Author: Farook

Tirmidhi-96

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

96. நாங்கள் பயணத்தில் இருந்தால் மூன்று நாட்களும், உள்ளூரில் இருந்தால் ஒரு நாளும், மலம், ஜலம், தூக்கம் போன்ற காரணங்களால் காலுறைகளைக் கழற்றத் தேவையில்லை எனவும், கடமையான குளிப்புக்காகக் காலுறைகளைக் கழற்ற வேண்டும் எனவும் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டிருந்தார்கள்.

அறிவிப்பவர்: ஸஃப்வான் பின் அஸ்ஸால் (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.

இந்தக் கருத்தில் வரும் ஒரு செய்தியை ஹகம் பின் உத்பா, ஹம்மாத் ஆகியோர் இப்ராஹீம் அந்நகஈ —> அபூஅப்துல்லாஹ் அல்ஜதலி —> குஸைமா பின் ஸாபித் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர். ஆனால் இந்த அறிவிப்பாளர்தொடர் சரியானதல்ல.

யஹ்யா பின் ஸயீத் அவர்கள் கூறியதாக அலீ பின் மதீனி அவர்கள் கூறுகிறார்: இப்ராஹீம் அந்நக்ஈ அவர்கள், அபூஅப்துல்லாஹ்விடமிருந்து இந்த மஸ்ஹ் பற்றிய ஹதீஸை நேரடியாக கேட்கவில்லை என்று ஷுஃபா அவர்கள் கூறினார்.


மன்ஸூர் அவர்கள் கூறியதாக ஸாயிதா பின் குதாமா கூறுகிறார்:

நாங்கள் இப்ராஹீம் அத்தைமீ அவர்களின் அறையில் இருந்தோம், எங்களுடன் இப்ராஹீம் அந்நகஈ அவர்களும் இருந்தார். அப்போது இப்ராஹீம் அத்தைமீ அவர்கள், மேற்கண்ட செய்தியை அம்ர் பின் மைமூன்

«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُنَا إِذَا كُنَّا سَفَرًا أَنْ لَا نَنْزِعَ خِفَافَنَا ثَلَاثَةَ أَيَّامٍ وَلَيَالِيهِنَّ، إِلَّا مِنْ جَنَابَةٍ، وَلَكِنْ مِنْ غَائِطٍ وَبَوْلٍ وَنَوْمٍ»


Musnad-Ahmad-1277

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1277.

காலுறைகள் மீது மஸஹ் செய்வது பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேள்வி கேட்கச் சென்றேன். அதற்கவர்கள், “அலீ பின் அபீதாலிபிடம் சென்று கேள். அவர் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பயணம் செய்பவராக இருந்தார்” என்று கூறினார்கள். நாங்கள் அலீ (ரலி) அவர்களிடம் இது பற்றிக் கேட்டோம். “பயணிகளுக்கு மூன்று பகல் மூன்று இரவு எனவும், உள்ளூரில் இருப்பவர்களுக்கு ஒரு பகல் ஓர் இரவு எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்படுத்தினார்கள்” என்று அலீ (ரலி) விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : ஷுரைஹ்


سَأَلْتُ عَائِشَةَ عَنِ الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ. فَقَالَتْ: سَلْ عَلِيًّا، فَهُوَ أَعْلَمُ بِهَذَا مِنِّي، هُوَ كَانَ يُسَافِرُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَأَلْتُ عَلِيًّا، فَقَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لِلمُقِيمِ يَوْمٌ وَلَيْلَةٌ، وَلِلمُسَافِرِ ثَلاثَةُ أَيَّامٍ وَلَيَالِيهِنَّ»


Ibn-Majah-552

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

552.

காலுறைகள் மீது மஸஹ் செய்வது பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேள்வி கேட்கச் சென்றேன். அதற்கவர்கள், “அலீ பின் அபீதாலிபிடம் சென்று கேள். அவர் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பயணம் செய்பவராக இருந்தார்” என்று கூறினார்கள். நாங்கள் அலீ (ரலி) அவர்களிடம் இது பற்றிக் கேட்டோம். “பயணிகளுக்கு மூன்று பகல் மூன்று இரவு எனவும், உள்ளூரில் இருப்பவர்களுக்கு ஒரு பகல் ஓர் இரவு எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்படுத்தினார்கள்” என்று அலீ (ரலி) விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : ஷுரைஹ்


سَأَلْتُ عَائِشَةَ، عَنِ الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ، فَقَالَتْ: ائْتِ عَلِيًّا، فَسَلْهُ، فَإِنَّهُ أَعْلَمُ بِذَلِكَ مِنِّي، فَأَتَيْتُ عَلِيًّا، فَسَأَلْتُهُ عَنِ الْمَسْحِ، فَقَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَأْمُرُنَا أَنْ نَمْسَحَ، لِلْمُقِيمِ يَوْمًا وَلَيْلَةً، وَلِلْمُسَافِرِ ثَلَاثَةَ أَيَّامٍ»


