தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-4420

A- A+


ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

முஹம்மத் பின் இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் ஆஸிம் பின் உமர் பின் கதாதா (ரஹ்) அவர்களிடம் மாஇஸ் பின் மாலிக் (ரலி) அவர்களின் வரலாற்றுச் சம்பவத்தைக் குறிப்பிட்டேன். அப்போது அவர் என்னிடம், “அஸ்லம் குலத்தைச் சேர்ந்த, நான் (நம்பகத்தன்மையில்) சந்தேகிக்காத சில மனிதர்கள் வழியாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அவரை நீங்கள் விட்டுவிட்டிருக்கக் கூடாதா?’ என்று கூறிய செய்தி எனக்குக் கிடைத்தது என்று ஹஸன் பின் முஹம்மத் பின் அலீ பின் அபூதாலிப் (ரஹ்) எனக்கு அறிவித்தார்” என்று கூறினார்.

மேலும் ஆஸிம் (ரஹ்) அவர்கள், “ஆனால், எனக்கு இந்த ஹதீஸின் (முழுமையான பின்னணி) விபரம் தெரிந்திருக்கவில்லை” என்றும் கூறினார்.

ஆகவே, நான் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்களிடம் சென்று, “அஸ்லம் குலத்தைச் சேர்ந்த சிலர் ஒரு செய்தியை அறிவிக்கிறார்கள்; அதாவது, மாஇஸ் (ரலி) மீது கற்கள் பட்டபோது அவர் (வலி தாங்காமல்) பதறியதை நபியவர்களிடம் மக்கள் குறிப்பிட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘அவரை நீங்கள் விட்டுவிட்டிருக்கக் கூடாதா?’ என்று கூறினார்களாம். ஆனால், எனக்கு இந்த ஹதீஸின் உண்மைப் பின்னணி விளங்கவில்லை” என்று கூறினேன்.

அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், “என் சகோதரரின் மகனே! இந்த ஹதீஸைப் பற்றி மனிதர்களிலேயே நான் தான் மிக அறிந்தவன் ஆவேன். அந்த மனிதருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றியவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்.

நாங்கள் அவரை (தண்டனைக்காக) வெளியே அழைத்துச் சென்று கல்லெறிந்தபோது, அவர் மீது கற்களின் வேதனை பட்டதும், அவர் எங்களை நோக்கி: ‘மக்களே! என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் திருப்பி அழைத்துச் செல்லுங்கள். என் சமூகத்தார் என்னைக் கொன்றுவிட்டார்கள், என்னை ஏமாற்றிவிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைக் கொல்ல மாட்டார்கள் என்று அவர்கள் என்னிடம் சொல்லியிருந்தார்களே!’ என்று சத்தமிட்டுக் கதறினார். எனினும், நாங்கள் அவரைக் கொல்லும் வரை தண்டனையை நிறுத்தவில்லை.

பின்னர் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் திரும்பி வந்து, நடந்த விபரத்தைக் கூறியபோது, அவர்கள்: ‘அவரை நீங்கள் விட்டுவிட்டு, என்னிடம் அழைத்து வந்திருக்கக் கூடாதா?’ என்று கேட்டார்கள்.

(அவரை விட்டுவிடும்படி நபியவர்கள் கூறியது) அவரிடமிருந்து (குற்ற ஒப்புதலை மீண்டும் ஒருமுறை கேட்டு) உறுதிப்படுத்திக் கொள்வதற்காகத்தானே தவிர, (குற்றம் நிரூபணமான பின்) ஹத் தண்டனையை அப்படியே கைவிடுவதற்காக அல்ல” என்று விளக்கமளித்தார்கள். (இதைக் கேட்டதும்) “நான் இந்த ஹதீஸின் (சரியான) பின்னணியைப் புரிந்து கொண்டேன.

(அபூதாவூத்: 4420)

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ مَيْسَرَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، قَالَ:

ذَكَرْتُ لِعَاصِمِ بْنِ عُمَرَ بْنِ قَتَادَةَ، قِصَّةَ مَاعِزِ ابْنِ مَالِكٍ، فَقَالَ: لِي حَدَّثَنِي حَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ حَدَّثَنِي ذَلِكَ مِنْ قَوْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَهَلَّا تَرَكْتُمُوهُ» مَنْ شِئْتُمْ مِنْ رِجَالِ أَسْلَمَ مِمَّنْ لَا أَتَّهِمُ، قَالَ: وَلَمْ أَعْرِفْ هَذَا الْحَدِيثَ، قَالَ: فَجِئْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، فَقُلْتُ: إِنَّ رِجَالًا مِنْ أَسْلَمَ يُحَدِّثُونَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُمْ حِينَ ذَكَرُوا لَهُ جَزَعَ مَاعِزٍ مِنَ الْحِجَارَةِ حِينَ أَصَابَتْهُ: «أَلَّا تَرَكْتُمُوهُ»، وَمَا أَعْرِفُ الْحَدِيثَ، قَالَ: يَا ابْنَ أَخِي، أَنَا أَعْلَمُ النَّاسِ بِهَذَا الْحَدِيثِ، كُنْتُ فِيمَنْ رَجَمَ الرَّجُلَ، إِنَّا لَمَّا خَرَجْنَا بِهِ فَرَجَمْنَاهُ، فَوَجَدَ مَسَّ الْحِجَارَةِ صَرَخَ بِنَا: يَا قَوْمُ رُدُّونِي إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَإِنَّ قَوْمِي قَتَلُونِي، وَغَرُّونِي مِنْ نَفْسِي، وَأَخْبَرُونِي أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيْرُ قَاتِلِي، فَلَمْ نَنْزَعْ عَنْهُ حَتَّى قَتَلْنَاهُ، فَلَمَّا رَجَعْنَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَخْبَرْنَاهُ قَالَ: «فَهَلَّا تَرَكْتُمُوهُ وَجِئْتُمُونِي بِهِ» لِيَسْتَثْبِتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْهُ، فَأَمَّا لِتَرْكِ حَدٍّ فَلَا، قَالَ: فَعَرَفْتُ وَجْهَ الْحَدِيثِ


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-4420.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.