Author: Farook

Abi-Yala-1644

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1644. ஸிலது பின் ஸுஃபர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ரமலானின் (ஆரம்பமாக இருக்குமோ என்ற) சந்தேகத்திற்குரிய நாளில் (ஷஃபானின் முப்பதாம் நாளில்) நாங்கள் அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்களிடம் இருந்தபோது ஆட்டுக்கறி கொண்டு வந்து வைக்கப்பட்டது. நோன்பு வைத்திருந்த சிலர் விலகிச் சென்றனர். அதற்கு அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள், சந்தேகத்திற்குரிய இந்த நாளில் (ஷஃபானின் முப்பதாம் நாளில்) யார் நோன்பு நோற்கிறாரோ அவர் அபுல்காஸிம்-நபி (ஸல்) அவர்களுக்கு மாறு செய்து விட்டார் என்றுக் கூறினார்கள்.


كُنَّا عِنْدَ عَمَّارٍ فِي الْيَوْمِ الَّذِي يَشُكُّ فِيهِ مِنْ رَمَضَانَ، فَأُتِيَ بِشَاةٍ فَتَنَحَّى بَعْضُ الْقَوْمِ، فَقَالَ عَمَّارٌ: «مَنْ صَامَ هَذَا الْيَوْمَ فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Musannaf-Abdur-Razzaq-7318

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

7318. ரிப்இய்யு பின் ஹிராஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

எனக்கு ஒரு மனிதர் அறிவித்தார்:

ரமலானின் (ஆரம்பமாக இருக்குமோ என்ற) சந்தேகத்திற்குரிய நாளில் (ஷஃபானின் முப்பதாம் நாளில்) நாங்கள் அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்களிடம் இருந்தபோது பொறித்த ஆட்டுக்கறி கொண்டு வந்து வைக்கப்பட்டது. அப்போது கூட்டத்திலிருந்து ஒரு மனிதர் விலகிச் சென்றார். அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள், அவரிடம் பக்கத்தில் வரக் கூறினார்கள். அதற்கு அந்த மனிதர் நான் எப்போதும் வைக்கும் நோன்பை வைத்துள்ளேன் என்று கூறினார். அதற்கு அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள், நீ அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டிருந்தால் இதை சாப்பிடு! என்று கூறினார்கள்.


كُنَّا عِنْدَ عَمَّارِ بْنِ يَاسِرٍ فِي الْيَوْمِ الَّذِي يُشَكُّ فِيهِ فِي رَمَضَانَ، فَجِيءَ بِشَاةٍ مَصْلِيَّةٍ فَتَنَحَّى رَجُلٌ مِنَ الْقَوْمِ قَالَ: «ادْنُ» قَالَ: إِنِّي صَائِمٌ، وَمَا هُوَ إِلَّا صَوْمٌ كُنْتُ أَصُومُهُ، فَقَالَ: «أَمَّا أَنْتَ تُؤْمِنُ بِاللَّهِ، وَالْيَوْمِ الْآخِرِ؟ فَاطْعَمَ»


Musannaf-Ibn-Abi-Shaybah-9502

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

9502. ரிப்இய்யு பின் ஹிராஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ரமலானின் (ஆரம்பமாக இருக்குமோ இருக்காதோ என்ற) சந்தேகத்திற்குரிய நாளில் (ஷஃபானின் முப்பதாம் நாளில்) அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்களும், அவர்களுடன் வேறு சிலரும் இருக்கும் போது அவர்களுக்கு முன் பொறித்த ஆட்டுக்கறி கொண்டு வந்து வைக்கப்பட்டது.  அனைவரும் அதை சாப்பிடுவதற்கு ஒன்று கூடினர். ஒரு மனிதர் மட்டும் அவர்களை விட்டு விலகினார். அம்மார் (ரலி) அவர்கள், அவரிடம், வந்து சாப்பிடுங்கள்! என்று கூறினார்கள். அவர் நான் நோன்பாளி என்று கூறினார். அதற்கு அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள், நீ அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டிருந்தால் வந்து சாப்பிடு! என்று கூறினார்கள்.