Nasaayi-128

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

128. காலுறைகள் மீது மஸஹ் செய்வது பற்றி “பயணிகளுக்கு மூன்று பகல் மூன்று இரவு எனவும், உள்ளூரில் இருப்பவர்களுக்கு ஒரு பகல் ஓர் இரவு எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்படுத்தினார்கள்” என்று அலீ (ரலி) விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : ஷுரைஹ்


«جَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلْمُسَافِرِ ثَلَاثَةَ أَيَّامٍ وَلَيَالِيَهُنَّ، وَيَوْمًا وَلَيْلَةً لِلْمُقِيمِ – يَعْنِي فِي الْمَسْحِ -»


Abu-Dawood-1913

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1913.

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அரஃபா நாளின் அதிகாலைப் பொழுதில் ஸுப்ஹு தொழுதுவிட்டு மினாவிலிருந்து புறப்பட்டார்கள். அரஃபா வந்தவுடன் நமிரா எனுமிடத்தில் தங்கினார்கள். நமிரா என்பது அரஃபாவில் தலைவர்(கள்) தங்கும் இடமாகும். லுஹர் தொழுகையின் நேரம் வந்தவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அங்கிருந்து) பகற்பொழுதிலேயே புறப்ப(ட தயாராகிவி)ட்டார்கள். எனவே லுஹர், அஸர் தொழுகைகளைச் சேர்த்துத் தொழுதார்கள். பிறகு மக்களுக்கு உரையாற்றினார்கள். பிறகு பகற்பொழுதில் (அங்கிருந்து) புறப்பட்டுச் சென்று அரஃபாவின் தங்குமிடங்களில் தங்கி ஓய்வெடுத்தார்கள்.


«غَدَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ مِنًى حِينَ صَلَّى الصُّبْحَ صَبِيحَةَ يَوْمِ عَرَفَةَ حَتَّى أَتَى عَرَفَةَ فَنَزَلَ بِنَمِرَةَ، وَهِيَ مَنْزِلُ الْإِمَامِ الَّذِي يَنْزِلُ بِهِ بِعَرَفَةَ حَتَّى إِذَا كَانَ عِنْدَ صَلَاةِ الظُّهْرِ رَاحَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُهَجِّرًا فَجَمَعَ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ، ثُمَّ خَطَبَ النَّاسَ، ثُمَّ رَاحَ فَوَقَفَ عَلَى الْمَوْقِفِ مِنْ عَرَفَةَ»


Tirmidhi-231

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

231.


«أَنَّ رَجُلًا صَلَّى خَلْفَ الصَّفِّ وَحْدَهُ فَأَمَرَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُعِيدَ الصَّلَاةَ»،:

سَمِعْت الجَارُودَ يَقُولُ: سَمِعْتُ وَكِيعًا، يَقُولُ: «إِذَا صَلَّى الرَّجُلُ خَلْفَ الصَّفِّ وَحْدَهُ فَإِنَّهُ يُعِيدُ»


Tirmidhi-230

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

230. ஹிலால் பின் யஸாஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஸியாத் பின் அபுல்ஜஃத் (ரஹ்) அவர்கள் என் கையைப் பிடித்து ரக்கா என்ற நகரத்தில் உள்ள ஒரு பெரியவரிடம் அழைத்துச் சென்று நிற்கவைத்தார். அவரின் பெயர் வாபிஸா பின் மஅபத் (ரலி) ஆகும்.

அப்போது ஸியாத் அவர்கள், “(தொழுகை) வரிசைக்குப் பின்னால் தனியாகத் தொழுது கொண்டிருந்த ஒருவரை நபி (ஸல்) அவர்கள் கண்டு அத்தொழுகையை (மறுபடியும்) மீட்டுமாறு அவருக்கு உத்தரவிட்டார்கள்” என்று இந்த பெரியவர் தான் எனக்குக் கூறினார்கள்’ என்று சொன்னார். இதை அந்தப் பெரியவரும் கேட்டுக் கொண்டிருந்தார்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் அலீ பின் ஷைபான்  (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.

வாபிஸா (ரலி) அவர்களின் ஹதீஸ் ‘ஹஸன்’ எனும் தரத்தைச் சேர்ந்ததாகும்.

