Author: Farook

Musnad-Ahmad-25341

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

25341. நபி (ஸல்) அவர்கள் , வீட்டில் தமது செருப்பைத் தாமே தைப்பார்கள். தமது ஆடையின் கிழிசலையும் தாமே தைப்பார்கள். வீட்டு வேலைகளையும் செய்வார்கள்.


هَلْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْمَلُ فِي بَيْتِهِ شَيْئًا قَالَتْ نَعَمْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْصِفُ نَعْلَهُ وَيَخِيطُ ثَوْبَهُ وَيَعْمَلُ فِي بَيْتِهِ كَمَا يَعْمَلُ أَحَدُكُمْ فِي بَيْتِهِ


Musnad-Ahmad-24903

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

24903. ” நபி (ஸல்) அவர்கள் வீட்டில் என்ன (வேலை) செய்து வந்தார்கள்?” என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் உங்களில் ஒருவர் (வீட்டு) வேலைகளைச் செய்வது போன்றே அவர்களும் செய்து வந்தார்கள். வீட்டில் தமது செருப்பைத் தாமே தைப்பார்கள். தமது ஆடையின் கிழி சலையும் தாமே தைப்பார்கள். வீட்டு வேலைகளையும் செய்வார்கள் ” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: உர்வா பின் ஸுபைர் (ரஹ்)


أَنَّهَا سُئِلَتْ مَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْمَلُ فِي بَيْتِهِ؟ قَالَتْ: «كَانَ يَخِيطُ ثَوْبَهُ، وَيَخْصِفُ نَعْلَهُ، وَيَعْمَلُ مَا يَعْمَلُ الرِّجَالُ فِي بُيُوتِهِمْ»


Musnad-Ahmad-17846

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

17846. நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்திப்பதற்காகச் சென்றிருந்தேன். அவர்களின் ஆடு மேய்ப்பவர் அப்போது தான் பிறந்த ஒரு குட்டியைத் தூக்கிக் கொண்டு வந்தார். ‘கிடாய்க் குட்டியா? பெட்டையா?’ என்றார்கள். அவர் ‘கிடாய்’ என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு ஆட்டை அறுத்து விருந்து சமைக்கச் சொன்னார்கள்.

பிறகு என்னை நோக்கி ‘‘நான் உனக்காகத் தான் இந்த ஆட்டை அறுத்தேன் என்று எண்ண வேண்டாம். நம்மிடம் நூறு ஆடுகள் உள்ளன. அவற்றில் ஒரு ஆடு குட்டியை ஈன்றால் உடனேயே அதற்குப் பதிலாக பெரிய ஆடு ஒன்றை நாம் அறுத்து உண்போம்’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: லகீத் பின் ஸபுரா (ரலி)


أَنَّهُ انْطَلَقَ هُوَ وَصَاحِبٌ لَهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمْ يَجِدَاهُ فَأَطْعَمَتْهُمَا عَائِشَةُ تَمْرًا، وَعَصِيدَةً، فَلَمْ نَلْبَثْ أَنْ جَاءَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَقَلَّعُ يَتَكَفَّأُ، فَقَالَ: «أَطْعَمْتِهِمَا؟» قُلْنَا: نَعَمْ قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَسْأَلُكَ عَنِ الصَّلَاةِ؟ قَالَ: «أَسْبِغِ الْوُضُوءَ، وَخَلِّلِ الْأَصَابِعَ، وَإِذَا اسْتَنْشَقْتَ فَأَبْلِغْ، إِلَّا أَنْ تَكُونَ صَائِمًا»

قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ لِي امْرَأَةٌ، فَذَكَرَ مِنْ بَذَائِهَا، قَالَ: «طَلِّقْهَا» قُلْتُ: إِنَّ لَهَا صُحْبَةً وَوَلَدًا، قَالَ: ” مُرْهَا، أَوْ قُلْ لَهَا: «فَإِنْ يَكُنْ فِيهَا خَيْرٌ فَسَتَفْعَلْ، وَلَا تَضْرِبْ ظَعِينَتَكَ ضَرْبَكَ أُمَيَّتَكَ» فَبَيْنَا هُوَ كَذَلِكَ، إِذْ دَفَعَ الرَّاعِي الْغَنَمَ فِي الْمُرَاحِ عَلَى يَدِهِ  سَخْلَةٌ، فَقَالَ: «أَوَلَّدْتَ؟» قَالَ: نَعَمْ، قَالَ: «مَاذَا؟» قَالَ بَهْمَةً، قَالَ: «اذْبَحْ مَكَانَهَا شَاةً» ثُمَّ أَقْبَلَ عَلَيَّ، فَقَالَ: لَا تَحْسَبَنَّ، – وَلَمْ يَقُلْ، لَا يَحْسَبَنَّ – أَنَّمَا ذَبَحْنَاهَا مِنْ أَجْلِكَ، لَنَا غَنَمٌ مِائَةٌ، لَا نُحِبُّ أَنْ تَزِيدَ عَلَيْهَا، فَإِذَا وَلَّدَ الرَّاعِي بَهْمَةً، أَمَرْنَا فَذَبَحَ مَكَانَهَا شَاةً


Bazzar-1865

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1865. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் எங்களுக்கு ஒரு கோட்டை வரைந்தார்கள். அதன் வலது புறம் ஒரு கோட்டையும் இடது புறம் ஒரு கோட்டையும் வரைந்தார்கள். பிறகு “இதுதான் அல்லாஹ்வின் வழியாகும்” என்று கூறினார்கள். பின்னர் இன்னும் பல கோடுகளை வரைந்து “இவை (வழிகேடான) பலவழிகளாகும். இந்த வழிகள் அனைத்திலும் ஷைத்தான் இருந்து கொண்டு அவற்றை நோக்கி அழைத்துக் கொண்டிருக்கின்றான்.

பிறகு “இதுவே எனது நேரான வழி. எனவே இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்றாதீர்கள்! அவை, அவனது (ஒரே) வழியை விட்டும் உங்களைப் பிரித்து விடும். நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்” (அல்குர்ஆன் 6:153) என்ற இறைவசனத்தை ஓதினார்கள்.


பஸ்ஸார் இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியின் கருத்து இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் வழியாக வேறு வகை அறிவிப்பாளர்தொடரில் இதைப் போன்றே அல்லது இதற்கு நெருக்கமான கருத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.


خَطَّ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا خَطًّا، وَخَطَّ عَنْ يَمِينِهِ خَطًّا، وَخَطَّ عَنْ يَسَارِهِ خَطًّا، ثُمَّ قَالَ: «هَذَا سَبِيلُ اللَّهِ» ، ثُمَّ خَطَّ خُطُوطًا فَقَالَ: «هَذِهِ سُبُلٌ، عَلَى كُلِّ سَبِيلٍ مِنْهَا شَيْطَانٌ يَدْعُو إِلَيْهِ» ، وَقَرَأَ {أَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ} [الأنعام: 153] فَتَفَرَّقَ بِكُمْ


Musnad-Ahmad-3161

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3161. நபித்தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே! எங்கள் உள்ளங்களில் சில விஷயங்களை நாங்கள் எண்ணுகின்றோம். அதனை வெளியில் பேசுவதை விட கரிக்கட்டைகளாகி விடுவது எங்களுக்கு விருப்பத்திற்குரியதாகும்” என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்! உங்களிடம் தீய எண்ணங்களைப் போடுவதைத் தவிர (வேறு எதற்கும் ஷைத்தானாகிய) அவன் ஆற்றல் பெறவில்லை” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


يَا رَسُولَ اللَّهِ ‍‍‍‍‍ إِنَّا نُحَدِّثُ أَنْفُسَنَا بِالشَّيْءِ لَأَنْ يَكُونَ أَحَدُنَا حُمَمَةً أَحَبُّ إِلَيْهِ مِنْ أَنْ يَتَكَلَّمَ بِهِ؟ قَالَ: فَقَالَ أَحَدُهُمَا: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي لَمْ يَقْدِرْ مِنْكُمْ إِلَّا عَلَى الْوَسْوَسَةِ» وَقَالَ: الْآخَرُ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي رَدَّ أَمْرَهُ إِلَى الْوَسْوَسَةِ»


