Author: Farook

Musannaf-Ibn-Abi-Shaybah-30369

ஹதீஸின் தரம்: More Info

30369. இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவரும், சிறந்தவரும் யாரெனில் அவர்களில் நற்குணம் கொண்டவரே! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


«أَكْمَلُ الْمُؤْمِنِينَ إِيمَانًا، وَأَفْضَلُ الْمُؤْمِنِينَ إِيمَانًا أَحْسَنُهُمْ خُلُقًا»


Musannaf-Ibn-Abi-Shaybah-25321

ஹதீஸின் தரம்: More Info

25321.  இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர் யாரெனில் அவர்களில் நற்குணம் கொண்டவரே! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


«أَكْمَلُ الْمُؤْمِنِينَ إِيمَانًا أَحْسَنُهُمْ خُلُقًا»


Musannaf-Ibn-Abi-Shaybah-25318

ஹதீஸின் தரம்: More Info

25318. மக்களில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவரும், இறை நம்பிக்கை கொண்டவர்களில் சிறந்தவரும் யாரெனில் அவர்களில் நற்குணம் கொண்டவரே!

உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


«أَكْمَلُ النَّاسِ إِيمَانًا وَأَفْضَلُ الْمُؤْمِنِينَ إِيمَانًا أَحْسَنُهُمْ خُلُقًا، وَخِيَارُكُمْ خِيَارُكُمْ لِنِسَائِهِمْ»


Bazzar-5196

ஹதீஸின் தரம்: More Info

5196. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஆண்கள் தமது மனைவியை அடிப்பதற்கு அனுமதி கொடுத்தார்கள். அவர்களும் தனது மனைவியை அடிக்க, இரவில் உரத்த சத்தங்களை நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.

இது பற்றி நபித்தோழர்களிடம் கேட்கும் போது, அவர்கள் நீங்கள் ஆண்களுக்கு தமது மனைவிகளை அடிக்க அனுமதி கொடுத்தீர்கள், (அவர்கள் அடித்துவிட்டனர்.அதன் விளைவே இது) என்று கூறினர்.

உடனே நபி (ஸல்) அவர்கள் உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே! நான் எனது மனைவியரிடத்தில் நற்பண்புடன் நடந்துக் கொள்கிறேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم أَذِنَ فِي ضَرْبِ النِّسَاءِ فَسَمِعَ مِنَ اللَّيْلِ صَوْتًا عَالِيًا فَقَالَ: إِنِّي لأَسْمَعُ صَوْتًا عَالِيًا قَالُوا: يَا رَسولَ اللهِ أَذِنْتَ فِي ضَرْبِ النِّسَاءِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم: خَيْرُكُمْ خَيْرُكُمْ لأَهْلِهِ، وَأنا خَيْرُكُمْ لأَهْلِي


Hakim-7327

ஹதீஸின் தரம்: More Info

7327. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


«خَيْرُكُمْ خَيْرُكُمْ لِلنِّسَاءِ»


Ibn-Hibban-4186

ஹதீஸின் தரம்: More Info

4186. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்  சில ஆண்கள் தமது மனைவியை அடிப்பதற்கு அனுமதி கேட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர்களுக்கு அடிக்க அனுமதி கொடுத்தார்கள். அவர்களும் தனது மனைவியை அடிக்க, இரவில் உரத்த சத்தங்களை நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.

இது என்ன என்று நபித்தோழர்களிடம் கேட்கும் போது, அவர்கள் நீங்கள் ஆண்களுக்கு தமது மனைவிகளை அடிக்க அனுமதி கொடுத்தீர்கள், அவர்கள் அடித்துவிட்டனர்.(அதன் விளைவே இது) என்று கூறினர்.

உடனே நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு அடிப்பதை தடைசெய்தார்கள். மேலும் கூறினார்கள்: உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே! நான் எனது மனைவியரிடத்தில் நற்பண்புடன் நடந்துக் கொள்கிறேன்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


أَنَّ الرِّجَالَ اسْتَأْذَنُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ضَرْبِ النِّسَاءِ فَأَذِنَ لَهُمْ فَضَرَبُوهُنَّ فَبَاتَ فَسَمِعَ صَوْتًا عَالِيًا فَقَالَ: «مَا هَذَا» قَالُوا: أَذِنْتَ لِلرِّجَالِ فِي ضَرْبِ النِّسَاءِ فَضَرَبُوهُنَّ فَنَهَاهُمْ وَقَالَ: «خَيْرُكُمْ خَيْرُكُمْ لِأَهْلِهِ، وَأَنَا مِنْ خَيْرِكُمْ لِأَهْلِي»


Ibn-Majah-1977

ஹதீஸின் தரம்: More Info

1977. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே! நான் எனது மனைவியரிடத்தில் நற்பண்புடன் நடந்துக் கொள்கிறேன்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


«خَيْرُكُمْ خَيْرُكُمْ لِأَهْلِهِ، وَأَنَا خَيْرُكُمْ لِأَهْلِي»


Shuabul-Iman-8344

ஹதீஸின் தரம்: More Info

8344. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே! நான் எனது மனைவியரிடத்தில் நற்பண்புடன் நடந்துக் கொள்கிறேன்.

உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் அவரை(ப்பற்றி கெட்டதை கூறாமல்) விட்டுவிடுங்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


خَيْرُكُمْ خَيْرُكُمْ لِأَهْلِهِ، وَإِنِّي خَيْرُكُمْ لِأَهْلِي، وَإِذَا مَاتَ صَاحِبُكُمْ فَدَعُوهُ


Kubra-Bayhaqi-15699

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

15699. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே! நான் எனது மனைவியரிடத்தில் நற்பண்புடன் நடந்துக் கொள்கிறேன்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


خَيْرُكُمْ خَيْرُكُمْ لِأَهْلِهِ وَأَنَا خَيْرُكُمْ لِأَهْلِي


Almujam-Alawsat-6145

ஹதீஸின் தரம்: More Info

6145. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


«خَيْرُكُمْ خَيْرُكُمْ لِأَهْلِهِ»


Next Page » « Previous Page