أَنَّ عَمَّارَ بْنَ يَاسِرٍ، وَنَاسًا مَعَهُ أَتَوْهُمْ بِمَسْلُوخَةٍ مَشْوِيَّةٍ فِي الْيَوْمِ الَّذِي يُشَكُّ فِيهِ أَنَّهُ رَمَضَانُ، أَوْ لَيْسَ مِنْ رَمَضَانَ، فَاجْتَمَعُوا وَاعْتَزَلَهُمْ رَجُلٌ، فَقَالَ لَهُ عَمَّارٌ: «تَعَالَ فَكُلْ» قَالَ: فَإِنِّي صَائِمٌ، فَقَالَ لَهُ عَمَّارٌ: «إِنْ كُنْتَ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَتَعَالَ فَكُلْ»


Musannaf-Ibn-Abi-Shaybah-9503

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

9503. இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

யார் (பிறை தெரியாத) சந்தேகத்திற்குரிய நாளில் நோன்பு நோற்கிறாரோ அவர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மாறு செய்து விட்டார்.

அறிவிப்பவர்: ஸிமாக் (ரஹ்)

 


«مَنْ صَامَ الْيَوْمَ الَّذِي يُشَكُّ فِيهِ، فَقَدْ عَصَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Ibn-Hibban-3595

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3595. ஸிலது பின் ஸுஃபர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்களிடம் இருந்தபோது பொறித்த ஆட்டுக்கறி கொண்டு வந்து வைக்கப்பட்டது. அவர்கள், உண்ணுங்கள் என்று கூறினார்கள். சிலர் விலகிச் சென்று நாங்கள் நோன்பு வைத்துள்ளோம் என்று கூறினர். அதற்கு அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள், சந்தேகத்திற்குரிய நாளில் (ஷஃபானின் முப்பதாம் நாளில்) யார் நோன்பு நோற்கிறாரோ அவர் அபுல்காஸிம்-நபி (ஸல்) அவர்களுக்கு மாறு செய்து விட்டார் என்றுக் கூறினார்கள்.


كُنَّا عِنْدَ عَمَّارِ بْنِ يَاسِرٍ فَأُتِيَ بِشَاةٍ مَصْلِيَّةٍ، فَقَالَ: «كُلُوا»، فَتَنَحَّى بَعْضُ الْقَوْمِ، وَقَالَ: إِنِّي صَائِمٌ، فَقَالَ عَمَّارُبْنُ يَاسِرٍ: «مَنْ صَامَ الْيَوْمَ الَّذِي يَشُكُّ فِيهِ فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Bazzar-1394

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1394. ஸிலது பின் ஸுஃபர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ரமலானின் (ஆரம்பமாக இருக்குமோ என்ற) சந்தேகத்திற்குரிய நாளில் (ஷஃபானின் முப்பதாம் நாளில்) நாங்கள் அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்களிடம் இருந்தபோது பொறித்த ஆட்டுக்கறியை கொண்டு வந்து வைத்து சாப்பிடுங்கள் என்று கூறினார்கள். சிலர் விலகிச் சென்று நாங்கள் நோன்பு வைத்துள்ளோம் என்று கூறினா். அதற்கு அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள், சந்தேகத்திற்குரிய இந்த நாளில் (ஷஃபானின் முப்பதாம் நாளில்) யார் நோன்பு நோற்கிறாரோ அவர் அபுல்காஸிம்-நபி (ஸல்) அவர்களுக்கு மாறு செய்து விட்டார் என்றுக் கூறினார்கள்.


كُنَّا عِنْدَ عَمَّارٍ، يَعْنِي فِي الْيَوْمِ الَّذِي يَشُكُّ فِيهِ مِنْ رَمَضَانَ، فَأَتَى بِشَاةٍ مَصْلِيَّةٍ، فَقَالَ: كُلُوا، فَتَنَحَّى بَعْضُ الْقَوْمِ، وَقَالَ إِنِّي صَائِمٌ، فَقَالَ عَمَّارٌ: «مَنْ صَامَ الْيَوْمَ الَّذِي يَشُكُّ فِيهِ فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Kubra-Bayhaqi-7952

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7952. ஸிலது பின் ஸுஃபர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள், சந்தேகத்திற்குரிய நாளில் (ஷஃபானின் முப்பதாம் நாளில்) அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்களிடம் இருந்தபோது அவர்கள் ஆட்டுக்கறியை கொண்டு வந்து (வைத்து) சாப்பிடுங்கள் என்று கூறினார்கள். அப்போது (நோன்பு வைத்திருந்த) சிலர் விலகிச் சென்றனர். அதற்கு அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள், சந்தேகத்திற்குரிய நாளில் (ஷஃபானின் முப்பதாம் நாளில்) யார் நோன்பு நோற்கிறாரோ அவர் அபுல்காஸிம்-நபி (ஸல்) அவர்களுக்கு மாறு செய்து விட்டார் என்றுக் கூறினார்கள்.


