِ يَوْمَ الْقِيَامَةِ تَاجًا ضَوْءُهُ أَحْسَنُ مِنْ هَذَا الْقَمَرِ»


Musnad-Ahmad-15645

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

15645. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சுப்ஹானல்லாஹில் அழீம் (கண்ணிய மிக்க அல்லாஹ்வைப் போற்றி துதிக்கிறேன்) என்று சொல்லக் கூடியவருக்கு அவர் புகழ்ந்ததன் காரணமாக சுவனத்தில் அவருக்காக ஒரு மரம் முளைக்கும்.

அல்குர்ஆனை முழுமையாக ஓதி அதன் படி நடந்தவரின் பெற்றோருக்கு மறுமை நாளில் ஒளியிலான ஒரு கிரீடம் அணிவிக்கப்படும். அதன் பிரகாசம் வீட்டில் இருக்கும் சூரியனின் பிரகாசத்தைப் விட சிறந்ததாக இருக்கும். (பெற்றோருக்கே இந்த கூலியென்றால்) அதன்படி நடந்தவருக்கு எத்தகைய கூலி கிடைக்கும் என்று எண்ணிப்பாருங்கள்!

அறிவிப்பவர்: முஆத் பின் அனஸ் (ரலி)


مَنْ قَالَ: سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ، نَبَتَ لَهُ غَرْسٌ فِي الْجَنَّةِ،

وَمَنْ قَرَأَ الْقُرْآنَ فَأَكْمَلَهُ وَعَمِلَ بِمَا فِيهِ، أَلْبَسَ وَالِدَيهِ يَوْمَ الْقِيَامَةِ تَاجًا هُوَ أَحْسَنُ مِنْ ضَوْءِ الشَّمْسِ فِي بُيُوتٍ مِنْ بُيُوتِ الدُّنْيَا، لَوْ كَانَتْ فِيهِ، فَمَا ظَنُّكُمْ بِالَّذِي عَمِلَ بِهِ


Hakim-1888

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1888. சுப்ஹானல்லாஹில் அழீம் (கண்ணிய மிக்க அல்லாஹ்வைப் போற்றி துதிக்கிறேன்) என்று சொல்லக் கூடியவருக்கு அவர் புகழ்ந்ததன் காரணமாக சுவனத்தில் அவருக்காக ஒரு பேரீச்ச மரம் நடப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)


مَنْ قَالَ: سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ غُرِسَتْ لَهُ نَخْلَةٌ فِي الْجَنَّةِ


Hakim-1847

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1847. சுப்ஹானல்லாஹில் அழீம் (கண்ணிய மிக்க அல்லாஹ்வைப் போற்றி துதிக்கிறேன்) என்று சொல்லக் கூடியவருக்கு அவர் புகழ்ந்ததன் காரணமாக சுவனத்தில் அவருக்காக ஒரு பேரீச்ச மரம் நடப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)


مَنْ قَالَ: سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ غُرِسَتْ لَهُ نَخْلَةٌ فِي الْجَنَّةِ


Almujam-Assaghir-287

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

287. சுப்ஹானல்லாஹில் அழீமி, வபிஹம்திஹி (கண்ணிய மிக்க அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று சொல்லக் கூடியவருக்கு அவர் புகழ்ந்ததன் காரணமாக சுவனத்தில் அவருக்காக ஒரு பேரீச்ச மரம் நடப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)


«مَنْ قَالَ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ غُرِسَتْ لَهُ نَخْلَةٌ فِي الْجَنَّةِ»


Ibn-Hibban-827

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

827. சுப்ஹானல்லாஹில் அழீம் (கண்ணிய மிக்க அல்லாஹ்வைப் போற்றி துதிக்கிறேன்) என்று சொல்லக் கூடியவருக்கு அவர் புகழ்ந்ததன் காரணமாக சுவனத்தில் அவருக்காக ஒரு பேரீச்ச மரம் நடப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)


«مَنْ قَالَ: سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ، غُرِسَ لَهُ شَجَرَةٌ فِي الْجَنَّةِ».


Next Page » « Previous Page