ஐந்து காரியங்கள் உள்ளன. ஒரு நாளில் அதனை யார் நிறைவேற்றுகின்றாரோ அல்லாஹ் அவரை சொர்க்கவாதிகளில் எழுதிவிடுகிறான். அவர்
1 . நோயாளியை விசாரிக்கவேண்டும்.
2 . ஜனாஸாவில் கலந்து கொள்ளவேண்டும்.
3 . அன்றைய தினம் நோன்பு நோற்றிருக்க வேண்டும்.
4 . ஜும்ஆவிற்கு முன்னேரத்தில் செல்ல வேண்டும்.
5 . அடிமையை உரிமைவிட வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
(இப்னு ஹிப்பான்: 2771)أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، أَنَّ بَشِيرَ بْنَ أَبِي عَمْرٍو الْخَوْلَانِيَّ، أَخْبَرَهُ أَنَّ الْوَلِيدَ بْنَ قَيْسٍ التُّجِيبِيَّ، حَدَّثَهُ، أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، حَدَّثَهُ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ:
«خَمْسٌ مَنْ عَمِلَهُنَّ فِي يَوْمٍ كَتَبَهُ اللَّهُ مِنْ أَهْلِ الْجَنَّةِ: مَنْ عَادَ مَرِيضًا، وَشَهِدَ جَنَازَةً، وَصَامَ يَوْمًا، وَرَاحَ يَوْمَ الْجُمُعَةِ، وَأَعْتَقَ رَقَبَةً»
Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-.
Ibn-Hibban-Shamila-2771.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-.
- இந்த அறிவிப்பாளர்தொடரில் குறை இல்லை என்பதால் ஹைஸமீ, ஷுஐப் போன்றோர் இந்த செய்தியை சரியானது என்று கூறியுள்ளனர்.
- அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்களும் இந்த செய்தியை சரியானது என்று கூறியுள்ளார்.
(நூல்: அஸ்ஸஹீஹா-1023)
- மேலும் இந்த ஹதீஸை பற்றிய கேள்வியில் வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு வைப்பது தடை என்ற கருத்தில் வரும் ஹதீஸ்களின் படி அதற்கு முன்பாகவோ அல்லது பின்பாகவோ நோன்பு நோற்கவேண்டும் என்றும் கூறியுள்ளார். (முதஃபர்ரிகாதுல் அல்பானீ-292)
1 . இந்தக் கருத்தில் அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-1043 , 1044 , இப்னு ஹிப்பான்-2771 ,
சமீப விமர்சனங்கள்