பாடம்: 24
தல்பீனா (பால் பாயசம்)
உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் மனைவியார் ஆயிஷா (ரலி) அவர்களுடைய குடும்பத்தாரில் யாரேனும் இறந்துவிட்டால், அதற்காகப் பெண்கள் கூடிப் பிறகு, அவர்களின் குடும்பத்தாரும் நெருங்கிய உறவினர்களும் தவிர, மற்ற பெண்கள் அனைவரும் கலைந்து சென்றுவிடுவார்கள்.
அப்போது ஒரு பாத்திரத்தில் ‘தல்பீனா’ (எனும் பால் பாயசம்) தயாரிக்கும்படி ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவார்கள். அவ்வாறே அது தயாரிக்கப்படும்.
பிறகு ‘ஸரீத்’ (எனும் தக்கடி) தயாரிக்கப்படும். அதில் ‘தல்பீனா’ ஊற்றப்பட்ட பிறகு (அங்குள்ள பெண்களிடம்) ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘இதைச் சாப்பிடுங்கள்; ஏனெனில், ‘தல்பீனா’ (எனும் பாயசம்) நோயாளியின் மனதிற்கு ஆறுதல் அளிக்கும்; கவலைகளில் சிலவற்றைப் போக்கும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்” என்று சொல்வார்கள்.
அத்தியாயம்: 70
(புகாரி: 5417)بَابُ التَّلْبِينَةِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
أَنَّهَا كَانَتْ إِذَا مَاتَ المَيِّتُ مِنْ أَهْلِهَا، فَاجْتَمَعَ لِذَلِكَ النِّسَاءُ، ثُمَّ تَفَرَّقْنَ إِلَّا أَهْلَهَا وَخَاصَّتَهَا، أَمَرَتْ بِبُرْمَةٍ مِنْ تَلْبِينَةٍ فَطُبِخَتْ، ثُمَّ صُنِعَ ثَرِيدٌ فَصُبَّتِ التَّلْبِينَةُ عَلَيْهَا، ثُمَّ قَالَتْ: كُلْنَ مِنْهَا، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «التَّلْبِينَةُ مُجِمَّةٌ لِفُؤَادِ المَرِيضِ، تَذْهَبُ بِبَعْضِ الحُزْنِ»
Bukhari-Tamil-5417.
Bukhari-TamilMisc-5417.
Bukhari-Shamila-5417.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல் (2. மிகப் பலமானவர்).
2 . யஹ்யா பின் அப்துல்லாஹ்-அல்குரஷீ (3. பலமானவர்).
3 . லைஸ் பின் ஸஃத்-அபுல்ஹாரிஸ் (2. மிகப் பலமானவர்).
4 . உகைல் பின் காலித்-அல்அய்லீ (2. மிகப் பலமானவர்).
5 . ஸுஹ்ரீ இமாம்-இப்னு ஷிஹாப் (2. மிகப் பலமானவர்).
6 . உர்வா பின் ஸுபைர்-அல்அஸதீ (3. பலமானவர்).
1 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ஸுஹ்ரீ —> உர்வா பின் ஸுபைர் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி)
பார்க்க: அஹ்மத்- 24512, 25219, புகாரி-5417, 5689, முஸ்லிம்-4453, திர்மிதீ-2039, குப்ரா நஸாயீ-, …
இந்தச் செய்தி, விஞ்ஞான ரீதியாக நவீன அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து ஆய்வுகள் மூலமாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்:
இது ஏன் மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது என்பதற்கான காரணங்கள் இதோ:
செரோடோனின் சுரப்பு (Serotonin Production): தல்பீனா பார்லி தானியத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. பார்லியில் உள்ள ‘டிரிப்டோபான்’ (Tryptophan) என்ற அமினோ அமிலம், மூளையில் செரோடோனின் என்ற வேதிப்பொருளை சுரக்க வைக்கிறது. செரோடோனின் என்பது மகிழ்ச்சியைத் தூண்டும் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும் ஹார்மோன் ஆகும்.
மக்னீசியம் மற்றும் பி-வைட்டமின்கள்: தல்பீனாவில் உள்ள அதிகப்படியான மக்னீசியம் மற்றும் பி-வைட்டமின் சத்துக்கள் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துவதற்கும், மன பதற்றத்தைக் குறைப்பதற்கும் உதவுகின்றன.
இரத்த சர்க்கரை சமநிலை: பார்லியில் உள்ள சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் (Complex Carbohydrates) இரத்த சர்க்கரை அளவைச் சீராக வைக்க உதவுகின்றன. இரத்த சர்க்கரை அளவு திடீரென குறைவது மன சோர்வு மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும்; தல்பீனா அதைத் தடுத்து மனதை சீராக வைக்கிறது.
ஆற்றல் மற்றும் செரிமானம்: எளிதில் செரிமானம் ஆகக்கூடியது என்பதால், உடலுக்கு உடனடியாக ஆற்றலை வழங்குகிறது. உடல்நலம் மற்றும் மனநலம் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதால், எளிதில் செரிமானமாகும் உணவுகள் மன அமைதிக்கு வழிவகுக்கின்றன.
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-24035,
சமீப விமர்சனங்கள்