Author: Farook

Nasaayi-3665

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3665. ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதரே! ‘எது சிறந்த தர்மம்?’ என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு ‘தண்ணீர் வழங்குதல்’ என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : ஸயீத் பின் முஸய்யப் (ரஹ்)


قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ؟ قَالَ: «سَقْيُ الْمَاءِ»


Nasaayi-3664

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3664. ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான், அல்லாஹ்வின் தூதரே! என் தாய் இறந்து விட்டார். அவர் சார்பில் நான் தர்மம் செய்யட்டுமா?’ என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம் என்றனர். ‘எது சிறந்த தர்மம்?’ என்று கேட்டேன். ‘தண்ணீர் வழங்குதல்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸயீத் பின் முஸய்யப் (ரஹ்)


قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أُمِّي مَاتَتْ أَفَأَتَصَدَّقُ عَنْهَا؟ قَالَ: «نَعَمْ»، قُلْتُ: فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ؟ قَالَ: «سَقْيُ الْمَاءِ»


Nasaayi-3650

ஹதீஸின் தரம்: Pending

3650. ஷுரஹ்பீல் பின் ஸயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போருக்கு சென்றுவிட்டார்கள். மதீனாவில் இருந்த அவர்களின் தாயாருக்கு மரணவேளை ஏற்பட்ட போது அவர்களிடம் தர்மம் செய்வதற்கு வஸிய்யத் செய்யுங்கள் என்று கூறப்பட்டது. அதற்கு அவர், செல்வம் ஸஅதுக்கு சொந்தமானது. நான் எதில் நான் வஸிய்யத் செய்வது என்று மறுத்துவிட்டார். ஸஅது அவர்கள் வருவதற்குள் அவர் இறந்துவிட்டார். ஸஅது அவர்கள் வந்தபின் இது பற்றி அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

எனவே ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள், நான் என் தாயாரின் சார்பாக தர்மம் செய்வது அவருக்கு பயனளிக்குமா? என்று  நபி அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம் என்றார்கள். எனவே ஸஅது அவர்கள் இன்னின்ன தோட்டங்கள் அவரின் நன்மைக்காக தர்மம் செய்கிறேன் என்று குறிப்பிட்டார்கள்.


خَرَجَ سَعْدُ بْنُ عُبَادَةَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ مَغَازِيهِ، وَحَضَرَتْ أُمَّهُ الْوَفَاةُ بِالْمَدِينَةِ، فَقِيلَ لَهَا: أَوْصِي، فَقَالَتْ: فِيمَ أُوصِي؟ الْمَالُ مَالُ سَعْدٍ، فَتُوُفِّيَتْ قَبْلَ أَنْ يَقْدَمَ سَعْدٌ، فَلَمَّا قَدِمَ سَعْدٌ ذُكِرَ ذَلِكَ لَهُ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، هَلْ يَنْفَعُهَا أَنْ أَتَصَدَّقَ عَنْهَا؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَعَمْ»، فَقَالَ سَعْدٌ: حَائِطُ كَذَا وَكَذَا صَدَقَةٌ عَنْهَا، لِحَائِطٍ سَمَّاهُ


Nasaayi-3666

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3666. ஸஅது பின் உபாதா (ரலி) அவர்களின் தாய் இறந்து விட்டார். எனவே அவர், அல்லாஹ்வின் தூதரே! என் தாய் இறந்து விட்டார். அவர் சார்பில் நான் தர்மம் செய்யட்டுமா?’ என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம் என்றனர். ‘எது சிறந்த தர்மம்?’ என்று கேட்டார். ‘தண்ணீர் வழங்குதல்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மதீனாவில் இருக்கும் இந்த தண்ணீர் பிடிக்கும் இடம் ஸஅது பின் உபாதா (ரலி) ஏற்பாடு செய்ததாகும்.

அறிவிப்பவர் : ஹஸன் பஸரீ (ரஹ்)


أَنَّ أُمَّهُ مَاتَتْ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أُمِّي مَاتَتْ، أَفَأَتَصَدَّقُ عَنْهَا؟ قَالَ: «نَعَمْ»، قَالَ: فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ؟ قَالَ: «سَقْيُ الْمَاءِ» فَتِلْكَ سِقَايَةُ سَعْدٍ بِالْمَدِينَةِ


Nasaayi-3655

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3655.

அல்லாஹ்வின் தூதரே! என் தாய் இறந்து விட்டார். அவர் சார்பில் நான் தர்மம் செய்யட்டுமா?’ என்று நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம் என்றனர். ‘எது சிறந்த தர்மம்?’ என்று கேட்டேன். ‘தண்ணீர் வழங்குதல்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஅது பின் உபாதா (ரலி)


أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أُمَّهُ تُوُفِّيَتْ أَفَيَنْفَعُهَا إِنْ تَصَدَّقْتُ عَنْهَا؟ قَالَ: «نَعَمْ»، قَالَ: فَإِنَّ لِي مَخْرَفًا فَأُشْهِدُكَ أَنِّي قَدْ تَصَدَّقْتُ بِهِ عَنْهَا


Nasaayi-3654

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3654. அல்லாஹ்வின் தூதரே! என் தாய் இறந்து விட்டார். அவர் சார்பில் நான் தர்மம் செய்யட்டுமா?’ என்று நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம் என்றனர். ‘எது சிறந்த தர்மம்?’ என்று கேட்டேன். ‘தண்ணீர் வழங்குதல்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஅது பின் உபாதா (ரலி)


