தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Hibban-2771

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

2771. ஐந்து காரியங்கள் உள்ளன. ஒரு நாளில் அதனை யார் நிறைவேற்றுகின்றாரோ அல்லாஹ் அவரை சொர்க்கவாதிகளில் எழுதிவிடுகிறான். அவர்

1 . நோயாளியை விசாரிக்கவேண்டும்.

2 . ஜனாஸாவில் கலந்து கொள்ளவேண்டும்.

3 . அன்றைய தினம் நோன்பு நோற்றிருக்க வேண்டும்.

4 . ஜும்ஆவிற்கு முன்னேரத்தில் செல்ல வேண்டும்.

5 . அடிமையை உரிமைவிட வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: (ரலி)

அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

أبو سعيد الخدري

இறப்பு: ஹிஜ்ரி 74, மதீனா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: ஸஃத் பின் மாலிக் பின் ஸினான்

தந்தை பெயர்: மாலிக் பின் ஸினான்

வம்சம்: அன்ஸாரீ, அல்கஸ்ரஜீ

புனைப்பெயர்: அபூ ஸயீத்

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா

பிறப்பு: மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 74, மதீனா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அபூ ஸயீத் அல்குத்ரீ ரலி அவர்களின் இயற்பெயர் ஸஃத் பின் மாலிக் பின் ஸினான் ஆகும். இவர் அன்ஸாரீ, அல்கஸ்ரஜீ கோத்திரத்தைச் சேர்ந்தவர். மதீனாவில் பிறந்த இவர், ஹிஜ்ரி 74 இல் மதீனாவிலேயே மரணமடைந்தார்.

உஹத் போரில் பங்கேற்க சிறுவராக இருந்ததால் அனுமதிக்கப்படவில்லை. பின்னர் அகழ் போர் மற்றும் பைஅத்துர் ரிழ்வான் ஆகியவற்றில் பங்கேற்றார். மதீனாவின் முஃப்தியாகவும் பணியாற்றினார்.

இவர் 1170 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), மாலிக் பின் ஸினான், கதாதா பின் அன்னுஃமான், அபூபக்ர் அஸ்ஸித்தீக், உமர் பின் கத்தாப் (ரலி), உஸ்மான் பின் அஃப்பான், அலீ பின் அபூ தாலிப், ஸைத் பின் ஸாபித், அபூ கதாதா பின் ரப்ஈ, அப்துல்லாஹ் பின் ஸலாம், உஸைத் பின் ஹுளைர் பின் ஸம்மாக், இப்னு அப்பாஸ்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அப்துர்ரஹ்மான் பின் அபூ ஸயீத் அல்குத்ரீ, ஸைனப் பின்த் கஅப் பின் அஜ்ரா அல்அன்ஸாரிய்யா, இப்னு அப்பாஸ், இப்னு உமர், ஜாபிர் பின் அப்துல்லாஹ், ஸைத் பின் ஸாபித், ஸயீத் பின் அல்முஸய்யிப், தாரிக் பின் ஷிஹாப், அபுத் துஃபைல், அதா பின் அபூ ரபாஹ், அதா பின் யஸார், முஜாஹித் பின் ஜப்ர்

வேறு பெயர்கள்: அபூ ஸயீத் அல்குத்ரீ, ஸஃத் பின் மாலிக் பின் ஸினான்


ஆதாரம்: muslimscholars.info (38) · Should verify


أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، أَنَّ بَشِيرَ بْنَ أَبِي عَمْرٍو الْخَوْلَانِيَّ، أَخْبَرَهُ أَنَّ الْوَلِيدَ بْنَ قَيْسٍ التُّجِيبِيَّ، حَدَّثَهُ، أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، حَدَّثَهُ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ:

«خَمْسٌ مَنْ عَمِلَهُنَّ فِي يَوْمٍ كَتَبَهُ اللَّهُ مِنْ أَهْلِ الْجَنَّةِ: مَنْ عَادَ مَرِيضًا، وَشَهِدَ جَنَازَةً، وَصَامَ يَوْمًا، وَرَاحَ يَوْمَ الْجُمُعَةِ، وَأَعْتَقَ رَقَبَةً»


Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-.
Ibn-Hibban-Shamila-2771.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-.



 

 

 


இந்த அறிவிப்பாளர்தொடரில் குறை இல்லை என்பதால் ஹைஸமீ, ஷுஐப் போன்றோர் இந்த செய்தியை சரியானது என்று கூறியுள்ளனர்.


  • அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்களும் இந்த செய்தியை சரியானது என்று கூறியுள்ளார்.

(நூல்: அஸ்ஸஹீஹா-1023)

மேலும் இந்த ஹதீஸை பற்றிய கேள்வியில் வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு வைப்பது தடை என்ற கருத்தில் வரும் ஹதீஸ்களின் படி அதற்கு முன்பாகவோ அல்லது பின்பாகவோ நோன்பு நோற்கவேண்டும் என்றும் கூறியுள்ளார். (முதஃபர்ரிகாதுல் அல்பானீ-292)


1 . இந்தக் கருத்தில் அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-1043, 1044, இப்னு ஹிப்பான்-2771,


 

 


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-4758,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.