Author: Farook

Musnad-Ahmad-2882

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2882.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «خَرَجَ عَامَ الْفَتْحِ لِعَشْرٍ مَضَيْنَ مِنْ رَمَضَانَ، فَلَمَّا نَزَلَ مَرَّ الظَّهْرَانِ أَفْطَرَ»


Musnad-Ahmad-24154

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

24154. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் (தம் மனைவியரைக்) கட்டியணைப்பார்கள்; முத்தமிடுவார்கள். எனினும் தம் (உடல்) உணர்ச்சியை அதிகம் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக அவர்கள் இருந்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَبِّلُ وَهُوَ صَائِمٌ، وَيُبَاشِرُ وَهُوَ صَائِمٌ، وَلَكِنَّهُ كَانَ أَمْلَكَكُمْ لِإِرْبِهِ»


Musnad-Ahmad-24130

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

24130.


خَرَجَ عَلْقَمَةُ وَأَصْحَابُهُ حُجَّاجًا، فَذَكَرَ بَعْضُهُمُ الصَّائِمَ يُقَبِّلُ وَيُبَاشِرُ، فَقَالَ رَجُلٌ مِنْهُمْ، قَدْ قَامَ سَنَتَيْنِ وَصَامَهُمَا: هَمَمْتُ أَنْ آخُذَ قَوْسِي فَأَضْرِبَكَ بِهَا، قَالَ: فَكُفُّوا حَتَّى تَأْتُوا عَائِشَةَ، فَدَخَلُوا عَلَى عَائِشَةَ، فَسَأَلُوهَا عَنْ ذَلِكَ، فَقَالَتْ عَائِشَةُ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَبِّلُ وَيُبَاشِرُ، وَكَانَ أَمْلَكَكُمْ لِإِرْبِهِ» . قَالُوا: يَا أَبَا شِبْلٍ سَلْهَا، قَالَ: لَا أَرْفُثُ عِنْدَهَا الْيَوْمَ، فَسَأَلُوهَا، فَقَالَتْ: «كَانَ يُقَبِّلُ وَيُبَاشِرُ وَهُوَ صَائِمٌ»


Musnad-Ahmad-24110

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

24110. சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அப்துர் ரஹ்மான் பின் அல்காசிம் (ரஹ்) அவர்களிடம், “நீங்கள் உங்கள் தந்தை (காசிம் பின் முஹம்மத் – ரஹ்) அவர்கள் வாயிலாக “நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுக் கொண்டு என்னை முத்தமிடுவார்கள்” என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்த ஹதீஸைச் செவியுற்றீரா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் (பதிலளிக்காமல் சிறிது நேரம்) அமைதியாக இருந்துவிட்டுப் பிறகு “ஆம்” என்றார்கள்.


قُلْتُ لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ: أَسَمِعْتَ أَبَاكَ يُحَدِّثُ، عَنْ عَائِشَةَ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُقَبِّلُهَا وَهُوَ صَائِمٌ» ، فَسَكَتَ عَنِّي هُنَيَّةً ثُمَّ قَالَ: نَعَمْ


Tirmidhi-729

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

729. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் (தம் மனைவியரைக்) கட்டியணைப்பார்கள்; முத்தமிடுவார்கள். மேலும் தம் (உடல்) உணர்ச்சியை அதிகம் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக அவர்கள் இருந்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَبِّلُ وَيُبَاشِرُ وَهُوَ صَائِمٌ، وَكَانَ أَمْلَكَكُمْ لِإِرْبِهِ»


Tirmidhi-728

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

728. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் என்னை கட்டியணைப்பார்கள்; மேலும் தம் (உடல்) உணர்ச்சியை அதிகம் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக அவர்கள் இருந்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُبَاشِرُنِي وَهُوَ صَائِمٌ، وَكَانَ أَمْلَكَكُمْ لِإِرْبِهِ»


Tirmidhi-727

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

727. நபி (ஸல்) அவர்கள் நோன்பு மாதத்தில் (தம் மனைவியரை) முத்தமிடுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُقَبِّلُ فِي شَهْرِ الصَّوْمِ»


Abu-Dawood-2386

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2386. நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் என்னை முத்தமிடுவார்கள்; மேலும் என் நாவை உறுஞ்சுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

இப்னுல் அஃராபீ அவர்கள் இது சரியான அறிவிப்பாளர்தொடரல்ல என்று கூறியுள்ளார்.


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُقَبِّلُهَا وَهُوَ صَائِمٌ، وَيَمُصُّ لِسَانَهَا»،


Abu-Dawood-2384

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2384. நானும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் நோன்பு வைத்த நிலையிலும், அவர்கள் என்னை முத்தமிடுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَبِّلُنِي وَهُوَ صَائِمٌ، وَأَنَا صَائِمَةٌ»


Next Page » « Previous Page