أَنَّ سَعْدًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ أُمِّي مَاتَتْ وَلَمْ تُوصِ، أَفَأَتَصَدَّقُ عَنْهَا؟ قَالَ: «نَعَمْ»


Musnad-Ahmad-16969

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

16969. ஃகுளைஃப் பின் ஹாரிஸ் (ரலி) அவர்களின் மரணவேளையில் அவர்களை சந்தித்த என்னுடைய சில ஆசிரியர்கள் கூறியதாவது:

ஃகுளைஃப் பின் ஹாரிஸ் (ரலி) அவர்களுக்கு மரணவேதனை கடுமையானபோது அவர்கள், உங்களில் யாராவது யாஸீன் அத்தியாயத்தை (இப்போது) ஓதமுடியுமா? என்று கேட்டார்கள். அப்போது ஸாலிஹ் பின் ஷுரைஹ் (ரஹ்) அதை ஓதினார். நாற்பது வசனங்களை ஓதி முடித்திருந்தபோது ஃகுளைஃப் பின் ஹாரிஸ் (ரலி) அவர்களின் உயிர் கைப்பற்றப்பட்டது.

அதனால் தான், மரணத்தை நெருங்கியவர்களிடம் யாஸீன் அத்தியாயம் ஓதப்பட்டால் அவரின் மரணவேதனை இலேசாக்கப்படும் என அந்த ஆசிரியர்கள் கூறினர்.

இப்னு மஃபத் மரணதருவாயில் இருக்கும் போது, அவரிடத்தில் ஈஸா பின் முஃதமிர் யாஸீன் அத்தியாயத்தை ஓதினார்.

அறிவிப்பவர் : ஸஃப்வான் பின் அம்ர் (ரஹ்)


أَنَّهُمْ حَضَرُوا غُضَيْفَ بْنَ الْحَارِثِ الثُّمَالِيَّ، حِينَ اشْتَدَّ سَوْقُهُ، فَقَالَ: «هَلْ مِنْكُمْ أَحَدٌ يَقْرَأُ يس؟» قَالَ: فَقَرَأَهَا صَالِحُ بْنُ شُرَيْحٍ السَّكُونِيُّ، فَلَمَّا بَلَغَ أَرْبَعِينَ مِنْهَا قُبِضَ، قَالَ: وَكَانَ الْمَشْيَخَةُ يَقُولُونَ: إِذَا قُرِئَتْ عِنْدَ الْمَيِّتِ خُفِّفَ عَنْهُ بِهَا قَالَ صَفْوَانُ: «وَقَرَأَهَا عِيسَى بْنُ الْمُعْتَمِرِ عِنْدَ ابْنِ مَعْبَدٍ»


Kubra-Bayhaqi-6600

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம் :

மரணம் நெருங்கியவரிடம் ஓதவேண்டியவை.

6600. உங்களில் மரணவேளை நெருங்கியவர்களுக்கு யாஸீன் (36-வது) அத்தியாயத்தை ஓதுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : மஃகில் பின் யஸார் (ரலி)

 


اقْرَءُوهَا عِنْدَ مَوْتَاكُمْ،

يَعْنِي سُورَةَ يس


Hakim-2074

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2074. உங்களில் மரணவேளை நெருங்கியவர்களுக்கு யாஸீன் (36-வது) அத்தியாயத்தை ஓதுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : மஃகில் பின் யஸார் (ரலி)


«سُورَةُ يس اقْرَءُوهَا عِنْدَ مَوْتَاكُمْ»


Almujam-Alkabir-541

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

541. பகரா (2-வது) அத்தியாயம் குர்ஆனில் உயர்ந்ததும், சிறந்ததும் ஆகும். அதனின் ஒவ்வொரு வசனத்துடனும் 80 வானவர்கள் இறங்கினர். ‘அல்லாஹு லாஇலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம்’ என்னும் வாசகம் அர்ஷின் அடியிலிருந்து எடுக்கப்பட்டு பகரா அத்தியாயத்துடன் சேர்க்கப்பட்டதாகும்.

யாஸீன் (36-வது) அத்தியாயம்) குர்ஆனின் இதயமாகும். அல்லாஹ்வையும், மறுமையையும் நாடி அதை ஓதுபவர் மன்னிக்கப்படுவார். மேலும் நீங்கள் உங்களில் மரணவேளை நெருங்கியவர்களுக்கு அதை ஓதுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : மஃகில் பின் யஸார் (ரலி)


«الْبَقَرَةُ سَنَامُ الْقُرْآنِ وَذُرْوَتُهُ، وَنَزَلَ مَعَ كُلِّ آيَةٍ مِنْهَا ثَمَانُونَ مَلَكًا، وَاسْتُخْرِجَتِ اللهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ مِنْ تَحْتِ الْعَرْشِ فَوُصِلَتْ بِهَا سُورَةُ الْبَقَرَةِ، وَيس قَلْبُ الْقُرْآنِ، لَا يَقْرَؤُهَا رَجُلٌ يُرِيدُ اللهَ وَالدَّارَ الْآخِرَةَ إِلَّا غَفَرَ اللهُ لَهُ، اقْرَؤُوهَا عَلَى مَوْتَاكُمْ»


Next Page » « Previous Page