2383. நபி (ஸல்) அவர்கள் நோன்பு மாதத்தில் (தம் மனைவியரை) முத்தமிடுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَبِّلُ فِي شَهْرِ الصَّوْمِ»
2383. நபி (ஸல்) அவர்கள் நோன்பு மாதத்தில் (தம் மனைவியரை) முத்தமிடுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَبِّلُ فِي شَهْرِ الصَّوْمِ»
179.
«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبَّلَ امْرَأَةً مِنْ نِسَائِهِ، ثُمَّ خَرَجَ إِلَى الصَّلَاةِ وَلَمْ يَتَوَضَّأْ»، قَالَ عُرْوَةُ: مَنْ هِيَ إِلَّا أَنْتِ؟ فَضَحِكَتْ،
1687. ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த நிலையில் (தம் மனைவியை) கட்டியணைப்பார்களா என அஸ்வத் (ரஹ்) , மஸ்ரூக் (ரஹ்) (போன்ற இருவரும்) கேட்டனர்.
அதற்கு ஆயிஷா (ரலி), (ஆம்) அவ்வாறு செய்வார்கள் என்று கூறிவிட்டு (அதே நேரத்தில்) அவர்கள் தம் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக இருந்தார்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்ராஹீம் அந்நகயீ (ரஹ்)
دَخَلَ الْأَسْوَدُ، وَمَسْرُوقٌ، عَلَى عَائِشَةَ، فَقَالَا: أَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُبَاشِرُ وَهُوَ صَائِمٌ؟ قَالَتْ: «كَانَ يَفْعَلُ، وَكَانَ أَمْلَكَكُمْ لِإِرْبِهِ»
1684. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் (தம் மனைவியரைக்) முத்தமிடுவார்கள். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை போன்று உங்களில் தம் (உடல்) உணர்ச்சியை அதிகம் கட்டுப்படுத்திக் கொள்பவர்கள் யார் தான் இருக்கிறார்கள்? என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: காஸிம் பின் முஹம்மத் (ரஹ்)
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «يُقَبِّلُ وَهُوَ صَائِمٌ، وَأَيُّكُمْ يَمْلِكُ إِرْبَهُ، كَمَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْلِكُ إِرْبَهُ»
1683. நபி (ஸல்) அவர்கள் நோன்பு மாதத்தில் (தம் மனைவியரை) முத்தமிடுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يُقَبِّلُ فِي شَهْرِ الصَّوْمِ»
800. ஆயிஷா பின்த் தல்ஹா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் இருந்தபோது என்னுடைய கணவர் (ஆயிஷா (ரலி) அவர்களின் சகோதரர் மகன்) அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ர் (ரஹ்) அவர்கள் வந்தார்கள். அப்போது அவர்கள் நோன்பு வைத்திருந்தார்கள்.
அவரிடம், ஆயிஷா (ரலி) அவர்கள், “நீ உன் மனைவியின் அருகில் சென்று முத்தமிடுவதையும், அவளுடன் விளையாடுவதையும் உன்னை தடுத்தது எது? என்றுக் கேட்டார்கள். அதற்கு அவர், நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் அவளை முத்தமிடலாமா? என்றுக் கேட்டார். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “ஆம்” என்று பதிலளித்தார்கள்.
أَنَّهَا كَانَتْ عِنْدَ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صَلى الله عَلَيهِ وَسَلمَ، فَدَخَلَ عَلَيْهَا زَوْجُهَا هُنَالِكَ، وَهُوَ عَبْدُ اللهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ وَهُوَ صَائِمٌ، فَقَالَتْ لَهُ عَائِشَةُ: مَا يَمْنَعُكَ أَنْ تَدْنُوَ مِنْ أَهْلِكَ فَتُقَبِّلَهَا وَتُلاَعِبَهَا؟ فَقَالَ: أُقَبِّلُهَا وَأَنَا صَائِمٌ؟ قَالَتْ: نَعَمْ.
798. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் தம் மனைவியரில் ஒருவரை முத்தமிடுவார்கள்!’ என்று சொல்லிவிட்டு ஆயிஷா (ரலி) சிரித்தார்கள்.
அறிவிப்பவர்: உர்வா (ரஹ்)
إِنْ كَانَ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ لَيُقَبِّلُ بَعْضَ أَزْوَاجِهِ وَهُوَ صَائِمٌ، ثُمَّ ضَحِكَتْ.
1764. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் என்னை முத்தமிடுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُقَبِّلُهَا وَهُوَ صَائِمٌ»
1763. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் (தம் மனைவியரை) முத்தமிடுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
உர்வா (ரஹ்) கூறினார்:
ஆயிஷா (ரலி) அவர்கள் நன்மைக்கு அழைக்கவில்லை. (இதன் பொருள்: இந்த செயல் நன்மை என்ற கருத்தில் ஆயிஷா (ரலி) கூறவில்லை என்றும் இருக்கலாம்)
«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُقَبِّلُ وَهُوَ صَائِمٌ»
فَقَالَ عُرْوَةُ: أَمَا إِنَّهَا لَا تَدْعُو إِلَى خَيْرٍ
797. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் (தம் மனைவியரைக்) கட்டியணைப்பார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ «يُبَاشِرُ وَهُوَ صَائِمٌ»
சமீப விமர்சனங்கள்