Author: Farook

Abu-Dawood-3187

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

சிறுவர்களுக்கு ஜனாஸாத் தொழுகை.

3187. நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம், 18 மாதத்தில் மரணித்த போது அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தவில்லை.

அறிவிப்பவர்: ஆயிஷா ரலி)


«مَاتَ إِبْرَاهِيمُ ابْنُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ ابْنُ ثَمَانِيَةَ عَشَرَ شَهْرًا فَلَمْ يُصَلِّ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Ibn-Majah-1511

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1511. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம், மரணித்த போது அவருக்கு நபி (ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள்.

மேலும், “இவருக்குச் சொர்க்கத்தில் பாலூட்டும் அன்னை உண்டு .

இவர் உயிரோடு இருந்திருந்தால் மிக்க உண்மையாளராகவும், நபியாகவும் இருந்திருப்பார்.

இவரின் கிப்தி கிளையைச் சேர்ந்த தாய்மாமன்கள் விடுதலையாகி இருப்பார்கள். அவர்களில் எவரும் அடிமையாக இருக்கமாட்டார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


لَمَّا مَاتَ إِبْرَاهِيمُ ابْنُ رَسُولِ اللَّهِ _ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ _ صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَالَ: «إِنَّ لَهُ مُرْضِعًا فِي الْجَنَّةِ، وَلَوْ عَاشَ لَكَانَ صِدِّيقًا نَبِيًّا، وَلَوْ عَاشَ لَعَتَقَتْ أَخْوَالُهُ الْقِبْطُ، وَمَا اسْتُرِقَّ قِبْطِيٌّ»


Abu-Dawood-3188

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3188. அப்துல்லாஹ் அல்பஹிய்யி (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம், மரணித்த போது அவருக்கு (பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள) அமரும்  ஒரு இடத்தில் நபி (ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள்.

 

….


«لَمَّا مَاتَ إِبْرَاهِيمُ ابْنُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَقَاعِدِ»

قَالَ أَبُو دَاوُدَ: قَرَأْتُ عَلَى سَعِيدِ بْنِ يَعْقُوبَ الطَّالْقَانِيِّ، قِيلَ لَهُ: حَدَّثَكُمْ ابْنُ الْمُبَارَكِ، عَنْ يَعْقُوبَ بْنِ الْقَعْقَاعِ، عَنْ عَطَاءٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى عَلَى ابْنِهِ إِبْرَاهِيمَ وَهُوَ ابْنُ سَبْعِينَ لَيْلَةً


Musnad-Ahmad-9272

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

9272. நபி (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைக் கூட்டிப் பெருக்குபவராக இருந்தவர் மரணித்து அடக்கம் செய்யப்பட்டபின் அவரின்) மண்ணறைக்குச் (சென்று) அவருக்காக (இறுதித்) தொழுகை நடத்தினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى عَلَى قَبْرٍ»


Abu-Dawood-3203

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3203. (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைக் கூட்டிப் பெருக்குபவராக இருந்த கறுத்த “பெண்” அல்லது “ஆண்” ஒருவரைக் காணாமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். “அவர் இறந்துவிட்டார்” என அவர்களுக்கு கூறப்பட்டது.

“நீங்கள் இதை எனக்குத் தெரிவித்திருக்கக் கூடாதா?” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அவரது மண்ணறையை எனக்குக் காட்டுங்கள்” என்று கூறினார்கள். மக்கள் அதைக் காட்டியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு (சென்று) அவருக்காக (இறுதித்) தொழுகை நடத்தினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)


أَنَّ امْرَأَةً سَوْدَاءَ – أَوْ رَجُلًا – كَانَ يَقُمُّ الْمَسْجِدَ، فَفَقَدَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَ عَنْهُ، فَقِيلَ: مَاتَ، فَقَالَ: «أَلَا آذَنْتُمُونِي بِهِ؟» قَالَ: «دُلُّونِي عَلَى قَبْرِهِ؟» فَدَلُّوهُ فَصَلَّى عَلَيْهِ


Ibn-Majah-1527

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1527. (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைக் கூட்டிப் பெருக்குபவராக இருந்த கறுத்த “பெண்” ஒருவரைக் காணாததால் சில நாட்களுக்கு பின் அவரைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். “அவர் இறந்துவிட்டார்” என அவர்களுக்கு கூறப்பட்டது.

“நீங்கள் இதை எனக்குத் தெரிவித்திருக்கக் கூடாதா?” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அவரது மண்ணறைக்கு (சென்று) அவருக்காக (இறுதித்) தொழுகை நடத்தினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)


أَنَّ امْرَأَةً سَوْدَاءَ كَانَتْ تَقُمُّ الْمَسْجِدَ، فَفَقَدَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَأَلَ عَنْهَا بَعْدَ أَيَّامٍ، فَقِيلَ لَهُ: إِنَّهَا مَاتَتْ، قَالَ: «فَهَلَّا آذَنْتُمُونِي، فَأَتَى قَبْرَهَا، فَصَلَّى عَلَيْهَا»


Musnad-Ahmad-9037

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

9037. (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைக் கூட்டிப் பெருக்குபவராக இருந்த கறுத்த “பெண்” அல்லது “ஆண்” ஒருவரைக் காணாமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். “அவர் இறந்துவிட்டார்” என அவர்களுக்கு கூறப்பட்டது. “நீங்கள் எனக்குத் தெரிவித்திருக்கக் கூடாதா?” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.

