620.
«أَنَّهُمْ كَانُوا إِذَا رَفَعُوا رُءُوسَهُمْ مِنَ الرُّكُوعِ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامُوا قِيَامًا، فَإِذَا رَأَوْهُ قَدْ سَجَدَ سَجَدُوا»
620.
«أَنَّهُمْ كَانُوا إِذَا رَفَعُوا رُءُوسَهُمْ مِنَ الرُّكُوعِ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامُوا قِيَامًا، فَإِذَا رَأَوْهُ قَدْ سَجَدَ سَجَدُوا»
619.
«لَا تُبَادِرُونِي بِرُكُوعٍ، وَلَا بِسُجُودٍ، فَإِنَّهُ مَهْمَا أَسْبِقْكُمْ بِهِ إِذَا رَكَعْتُ تُدْرِكُونِي بِهِ إِذَا رَفَعْتُ، إِنِّي قَدْ بَدَّنْتُ»
617.
«إِذَا قَضَى الْإِمَامُ الصَّلَاةَ وَقَعَدَ فَأَحْدَثَ قَبْلَ أَنْ يَتَكَلَّمَ، فَقَدْ تَمَّتْ صَلَاتُهُ، وَمَنْ كَانَ خَلْفَهُ مِمَّنْ أَتَمَّ الصَّلَاةَ»
பாடம்:
கடமையான தொழுகையை தொழுத இடத்திலேயே நஃபிலான தொழுகையை இமாம் தொழுதல்.
616. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தான் (கடமையான தொழுகையை) தொழுத இடத்திலிருந்து வேறு இடம் மாறுகின்ற வரை ஓர் இமாம் தான் தொழுத இடத்திலேயே தொழ வேண்டாம்.
அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி)
இமாம் அபூதாவூத் கூறுகிறார்:
(முகீரா பின் ஷுஃபா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும்) அதாஉ பின் அப்துல்லாஹ் அல்குராஸானீ என்பவர் முகீரா பின் ஷுஃபா (ரலி) அவர்களை சந்திக்கவில்லை.
«لَا يُصَلِّ الْإِمَامُ فِي الْمَوْضِعِ الَّذِي صَلَّى فِيهِ حَتَّى يَتَحَوَّلَ»
615. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு பின்னால் நின்று நாங்கள் தொழும் போது, அவர்களது முகத்தைக் கொண்டு எங்களை முன்னோக்க வேண்டும் என்பதற்காக அவர்களின் வலது பக்கமாக நாங்கள் அமைவதை விரும்புவோம் என்று பர்ராஃ பின் ஆஸிப் (ரலி) அறிவிக்கின்றார்.
كُنَّا «إِذَا صَلَّيْنَا خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحْبَبْنَا أَنْ نَكُونَ عَنْ يَمِينِهِ، فَيُقْبِلُ عَلَيْنَا بِوَجْهِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
613. அல்மகா, நானும் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)யிடம் அனுமதி கேட்டு அவருடைய வீட்டு வாசலில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தோம். அப்போது ஓர் அடிமைப் பெண் வெளியே வந்து (பார்த்து விட்டு) எங்கள் இருவருக்காகவும் அனுமதி கேட்ட போது, (எங்கள்) இருவருக்காகவும் அனுமதி கேட்ட போது (எங்கள்) இருவருக்காகவும் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அனுமதி அளித்தனர். பிறகு அவர் எனக்கும் அல்மகாவுக்கும் இடையில் நின்று தொழுதார். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை தொழக் கண்டிருக்கின்றேன் என்று அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) கூறியதாக அஸ்வத் (ரலி) அறிவிக்கின்றார்.
اسْتَأْذَنَ عَلْقَمَةُ، وَالْأَسْوَدُ، عَلَى عَبْدِ اللَّهِ، وَقَدْ كُنَّا أَطَلْنَا الْقُعُودَ عَلَى بَابِهِ فَخَرَجَتِ الْجَارِيَةُ فَاسْتَأْذَنَتْ لَهُمَا فَأَذِنَ لَهُمَا، ثُمَّ ” قَامَ فَصَلَّى بَيْنِي وَبَيْنَهُ، ثُمَّ قَالَ: هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلَ
பாடம் : 214
மூன்று பேர்களாக இருந்தால் எப்படி நிற்பது என்பது பற்றிய பாடம்.