அறிஞர்களில் ஒரு சாரார், ஒரு மனிதர் தொழுகையின் வரிசைக்கு பின்னால் தனியாகத் தொழுவதை வெறுக்கத்தக்கதாகக் கருதியுள்ளனர். வரிசைக்கு பின்னால் தனியாகத் தொழுதால் அவர் அத்தொழுகையை மீண்டும் தொழ வேண்டும் என்று கூறியுள்ளனர். அஹ்மத், இஸ்ஹாக் பின் ராஹவைஹி ஆகியோர் இக்கருத்தையே கூறியுள்ளனர்.

மற்றொரு சாரார், தொழுகையின் வரிசைக்கு பின்னால் தனியாகத் தொழுதாலும் அது கூடும். செல்லுபடியாகும் என்று

قَالَ: أَخَذَ زِيَادُ بْنُ أَبِي الجَعْدِ بِيَدِي وَنَحْنُ بِالرَّقَّةِ، فَقَامَ بِي عَلَى شَيْخٍ يُقَالُ لَهُ: وَابِصَةُ بْنُ مَعْبَدٍ، مِنْ بَنِي أَسَدٍ، فَقَالَ زِيَادٌ: حَدَّثَنِي هَذَا الشَّيْخُ «أَنَّ رَجُلًا صَلَّى خَلْفَ الصَّفِّ وَحْدَهُ – وَالشَّيْخُ يَسْمَعُ فَأَمَرَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُعِيدَ الصَّلَاةَ»


Abu-Dawood-614

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 215

சலாமுக்கு பிறகு இமாம் கிப்லாவை விட்டு திரும்புதல்.

614. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு பின்னால் நின்று நான் தொழுதிருக்கின்றேன். அவர்கள் தொழுது முடித்ததும் கிப்லாவை விட்டும் திரும்பி (மக்களை நோக்கி அமர்ந்து) விடுவார்கள் என்று தன் தந்தை வழியாக ஜாபிர் பின் யசீத் பின் அல் அஸ்வத் அறிவிக்கின்றார்.

குறிப்பு : இந்த ஹதீஸ் திர்மிதி, நஸயீ ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.


«صَلَّيْتُ خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَانَ إِذَا انْصَرَفَ انْحَرَفَ»


Nasaayi-1334

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1334.


أَنَّهُ «صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الصُّبْحِ، فَلَمَّا صَلَّى انْحَرَفَ»


Nasaayi-858

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

858. யஸீத் பின் அஸ்வத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்த போது அவர்களுடன் நானும் இருந்தேன். நான் கைஃப் பள்ளியில் அவர்களுடன் ஃபஜர் தொழுகையில் கலந்து கொண்டேன். அவர்கள் தொழுகையை முடித்துவிட்டு திரும்பிய போது தன்னுடன் தொழுகையில் கலந்து கொள்ளாத இருவரை கூட்டத்தின் இறுதியில் (அமர்ந்து) இருப்பதைக் கண்டார்கள். அவ்விருவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள் என்று கூறினார்கள்.

அவ்விருவரின் தோல் புஜங்களும் (அச்சத்தால்) நடுங்கிய நிலையில் அவ்விருவரும் அழைத்து வரப்பட்டனர். நீங்கள் ஏன் நம்முடன் சேர்ந்து தொழவில்லை? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவ்விருவரும் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்களுடைய வீடுகளிலேயே தொழுகையை நிறைவேற்றி விட்டோம் என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு நீங்கள் செய்யாதீர்கள். நீங்கள் உங்களுடைய வீடுகளில் தொழுதுவிட்டு ஜமாஅத் நடக்கும் பள்ளிக்கு வந்தால் மக்களுடன் சேர்ந்து தொழ வேண்டும். இத்தொழுகை உங்களுக்கு உபரியானதாகி விடும் என்றார்கள்.


شَهِدْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْفَجْرِ فِي مَسْجِدِ الْخَيْفِ، فَلَمَّا قَضَى صَلَاتَهُ إِذَا هُوَ بِرَجُلَيْنِ فِي آخِرِ الْقَوْمِ لَمْ يُصَلِّيَا مَعَهُ قَالَ: «عَلَيَّ بِهِمَا». فَأُتِيَ بِهِمَا تَرْعَدُ فَرَائِصُهُمَا فَقَالَ: «مَا مَنَعَكُمَا أَنْ تُصَلِّيَا مَعَنَا؟» قَالَا: يَا رَسُولَ اللَّهِ إِنَّا قَدْ صَلَّيْنَا فِي رِحَالِنَا. قَالَ: «فَلَا تَفْعَلَا، إِذَا صَلَّيْتُمَا فِي رِحَالِكُمَا، ثُمَّ أَتَيْتُمَا مَسْجِدَ جَمَاعَةٍ فَصَلِّيَا مَعَهُمْ، فَإِنَّهَا لَكُمَا نَافِلَةٌ»


Next Page » « Previous Page