Author: Farook

Kubra-Bayhaqi-10273

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

10273. யார் எனது கப்ரை ஸியாரத் செய்கின்றாரோ அவருக்கு நான் பரிந்துரை செய்வேன் என்றோ (அல்லது)

யார் என்னை சந்திக்கின்றாரோ அவருக்கு நான் மறுமையில் சாட்சியாக இருப்பேன் என்றோ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மேலும், (மக்கா, மதீனா ஆகிய) இரண்டு புனிதத் தலங்களில் யார் மரணிக்கிறாரோ அவரை, கியாமத் நாளில் அச்சமற்றவர்களில் (ஒருவராக) அல்லாஹ் எழுப்புவான் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : உமர் (ரலி)


مَنْ زَارَ قَبْرِي ” , أَوْ قَالَ: ” مَنْ زَارَنِي , كُنْتُ لَهُ شَفِيعًا ” أَوْ ” شَهِيدًا , وَمَنْ مَاتَ فِي أَحَدِ الْحَرَمَيْنِ بَعَثَهُ اللهُ فِي الْآمِنِينَ يَوْمَ الْقِيَامَةِ


Almujam-Alkabir-6104

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6104. (மக்கா, மதீனா ஆகிய) இரண்டு புனிதத் தலங்களில் யார் மரணிக்கிறாரோ அவருக்கு எனது பரிந்துரை கட்டாயமாகி விட்டது. மேலும் கியாமத் நாளில் அவர் அச்சமற்றவராக எழுப்பப்படுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸல்மான் (ரலி)


«مَنْ مَاتَ فِي أَحَدِ الْحَرَمَيْنِ اسْتَوْجَبَ شَفَاعَتِي، وَكَانَ يَوْمَ الْقِيَامَةِ مِنَ الْآمِنِينَ»


Almujam-Alawsat-5883

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

5883. இரண்டு புனிதத் தலங்களான மக்கா, மதீனா ஆகிய ஒன்றில் யார் மரணிக்கிறாரோ அவர் கியாமத் நாளில் அச்சமற்றவராக எழுப்பப்படுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)


«مَنْ مَاتَ فِي أَحَدِ الْحَرَمَيْنِ، مَكَّةَ أَوِ الْمَدِينَةَ، بُعِثَ آمِنًا»


Musnad-Ahmad-22784

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

22784. உபாதா பின் ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சில நபித்தோழர்களுடன் (எனக்கு ஏற்பட்ட) ஒரு நோய்க்காக என்னை உடல் நலம் விசாரிக்க வந்தார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஷஹீத்கள் என்று நீங்கள் யாரை நினைக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். இவ்வாறு இரண்டு அல்லது மூன்று தடவை கேட்டார்கள். நபித்தோழர்கள் அமைதியாக இருந்தனர். அப்போது உபாதாவாகிய நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! நீங்களே அதைப்பற்றி தெரிவித்து விடுங்கள் என்று கூறினேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர் ஷஹீத் ஆவார். வயிற்றுப் போக்கால் இறந்தவர் ஷஹீத் ஆவார். பிரசவத்தின் போது மரணிக்கும் பெண்ணும் ஷஹீத் ஆவார். அவளை அவளின் குழந்தை தனது தொப்புள்கொடியால் சொர்க்த்திற்கு இழுத்துச் செல்லும்” என்று கூறினார்கள்.


عَادَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَفَرٍ مِنْ أَصْحَابِهِ فَقَالَ: «هَلْ تَدْرُونَ مَنِ الشُّهَدَاءُ مِنْ أُمَّتِي؟» ، مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا، فَسَكَتُوا. فَقَالَ: عُبَادَةُ أَخْبِرْنَا يَا رَسُولَ اللَّهِ. فَقَالَ: «الْقَتِيلُ فِي سَبِيلِ اللَّهِ شَهِيدٌ، وَالْمَبْطُونُ شَهِيدٌ، وَالْمَطْعُونُ شَهِيدٌ، وَالنُّفَسَاءُ شَهِيدٌ يَجُرُّهَا وَلَدُهَا بِسُرَرِهِ إِلَى الْجَنَّةِ»


Almujam-Alawsat-9314

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9314.


عَادَنِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «هَلْ تَدْرُونَ مَنْ شُهَدَاءُ أُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ؟» فَأَرَمَّ الْقَوْمُ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، الْقَتِيلُ فِي سَبِيلِ اللَّهِ، الصَّابِرُ الْمُحْتَسِبُ شَهِيدٌ، فَقَالَ: «إِنْ لَمْ يَكُنْ شُهَدَاءُ أُمَّتِي إِلَّا هَؤُلَاءِ إِنَّهُمْ إِذًا لَقَلِيلٌ، الْقَتِيلُ فِي سَبِيلِ اللَّهِ شَهِيدٌ، وَالْغَرِيقُ شَهِيدٌ، وَالْمَبْطُونُ شَهِيدٌ، وَالطَّاعُونُ شَهَادَةٌ، وَالنُّفَسَاءُ يَجُرُّهَا وَلَدُهَا بِسَرَرِهِ إِلَى الْجَنَّةِ»


Bazzar-2710

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2710.


عَادَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَنَا مَرِيضٌ فِي أُنَاسٍ مِنَ الْأَنْصَارِ فَقَالَ: ” هَلْ تَدْرُونَ مَنِ الشَّهِيدُ؟، فَسَكَتُوا، فَقُلْتُ: لِامْرَأَتِي أَسْنِدِينِي فَأَسْنَدَتْنِي، فَقُلْتُ: الشَّهِيدُ مَنْ أَسْلَمَ، ثُمَّ هَاجَرَ، ثُمَّ قُتِلَ فِي سَبِيلِ اللَّهِ فَهُوَ شَهِيدٌ، فَقَالَ: «إِنَّ شُهَدَاءَ أُمَّتِي إِذًا لَقَلِيلٌ، الْقَتْلُ فِي سَبِيلِ اللَّهِ شَهَادَةٌ، وَالْبَطْنُ شَهَادَةٌ، وَالْغَرَقُ شَهَادَةٌ، وَالنُّفَسَاءُ شَهَادَةٌ»


Bazzar-2692

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2692.


عَادَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا مَرِيضٌ فِي أُنَاسٍ مِنَ الْأَنْصَارِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ تَدْرُونَ مَا الشَّهِيدُ؟» ، فَسَكَتُوا، فَقُلْتُ: وَمَنْ يَدْرِي مَنِ الشَّهِيدُ؟، فَقُلْتُ لِامْرَأَتِي: أَسْنِدِينِي فَأَسْنَدَتْنِي، فَقُلْتُ: الشَّهِيدُ مَنْ أَسْلَمَ، ثُمَّ هَاجَرَ، ثُمَّ قُتِلَ فِي سَبِيلِ اللَّهِ فَهُوَ شَهِيدٌ، فَقَالَ: «إِنَّ شُهَدَاءَ أُمَّتِي إِذًا لَقَلِيلٌ، الْقَتْلُ فِي سَبِيلِ اللَّهِ شَهَادَةٌ، وَالْبَطْنُ شَهَادَةٌ، وَالْغَرَقُ شَهَادَةٌ، وَالنُّفَسَاءُ شَهَادَةٌ»


Tayalisi-583

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

583.


عَادَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبْدَ اللَّهِ بْنَ رَوَاحَةَ فَمَا تَحَوَّزَ لَهُ عَنْ فِرَاشِهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا تَعُدُّونَ شُهَدَاءَ أُمَّتِي؟» فَقَالَ: مَنْ قُتِلَ فِي سَبِيلِ اللَّهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ شُهَدَاءَ أُمَّتِي إِذًا لَقَلِيلٌ الْقَتْلُ شَهَادَةٌ وَالطَّاعُونُ شَهَادَةٌ وَالْبَطْنُ شَهَادَةٌ وَالْمَرْأَةُ يَقْتُلُهَا وَلَدُهَا جُمْعًا شَهَادَةٌ»


Tayalisi-579

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

579.


«وَالنُّفَسَاءُ يَجُرُّهَا وَلَدُهَا يَوْمَ الْقِيَامَةِ بِسَرَرِهِ إِلَى الْجَنَّةِ»


Next Page » « Previous Page