كُنَّا عِنْدَ عَمَّارِ بْنِ يَاسِرٍ، فَأَتَى بِشَاةٍ مَصْلِيَّةٍ، فَقَالَ: كُلُوا فَتَنَحَّى بَعْضُ الْقَوْمِ، فَقَالَ إِنِّي صَائِمٌ، فَقَالَ عَمَّارٌ: ” مَنْ صَامَ يَوْمَ الشَّكِّ فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Hakim-1542

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1542. ஸிலது பின் ஸுஃபர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்களிடம் இருந்தபோது (வீட்டாரிடம்) பொறித்த ஆட்டுக்கறி கொண்டு வர கட்டளையிட்டார்கள். (அவ்வாறே வைக்கப்பட்டபின்) அவர்கள், உண்ணுங்கள் என்று கூறினார்கள். சிலர் விலகிச் சென்று நாங்கள் நோன்பு வைத்துள்ளோம் என்று கூறினர். அதற்கு அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள், சந்தேகத்திற்குரிய நாளில் (ஷஃபானின் முப்பதாம் நாளில்) யார் நோன்பு நோற்கிறாரோ அவர் அபுல்காஸிம்-நபி (ஸல்) அவர்களுக்கு மாறு செய்து விட்டார் என்றுக் கூறினார்கள்.


كُنَّا عِنْدَ عَمَّارِ بْنِ يَاسِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ فَأَمَرَ بِشَاةٍ مَصْلِيَّةٍ، فَقَالَ: «كُلُوا» فَتَنَحَّى بَعْضُ الْقَوْمِ، فَقَالَ: إِنِّي صَائِمٌ، فَقَالَ عَمَّارٌ: «مَنْ صَامَ يَوْمَ الشَّكِّ فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Daraqutni-2150

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2150. ஸிலது பின் ஸுஃபர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்களிடம் இருந்தபோது பொறித்த ஆட்டுக்கறி கொண்டு வந்து வைக்கப்பட்டது. அவர்கள், உண்ணுங்கள் என்று கூறினார்கள். சிலர் விலகிச் சென்று நாங்கள் நோன்பு வைத்துள்ளோம் என்று கூறினர். அதற்கு அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள், சந்தேகத்திற்குரிய நாளில் (ஷஃபானின் முப்பதாம் நாளில்) யார் நோன்பு நோற்கிறாரோ அவர் அபுல்காஸிம்-நபி (ஸல்) அவர்களுக்கு மாறு செய்து விட்டார் என்றுக் கூறினார்கள்.


كُنَّا عِنْدَ عَمَّارٍ فَأُتِيَ بِشَاةٍ مَصْلِيَّةٍ , فَقَالَ: «كُلُوا» , فَتَنَحَّى بَعْضُ الْقَوْمِ , فَقَالَ: «إِنِّي صَائِمٌ» , فَقَالَ عَمَّارٌ: «مَنْ صَامَ الْيَوْمَ الَّذِي شَكَّ فِيهِ فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Ibn-Hibban-3596

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3596. ஸிலது பின் ஸுஃபர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ரமலானின் (ஆரம்பமாக இருக்குமோ என்ற) சந்தேகத்திற்குரிய நாளில் (ஷஃபானின் முப்பதாம் நாளில்) நாங்கள் அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்களிடம் இருந்தபோது ஆட்டுக்கறி கொண்டு வந்து வைக்கப்பட்டது. நோன்பு வைத்திருந்த சிலர் விலகிச் சென்றனர். அதற்கு அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள், சந்தேகத்திற்குரிய இந்த நாளில் (ஷஃபானின் முப்பதாம் நாளில்) யார் நோன்பு நோற்கிறாரோ அவர் அபுல்காஸிம்-நபி (ஸல்) அவர்களுக்கு மாறு செய்து விட்டார் என்றுக் கூறினார்கள்.


كُنَّا عِنْدَ عَمَّارِ بْنِ يَاسِرٍ فِي الْيَوْمِ الَّذِي يُشَكُّ فِيهِ مِنْ رَمَضَانَ، فَأُتِيَ بِشَاةٍ، فَتَنَحَّى بَعْضُ الْقَوْمِ، فَقَالَ عَمَّارُ بْنُ يَاسِرٍ: «مَنْ صَامَ هَذَا الْيَوْمَ فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ»


Next Page » « Previous Page