Author: Farook

Musnad-Ahmad-18591

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

18591. பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் “அல்கஹ்ஃப்” எனும் (18ஆவது) அத்தியாயத்தை (தமது இல்லத்தில் அமர்ந்து) ஓதிக்கொண்டிருந்தார். அவருக்கு அருகில் நீண்ட இரு கயிறுகளால் குதிரையொன்று கட்டப்பட்டிருந்தது. அதை ஒரு மேகம் சூழ்ந்துகொண்டு வட்டமிட்டபடி நெருங்கத் தொடங்கியது. அதனால் குதிரை மிரள ஆரம்பித்தது.

(அந்த மனிதர் கூறினார்: இதனால் நான் ஆச்சரியமடைந்தேன்)

விடிந்தவுடன் அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் “குர்ஆன் ஓதியக் காரணத்தால் இறங்கிய அமைதிதான் அது” என்று கூறினார்கள்…


كَانَ رَجُلٌ يَقْرَأُ فِي دَارِهِ سُورَةَ الْكَهْفِ وَإِلَى جَانِبِهِ حِصَانٌ لَهُ مَرْبُوطٌ بِشَطَنَيْنِ، حَتَّى غَشِيَتْهُ سَحَابَةٌ، فَجَعَلَتْ تَدْنُو وَتَدْنُو حَتَّى جَعَلَ فَرَسُهُ يَنْفِرُ مِنْهَا، قَالَ الرَّجُلُ: فَعَجِبْتُ لِذَلِكَ، فَلَمَّا أَصْبَحَ أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَ ذَلِكَ لَهُ وَقَصَّ عَلَيْهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تِلْكَ السَّكِينَةُ تَنَزَّلَتْ لِلْقُرْآنِ»


Musnad-Ahmad-18509

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

18509. பராஉ இப்னு ஆஸிப் (ரலி) அறிவித்தார்.

ஒருவர் (உசைத் இப்னு ஹுளைர் – ரலி-) தம் வீட்டில் (திருக்குர்ஆனின்) ‘அல் கஹ்ஃப்’ (18-வது) அத்தியாயத்தை ஓதிக் கொண்டிருந்தார். அவரின் குதிரை அருகில் கட்டப்பட்டிருந்தது. உடனே, அந்தப் பிராணி மிரண்டோட ஆரம்பித்தது. அந்த மனிதர் (திரும்பிப்) பார்த்தார். அப்போது மேகத்திரள் ஒன்று வந்து அவரை மூடிக்கொண்டது. அந்த மனிதர் பயந்து விட்டார்.

இதை அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று சொன்னபோது நபி (ஸல்) அவர்கள், ‘இன்னாரே! ஓதிக் கொண்டேயிரு(ந்திருக்க வேண்டும் நீ)ங்கள். ஏனெனில், அந்த மேகமானது குர்ஆனின் வசனங்களை ஓதியதற்காக (இறைவனிடமிருந்து உங்களின் மீது) இறங்கிய அமைதி(ச் சின்னம்) ஆகும்’ என்று கூறினார்கள்.

 

அறிவிப்பாளர் அபூஇஸ்ஹாக் (ரஹ்) கூறினார்:

நான் பராஉ இப்னு ஆஸிப் (ரலி) அவர்களிடம் அந்த மனிதரின் பெயரை நபி (ஸல்) அவர்கள் கூறினார்களா? என்று கேட்டேன். அதற்கு பராஉ இப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் “ஆம்” என விடையளித்தார்கள்…


قَرَأَ رَجُلٌ سُورَةَ الْكَهْفِ وَلَهُ دَابَّةٌ مَرْبُوطَةٌ، فَجَعَلَتِ الدَّابَّةُ تَنْفِرُ، فَنَظَرَ الرَّجُلُ إِلَى سَحَابَةٍ قَدْ غَشِيَتْهُ، أَوْ ضَبَابَةٍ، فَفَزِعَ، فَذَهَبَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قُلْتُ: سَمَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاكَ الرَّجُلَ؟ قَالَ: نَعَمْ. فَقَالَ: «اقْرَأْ فُلَانُ، فَإِنَّ السَّكِينَةَ نَزَلَتْ لِلْقُرْآنِ، أَوْ عِنْدَ الْقُرْآنِ»


Musnad-Ahmad-18474

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

18474. பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் தமது வீட்டில் வாகனப் பிராணி ஒன்று இருக்க, “அல்கஹ்ஃப்” எனும் (18ஆவது) அத்தியாயத்தை ஓதினார். உடனே அந்தப் பிராணி மிரள ஆரம்பித்தது. அந்த மனிதர் (திரும்பிப்) பார்த்தார். அப்போது மேகத்திரள் ஒன்று வந்து அவரை மூடிக்கொண்டது.

