Author: Farook

Abu-Dawood-1402

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1402. ஹஜ் அத்தியாயத்தில் இரண்டு ஸஜ்தாக்கள் உள்ளதால் அது சிறப்பிக்கப்பட்டுள்ளதா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், ”ஆம்! யார் அவ்விரு வசனங்களின் போதும் ஸஜ்தாச் செய்ய மாட்டாரோ அவர் அவ்விரு வசனங்களையும் ஓத வேண்டாம்” என்று கூறினார்கள்…

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ர­லி)


قُلْتُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَفِي سُورَةِ الْحَجِّ سَجْدَتَانِ؟ قَالَ: «نَعَمْ، وَمَنْ لَمْ يَسْجُدْهُمَا، فَلَا يَقْرَأْهُمَا»


Musnad-Ahmad-17412

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

17412. ஹஜ் அத்தியாயத்தில் இரண்டு ஸஜ்தாக்கள் உள்ளதால் அது சிறப்பிக்கப்பட்டுள்ளதா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், ”ஆம்! யார் அவ்விரு வசனங்களின் போதும் ஸஜ்தாச் செய்ய மாட்டாரோ அவர் அவ்விரு வசனங்களையும் ஓத வேண்டாம்” என்று கூறினார்கள்…

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ர­லி)


قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَفُضِّلَتْ سُورَةُ الْحَجِّ عَلَى الْقُرْآنِ بِأَنْ جُعِلَ فِيهَا سَجْدَتَانِ؟ فَقَالَ: «نَعَمْ، وَمَنْ لَمْ يَسْجُدْهُمَا فَلَا يَقْرَأْهُمَا»


Musnad-Ahmad-17364

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

17364. ஹஜ் அத்தியாயத்தில் இரண்டு ஸஜ்தாக்கள் உள்ளதால் அது சிறப்பிக்கப்பட்டுள்ளதா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், ”ஆம்! யார் அவ்விரு வசனங்களின் போதும் ஸஜ்தாச் செய்ய மாட்டாரோ அவர் அவ்விரு வசனங்களையும் ஓத வேண்டாம்” என்று கூறினார்கள்…

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ர­லி)


قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَفُضِّلَتْ سُورَةُ الْحَجِّ عَلَى سَائِرِ الْقُرْآنِ بِسَجْدَتَيْنِ؟ قَالَ: «نَعَمْ، فَمَنْ لَمْ يَسْجُدْهُمَا، فَلَا يَقْرَأْهُمَا»


Tirmidhi-578

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்: 54

அல்ஹஜ் (எனும் 22 வது) அத்தியாயத்தில் ஓதலுக்கான ஸஜ்தா செய்வது குறித்து வந்துள்ளவை.

578. நான் (நபி ஸல் அவர்களிடம்) அல்லாஹ்வின் தூதரே! ஸஜ்தாவுக்குரிய இரண்டு வசனங்கள் (அல்குர்ஆன்: 22:1877) இல் இருப்பதால் ‘அல்ஹஜ்’ அத்தியாயம் சிறப்பிக்கப்பட்டுள்ளதா?” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், “ஆம்; யார் அவ்விரு வசனங்களை ஓதியும் ஸஜ்தா செய்யமாட்டாரோ அவர் அவ்விரு வசனங்களை ஓத வேண்டாம்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்தொடர் அந்தளவுக்கு பலமானதல்ல.

அல்ஹஜ் அத்தியாயத்தில் (எத்தனை வசனத்தில்) ஓதலுக்கான ஸஜ்தா செய்ய வேண்டுமென்பது தொடர்பாக அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது.

அல்ஹஜ் அத்தியாயத்தில் ஸஜ்தாவுக்குரிய இரு வசனங்கள் இடம் பெற்றிருப்பதன் காரணமாக

قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، فُضِّلَتْ سُورَةُ الحَجِّ بِأَنَّ فِيهَا سَجْدَتَيْنِ؟ قَالَ: «نَعَمْ، وَمَنْ لَمْ يَسْجُدْهُمَا فَلَا يَقْرَأْهُمَا»


Tirmidhi-568

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்: 47

ஸஜ்தா செய்ய வேண்டிய (குர்ஆன்) வசனங்கள் குறித்து வந்துள்ளவை.

568. நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் 11 (வசனங்களில் ஓதலுக்கான) ஸஜ்தாக்கள் செய்துள்ளேன். அவற்றில் நஜ்ம் (எனும்) அத்தியாயத்தில் உள்ள (அல்குர்ஆன்: 53:62) வசனமும் அடங்கும்.

அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)


«سَجَدْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِحْدَى عَشْرَةَ سَجْدَةً مِنْهَا الَّتِي فِي النَّجْمِ»


Musnad-Ahmad-27494

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

27494. நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் 11 (வசனங்களில் ஓதலுக்கான) ஸஜ்தாக்கள் செய்துள்ளேன். அவற்றில் நஜ்ம் (எனும்) அத்தியாயத்தில் உள்ள (அல்குர்ஆன்: 53:62) வசனமும் அடங்கும்.

அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)


«سَجَدْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِحْدَى عَشْرَةَ سَجْدَةً مِنْهُنَّ النَّجْمُ»


Musnad-Ahmad-21692

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

21692. நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் 11 (வசனங்களில் ஓதலுக்கான) ஸஜ்தாக்கள் செய்துள்ளேன். அவற்றில் நஜ்ம் (எனும்) அத்தியாயத்தில் உள்ள (அல்குர்ஆன்: 53:62) வசனமும் அடங்கும்.

அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)


«أَنَّهُ سَجَدَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِحْدَى عَشْرَةَ سَجْدَةً، مِنْهُنَّ النَّجْمُ»


Ibn-Majah-1055

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1055. நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் 11 (வசனங்களில் ஓதலுக்கான) ஸஜ்தாக்கள் செய்துள்ளேன். அவற்றில் நஜ்ம் (எனும்) அத்தியாயத்தில் உள்ள (அல்குர்ஆன்: 53:62) வசனமும் அடங்கும்.

அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)


أَنَّهُ «سَجَدَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِحْدَى عَشْرَةَ سَجْدَةً، مِنْهُنَّ النَّجْمُ»


Ibn-Majah-1056

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1056. நான் நபி (ஸல்) அவர்களுடன் 11 (வசனங்களில் ஓதலுக்கான) ஸஜ்தாக்கள் செய்துள்ளேன். ஆனால் முஃபஸ்ஸலான (நடுத்தர) அத்தியாயங்களி­ருந்து எதுவும் அவற்றில் இடம் பெறவில்லை.

அல்அஃராஃப் (7), ரஃது (13), நஹ்ல் (16), பனீ இஸ்ராயீல் (17), மர்யம் (19), ஹஜ் (22), ஃபுர்கான் (25), ஸுலைமான் அலை அவர்களின் வரலாறு இடம்பெறும் நம்ல் (27), ஸஜ்தா (32), ஸாத் (38), ஹாமீம் (41) ஆகியவையே ஸஜ்தாவுக்குரிய அந்த அத்தியாயங்களாகும்.

அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)


سَجَدْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِحْدَى عَشْرَةَ سَجْدَةً، لَيْسَ فِيهَا مِنَ الْمُفَصَّلِ شَيْءٌ: الْأَعْرَافُ، وَالرَّعْدُ، وَالنَّحْلُ، وَبَنِي إِسْرَائِيلَ، وَمَرْيَمُ، وَالْحَجُّ، وَسَجْدَةُ الْفُرْقَانِ، وَسُلَيْمَانُ سُورَةِ النَّمْلِ، وَالسَّجْدَةُ، وَفِي ص، وَسَجْدَةُ الْحَوَامِيمِ


Assunan-Assaghir-Bayhaqi-861

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

861. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (குர்ஆனின்) 15 ஸஜ்தா வசனங்களை என்னிடம் ஓதிக்காட்ட சொன்னார்கள். அவற்றில் (காஃப் எனும் 50 வது அத்தியாயத்தி­லிருந்து குர்ஆனின் கடைசி அத்தியாயம் வரையிலான) முஃபஸ்ஸலான அத்தியாயங்களில் இடம்பெறும் மூன்று வசனங்களும், சூரத்துல் ஹஜ் (எனும்) 22 வது அத்தியாயத்தில் இடம் பெறும் இரண்டு வசனங்களும் (அல்குர்ஆன்: 22:18 , 22:77) அடங்கும்.

அறிவிப்பவர்: அம்ர் பின் ஆஸ் (ரலி­)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَقْرَأَهُ خَمْسَ عَشْرَةَ سَجْدَةً فِي الْقُرْآنِ مِنْهَا ثَلَاثٌ فِي الْمُفَصَّلِ وَسُورَةُ الْحَجِّ سَجْدَتَيْنِ»


Next Page » « Previous Page