அதற்கு மக்கள் அது இரவு நேரம் (என்பதால் தங்களுக்கு தெரிவிக்கவில்லை) என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அவரது மண்ணறையை எனக்குக் காட்டுங்கள்” என்று கூறினார்கள். மக்கள் அதைக் காட்டியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு (சென்று) அவருக்காக (இறுதித்) தொழுகை நடத்தினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

 

அறிவிப்பாளர் ஸாபித் பின் அஸ்லம் (ரஹ்) கூறினார்:

இந்த நேரத்தில் தான் “இந்த அடக்கத்தலங்கள், அவற்றில் வசிப்போருக்கு இருள் மண்டிக்காணப்படுகின்றன. வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ், எனது தொழுகையின் மூலம் அவற்றில் அவர்களுக்கு வெளிச்சத்தை ஏற்படுத்துவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இந்தக் கருத்து வேறுஅறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது)


أَنَّ إِنْسَانًا كَانَ يَقُمُّ الْمَسْجِدَ أَسْوَدَ فمَاتَ – أَوْ مَاتَتْ – فَفَقَدَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «مَا فَعَلَ الْإِنْسَانُ الَّذِي كَانَ يَقُمُّ الْمَسْجِدَ؟» ، قَالَ: فَقِيلَ لَهُ: مَاتَ، قَالَ: «فَهَلَّا آذَنْتُمُونِي بِهِ؟» فَقَالُوا: إِنَّهُ كَانَ لَيْلًا، قَالَ: «فَدُلُّونِي عَلَى قَبْرِهَا» ، قَالَ: فَأَتَى الْقَبْرَ، فَصَلَّى عَلَيْهَا

قَالَ ثَابِتٌ – عِنْدَ ذَاكَ، أَوْ فِي حَدِيثٍ آخَرَ -: «إِنَّ هَذِهِ الْقُبُورَ مَمْلُوءَةٌ ظُلْمَةً عَلَى أَهْلِهَا، وَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يُنَوِّرُهَا بِصَلَاتِي عَلَيْهِمْ»


Musnad-Ahmad-8634

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

8634. (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைக் கூட்டிப் பெருக்குபவராக இருந்த கறுத்த “பெண்” அல்லது “ஆண்” ஒருவரைக் காணாமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். “அவர் இறந்துவிட்டார்” என மக்கள் தெரிவித்தனர். “நீங்கள் எனக்குத் தெரிவித்திருக்கக் கூடாதா?” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.

அதற்கு மக்கள் அது இரவு நேரம் (என்பதால் தங்களுக்கு தெரிவிக்கவில்லை) என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அவரது மண்ணறையை எனக்குக் காட்டுங்கள்” என்று கூறினார்கள். மக்கள் அதைக் காட்டியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு (சென்று) அவருக்காக (இறுதித்) தொழுகை நடத்தினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)


أَنَّ امْرَأَةً سَوْدَاءَ – أَوْ رَجُلًا – كَانَ يَقُمُّ الْمَسْجِدَ، فَفَقْدَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَأَلَ عَنْهُ؟ فَقَالُوا: مَاتَ، فَقَالَ: «أَلَا كُنْتُمْ آذَنْتُمُونِي بِهِ» ، قَالُوا: إِنَّهُ كَانَ لَيْلًا، قَالَ: فَقَالَ: «دُلُّونِي عَلَى قَبْرِهِ» ، فَدَلُّوهُ فَأَتَى قَبْرَهُ، فَصَلَّى عَلَيْهِ


Almujam-Alkabir-7785

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7785. நபி (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவுக்குத் தொழுகை நடத்திய போது அவர்களுடன் ஏழு பேர் இருந்தனர். அவர்களை இருவர் இருவராக நிறுத்தி மூன்று வரிசைகளாக ஆக்கினார்கள்.

அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி)


«صَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى جِنَازَةٍ، وَمَعَهُ سَبْعَةُ نَفَرٍ، فَجَعَلَ ثَلَاثَةً صَفًّا، وَاثْنَيْنِ صَفًّا، وَاثْنَيْنِ صَفًّا»


Ibn-Majah-1490

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1490.


كَانَ إِذَا أُتِيَ بِجِنَازَةٍ، فَتَقَالَّ مَنْ تَبِعَهَا، جَزَّأَهُمْ ثَلَاثَةَ صُفُوفٍ، ثُمَّ صَلَّى عَلَيْهَا، وَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا صَفَّ صُفُوفٌ ثَلَاثَةٌ مِنَ الْمُسْلِمِينَ عَلَى مَيِّتٍ إِلَّا أَوْجَبَ»


Next Page » « Previous Page