இதை அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் சொன்னபோது நபி (ஸல்) அவர்கள், “இன்னாரே, நீர் தொடர்ந்து ஓதிக்கொண்டேயிரு(ந்திருக்க வேண்டு)ம். அந்த மேகம் குர்ஆனின் வசனங்களை ஓதியதற்காக (இறைவனிடமிருந்து உம்மீது) இறங்கிய அமைதி(ச் சின்னம்) ஆகும்” என்று சொன்னார்கள்.


قَرَأَ رَجُلٌ الْكَهْفَ وَفِي الدَّارِ دَابَّةٌ، فَجَعَلَتْ تَنْفِرُ، فَنَظَرَ فَإِذَا ضَبَابَةٌ، أَوْ سَحَابَةٌ، قَدْ غَشِيَتْهُ. قَالَا: فَذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «اقْرَأْ فُلَانُ، فَإِنَّهَا السَّكِينَةُ تَنَزَّلَتْ عِنْدَ الْقُرْآنِ، أَوْ تَنَزَّلَتْ لِلْقُرْآنِ»


Tayalisi-749

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

749. பராஉ இப்னு ஆஸிப் (ரலி) அறிவித்தார்:

ஒருவர் ‘அல் கஹ்ஃப்’ எனும் (18 வது) அத்தியாயத்தை (தம் இல்லத்தில் அமர்ந்து) இரவில் ஓதிக்கொண்டிருந்தார். அப்போது அவரின் குதிரை மிரளுவதைப் பார்த்தார். அவர் என்னவென்று நாலாபுறமும் பார்க்கும்போது மேகத் திரள் ஒன்று வந்து அவரை மூடியது. (விடிந்தவுடன்) அவர் நபி (ஸல்) அவர்களிடம் அந்த விஷயத்தைத் தெரிவித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘குர்ஆன் ஓதிய காரணத்தால் இறங்கிய அமைதிதான் அது’ என்று கூறினார்கள்.


بَيْنَمَا رَجُلٌ يَقْرَأُ سُورَةَ الْكَهْفِ لَيْلَةً إِذْ رَأَى دَابَّتَهُ تَرْكُضُ – أَوْ قَالَ: فَرَسَهُ تَرْكُضُ – فَنَظَرَ فَإِذَا مِثْلُ الضَّبَابَةِ – أَوْ قَالَ: مِثْلُ الْغَمَامَةِ – فَذَكَرَ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «تِلْكَ السَّكِينَةُ نَزَلَتْ لِلْقُرْآنِ أَوْ تَنَزَّلَتْ عَلَى الْقُرْآنِ»


Musannaf-Abdur-Razzaq-6022

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6022. யார் சூரத்துல் கஹ்ஃபின் ஆரம்ப பத்து வசனங்களை ஓதுகிறாரோ அவர் தஜ்ஜாலின் சோதனையிலிருந்து விடுபட்டு விடுவார். யார் அதன் இறுதி (பத்து) வசனங்களை அல்லது இறுதி வரை (முழுவதையும்) ஓதுகிறாரோ அவருக்குக் காலில் இருந்து தலை வரை ஒளி உண்டாகும் என கதாதா (ரஹ்) கூறினார்.

அறிவிப்பவர் : மஃமர் (ரஹ்)


مَنْ قَرَأَ عَشْرَ آيَاتٍ مِنْ أَوَّلِ الْكَهْفِ عُصِمَ مِنْ فِتْنَةِ الدَّجَّالِ، وَمَنْ قَرَأَ آخِرَهَا – أَوْ قَالَ: قَرَأَهَا إِلَى آخِرِهَا – كَانَتْ لَهُ نُورًا مِنْ قَرْنِهِ إِلَى قَدَمِهِ


Almujam-Alkabir-443

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

443. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் சூரத்துல் கஹ்ஃபின் ஆரம்ப வசனங்களையும் அதன் இறுதியையும் ஓதுகிறாரோ அவருக்குக் காலில் இருந்து தலை வரை ஒளி உண்டாகும். யார் அதை முழுவதையும் ஓதுகிறாரோ வானத்திலிருந்து பூமி வரை ஒளி உண்டாகும்.

