Author: Farook

Musnad-Ahmad-17607

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

17607.


أَنَّهُ أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَا وَلَدُكَ؟» قَالَ: فُلَانُ وَفُلَانُ وَعَبْدُ الْعُزَّى. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هُوَ عَبْدُ الرَّحْمَنِ، إِنَّ أَحَقَّ أَسْمَائِكُمْ أَوْ مِنْ خَيْرِ أَسْمَائِكُمْ، إِنْ سَمَّيْتُمْ عَبْدَ اللَّهِ وَعَبْدُ الرَّحْمَنِ وَالْحَارِثَ»


Musnad-Ahmad-17606

ஹதீஸின் தரம்: Pending

17606.


أَنَّ أَبَاهُ عَبْدَ الرَّحْمَنِ ذَهَبَ مَعَ جَدِّهِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا اسْمُ ابْنِكَ؟» قَالَ: عَزِيزٌ. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُسَمِّهِ عَزِيزًا، وَلَكِنْ سَمِّهِ عَبْدَ الرَّحْمَنِ» ثُمَّ قَالَ: «إِنَّ خَيْرَ الْأَسْمَاءِ عَبْدُ اللَّهِ وَعَبْدُ الرَّحْمَنِ وَالْحَارِثُ»


Musannaf-Ibn-Abi-Shaybah-25895

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

25895. அறியாமைக் காலத்தில் என்னுடையத் தந்தையின் பெயர் அஸீஸ் (மிகைத்தவர்) என்று இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்களுக்கு அப்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளனின் அடிமை) என்று (மாற்றி) பெயர் வைத்தார்கள் (என்று என் தந்தை கூறினார்)

அறிவிப்பவர் : கைஸமா பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்)


كَانَ اسْمُ أَبِي فِي الْجَاهِلِيَّةِ عَزِيزًا: «فَسَمَّاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبْدَ الرَّحْمَنِ»


Hakim-7728

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7728.  கைஸமா பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

எனது பாட்டனார் எனது தந்தைக்கு  அஸீஸ் (மிகைத்தவர்) என்று பெயர் வைத்தார். இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கூறப்பட்டபோது நபி (ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளனின் அடிமை) என்று (மாற்றி) பெயர் வைத்தார்கள்.


«أَنَّ جَدَّهُ سَمَّى أَبَاهُ عُزَيْزًا فَذُكِرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَمَّاهُ عَبْدَ الرَّحْمَنِ»


Ibn-Hibban-5828

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5828.  கைஸமா பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என்னுடையத் தந்தையின் பெயர் அஸீஸ் (மிகைத்தவர்) என்று இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அவர்களுக்கு அப்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளனின் அடிமை) என்று (மாற்றி) பெயர் வைத்தார்கள் (என்று என் தந்தை கூறினார்)


«كَانَ اسْمُ أَبِي عَزِيزًا، فَسَمَّاهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبْدَ الرَّحْمَنِ»


Musnad-Ahmad-17608

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

17608. கைஸமா பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

எனது பாட்டனார் (அபூஸப்ரா என்ற யஸீத் பின் மாலிக்-ரலி) (அவரின் மனைவியின் மூலம்) ஒரு ஆண்குழந்தையைப் பெற்றபோது அதற்கு அஸீஸ் (மிகைத்தவர்) என்று பெயர் சூட்டி, நபி (ஸல்) அவர்களிடம் வந்து எனக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது என்று கூறினார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், (குழந்தைக்கு) என்ன பெயர் வைத்தீர்கள்? என்று கேட்டார்கள். எனது பாட்டனார் அஸீஸ் (மிகைத்தவர்) என்று பெயர் வைத்தேன் எனக் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இல்லை. அவருக்கு, அப்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளனின் அடிமை) என்ற பெயர் இருக்கட்டும் என்று கூறினார்கள். அவர்தான் என் தந்தை அப்துர்ரஹ்மான்.


وَلَدَ جَدِّي غُلَامًا، فَسَمَّاهُ عَزِيزًا، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: وُلِدَ لِي غُلَامٌ، قَالَ: «فَمَا سَمَّيْتَهُ؟» قَالَ: قُلْتُ: عَزِيزًا. قَالَ: «لَا، بَلْ هُوَ عَبْدُ الرَّحْمَنِ» . قَالَ: فَهُوَ أَبِي


Bazzar-6456

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6456. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திருமணம் செய்வதை கட்டளையிடக்கூடியவர்களாகவும், துறவறத்தை அதிகம் தடுக்கக்கூடியவர்களாகவும் இருந்தார்கள்.

மேலும் அதிகம் விரும்பும், அதிகம் குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண்ணையே திருமணம் செய்யுங்கள். ஏனென்றால் மறுமை நாளில் உங்களின் மூலமாகத் தான் (மற்ற நபிமார்களுக்கு முன்) மாபெரும் சமுதாயத்திற்குரிய (நபியாக) நான் திகழுவேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


أَنَّ النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْمُرُ بِالْبَاءَةِ وَيَنْهَى عَنِ التَّبَتُّلِ نَهْيًا شَدِيدًا وَيَقُولُ: تَزَوَّجُوا الْوَدُودَ الْوَلُودَ فَإِنِّي مُكَاثِرٌ بِكُمُ الأُمَمَ يَوْمَ الْقِيَامَةِ.


Almujam-Alawsat-5099

ஹதீஸின் தரம்: Pending

5099. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திருமணம் செய்வதை கட்டளையிடக்கூடியவர்களாகவும், துறவறத்தை அதிகம் தடுக்கக்கூடியவர்களாகவும் இருந்தார்கள்.

மேலும் அதிகம் விரும்பும், அதிகம் குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண்ணையே திருமணம் செய்யுங்கள். ஏனென்றால் மறுமை நாளில் உங்களின் மூலமாகத் தான் மற்ற நபிமார்களுக்குமுன் மாபெரும் சமுதாயத்திற்குரிய (நபியாக) நான் திகழுவேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَأْمُرُ بِالْبَاءَةِ، وَيَنْهَى عَنِ التَّبَتُّلِ نَهْيًا شَدِيدًا» ، وَيَقُولُ: «تَزَوَّجُوا الْوَدُودَ الْوَلُودَ، فَإِنِّي مُكَاثِرٌ بِكُمُ الْأَنْبِيَاءَ يَوْمَ الْقِيَامَةِ»


Kubra-Bayhaqi-13476

ஹதீஸின் தரம்: Pending

13476. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திருமணம் செய்வதை கட்டளையிடக்கூடியவர்களாகவும், துறவறத்தை அதிகம் தடுக்கக்கூடியவர்களாகவும் இருந்தார்கள்.

மேலும் அதிகம் விரும்பும், அதிகம் குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண்ணையே திருமணம் செய்யுங்கள். ஏனென்றால் மறுமை நாளில் உங்களின் மூலமாகத் தான் மற்ற நபிமார்களுக்குமுன் மாபெரும் சமுதாயத்திற்குரிய (நபியாக) நான் திகழுவேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُنَا بِالْبَاءَةِ، وَيَنْهَانَا عَنِ التَّبَتُّلِ نَهْيًا شَدِيدًا، وَيَقُولُ: ” تَزَوَّجُوا الْوَدُودَ الْوَلُودَ، فَإِنِّي مُكَاثِرٌ بِكُمُ الْأَنْبِيَاءَ يَوْمَ الْقِيَامَةِ


Next Page » « Previous Page