Abu-Dawood-5112

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5112. ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! எங்களின் உங்களில் சில (தீய) எண்ணங்கள் ஏற்படுகிறது. அதனை வெளியில் பேசுவதை விட கரிக்கட்டைகளாகி விடுவது எங்களுக்கு விருப்பத்திற்குரியதாகும்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹு அக்பர் (அல்லாஹ்வே மிகப் பெரியவன்), அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் (என்று கூறிவிட்டு ஷைத்தானாகிய) அவனுடைய சூழ்ச்சியை தீய எண்ணங்களைப் போடுவதன் பக்கம் திருப்பிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أَحَدَنَا يَجِدُ فِي نَفْسِهِ، يُعَرِّضُ بِالشَّيْءِ، لَأَنْ يَكُونَ حُمَمَةً أَحَبُّ إِلَيْهِ مِنْ أَنْ يَتَكَلَّمَ بِهِ، فَقَالَ: «اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، الْحَمْدُ لِلَّهِ الَّذِي رَدَّ كَيْدَهُ إِلَى الْوَسْوَسَةِ» قَالَ ابْنُ قُدَامَةَ: «رَدَّ أَمْرَهُ» مَكَانَ «رَدَّ كَيْدَهُ»


Musnad-Ahmad-3247

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3247. ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் ‘இது அல்லாஹ் நினைத்ததும், நீங்கள் நினைத்ததுமாகும்’ என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் “என்னையும், அல்லாஹ்வையும் நீ சமமாக ஆக்குகிறாயா? அவ்வாறில்லை. அல்லாஹ் மட்டும் நினைத்தது தான் இது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُرَاجِعُهُ الْكَلَامَ، فَقَالَ: مَا شَاءَ اللَّهُ وَشِئْتَ، فَقَالَ: «جَعَلْتَنِي لِلَّهِ عَدْلًا، مَا شَاءَ اللَّهُ وَحْدَهُ»


Musnad-Ahmad-2561

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2561. ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் ‘இது அல்லாஹ் நினைத்ததும், நீங்கள் நினைத்ததுமாகும்’ என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் “என்னையும், அல்லாஹ்வையும் நீ சமமாக ஆக்குகிறாயா? அவ்வாறில்லை. அல்லாஹ் மட்டும் நினைத்தது தான் இது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி).


أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ مَا شَاءَ اللَّهُ وَشِئْتَ؟، فَقَالَ: «جَعَلْتَنِي لِلَّهِ عَدْلًا، بَلْ مَا شَاءَ اللَّهُ وَحْدَهُ»


Musnad-Ahmad-1964

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1964. ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் ‘இது அல்லாஹ் நினைத்ததும், நீங்கள் நினைத்ததுமாகும்’ என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் “என்னையும், அல்லாஹ்வையும் நீ சமமாக ஆக்குகிறாயா? அவ்வாறில்லை. அல்லாஹ் மட்டும் நினைத்தது தான் இது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


سَمِعَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يَقُولُ: مَا شَاءَ اللهُ وَشِئْتَ، فَقَالَ: ” بَلْ مَا شَاءَ اللهُ وَحْدَهُ


Musnad-Ahmad-1839

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1839. ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் ‘இது அல்லாஹ் நினைத்ததும், நீங்கள் நினைத்ததுமாகும்’ என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் “என்னையும், அல்லாஹ்வையும் நீ சமமாக ஆக்குகிறாயா? அவ்வாறில்லை. அல்லாஹ் மட்டும் நினைத்தது தான் இது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


أَنَّ رَجُلًا قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا شَاءَ اللَّهُ، وَشِئْتَ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَجَعَلْتَنِي وَاللَّهَ عَدْلًا بَلْ مَا شَاءَ اللَّهُ وَحْدَهُ»


Next Page » « Previous Page