அறிவிப்பவர் : முஆத் பின் அனஸ் (ரலி)


«مَنْ قَرَأَ أَوَّلَ سُورَةِ الْكَهْفِ وَآخِرَهَا كَانَتْ لَهُ نُورًا مِنْ قَدَمِهِ إِلَى رَأْسِهِ، وَمَنْ قَرَأَهَا كُلَّهَا كَانَتْ لَهُ نُورًا مِنْ قَدَمِهِ إِلَى رَأْسِهِ مِنَ الْأَرْضِ إِلَى السَّمَاءِ»


Musnad-Ahmad-15626

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

15626. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் சூரத்துல் கஹ்ஃபின் ஆரம்ப வசனங்களையும் அதன் இறுதியையும் ஓதுகிறாரோ அவருக்குக் காலில் இருந்து தலை வரை ஒளி உண்டாகும். யார் அதை முழுவதையும் ஓதுகிறாரோ வானத்திலிருந்து பூமி வரை ஒளி உண்டாகும்.

அறிவிப்பவர் : முஆத் பின் அனஸ் (ரலி)


«مَنْ قَرَأَ أَوَّلَ سُورَةِ الْكَهْفِ وَآخِرَهَا، كَانَتْ لَهُ نُورًا مِنْ قَدَمِهِ إِلَى رَأْسِهِ، وَمَنْ قَرَأَهَا كُلَّهَا كَانَتْ لَهُ نُورًا مَا بَيْنَ السَّمَاءِ إِلَى الْأَرْضِ»


Hakim-2073

ஹதீஸின் தரம்: More Info

2073. ஹதீஸ் எண்-2072 இல் வரும் செய்தி, வேறு அறிவிப்பாளர்தொடரில் அபூ ஸயீத் (ரலி) அவர்களின் சொல்லாக அறிவிக்கப்பட்டுள்ளது.


مَنْ قَرَأَ سُورَةَ الْكَهْفِ – فَذَكَرَهُ بِنَحْوِهِ


Shuabul-Iman-2777

ஹதீஸின் தரம்: Pending

2777.  யார் கஹ்ஃப் அத்தியாயத்தை வெள்ளிக்கிழமை ஓதுவாரோ அவர் ஓதிய இடத்திலிருந்து மக்கா வரை ஒளி கொடுக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஸயீத் (ரலி)


مَنْ قَرَأَ سُورَةَ الْكَهْفِ في يَوْمَ جُمُعَةٍ أَضَاءَ لَهُ مِنَ النُّورِ مَا بَيْنَهُ وَبَيْنَ الْبَيْتِ الْعَتِيقِ


Shuabul-Iman-2776

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2776. “யார் கஹ்ஃப் அத்தியாயத்தை வெள்ளிக்கிழமை ஓதுவாரோ, அவர் ஓதிய பின்னர் தஜ்ஜாலை அடைந்தால் அவன் அவர் மீது சாட்டப்படமாட்டான்-அல்லது அவருக்கு அவன் எந்த தீங்கும் செய்ய முடியாது. யார் கஹ்ஃப் அத்தியாயத்தின் இறுதி வசனங்களை ஓதுவாரோ அவருக்கு அவருடைய இடத்திலிருந்து மக்கா வரை ஒளி உண்டாகும் என அபூ ஸயீத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : கைஸ் பின் அப்பாத் (ரஹ்)


مَنْ قَرَأَ سُورَةَ الْكَهْفِ يَوْمَ الْجُمُعَةِ فَأَدْرَكَ الدَّجَّالَ لَمْ يُسَلَّطْ عَلَيْهِ، – أَوْ قَالَ: لَمْ يَضُرُّهُ – وَمَنْ قَرَأَ خَاتِمَةَ سُورَةِ الْكَهْفِ أَضَاءَ لَهُ نُورًا مِنْ حَيْثُ كَانَ بَيْنَهُ وَبَيْنَ مَكَّةَ


Next Page » « Previous Page