Author: Farook

Musnad-Ahmad-7527

ஹதீஸின் தரம்: Pending

7527. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தந்தையில்லாத) கன்னிப் பெண்ணிடம் (அவளை மணமுடித்துக் கொடுக்க ஏதேனும் ஒருமுறையில்) அனுமதி பெற வேண்டும். அவள் மௌனம் சாதிப்பதே (அவளது சம்மதம்); அவள் மறுத்துவிட்டால் (அவளை மணமுடித்துக் கொடுக்க) அனுமதி இல்லை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«تُسْتَأْمَرُ الْيَتِيمَةُ فِي نَفْسِهَا، فَإِنْ سَكَتَتْ، فَهُوَ إِذْنُهَا، وَإِنْ أَبَتْ، فَلَا جَوَازَ عَلَيْهَا»


Musnad-Ahmad-7404

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7404. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கன்னிகழிந்த பெண்ணிடம் (அவளை திருமணம் முடிக்க) ஆலோசித்து அனுமதி பெற வேண்டும்; கன்னிப் பெண்ணிடம் (அவளை திருமணம் முடிக்க ஏதேனும் ஒருமுறையில்) அனுமதி பெற வேண்டும்” என்று கூறினார்கள்.

அப்போது மக்கள், அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்துகொள்வது)” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவள் மௌனம் சாதிப்பதே (அவளது சம்மதம்)” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«الثَّيِّبُ تُسْتَأْمَرُ فِي نَفْسِهَا، وَالْبِكْرُ تُسْتَأْذَنُ» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ إِذْنُهَا؟ قَالَ: «أَنْ تَسْكُتَ»


Musnad-Ahmad-7131

ஹதீஸின் தரம்: Pending

7131. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கன்னிப் பெண்ணிடம் (அவளை திருமணம் முடிக்க ஏதேனும் ஒருமுறையில்) அனுமதி பெற வேண்டும். கன்னிகழிந்த பெண்ணிடம் (அவளை திருமணம் முடிக்க) ஆலோசித்து அனுமதி பெற வேண்டும்” என்று கூறினார்கள்.

அப்போது அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! கன்னிப்பெண் வெட்கப்படுவாளே! என்றுக் கூறப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவள் மௌனம் சாதிப்பதே (அவளது சம்மதம்)” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

 


«الْبِكْرُ تُسْتَأْمَرُ، وَالثَّيِّبُ تُشَاوَرُ» ، قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ الْبِكْرَ تَسْتَحِي قَالَ: «سُكُوتُهَا رِضَاهَا»


Darimi-2232

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2232. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘கன்னிகழிந்த பெண்ணை, அவளது (வெளிப்படையான) உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம்; கன்னிப் பெண்ணிடம் (ஏதேனும் ஒருமுறையில்) அனுமதி பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம்; கன்னிப் பெண் மௌனம் சாதிப்பதே (அவளது சம்மதம்)” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَا تُنْكَحُ الثَّيِّبُ حَتَّى تُسْتَأْمَرَ، وَلَا تُنْكَحُ الْبِكْرُ حَتَّى تُسْتَأْذَنَ، وَإِذْنُهَا الصُّمُوتُ»


Nasaayi-3270

ஹதீஸின் தரம்: Pending

3270. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தந்தையில்லாத) கன்னிப் பெண்ணிடம் (அவளை மணமுடித்துக் கொடுக்க ஏதேனும் ஒருமுறையில்) அனுமதி பெற வேண்டும். அவள் மௌனம் சாதிப்பதே (அவளது சம்மதம்); அவள் மறுத்துவிட்டால் (அவளை மணமுடித்துக் கொடுக்க) அனுமதி இல்லை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«تُسْتَأْمَرُ الْيَتِيمَةُ فِي نَفْسِهَا، فَإِنْ سَكَتَتْ فَهُوَ إِذْنُهَا، وَإِنْ أَبَتْ، فَلَا جَوَازَ عَلَيْهَا»


Nasaayi-3267

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3267. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘கன்னிகழிந்த பெண்ணை, அவளது (வெளிப்படையான) உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப் பெண்ணிடம் (ஏதேனும் ஒருமுறையில்) அனுமதி பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம்” என்று சொன்னார்கள்.

மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்துகொள்வது)” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவள் மௌனம் சாதிப்பதே (அவளது சம்மதம்)” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَا تُنْكَحُ الْأَيِّمُ حَتَّى تُسْتَأْمَرَ، وَلَا تُنْكَحُ الْبِكْرُ حَتَّى تُسْتَأْذَنَ» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ إِذْنُهَا؟ قَالَ: «أَنْ تَسْكُتَ»


Nasaayi-3265

ஹதீஸின் தரம்: Pending

3265. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘கன்னிகழிந்த பெண்ணை, அவளது (வெளிப்படையான) உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப் பெண்ணிடம் (ஏதேனும் ஒருமுறையில்) அனுமதி பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம்” என்று சொன்னார்கள்.

மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்துகொள்வது)” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவள் மௌனம் சாதிப்பதே (அவளது சம்மதம்)” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَا تُنْكَحُ الثَّيِّبُ حَتَّى تُسْتَأْذَنَ، وَلَا تُنْكَحُ الْبِكْرُ حَتَّى تُسْتَأْمَرَ» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ إِذْنُهَا؟ قَالَ: «إِذْنُهَا أَنْ تَسْكُتَ»


Tirmidhi-1109

ஹதீஸின் தரம்: Pending

1109. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தந்தையில்லாத) கன்னிப் பெண்ணிடம் (அவளை மணமுடித்துக் கொடுக்க ஏதேனும் ஒருமுறையில்) அனுமதி பெற வேண்டும். அவள் மௌனம் சாதிப்பதே (அவளது சம்மதம்); அவள் மறுத்துவிட்டால் (அவளை மணமுடித்துக் கொடுக்க) அனுமதி இல்லை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«اليَتِيمَةُ تُسْتَأْمَرُ فِي نَفْسِهَا، فَإِنْ صَمَتَتْ فَهُوَ إِذْنُهَا، وَإِنْ أَبَتْ فَلَا جَوَازَ عَلَيْهَا»،

يَعْنِي: إِذَا أَدْرَكَتْ فَرَدَّتْ.


Tirmidhi-1107

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1107. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘கன்னிகழிந்த பெண்ணை, அவளது (வெளிப்படையான) உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம்; கன்னிப் பெண்ணிடம் (ஏதேனும் ஒருமுறையில்) அனுமதி பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம்; கன்னிப் பெண் மௌனம் சாதிப்பதே (அவளது சம்மதம்)” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَا تُنْكَحُ الثَّيِّبُ حَتَّى تُسْتَأْمَرَ، وَلَا تُنْكَحُ البِكْرُ حَتَّى تُسْتَأْذَنَ، وَإِذْنُهَا الصُّمُوتُ»


Next Page » « Previous Page