Author: Farook

Tirmidhi-3895

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3895. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே! நான் எனது மனைவியரிடத்தில் நற்பண்புடன் நடந்துக் கொள்கிறேன்.

உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் அவரை(ப்பற்றி கெட்டதை கூறாமல்) விட்டுவிடுங்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«خَيْرُكُمْ خَيْرُكُمْ لِأَهْلِهِ وَأَنَا خَيْرُكُمْ لِأَهْلِي، وَإِذَا مَاتَ صَاحِبُكُمْ فَدَعُوهُ»


Ibn-Majah-1978

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1978. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«خِيَارُكُمْ خِيَارُكُمْ لِنِسَائِهِمْ»


Al-Adabul-Mufrad-284

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

284. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதர் தம் நற்பண்புகளால், இரவில் நின்று தொழுபவரின் தகுதியை எட்டி விடுகிறார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«إِنَّ الرَّجُلَ لَيُدْرِكُ بِحُسْنِ خُلُقِهِ دَرَجَةَ الْقَائِمِ بِاللَّيْلِ»


Hakim-199

ஹதீஸின் தரம்: Pending

199. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதர் தம் நற்பண்புகளால், நோன்பு நோற்று இரவில் நின்று தொழுபவரின் தகுதியை எட்டி விடுகிறார்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


«إِنَّ الرَّجُلَ لَيُدْرِكُ بِحُسْنِ خُلُقِهِ دَرَجَاتِ، قَائِمِ اللَّيْلِ صَائِمِ النَّهَارِ»


Abu-Dawood-4798

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

நற்பண்பு.

4798. இறைநம்பிக்கையாளர் தம் நற்பண்புகளால் இரவில் நின்று தொழுது, பகலில் நோன்பு வைக்கும் மனிதரின் தகுதியை எட்டி விடுகிறார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«إِنَّ الْمُؤْمِنَ لَيُدْرِكُ بِحُسْنِ خُلُقِهِ دَرَجَةَ الصَّائِمِ الْقَائِمِ»


Musnad-Ahmad-25537

ஹதீஸின் தரம்: More Info

25537. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதர் தம் நற்பண்புகளால் நோன்பு நோற்று , இரவில் நின்று தொழுபவரின் தகுதியை எட்டி விடுகிறார்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


«إِنَّ الرَّجُلَ لَيُدْرِكُ بِحُسْنِ خُلُقِهِ، دَرَجَةَ الصَّائِمِ الْقَائِمِ»


Musnad-Ahmad-25013

ஹதீஸின் தரம்: Pending

25013. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நற்குணமுடையவர் தம் பண்புகளால் நோன்பு நோற்று , இரவில் நின்று தொழுபவரின் தகுதியை எட்டி விடுகிறார்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


«إِنَّ الرَّجُلَ لَيُدْرِكُ بِحُسْنِ الْخُلُقِ دَرَجَةَ الصَّائِمِ الْقَائِمِ»


Musnad-Ahmad-24595

ஹதீஸின் தரம்: Pending

24595. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நற்குணமுடைய இறைநம்பிக்கையாளர் தம் பண்புகளால் இரவில் நின்று தொழுது, பகலில் நோன்பு நோற்பவரின் தகுதியை எட்டி விடுகிறார் என நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.


«إِنَّ الْمُؤْمِنَ لَيُدْرِكُ بِحُسْنِ خُلُقِهِ دَرَجَاتِ قَائِمِ اللَّيْلِ صَائِمِ النَّهَارِ»


Musnad-Ahmad-24355

ஹதீஸின் தரம்: Pending

24355. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நற்குணமுடையவர் தம் பண்புகளால் பகலில் நோன்பு நோற்று, இரவில் நின்று தொழுபவரின் தகுதியை எட்டி விடுகிறார் என நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.


«إِنَّ الْمُؤْمِنَ يُدْرِكُ بِحُسْنِ خُلُقِهِ دَرَجَاتِ قَائِمِ اللَّيْلِ، صَائِمِ النَّهَارِ»


Ibn-Hibban-480

ஹதீஸின் தரம்: Pending

480. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நற்குணமுடையவர் தம் பண்புகளால் நோன்பு நோற்று , இரவில் நின்று தொழுபவரின் தகுதியை எட்டி விடுகிறார்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


«إِنَّ الْمُؤْمِنَ لَيُدْرِكُ بِخُلُقِهِ دَرَجَةَ الصَّائِمِ الْقَائِمِ»


Next Page » « Previous Page