612. என்னுடைய பாட்டி மலைகா தான் செய்து வைத்திருந்த உணவை உண்ண அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அழைத்திருந்தார். நபி (ஸல்) அவர்கள் அந்த உணவை சாப்பிட்டார்கள். பிறகு எழுங்கள். நான் உங்களுக்கு தொழுவிக்கின்றேன் என்று சொன்னார்கள். நான் நீண்ட காலமாக புழங்கியதின் காரணமாக கருப்பேறிய பாயை கொண்டு வரச் சென்று அதில் தண்ணீர் தெளித்தேன். அந்த பாயில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்றார்கள். நானும் ஓர் அநாதையும் அவர்களுக்கு பின்னாலும், அந்த மூதாட்டி எங்களுக்கு பின்னாலும் வரிசையாக நின்றோம். நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுது விட்டு திரும்பிச் சென்றார்கள் என்று அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.
أَنَّ جَدَّتَهُ مُلَيْكَةَ دَعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِطَعَامٍ صَنَعَتْهُ فَأَكَلَ مِنْهُ، ثُمَّ قَالَ: «قُومُوا فَلَأُصَلِّيَ لَكُمْ»، قَالَ أَنَسٌ: فَقُمْتُ إِلَى حَصِيرٍ لَنَا قَدِ اسْوَدَّ مِنْ طُولِ مَا لُبِسَ فَنَضَحْتُهُ بِمَاءٍ «فَقَامَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَصَفَفْتُ أَنَا وَالْيَتِيمُ وَرَاءَهُ، وَالْعَجُوزُ مِنْ وَرَائِنَا فَصَلَّى لَنَا رَكْعَتَيْنِ، ثُمَّ انْصَرَفَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
611. மேலுள்ள ஹதீஸ் தான் இங்கு இடம்பெறுகின்றது. என்னுடைய தலையை அல்லது தலைமுடியை பிடித்து என்னை அவர்கள் தனது வலது பக்கமாக நிறுத்தினார்கள் என்று இந்த அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.
فَأَخَذَ بِرَأْسِي أَوْ بِذُؤَابَتِي فَأَقَامَنِي عَنْ يَمِينِهِ
610. நான் எனது சிறிய தாயார் மைமூ (ரலி) வீட்டில் தங்கினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (படுக்கையிலிருந்து) எழுந்து தோல் துருத்தியை திறந்து உலூச் செய்து விட்டு அதை கட்டி வைத்தார்கள். பிறகு தொழுகைக்கு தயாரானதும் நானும் எழுந்து அவர்கள் உலூச் செய்தது போன்று உலூச் செய்தேன். பிறகு நானும் வந்து அவரது இடது பக்கம் நின்றேன். அவர்கள் என்னை தனது வலது கையால் பிடித்து தனது பின் பக்கமாக சுற்றி கொண்டு வந்து அவர்களது வலது பக்கம் என்னை நிறுத்தினார்கள். நான் அவர்களுடன் தொழுதேன் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.
குறிப்பு : இந்த ஹதீஸ் முஸ்லிமிலும் இடம் பெறுகின்றது.
بِتُّ فِي بَيْتِ خَالَتِي مَيْمُونَةَ «فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ اللَّيْلِ فَأَطْلَقَ الْقِرْبَةَ فَتَوَضَّأَ، ثُمَّ أَوْكَأَ الْقِرْبَةَ، ثُمَّ قَامَ إِلَى الصَّلَاةِ، فَقُمْتُ فَتَوَضَّأْتُ كَمَا تَوَضَّأَ، ثُمَّ جِئْتُ فَقُمْتُ عَنْ يَسَارِهِ، فَأَخَذَنِي بِيَمِينِهِ فَأَدَارَنِي مِنْ وَرَائِهِ فَأَقَامَنِي عَنْ يَمِينِهِ، فَصَلَّيْتُ مَعَهُ»
609. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனது தாயாருக்கும் இன்னொரு பெண்ணுக்கும் தொழுவிக்கும் போது என்னை தனது வலது பக்கமாகவும், பெண்களை அதற்கு பின்னாலும் நிறுத்தினார்கள் என்று அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.
குறிப்பு : இந்த ஹதீஸ் முஸ்லிம், நஸயீ, இப்னுமாஜா ஆகிய நூல்களில் இடம் பெறுகின்றது.
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَمَّهُ وَامْرَأَةً مِنْهُمْ، فَجَعَلَهُ عَنْ يَمِينِهِ وَالْمَرْأَةَ خَلْفَ ذَلِكَ»
சமீப விமர்சனங்கள்